Category: காரைநகர் இந்துக் கல்லூரி

காரைநகர் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியை முன்னிட்டு ஆண்களுக்கான வீதியோட்டம்.பெண்களுக்கான சைக்கிலோட்டம் ஆகிய போட்டிகள் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது.

காரைநகர் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியை முன்னிட்டு ஆண்களுக்கான வீதியோட்டம்.பெண்களுக்கான சைக்கிலோட்டம் ஆகிய போட்டிகள் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது.

இப்போட்டிகளில் முதல் ஜந்து இடங்களைப் பெற்ற மாணவர்களின் விபரம் வருமாறு.


மரதன் ஒட்டம் 

முதலாம் இடம் செல்வன் ச.சதீஸ்குமார் (தரம் 11,பாரதி இல்லம்)

இரண்டாம் இடம் செல்வன் சி.பிரகாஸ் (தரம் 13 சயம்பு இல்லம்)

மூன்றாம் இடம் செல்வன் ச.கஜிந்தன் (தரம் 10 பாரதி இல்லம்)

நான்காம் இடம் செல்வன் ச.ஜோன் (தரம் 10 சயம்பு இல்லம்)

ஜந்தாம் இடம் செல்வன் பே.அலக்சன் (தரம் 12 சயம்பு இல்லம்)

 

பெண்களுக்கான சைக்கிலோட்டம் 

முதலாம் இடம் செல்வி என்.யஸ்மினா (தரம் 12,பாரதி இல்லம்)

இரண்டாம் இடம் செல்வி எம்.நிறோசனா (தரம் 13 தியாகராசா இல்லம்)

மூன்றாம் இடம் செல்;வி ரி.ஜென்சிகா (தரம் 10 பாரதி இல்லம்)

நான்காம் இடம் செல்வி எஸ்.சிந்துஜா (தரம் 12 தியாகராசா இல்லம்)

ஜந்தாம் இடம் செல்வி எம.;.சுதர்சனா (தரம் 12 சயம்பு இல்லம்)

காரைநகர் சுற்று வீதியில் சைக்கிலோட்டமும் காரைநகர் துறைமுகத்திலிருந்து பாடசாலை வரையான தூரம் பெண்களுக்கான சைக்கிலோட்டமும் இடம்பெற்றது.

முதல் ஜந்து இடங்களைப் பெற்ற வீர,வீராங்கனைகள் கல்லூரி பிரதி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் மற்றும் உடற்கல்வி ஆசிரியருடன் காணப்படுகின்றனர்.

IMG_0305 (Copy) IMG_0306 (Copy) IMG_0307 (Copy) IMG_0308 (Copy) IMG_0309 (Copy) IMG_0310 (Copy) IMG_0311 (Copy) IMG_0312 (Copy) IMG_0313 (Copy) IMG_0314 (Copy) IMG_0315 (Copy) IMG_0316 (Copy) IMG_0317 (Copy) IMG_0318 (Copy) IMG_0319 (Copy) IMG_0320 (Copy) IMG_0321 (Copy) IMG_0322 (Copy) IMG_0323 (Copy) IMG_0324 (Copy) IMG_0325 (Copy) IMG_0326 (Copy) IMG_0327 (Copy) IMG_0328 (Copy) IMG_0329 (Copy) IMG_0330 (Copy) IMG_0331 (Copy) IMG_0332 (Copy) IMG_0333 (Copy) IMG_0334 (Copy) IMG_0335 (Copy) IMG_0336 (Copy) IMG_0337 (Copy) IMG_0338 (Copy) IMG_0339 (Copy) IMG_0340 (Copy) IMG_0341 (Copy) IMG_0342 (Copy) IMG_0343 (Copy) IMG_0344 (Copy) IMG_0345 (Copy) IMG_0346 (Copy) IMG_0347 (Copy) IMG_0348 (Copy) IMG_0349 (Copy) IMG_0350 (Copy) IMG_0351 (Copy) IMG_0352 (Copy) IMG_0353 (Copy) IMG_0355 (Copy) IMG_0356 (Copy) IMG_0357 (Copy) IMG_0358 (Copy) IMG_0359 (Copy) IMG_0360 (Copy) IMG_0361 (Copy) IMG_0362 (Copy) IMG_0363 (Copy) IMG_0364 (Copy) IMG_0365 (Copy) IMG_0366 (Copy) IMG_0367 (Copy) IMG_0368 (Copy) IMG_0369 (Copy) IMG_0371 (Copy) IMG_0372 (Copy) IMG_0373 (Copy) IMG_0374 (Copy) IMG_0376 (Copy)

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் இன்று 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30மணிக்கு சங்கத் தலைவரும் கல்லூரி அதிபருமான திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற்றபோது புதிய நிர்வாக சபைத் தெரிவு இடம்பெற்றது.

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் இன்று 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30மணிக்கு சங்கத் தலைவரும் கல்லூரி அதிபருமான திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற்றபோது புதிய நிர்வாக சபைத் தெரிவு இடம்பெற்றது.

தலைவராக அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்களும் உப தலைவராக கல்லூரியின் முன்னாள்அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை,செயலாளராக ந.பாரதி,பொருளாளராக க.நிமலதாசன்,உபசெயலாளராக க.நாகராசா,உப பொருளாளராக வி.கம்சன் ஆகியோரும்
நிர்வாக சபை உறுப்பினர்களாக சு.அகிலன்,த.சற்குணராசா,ந.யோகநாதன், செ.அருட்செல்வம்,சி.கந்தசாமி,பொ.சிறிகரன்,க.தில்லையம்பலம்,திருமதி யோகலட்சுமி யோகநாதன், செல்வி சிவரூபி நமசிவாயம் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களாக கதிரவேற்பிள்ளை கிருஸ்ணகுமார்,திருப்புகழூர்சிங்கம் சயந்தன் ஆகியோரும் தெரிவாகினர்.

img_9860-copy img_9862-copy img_9863-copy img_9864-copy img_9865-copy img_9866-copy img_9867-copy img_9868-copy img_9869-copy img_9870-copy img_9871-copy img_9872-copy img_9873-copy img_9874-copy img_9876-copy img_9877-copy img_9878-copy img_9879-copy img_9880-copy img_9881-copy img_9882-copy img_9883-copy img_9884-copy img_9885-copy img_9886-copy img_9887-copy img_9888-copy img_9889-copy img_9890-copy img_9891-copy img_9892-copy img_9893-copy img_9894-copy img_9897-copy img_9897 img_9898-copy img_9899-copy

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் நாளை மறுதினம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30மணிக்கு சங்கத் தலைவரும் கல்லூரி அதிபருமான திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற உள்ளது.

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் நாளை மறுதினம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30மணிக்கு கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் சங்கத் தலைவரும் கல்லூரி அதிபருமான திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற உள்ளது.

இக் கூட்டத்திற்கு கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் பழைய மாணவர் சங்கத்தில் இணைந்து கொள்வதற்கான விண்ணப்பத்தினை செயலாளரிடம் பெற்று சங்கத்தில் இணைந்து கொள்ளுமாறும் சங்கச் செயலாளர் க.நிமலதாசன் கேட்டுள்ளார்.

காரை இந்துக் கல்லூரியின் கல்வி சாரா அலுவலர் அமரர்.வீரசிங்கம் கதிரவேற்பிள்ளையின் சேவை நன்றியோடு நினைவு கூரப்படுகின்றது.

kathiravetpillaist

காரை இந்துக் கல்லூரியின் கல்வி சாரா அலுவலர் அமரர்.வீரசிங்கம் கதிரவேற்பிள்ளையின் சேவை நன்றியோடு நினைவு கூரப்படுகின்றது.

ஓரு பாடசாலையின் வளர்ச்சியில் பாடசாலையில் பணியாற்றிய அதிபர்கள் ஆசிரியர்கள் ஆகியோருடன் கல்விசாரா அலுவலர்களின் பங்கும் பாடசாலைச் சமூகத்தினால் நன்றியுணர்வுடன் நினைவு கூரப்படவேண்டியதாகும். 

அந்த வகையில் காரைநகர் இந்துக் கல்லூரியில் நேர்மையுடனும் விசுவாசத்துடனும் அர்ப்பணிப்பு மிக்க சிறப்பான சேவையை வழங்கிய வகையில் அமரர் வீரசிங்கம் கதிரவேற்பிள்ளை அவர்கள் கல்விசாரா அலுவலர்கள் வரிசையில் முன்னிலை வகித்து மேற்படி கல்லூரிச் சமூகத்தினால் என்றென்றும் நினைவு கூரப்படும் ஒருவராக விளங்குகின்றார். 

வெள்ளிவிழா அதிபர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் பதவிக் காலத்தில் அலுவலக எழுதுவினைஞராகவும் பின்னர் ஆய்வுகூட உதவியாளராகவும்; பதவியில் அமர்த்தப்பட்டிருந்த கல்லூரியின் பழைய மாணவரான அமரர் கதிரவேற்பிள்ளை அவர்கள் அதிபர் தியாகராசா அவர்களினதும் அதன் பின்னர் பதவி வகித்த அதிபர்களினதும் மற்றும்; ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் மனம் கவரும்படியாக மிகுந்த பொறுப்புடனும் செயற்திறனுடனும் தமது கடமைகளை மேற்கொண்டிருந்தவர் என்பதுடன் கல்லூரியின் நிர்வாக ரீதியான பணிகளிலும் தனது பங்களிப்பினை வழங்கி ஒட்டுமொத்த பாடசாலைச் சமூகத்தின் பாராட்டுக்குரியவராக விளங்கினார். 

கல்லூரியின் விளையாட்டுத்துறை போன்ற கல்விசாரா செயற்பாடுகள் மற்றும் சமய சமூக கலாசார நிகழ்வுகள் அனைத்தும் சிறப்பாக ஒழுங்கமைக்கப்படுவதற்கு சம்பந்தப்பட்ட பொறுப்பாசிரியர்களுக்கு இவரால் வழங்கப்பட்டு வந்த ஒத்துழைப்பு காரணமாக ஒட்டுமொத்த கல்லூரிச் சமூகத்தினதும் நன்மதிப்பைப் பெற்று விளங்கியவர். பாடசாலை நேரத்திற்குப் பின்னரும் விடுமுறை நாட்களிலும் கல்லூரிக்கு சமூகமளித்து அவசியமான பணிகளை நிறைவுசெய்ய கல்லூரி நிர்வாகத்துக்கு உதவிவந்ததன் மூலம் அதன் சுமுகமான செயற்பாட்டில் முக்கிய பங்காற்றியவர். 
'புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?' என்பது போல, அன்னாரின் நன்மக்களான விக்கினேஸ்வரி, மனோரஞ்சிதம், சத்தியராணி, கிருஷ்ணகுமார் ஆகிய நால்வரும் பாடசாலையில் நல்லொழுக்கமும் கல்வியில் சிறந்து விளங்கியும் ஏனைய மாணவர்களுக்கு எடுத்துக்காட்டான நன்மாணக்கர்களாகத் திகழ்ந்து தம் தந்தை பெயர் சொல்ல வைத்தவர்கள் என்றால் மிகையாகாது.

இத்தகைய உன்னதம் மிக்க சேவையாளரான அமரர் கதிரவேற்பிள்ளை அவர்கள் சேவையிலிருக்கும் பொழுதே 1980ஆம் ஆண்டு தமது 40வது வயதில் சிவபதம் அடைந்தமை அன்னாரின் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பாடசாலை சமூகத்திற்கும் ஏற்பட்ட துர்ப்பாக்கியமான இழப்பாகும். அன்னார் மறைந்த 36வது ஆண்டு நினைவுகூரப்படும் இவ்வேளையில் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் ஏனையோருடன் இணைந்து அன்னாரை நன்றியுடன் நினைவுகூருவதுடன் அன்னாரின்  கல்லூரிக்கான சேவை ஏனைய கல்லூரி சார்ந்த பணியாளர்களுக்கும் எடுத்துகாட்டாக அமைந்து விளங்கவேண்டும் என்பதுவும் எமது பெருவிருப்பாகும். 

அன்னாரின் உருவப்படம் பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுகூடத்தில் அன்னாரின் சேவையை நன்றியுடன் நினைவுகூர்ந்து இன்றும் வைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

பழைய மாணவர்சங்க கனடாக் கிளையின் முன்னாள் பொருளாளர் திரு.ஆ.சோதிநாதன் 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாடசாலைக்குப் பயணம் சென்றிருந்தபோது எடுக்கப்பட்ட நிழற்படத்தைக் கீழே காணலாம்.  

kathiravetpillai kathiravetpillaiimg_1921

 

காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து இரு மாணவர்கள் பல்கலைக் கழக அனுமதி பெற்றுள்ளனர்

காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து இரு மாணவர்கள் பல்கலைக் கழக அனுமதி பெற்றுள்ளனர்

கடந்த ஆகஸ்ட் 2015 இல் நடைபெற்ற க.பொ.த (உ-த) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைகழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி விபரம் இலங்கை பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
 
மேற்படி வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து இரு மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர். 

இம்மாணவர்களின் விபரம் வருமாறு: 

1.    செல்வி. துஸ்யந்தினி அரியபுத்திரன் கலைப்பீடம் யாழ் பல்கலைக்கழகம்

2.    செல்வி தர்ஜிகா மூர்த்தி  நுண்கலைப்பீடம் (இசைத்துறை) கிழக்குப் பல்கலைக்கழகம்

கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ள இம்மாணவர்களையும் அவர்களுக்கு போதனை அளித்த ஆசிரியர்களையும் பாடசாலை சமூகத்துடன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் பராட்டி வாழ்த்துகின்றது. 

காரைநகர் இந்துக் கல்லூரி விளையாட்டரங்கு அடிக்கல் நாட்டு விழா


விளையாட்டரங்கு அடிக்கல் நாட்டு விழாவில் பிரதி அமைச்சர் திருமதி.விஜயகலா மகேஸ்வரன்

எமது பாடசாலையில் விளையாட்டரங்கிற்கான அடிக்கல் நாட்டு விழா 2016.09.19 அன்று காலை 8.30 மணிக்கு கல்லூரியின் பதில் அதிபர் திருமதி கலாநிதி சிவநேசன் தலைமையில் இடம்பெற்றது. 

விளையாட்டரங்கிற்கான அடிக்கல் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களால் நாட்டி வைக்கப்பட்டது. இன்றைய நிகழ்வில் தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு S. சுந்தரசிவம் அவர்களும், தொழினுட்ப அலுவலர் திரு S. ஆதவன் அவர்களும் கலந்து கொண்டனர். பழைய மாணவர்கள், கல்லூரி நலன்விரும்பிகளும் இவ்விழாவில் கலந்து விழாவை சிறப்பித்திருந்தனர்.

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

சுப்பர் சிங்கர் புகழ் சாயி விக்னேஸின் கர்நாடக இசைக் கச்சேரி

sai-veg 13x19-new

தேசிய சிறுவர் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற சுவரொட்டிப் போட்டியில் காரை இந்து மாணவன் மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடம்


தேசிய சிறுவர் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற சுவரொட்டிப் போட்டியில் காரை இந்து மாணவன் மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடம்

தேசிய சிறுவர் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு புற்றுநோய் தடுப்புத் தொடர்பான சுவரொட்டி வடிவமைப்புப் போட்டியில் காரைநகர் இந்துக் கல்லூரி மாணவன் செல்வன் புலேந்திரன் கஜீபன் மாவட்ட மட்டத்தில் மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளார். 

சிறுவர் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் தேசிய புற்று நோய் தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சுடன் இணைந்து சுவரொட்டி வடிவமைப்புப் போட்டி நாடாளவிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்டது.  "புற்றுநோய் தடுப்பு" எனும் கருப்பொருளில் முதுநிலைப் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட மேற்படி போட்டி 11.07.2016 அன்று நடைபெற்றது. 
இப் போட்டியில் காரை இந்து மாணவன் செல்வன் புலேந்திரன் கஜீபன் பங்குபற்றி யாழ்ப்பாண மாவட்ட மட்டத்தில் மூன்றாமிடத்தினைப் பெற்றுக்கொண்டார்.
மேற்படி மாணவனுக்குரிய பரிசில் தின நிகழ்வு 06.08.2016 அன்று கொழும்பு பொது நூல்நிலையத்தில் காலை 9.00 மணிக்கு கௌரவ சுகாதாரஇ போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்தின தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட மட்டத்தில் மூன்றாமிடம் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவன் செல்வன் புலேந்திரன் கஜீபனையும், மாணவனை சகல வழிகளிலும் ஊக்குவித்த கல்லூரியின் ஓவிப்பாடத்துறை ஆசிரியரான திரு இராசரத்தினம் ஜீவராஜ் அவர்களையும் கல்லூரிச் சமூகத்துடன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் பாராட்டி வாழ்த்துகின்றது.

செல்வன் புலேந்திரன் கஜீபன் பெற்றுக்கொண்ட வெற்றிக்கேடயம், சான்றிதழ் ஆகியவற்றின் பிரதியை கீழே காணலாம்.

Poster Cancer TrophyPoster Cancer Certificate

வலய மட்ட வணிகப் போட்டிகளில் மூன்று முதலிடங்களை காரை இந்து பெற்றுள்ளது

Karai-Hindu-Commerce-Zonal

காரைநகர் இந்துக் கல்லூரி உப-அதிபர் திரு.சி.பொன்னம்பலம் அவர்களின் மறைவு குறித்து பாடசாலை சமூகம் விடுத்துள்ள கண்ணீர்அஞ்சலி

PONNAMPALAM MASTER (1)

காரைநகர் இந்துக் கல்லூரி உப-அதிபர் திரு.சி.பொன்னம்பலம் அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளை விடுத்துள்ள கண்ணீர்அஞ்சலி

ponnampalam-2 copy

கண்ணீர் அஞ்சலி அமரர் சிதம்பரப்பிள்ளை பொன்னம்பலம் (முன்னாள் காரைநகர் இந்துக் கல்லூரி உப அதிபர்)

PONNAMPALAM MASTER

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற சுவரொட்டிப் போட்டியில் காரை இந்து மாணவன் தேசிய மட்டத்தில் முதலிடம்

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற சுவரொட்டிப் போட்டியில் காரை இந்து மாணவன் தேசிய மட்டத்தில் முதலிடம்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் அகில இலங்கை ரீதியாக உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு "இணையத்தளம் மற்றும் கையடக்கத் தொலைபேசியை கவனமாகப் பயன்படுத்துவோம்" எனும் கருப்பொருளில் சுவரொட்டி தயாரித்தல் போட்டி 01.10.2015 அன்று 14–18 வயதுப் பிரிவு மாணவர்களுக்கிடையே நடைபெற்றது.

இப் போட்டியில் காரைநகர் இந்துக் கல்லூரி மாணவன் செல்வன் புஸ்பராசா சபிதன் மேற்பிரிவில் பங்குபற்றி தேசிய மட்டத்தில் முதலிடத்தினைப் பெற்றுக்கொண்டார்.

தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் செல்வன் புஸ்பராசா சபிதன் அவர்களையும் செல்வன் சபிதனை சகல வழிகளிலும் ஊக்குவித்த கல்லூரியின் ஓவியப் பாடத்துறை ஆசிரியரான திரு இராசரத்தினம் ஜீவராஜ் அவர்களையும் கல்லூரிச் சமூகத்துடன் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையும் பாராட்டி வாழ்த்துகின்றது.

காரைநகர் இந்துக் கல்லூரியின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க மேம்பாட்டுத் திட்டத்தில் பங்கேற்பதற்கான அரிய வாய்ப்பு

School Front

காரைநகர் இந்துக் கல்லூரியின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க மேம்பாட்டுத் திட்டத்தில் 
பங்கேற்பதற்கான அரிய வாய்ப்பு

கனடா, ஐக்கிய அமெரிக்க இராச்சியம் ஆகிய நாடுகளில் வதியும்
அன்பார்ந்த காரை இந்துவின் பழைய மாணவர்களே! நலன் விரும்பிகளே!
காரைநகர் இந்துக் கல்லூரியின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க மேம்பாட்டுத் திட்டத்தில் பங்கேற்பதற்கான அரிய வாய்ப்பு


"அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை" என்கின்ற 250 மில்லியன் ரூபா மதிப்பீட்டிலான எதிர்காலச் சிறார்களுக்கு பெரும் பயனை வழங்கக்கூடிய அரசின் பாரிய உதவித் திட்டம் எமது கல்லூரிக்கும் கிடைத்துள்ளது என்கின்;ற உவப்பான செய்தியை தாங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகின்றோம். இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு குறைந்தது 48 பரப்புக் காணி உடனடியாகத் தேவைப்படும் நிலையில் கல்லூரியை அண்மித்த பகுதியில் உள்ள பொருத்தமான காணிகளை இனம்கண்டு அவற்றினை கொள்முதல் செய்வதற்கான முயற்சியில் கல்லூரிச் சமூகம் ஈடுபட்டிருக்கின்றது.  இக்காணிகளை கொள்முதல் செய்வதற்கு உதவுமாறு விடுத்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு நிலத்திலும் புலத்திலும் உள்ள அமைப்புக்களும் பழைய மாணவர்களும் நலன் விரும்பிகளும் நன்கொடைகளை தாராள சிந்தையுடனும் கல்லூரி மீதான விசுவாச உணர்வுடனும் வழங்கி வருவதானது, குறித்த திட்டம் நிறைவுசெய்யப்பட்டு அதன் பயனை எமது சிறார்கள் அனுபவிக்கின்ற காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை வெளிப்படுத்துவதாகவுள்ளது. 


புழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளைஇ பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளை ஆகியவற்றின் உதவியுடன்; கல்லூரிக்கு அணித்தாகவுள்ள 5 1/2 பரப்புக் காணி ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.


பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை காணிக் கொள்வனவுக்கு மேலும் உதவும் பொருட்டான நிதி சேகரிப்புத் திட்டத்தினை கனடாவிலும் ஐக்கிய அமெரிக்க இராச்சியத்திலும் வதியும் பழைய மாணவர்கள்இ நலன் விரும்பிகள் மத்தியில் சென்ற மே மாதம் முதல் ஆரம்பித்து செயற்படுத்திவருகின்றது. இத்திட்டம் குறித்த விபரங்களை மின்னஞ்சல் வழியாகவும் தொலைபேசி வழியாகவும் தெரியப்படுத்தி அவர்களது ஆதரவினைப் பெற்று வருகின்றோம். பின்வரும் நான்கு வழிகளில் அவர்கள் தமது ஆதரவினை வழங்கிவருவது எமக்கு மகிழ்ச்சியும் ஊக்கமும் அளிப்பதாகவுள்ளது.


1. இயன்றளவு நன்கொடையினை வழங்குதல்


2. நிதியுதவி நிகழ்ச்சியாக செப்ரெம்பர் 17ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ள விஜே ரிவி சுப்பர் சிங்கர் புகழ் சாயி விக்னேஸின் இசைக் கச்சேரிக்கான நுழைவுச் சீட்டொன்றினைப் பெற்றுக்கொள்ளல்


3. நன்கொடையினை வழங்குவதுடன் நுழைவுச் சீட்டொன்றினையும் பெற்றுக்கொள்ளுதல்


4. இசைக் கச்சேரிக்கான அனுசரணையினை வழங்குவதுடன் நன்கொடையினையும் வழங்குதல்;


நன்கொடை வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில் 250.00 டொலர்களுக்கு மேலான நன்கொடையினை வழங்குபவர்களுக்கு இசைக் கச்சேரிக்கான இலவச நுழைவுச் சீட்டினை வழங்கி வருகின்றோம்.


நன்கொடைகளைப் பெற்றுக்கொள்வதுஇ நிதியுதவி நிகழ்ச்சி ஆகிய இரண்டு முயற்சிகள் ஊடாகவும் முப்பதினாயிரம் (30,000.00) டொலர்களைத் திரட்டி தேவைப்படும் காணியின்; ஒரு பகுதிக் கொள்வனவுக்கு உதவுவது என்ற இலக்குடன் எமது சங்கம் செயலாற்றி வருகின்றது. 


எமக்கு அறிவையும்; ஒழுக்கத்தையும் ஒருங்கே ஊட்டி வளர்த்த  காரை இந்து அன்னையின் அரவணைப்பில் இருந்த காலமே எமது வளமான வாழ்வினை நிர்ணயம் செய்வதற்கு வழிகோலியது என்பதை நன்றியுணர்வுடன் நினைவுகூர்ந்து வரலாற்று முக்கியத்துவம் மிக்க கல்லூரிக்கான உதவிப் பணியில் பங்கேற்று வருகின்ற பழைய மாணவர்களஇ; நலன் விரும்பிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவிப்பதுடன் தொடர்புத் தகவல்கள் கிடைக்காத நிலையில் இதுவரை எம்மால் தொடர்பு கொள்ளப்படாதவர்கள் இவ்வறிவித்தலைப் பார்வையிட்டதும் தமது உதவிகளை விரைந்து வழங்கி உதவுமாறு அன்போடும் உரிமையோடும் வேண்டிக்கொள்கின்றோம். எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 15ஆம் திகதியுடன் இந்நிதி சேகரிப்புச் செயற்பாடு நிறுத்தப்படவிருப்பதால் அதற்கு முன்னதாக தங்களது நன்கொடைகளை வழங்கி உதவுவீ;ரகள் என எதிர்பார்க்கின்றோம்.


திட்டம் குறித்த விபரங்களை அறியவும் தமது உதவிகளை வழங்கவும் விரும்புவோர்களுக்கான தொடர்புத் தகவல்கள்:


தொலைபேசி இலக்கங்கள்: (647)532-6217  (416)804-0587  (647)639-2930


மின்னஞ்சல் முகவரி: karaihinducanad@gmail.com


தாங்கள் வழங்கத் தீர்மானிக்கும் நன்கொடையினை மேற்குறித்த தொலைபேசி இலக்கங்களுள் ஒன்றுடன் அல்லது; மேற்குறித்த மின்னஞ்சல் முகவரியூடாக தொடர்புகொண்டு அறியத்தந்தால் அதனைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள்;; தங்களுடன் கலந்துரையாடி மேற்கொள்ளப்படும்.


கடன் அட்டையை (Credit Card)) பயன்படுத்தி PayPal வழியாக நன்கொடையினை வழங்க விரும்புவோர் www.Karaihinducanada.com இணையத்தளத்திற்கு சென்று PayPal இணைப்பினை அழுத்தி வழங்கலாம். 


நன்றி.
பழைய மாணவர் சங்கம் – கனடா

காரை இந்து மாணவன் செல்வன் சி.கோகுலன் மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் மூன்றில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவு

காரை இந்து மாணவன் செல்வன் சி.கோகுலன் மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் மூன்றில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவு

வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கிடையே நடைபெற்ற மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வில் நீளம் பாய்தல், முப்பாய்தல் 400M ஒட்டம் ஆகிய மூன்று போட்டிகளிலும் காரைநகர் இந்துக் கல்லூரி மாணவன் செல்வன் சிவசக்திவேல் கோகுலன் வெற்றி பெற்று தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டிக்குத் தெரிவாகி கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.  

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையேயான மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வு 14.07.2016  15..07.2016, 16.07.2016 ஆகிய தினங்களில் யாழ்ப்பாணம் துரையப்பா ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. 

14.07.2016 அன்று இடம்பெற்ற 21 வயதின் கீழ் ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் செல்வன் சிவசக்திவேல் கோகுலன் 6.48M நீளம் பாய்ந்து 3ம் இடத்தையும், 15.07.2016 அன்று இடம்பெற்ற 21 வயதின் கீழ் ஆண்களுக்கான முப்பாய்தல் போட்டியில் செல்வன் சிவசக்திவேல் கோகுலன் 13.59M நீளம் பாய்ந்து 3ம் இடத்தையும், 16.07.2016 அன்று இடம்பெற்ற 21 வயதின் கீழ் ஆண்களுக்கான 400அ போட்டியில் செல்வன் சிவசக்திவேல் கோகுலன் 4ம் இடத்தையும் பெற்று சாதனை படைத்திருந்தார்.

செல்வன் கோகுலன் மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் நீளம் பாய்தல், முப்பாய்தல், 400M ஆகிய மூன்று நிகழ்வுகளிலும வெற்றி பெற்று தேசிய மட்டத்தில் நடைபெறும் மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்குத் தகுதி பெற்றுள்ளார். 

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையே கடந்த ஆண்டில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் செல்வன். சி.கோகுலன் 19 வயதிற்குக் கீழ்ப்பட்ட முப்பாய்ச்சல் போட்டியில் 2ஆவது இடம் பெற்று தேசிய மட்டத்திலான போட்டிக்குத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தகக்கது. 

இம்மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று கல்லூரி அன்னைக்குப் பெருமை சேர்த்த செல்வன் சிவசக்திவேல் கோகுலனுக்கும் சகல வழிகளிலும் ஊக்குவித்த விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியரான திரு இன்னாசிமுத்து அன்ரன்விமலதாஸ் அவர்களுக்கும் கல்லூரிச் சமூகத்துடன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் தமது பாராட்;டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றது.

சாதனை மாணவன் செல்வன் சி.கோகுலன்; வெற்றிப் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வடமாகாண மெய்வல்லுநர் நிகழ்வில் பெற்றுக் கொள்வதைப் படத்தில் காணலாம். 

செல்வன் சிவசக்திவேல் கோகுலன் பெற்ற மாகாண மட்டச் சான்றிதழ்களின் பிரதிகளைக் கீழே காணலாம்.

certificate 1 certificate

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

Photo 1 Photo

காரைநகர் இந்துக் கல்லூரி காணிக் கொள்வனவிற்கான நிதி திரட்டல்

காரைநகர் இந்துக் கல்லூரி காணிக் கொள்வனவிற்கான நிதி திரட்டல்

 
பூமிப்பந்தில் பரந்து வாழும் பெருந்தன்மையுள்ள காரை மக்களே வணக்கம் …
 
 
உலகெங்கும் பரந்து வாழுகின்ற இவ்வேளையிலும்  காரை மாதாவின் கல்விப்பணியில் கருணை உள்ளம் கொண்டவர்களே, காரை இந்து மாதாவின் மடியில் கற்று, தவழ்ந்து, நடந்து, ஓடி, பாய்ந்து, துள்ளி விளையாடி, பல துறைகளிலும் சாதனைகள் படைத்து புலம் பெயர் நாடுகளில் காரை புகழ் பரப்பும் கருணை உள்ளம் கொண்டவர்களே.!!
 
எமது எதிர்கால சிறார்கள் சமகால கல்வி மாற்றங்களிக்கேற்ப கல்வியினை பெற்றுக் கொள்வதிற்கு தங்களின் மேலான நிதியுதவியினை  நாடி  நிற்கின்றோம்.
அரசினால் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் அண்மித்த பாடசாலை பௌதீகவள அபிவிருத்தி திட்டத்திற்கு 230மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தை இக் கல்லூரியில் அமுல் படுத்துவதற்கு கல்லூரியை அண்டியுள்ள 48 பரப்பளவுள்ள காணி கல்லூரிக்கு உடனடியாக தேவைப்படுகின்றது.

      இதில் :- 
                  1)  6 பரப்பளவு காணி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது 
                  2)  5 1/2 (ஐந்தரை பரப்பு ) காணி கொள்வனவை கொழும்பு மற்றும் கனடா பழைய 
                      மாணவர் சங்கம் பெற்று வழங்கியுள்ளது.

மிகுதி 36 பரப்பளவு காணி கொள்வனவு செய்வதற்கான நிதியுதவி தேவைப்படுகின்றது.  மிகுதியாக கொள்வனவு செய்யப்படவேண்டிய காணிகள்  முறையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன, எனவே தங்களிடம் இக் காணிக்  கொள்வனவிற்கான தங்களின் நிதிப்பங்களிப்பினை எதிர்பார்த்து நிற்கின்றோம்.
      எங்கள் எதிர்கால சிறார்கள் சிறப்பான கல்வியைப் பெற்று நல்லதோர் சமூகம் நம் கிராமத்தில் உருவாக எமது மக்களாகிய உங்கள்  அனைவரினதும்  நிதிப்பங்களிப்பினை  பெருமனதுடன் செய்வீர்கள் என்று எதிர்பார்த்து நிற்கின்றோம்.
 
தங்கள் தாராள மனத்தை தயவுடன் வழங்க கீழ்வரும்  இணைப்பை அழுத்தவும் 

https://mydonate.bt.com/events/karaihinduland2016
   
                             ”சிறுதுளி பெருவெள்ளம்”
    தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு 
    காம்உறுவார் கற்றுஅறிந் தார்.
                                       குறள்-399
 
 
நன்றி
நிர்வாகம்
பிரித்தானியா காரை நலன்புரிச்சங்கம்.

 

சுவிஸ் அபிவிருத்தி சபையினர் சுவிஸ்லாந்தில் 17.07.2016 இல் எடுக்க இருக்கும் அமரர் கலாநிதி ஆ. தியாகராசா நூற்றாண்டு விழா சிறப்புற காரைநகர் இந்துக்கல்லூரியின் வாழ்த்துச் செய்தி!

Greeting-News

 

 

தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/07/Greeting-News.pdf

‘மருத்துவ கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்’ இரண்டு மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு

Dr.Vijay

'மருத்துவ கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்' இரண்டு மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு

கற்றல் செயற்பாட்டினை ஊக்குவிக்கின்ற செயற்பாடுகளுள் பாடசாலைகளில் ஒழுங்கமைக்கப்பட்டு வருகின்ற 'பரிசில் தினம்' நிகழ்வு கல்வியாளர்களின் ஏகோபித்த அங்கீகாரத்தினைப் பெற்று மாணவர்களின் முன்னேற்றத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தவல்ல முன்னணி நிகழ்வாகக் கருதப்படுகின்றது. 

ஆற்றல் மிக்க மாணவர்கள் பாராட்டி ஊக்குவிக்கப்படுகின்றபோது சாதனையாளர்களாக மிளிரக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்படுகின்றது என்பதை அனுபவரீதியாக உணர்ந்துகொண்டவரும் காரைநகர் இந்துக் கல்லூரியில் கற்று நிபுணத்துவம் மிக்க குழந்தைகள் மருத்துவராக கனடாவில் பிரபல்யம் பெற்று விளங்கி கல்லூரியின் புகழை நிலைநாட்டிவருகின்றவருமாகிய மருத்துவகலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் அவர்களால் ஒன்றரை மில்லியன் ரூபா நிரந்தர வைப்பிலிடப்பட்டு 2014ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஒத்துழைப்புடன் நிறுவப்பட்டதே 'மருத்துவகலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்' ஆகும். 

காரைநகரில் சட்டரீதியாக அமைந்து விளங்கும் ஒரே நம்பிக்கை நிதியம் (Charitable Trust Fund)  என்ற பெருமையைப்பெற்றுள்ள இந்நிதியத்திலிருந்து பெறப்படுகின்ற வருடாந்த வட்டிப் பணம் கல்லூரியின் வருடாந்த பரிசில் தினத்தினை  தங்குதடையின்றி காலாகாலமாக தொடர்ந்து நடாத்துவதற்கான ஏற்பாடுகள் இந்நிதியத்தின் ஊடாக செய்யப்பட்டுள்ளது. இந்நிதியத்தின் நிறுவுநரோ அன்றி கல்லூரியின் விசுவாசிகள் எவருமோ விரும்பும் சமயத்தில் இந்நிதியத்தில்  மேலும் வைப்பீடு செய்யமுடியும் என சட்டஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாட்டுக்கு அமைய மேலதிகமாக அரை மில்லியன் ரூபாவினை நிதியத்தின் நிறுவுநர மருத்தவகலாநிதி; வி.விஜயரத்தினம் அவர்கள் வைப்பிலிட முன்வந்து அத்தொகையினை வங்கிக்கு அனுப்பிவைத்துள்ளார். இதன்மூலம் நிதியத்தின் வைப்புத்தொகை இரண்டு மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. இந்நிதியத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ளப்படும் வட்டித்தொகையிலிருந்து பரிசில் தினத்திற்கு ஏற்படும் செலவுகளை ஈடுசெய்தபின்னர் உள்ள மிகுதிப்பணத்தினை கல்லூரியின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தமுடியும் என்கின்ற ஏற்பாடும் நிதியத்தின் சட்ட ஆவணத்தில் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

கல்லூரியின் வளர்ச்சியில் அக்கறைகொண்டு உதவிவருகின்ற மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் அவர்களை  கல்லூரிச் சமூகமும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் பாராட்டி நன்றிகூறுகின்றது.

காரைநகர் இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் தினமும் – அநுசரணை மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்

காரைநகர் இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் தினமும் – அநுசரணை மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்


பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் அநுசரணையில் சிறப்புப் பரிசில்களும் ஞாபகார்த்த விருதுகளும்

காரைநகர் இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் தினமும் திங்கட்கிழமை (04.07.2016) அன்று காலை 9:00 மணிக்கு நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில் கல்லூரியின் பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசன் அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்குப் பிரதம விருந்தினராக வடமாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் திரு.திருச்சிற்றம்பலம் விஸ்வரூபன் அவர்களும் சிறப்பு விருந்தினராக காரைநகர் கோட்டக் கல்வி அதிகாரி திரு.ஆறுமுகம் குமரேசமூர்த்தி அவர்களும் கௌரவ விருந்தினராக கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

நிறுவுநர் சயம்பு நினைவுப் பேருரையை கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள் நிகழ்த்தினார்.

கனடாவில் பிரபல குழந்தை மருத்துவ நிபுணராக பணியாற்றிவரும் மருத்துவ கலாநிதி வி.விஜயரத்தினம் அவர்களினால் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் பெருமுயற்சியினால் நிறுவப்பட்ட “மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தில்” இருந்து இவ்வாண்டு பரிசளிப்பு விழாவிற்கு முழுமையான நிதி அநுசரணை வழங்கப்பட்டதுடன் “மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் சிறப்பு விருதுகளாக” தரம் 6 முதல் 13 வரையான வகுப்பு ரீதியான பொது தகமைத் தேர்ச்சிக்கான விருதுகள் 11 மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.

பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் அநுசரணையில் 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற க.பொ.த (சா-த) பரீட்சையில் அதிசிறந்த பெறுபேற்றைப் பெற்ற மாணவி செல்வி.பா.குலமதி அவர்களுக்கும், க.பொ.த (உ-த) பரீட்சைகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற 8 மாணவர்களுக்கும் சிறப்புப் பரிசில்கள் வழங்கப்பட்டன.

ஞாபகார்த்த விருதுகளை பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 5 உறுப்பினர்கள் தமது அன்பிற்குரியவர்களின் நினைவாக வழங்கியிருந்தனர். அதன் விபரம் வருமாறு:

திரு சுப்பிரமணியம் அரிகரன் அவர்களால் மறைந்த தமது அன்புக்குரிய தந்தை S.P.S என அழைக்கப்படும் அமரர் சுப்பிரமணியம் அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட பரிசு க.பொ.த (உயர்தர)ப் பரீட்சையில் தோற்றி பௌதீக விஞ்ஞான பீடத்திற்கு பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக் கொண்ட கணிதத்துறை மாணவி செல்வி ஹேதினி செல்வராசா அவர்களுக்கு வழங்கப்பட்டது.

க.பொ.த (சா-த) பரீட்சையில் கணித பாடத்தில் A தர சித்தி பெற்ற 6 மாணவர்களுக்கான பரிசாக கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபர் ‘அமரர். சின்னத்தம்பி தம்பிராசா நினைவுப் பரிசிலை’ அவரது துணைவியார் திருமதி.மனோன்மணி தம்பிராசா அவர்களும்,

க.பொ.த (சா-த) பரீட்சையில் வாய்ப்பாட்டு இசைப் பாடத்தில் A தர சித்தி பெற்ற மாணவி செல்வி தர்ஜிகா மூர்த்திக்கு ‘அமரர். சரஸ்வதி சுப்பிரமணியம் நினைவுப் பரிசிலை’ அவரது புதல்வன் குடும்பத்தினரான திரு. திருமதி.சச்சிதானந்தன் குடும்பத்தினரும்

பாடசாலையில் அதிசிறந்த மாணவன் அல்லது மாணவிக்கான சிறப்பு விருதாக 2015 ஆம் ஆண்டுக்கான சிறந்த மாணவன் செல்வன் க. வினோதன் அவர்களுக்கு பாடசாலையின் முன்னாள் ஆசிரியர் ‘அமரர்.நாகமுத்து கனகசுந்தரம் ஞாபாகார்த்த விருதாக” அவரது புதல்வன் திரு.கனக.சிவகுமாரன் அவர்களும் வழங்கியிருந்தனர். 

பாடசாலையில் அதிசிறந்த விளையாட்டு வீரன் மற்றும் அதிசிறந்த விளையாட்டு வீராங்கனை ஆகியோருக்கான விருதுகளின் வரிசையில் சிறந்த மெய்வல்லுன வீரனுக்கான விருதினை செல்வன் சி. கோகுலன் அவர்களும், சிறந்த மெய்வல்லுன வீராங்கனைக்கான விருதினை செல்வி தே. றோமிலா அவர்களும் பெற்றுக் கொண்டனர். இவ்விருதினை பாடசாலையின் முன்னாள் அதிசிறந்த விளையாட்டு வீரரும், காரைநகரில் விளையாட்டுத்துறையின் முன்னோடியுமான ‘அமரர் அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை ஞாபாகார்த்த விருதாக’ அவரது பெறாமகன் திரு.மா.கனகசபாபதி அவர்களும் நிதி அநுசரணை செய்து வழங்கியிருந்தார்.

சிறப்புப் பரிசில்களுக்கும் ஞாபகார்த்த விருதுகளுக்குமாக அறுத்திநான்காயிரம் ரூபா (64,000 ரூபா) நிதி அநுசரணையாக இவ்வாண்டு பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சிறப்பு விருதாக பாடசாலையில் நாற்பது ஆண்டுகள் நற்பணியாற்றிய நல்லாசான் ‘அமரர். R.கந்தையா ஞாபகார்த்த விருதினை’ அவரது புதல்வியும் ஒய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமாகிய திருமதி.சிவபாக்கியம் நடராஜா அவர்கள் நிதி அநுசரணை செய்து வழங்கியிருந்தார். கல்லூரியில் அதிசிறந்த ஆசிரியருக்கான கௌரவ விருதாக கல்லூரியின் 2015 ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர்களாக திரு ச. அரவிந்தன் அவர்களும் திருமதி ப. முகுந்தன் அவர்களும் இவ்விருதினைப் பெற்றுக் கொண்டனர்.

இதேவேளையில் இவ்வாண்டு கல்லூரி ஆசிரியர் நலன்புரிச் சங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட “கல்லூரி ஆசிரியர் நலன்புரிச் சங்கப் பரிசினை” 2015 ஆம் ஆண்டுக்கான சிறப்பு அறிவிப்பாளர் செல்வன் க. வினோதன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

பரிசளிப்பு விழாவில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.

DSC_3660 DSC_3661 DSC_3663 DSC_3664 DSC_3674 DSC_3675 DSC_3677 DSC_3679 DSC_3679W DSC_3681 DSC_3694 DSC_3697 DSC_3698 DSC_3749 DSC_3777 DSC_3789 DSC_3819 DSC_3820 DSC_3821 DSC_3822 DSC_3823 DSC_3824 DSC_3825 DSC_3826 DSC_3827 DSC_3828 DSC_3829 DSC_3858 DSC_3859 IMG_7025 IMG_7027 IMG_7029 IMG_7030 IMG_7032 IMG_7033 IMG_7034 IMG_7035 IMG_7038 IMG_7040 IMG_7051 IMG_7059 IMG_7061 IMG_7065 IMG_7067 IMG_7068 IMG_7073 IMG_7075 IMG_7081 IMG_7086 IMG_7087 IMG_7091 IMG_7094 IMG_7095 IMG_7096 IMG_7097 IMG_7101 IMG_7102 IMG_7104 IMG_7105 IMG_7106 IMG_7108 IMG_7109 IMG_7111 IMG_7113 IMG_7114

காரைநகர் இந்துக் கல்லூரியின் பரிசில் தின விழா அழைப்பிதழ்

காரைநகர் இந்துக் கல்லூரியின் பரிசில் தின விழா அழைப்பிதழ்

பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா வரும் திங்கட்கிழமை, ஜூலை, 4, 2016 அன்று காலை 9:00 மணிக்கு கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசன் தலைமையில் நடைபெற உள்ளது.

பிரதம விருந்தினராக வடமாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் திரு.தி.விஸ்வரூபன் அவர்களும் சிறப்பு விருந்தினராக காரைநகர் கோட்டக் கல்வி அதிகாரி திரு.அ.குமரேசமூர்த்தி அவர்களும் கௌரவ விருந்தினராக முன்னாள் அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். 

முழமையான அழைப்பிதழைக் கீழே காணலாம். 

Prize Day Invitation 1Prize Day Invitation 2

 

காரை இந்து அணி வடமாகாணத்தின் சிறந்த வன்பொருள் அணிக்கான வெற்றிக் கேடயம் பெற்று சாதனை!

காரை இந்து அணி வடமாகாணத்தின் சிறந்த வன்பொருள் அணிக்கான வெற்றிக் கேடயம் பெற்று சாதனை 

YG24W

Yarl Geek Challenge 5 Juniors போட்டியில் வடமாகாணத்தின் சிறந்த வன்பொருள் அணிக்கான (Best Hardware Application Team) வெற்றிக் கேடயத்தை காரைநகர் இந்துக் கல்லூரியின் அணி இவ்வாண்டும் பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளது.

வடமாகாணக் கல்வித் திணைக்களத்துடன் இணைந்து Yarl IT Hub பெருமையுடன் நடத்திய Yarl Geek Challenge 5 Juniorsபோட்டிக்கான மாகாண மட்டப் போட்டியின் இறுதிச் சுற்றுப் போட்டிகள் 2016.06.26அன்று கொக்குவில் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றன. வடமாகாணத்தைச் சேர்ந்த 12கல்வி வலயங்களை பிரதிநிதித்துவப்படுத்தி யாழ் முன்னணிப் பாடசாலைகளின் அணிகள் உட்பட 31 மாணவ அணிகள் மேற்படி போட்டியில் பங்குபற்றியிருந்தன.

வடமாகாண முன்னணிப் பாடசாலைகளுடன் போட்டியிட்டு யாஃகாரைநகர் இந்துக் கல்லூரி வன்பொருள் அணியினர் வடமாகாணத்தின் “சிறந்த வன்பொருள் அணி” (Best Hardware Application Team) எனும் சாதனையை நிலைநாட்டி தமது பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளதாக காரை இந்துவின் பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசன் அவர்கள் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளைக்கு அறியத்தந்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற Yarl Geek Challenge 5 Juniors – 3 மற்றும் Yarl Geek Challenge 5 Juniors – 4 போட்டிகளிலும் வடமாகாண முன்னணிப் பாடசாலைகளுடன் போட்டியிட்டு யாஃகாரைநகர் இந்துக்கல்லூரி வன்பொருள் அணியினர் வடமாகாணத்தின் சிறந்த வன்பொருள் அணி (Best Hardware Application Team) எனும் சாதனையை நிலைநாட்டி வெற்றிக் கேடயத்தைத் தட்டிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி அணியில் பங்குபற்றிய மாணவர் விபரம் வருமாறு :

SelectedTeam

இவ்வணியினருக்கான வெற்றிக் கேடயத்தையும் சான்றிதழையும் Yarl IT Hubநிறுவனத்தினர் வழங்குவதனையும் சாதனை மாணவர்கள் செல்வன் க. கஜந்தன், செல்வன் சி. தூயவன், செல்வன் க. சிவதர்சன் ஆகியோர் பெற்றுக் கொள்வதனையும் பயிற்றுவித்த ஆசிரியர்கள் திருமதி.சிவாஜினி லக்ஸ்மன், திரு.முத்துத்தம்பி ஜெயானந்தன் ஆகியோர் அருகில் நிற்பதனையும் படத்தில் காணலாம்.

YG24YG22YG23

இச்சாதனையை தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக நிலைநாட்டி கல்லூரிக்குப் பெருமை சேர்த்த மாணவச் செல்வங்களுக்கும் பயிற்சி அளித்த ஆசிரிய மணிகளுக்கும் பாடசாலையை வழிநடத்திவரும் அதிபர், பதில் அதிபர், பகுதித் தலைவர் ஆகியோருக்கும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளை பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.

காரை இந்துவின் உயர்தர மாணவர் ஒன்றிய மதிய போசன விருந்துபசார நிகழ்வு

காரை இந்துவின் உயர்தர மாணவர் ஒன்றிய மதிய போசன விருந்துபசார நிகழ்வு

காரைநகர் இந்துக் கல்லூரியின் உயர்தர மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டில் உயர்தர வகுப்பு மாணவர்களின் ஒன்று கூடலும் மதிய போசன விருந்தும் சனிக்கிழமை (12.06.2016) அன்று கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரியின் பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசன் அவர்களின் வழிநடத்தலிலும், உயர்தர மாணவர் ஒன்றியத் தலைவர் செல்வன்.சரவணபவானந்தசர்மா பிரதாபசர்மா தலைமையிலும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பிரதம விருந்தினராக தீவகக் கல்வி வலய நிர்வாகத்துறை பிரதிக் கல்விப்பணிப்பாளர் திரு.ச.பாஸ்கரன் அவர்களும் பாரியாரும், சிறப்பு விருந்தினராக கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர் திருமதி.பிரபாலினி தனம் அவர்களும், கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் திருமதி.சுமதி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களும், கௌரவ விருந்தினராக பழைய மாணவர் சங்க செயலாளர் திரு.க.நிமலதாசன்; அவர்களும், அயல் பாடசாலை உயர்தர மாணவர் மன்றத்தின் பிரதிநிதிகளும் இவ்விருந்துபசார நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

இந்நிகழ்வில் உயர்தர மாணவர் ஒன்றியத்தின் "நதி" என்னும் சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.

khc1 khc2 khc4 khc5 khc6 khc7 khc8 khc9 khc10 khc11 khc12 khc13

காரை இந்துவின் மூன்று அணிகள் Yarl Geek Challenge 5 Juniors போட்டியில் மாகாண மட்டத்திற்கு தெரிவு

காரை இந்துவின் மூன்று அணிகள்  Yarl Geek Challenge 5 Juniors போட்டியில் மாகாண மட்டத்திற்கு தெரிவு
    

Yarl Geek Challenge 5 Juniors போட்டியில் தீவக வலயத்தில் எமது பாடசாலையின் 3 அணிகள் வெற்றி பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளன.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உலகில் வடபுலத்தை ஓர் அடையாளமாக மாற்றும் பாதையில் Yarl IT Hub  இனால் நடத்தப்பட்டு வரும் Yarl Geek Challenge 5 Juniors போட்டிக்கான வலயமட்டப் போட்டிகள் 2016.06.11 அன்று வேலணையில் அமைந்துள்ள கணணி வள நிலையத்தில் இடம்பெற்றது.
    
அப் போட்டியில் தீவக வலயத்தில் எமது பாடசாலையின் 3 அணிகள் தீவக வலய மட்டத்தில் வெற்றி பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளன.
    
போட்டியில் வெற்றி பெற்றுள்ள மாணவர் விபரம் வருமாறு:

இப்போட்டியில் பங்கு பற்றுவதற்கான வழிகாட்யாக இருந்து ஊக்குவித்த தகவல் தொடர்பாடல் தொழினுட்பத்துறை ஆசிரியை திருமதி சிவாஜினி லக்ஸ்மன் அவர்களுக்கும், பௌதீக விஞ்ஞானத் துறை ஆசிரியர்  திரு முத்துத்தம்பி ஜெயானந்தன் அவர்களுக்கும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை எமது பாராட்டுகளைத் தெரிவிப்பதுடன் மாகாண மட்டத்தில் வெற்றி பெற வாழ்த்துகின்றது. 

Yarl Geek

காரைநகர் இந்துக் கல்லூரியின் உயர்தர மாணவர் ஒன்றுகூடலும்,மதிய போசன விருந்துபசார நிகழ்வும் நதி சஞ்சிகை வெளியீடும் 12.06.2016 அன்று நடைபெற்றது.

IMG_1308 IMG_1310 IMG_1313 IMG_1314 IMG_1315 IMG_1316 IMG_1318 IMG_1319 IMG_1320 IMG_1321 IMG_1322 IMG_1323 IMG_1324 IMG_1327 IMG_1328 IMG_1330 IMG_1332 IMG_1334 IMG_1335 IMG_1337 IMG_1338 IMG_1343 IMG_1344 IMG_1346 IMG_1347 IMG_1348 IMG_1350 IMG_1351 IMG_1352 IMG_1353 IMG_1355 IMG_1356

காலத்தால் அழியாத(து)தியாகம்

               காலத்தால் அழியாத(து)தியாகம்

Mrs.Vasuhi.06.2016DR.A.THIYAGARAJAH

காரை இந்துவின் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் வாழ்த்துகின்றார்

காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையினர் அமரர் கலாநிதி ஆ. தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிட இருக்கும் நூற்றாண்டு விழா மலரிற்கு வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் பெருமகிழ்வடைகின்றேன்.
    
1916 ஏப்பிரல் 17ஆம் திகதி பிறந்த ஆ.தியாகராசா அவர்கள் 1981ஆம் ஆண்டு தனது 65ஆவது அகவையில் இறைபதம் அடைந்தார். அமரர் தியாகராசா அவர்கள் இப்பூவுலகைவிட்டு மறைந்து 35 வருடங்கள் கடந்த பின்னரும் அவரது 100ஆவது அகவையை நினைவுபடுத்தி வெகுசிறப்பாக நூற்றாண்டு விழாவை நன்றிப ;பெருக்கோடு மூன்றாவது அரங்கிலே கொண்டாடப்படுவது கண்டு மகிழ்வடைகின்றேன். 
ஒருவர் மறைந்த பின்னரும் அவரது நினைவாக விழா எடுப்பதாக இருந்தால்,அவர் வள்ளுவரின்,

                    "வையத்துள் வாழ்வாங்குவாழ்பவர் வானுறையும் 
                                 தெய்வத்துள் வைக்கப்படுவர்"

எனும் குறளுக்கமைய வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த பெரியாராகப் பார்க்கின்றேன்.

    அமரர் தியாகராசா அவர்கள் 29 வருடகாலம் தொடர்ச்சியாகக் கல்விப் பணியாற்றிய காரைநகர் இந்துக் கல்லூரியின் சமூகம் அவரது 100ஆவது அகவை தினத்திலே (17.4.2016) நுற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடியது. அடுத்து காரைநகர் வெற்றிநாதன் அரங்கிலே அமரர் தியாகராசா அவர்களின் அன்பர்கள்,ஆதரவாளர்கள் விழா எடுத்திருந்தார்கள். தொடர்ச்சியாக கனடா வாழ் காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களும் அமரர் தியாகராசாஅவர்களின் சீடர்களும் இணைந்து இப் பெருவிழர எடுப்பது கண்டு மகிழ்வடைகின்றேன்.

    அமரர் தியாகராசா அவர்களிற்கு ஏன் இவ்வளவு பெரியஅளவில் விழா எடுக்கின்றார்கள் என்று சிந்தித்தால்,அவர் தான் வாழ்ந்த காலத்தில் இப்பூவுலகிற்கு விட்டுச் சென்ற சேவைகள் பற்பல. ஒருதுறை சார்ந்து அவருடைய பணிகள் நின்றுவிடவில்லை. ஆன்மீகப்பணி,கல்விப்பணி,பொருளாதாரப்பணி,சமூகப்பணி,அரசியற்பணி என்ற வகையில் அவருடைய செயற்பாடுகள் ஆழ்ந்து அகன்று இருந்ததைக் காணலாம்.

    அமரர் தியாகராசாஅவர்கள் மலேசியா,சிங்கப்பூர், இந்தியா எனபல நாடுகளிலும் தனது கல்வியைப் பூர்த்திசெய்து B.A., M.A, M.Lit பட்டதாரியாகத் தாயகம் திரும்பி 1941இல் காரைநகர் இந்துக் கல்லூரியில் ஆசிரியராக இணைந்து தனது கல்விப் பணியை ஆரம்பித்தார். தொடர்ந்து நான்கு வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றும் காலத்தில் அப்போதிருந்த அதிபர் திரு ஆ.கனகசபை அவர்கள் ஓய்வுபெற 1946ஆம் ஆண்டு கல்லூரியைத் தலைமை தாங்கி நடத்தும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அக்காலத்தில் யோகர் சுவாமிகளிடம் ஆசிபெற்ற பேப்பர் சுவாமிகள் கோவளத்தில் ஆச்சிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். ஆன்மீகத்தில் ஈடுபாடுகொண்ட தியாகராசா அவர்கள் பேப்பர் சுவாமிகளிடம் ஆசிபெற்று கல்லூரியைப் பொறுப்பெடுத்தார் எனவும்,பேப்பர் சுவாமிகள் 'காரைநகர் இந்துக் கல்லூரியை விருட்சம் போல் வளர்த்தெடு'எனஆசி வழங்கியதாகவும் நூல்கள் குறிப்பிடுகின்றன. அதேபோல் கல்லூரி வளர்ச்சிக்கு அல்லும் பகலும் சுமார் 25வருடங்கள் பாடுபட்டு பௌதிக வள விருத்தி,கல்வி அபிவிருத்தி, இணைப்பாடவிதான அபிவிருத்திப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துக் கொண்டார். இவருடைய காலத்திலேயே கல்லூரிக்கு விஞ்ஞான ஆய்வுகூடம், நூலகம்,மனையியல் கூடம்,நடராசா ஞாபகார்த்த மண்டபம்,சயம்பு மண்டபம்,விளையாட்டு மைதானம் போன்ற வளங்கள் பாடசாலைக்குக் கிடைக்கப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் 25வருட கால சிறப்பான அதிபர் சேவை காரணமாக வெள்ளிவிழாஅதிபர் எனபோற்றும் அளவிற்கு கல்லூரியில் கல்விக்காக ஆற்றிய அளப்பரிய பணிகள் காரணமாக வரலாற்றில் நீங்கா இடம பிடித்தக் கொண்டார்.

    தனது 57ஆவது வயதில் கல்லூரியின் அதிபர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்று அரசியல் பணியில் தன்னை இணைத்துக் கொண்டு காரைநகரின் பொருளாதார,சமூக அபிவிருத்திக்காக அரும்பாடுபட்டார். காரைநகர் மக்களிற்கு போக்குவரத்துசேவை,மின்சாரவசதி போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுத்தது மட்டுமன்றி பலரிற்கு வாழ்வாதாரத்திற்கான அரசதொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்து மக்களை மகிழ்வித்தார்.

    காரைநகரின் புவியியல் அமைப்பை  தூர நோக்குடன் சிந்தித்த அவர் எதிர்காலத்தில் நிலத்தடிநீர் உவர்நீராக மாறாதிருக்க மழைநீரைத் தேக்கும் திட்டத்திற்காக வேணண் அணையைக் கட்டுவித்தார். இத்தகைய பல சமூக சேவைகளைச் செய்த பெரியார் தியாகராசாஅவர்களின் தனித்துவம் என்னவென்றால்,பொதுவாக சமூகப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வோர் தமது குடும்பநலனில் அதிக அக்கறை கொள்ளமாட்டார்கள். ஆனால் தியாகராசாஅவர்கள் அவ்வாறன்றி தனது குடும்பத்தையும் நல்நிலை அடையச் செய்துள்ளார் என்பது அவரின் பிள்ளைகள் மூலம் அறியக்கிடக்கின்றது.

                                    "தக்கார் தகவிலார் என்பதுஅவரவர்
                                             ஏச்சத்தால் சுட்டப்படும் "

எனும் வள்ளுவர் வாக்கிற்கு இணங்க தனது பிள்ளைகளையும் கற்பித்து நன்னிலைக்குக் கொண்டுவந்துள்ளார். அவர் பிள்ளைகளுடன் எவ்வாறு அன்பாகப் பண்பாக வாழ்ந்தார் என்பதை அவரது பிள்ளைகள் தொடர்ந்தும் அவரது பணியைத் தொடர்வதனூடாகக் காணக்கூடியதாக உள்ளது. அவரது புதல்வி திருமதி மங்கயர்க்கரசி சபாரத்தினம் அவர்கள் அமரர் தியாகராசா அவர்களின் ஞாபகார்த்தமாக அமரர் ஆ. தியாகராசா ஞாபகார்த்த புலமைப ;பரிசில் நிதியத்தை ஆரம்பித்து காரைநகர் வாழ் ஏழைச் சிறார்களின் கல்விக்கு ஆதரவு அளித்து வருகின்றார்கள். 

திருமதி புனிதம் செல்வராஜா  அவர்களும் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் அடிக்கடி தாயகம் வந்து சமூகசேவைச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதைக் காண்கின்றோம்.

    அந்தவகையில் அமரர் தியாகராசா அவர்களை எம்மக்கள் என்றென்றும் மறக்கமாட்டார்கள். ஏம்மத்தியில் இருந்து மறைந்தாலும் அவரது அளப்பரிய தியாகப் பணிகள் காலத்தால் அழியாத தியாகமாக எனறும் எம்மக்கள் மத்தியில் நிலைத்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை. அத்தகைய தியாகச் செம்மலிற்கு அவரது நூறாவது அகவையில் நன்றி கூருமுகமாக அவரது காலத்தால் அழியாத அளப்பரிய சேவைகளைத் தாங்கிய நூற்றாண்டு விழா மலரை வெளியிடுவது கண்டு மகிழ்வடைகின்றேன். இம்மலர் சிறப்பாக மலர வாழ்த்துவதுடன்,விழா சிறப்புற அமையவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


திருமதி வாசுகி தவபாலன்

அதிபர்

காரைநகர் இந்துக் கல்லூரி

Greeting Dr.A.T 100th Vasuhi Book-page-001

 

 

வலயமட்ட தமிழ்த் தினப்போட்டிகளில் 9 முதலிடங்களைப் பெற்று காரை இந்து சாதனை

வலயமட்ட தமிழ்த் தினப்போட்டிகளில் 9 முதலிடங்களைப் பெற்று காரை இந்து சாதனை

வலய மட்டத்தில் நடத்தப்பட்ட அகில இலங்கைத் தமிழ்த்தினப் போட்டியில் இவ்வாண்டு காரைநகர் இந்துக் கல்லூரி மாணவர்கள் ஒன்பது முதலிடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இம்மாணவர்கள் மாகாண மட்ட தமிழ்த்தினப் போட்டிகளில் பங்குபற்றுவதற்குத் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களையும் அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளை பராட்டி வாழ்த்துகின்றது.

  அகில இலங்கைத் தமிழ்த்தினப்போட்டி – 2016  வலய மட்டத்தில் முதலாமிடம் பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ள மாணவர் விபரம்.
 
இல  போட்டி பிரிவு       நிகழ்ச்சியின் பெயர்       மாணவர் முழுப்பெயர் பெயர்
                                                                             
01             2                                      பாவோதல்                      திருநாவுக்கரசு ஆதிரை
02             5                                       பேச்சு                             நவரட்ணராஜா யஸ்மினா
03             2                                    இசை – தனி                     ஜெயமோகன் சரண்யா
04             3                                    இசை – தனி                    சிவனேஸ்வரன் புருசோத்தமி
05             4                                    இசை – தனி                 ஆனந்தராசா அமிர்தா
06             5                                    இசை – தனி                     கிளாஸ்டர் தர்சினி

07          குழு–I                            குழு இசை – I           புருசோத்தமி சிவனேஸ்வரன்
                                                                                         சிவனேஸ்வரன் சர்வேஸ்வரன்
                                                                                             தமிழினி பேரின்பராசா
                                                                                           சரண்யா ஜெயமோகன்
                                                                                          அபிராமி கிருஸ்ணபவன்
                                                                                          மகேந்திரராசா பானுஜன்
                                                                                           சிந்துஜா ஆரோகணன்
                                                                                         அனுஜா கிருஸ்ணபவன்
                                                                                            நிரோஜினி வசந்தகுமார்

08         குழு–II                       குழு இசை – II                         தர்சினி கிளாஸ்டர்
                                                                                                    தர்ஜிகா மூர்த்தி
                                                                                              மேகலை தேவேந்திரன்
                                                                                                பஞ்சராசா மகீபன்
                                                                                            அமிர்தா ஆனந்தராசா
                                                                                               சர்மிளா கிளாஸ்டர்
                                                                                                தாரணி சடாட்சரம்
                                                                                           பிரியா கிருபானந்தராசா

09     திறந்த போட்டி                   விவாதம்                கனகலிங்கம் வினோதன்
                                                                                          நவரட்ணராஜா ஜஸ்மினா
                                                                                           பரமேஸ்வரன் பிரதீபன்

 

இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியின் இயல் இசை நாடக விழாவில் காரை இந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள்

இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியின் இயல் இசை நாடக விழாவில் காரை இந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள்


நாடக விழாவில் காரைநகர் இந்துக் கல்லூரி மாணவர்களும் பங்கு பற்றி கலை நிகழ்ச்சிகளை வழங்கிச் சிறப்பித்திருந்தனர். 

இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் கடந்த 04.05.2016 அன்று நடைபெற்ற மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவிலேயே காரை இந்து மாணவர்களின் நடன நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. 

பாடசாலையின் ஆசிரியைகளான திருமதி பே. சந்திரதாஸன், திருமதி அ. ராஜ்குமார் ஆகியோர் முறையே புஸ்பாஞ்சலி, கிராமிய நடனம் ஆகியனவற்றிற்கு நட்டுவாங்கம் வழங்கியிருந்தனர்.  இவ்விரு நடனங்களுக்கான இசையை பாடசாலையின் இசை ஆசிரியர்கள் திருமதி ப. முகுந்தன், திருமதி க. றொபேஷன் ஆகியோர்  வழங்கியிருந்தனர். 

நிகழ்வில் பங்கு பற்றிய ஆசிரியர்கள்இ மாணவர்ளின் விபரங்கள் வருமாறு: 

புஸ்பாஞ்சலி நடனம்

நட்டுவாங்கம்    :    திருமதி பே. சந்திரதாஸன்
இசை        :    திருமதி ப. முகுந்தன்
            திருமதி க. றொபேஷன்

பங்குபற்றிய மாணவர்கள்

1.    செல்வி ம. துஸ்யந்தி
2.    செல்வி பா. குலமதி
3.    செல்வி சு. சிந்துஜா
4.    செல்வி க. சரண்யா
5.    செல்வி மு. கிறேசியா
6.    செல்வி இ. லக்சிகா


கிராமிய நடனம்

நட்டுவாங்கம்    :    திருமதி அ. ராஜ்குமார்
இசை        :    திருமதி ப. முகுந்தன்
            திருமதி க. றொபேஷன்
பங்குபற்றிய மாணவர்கள்

1.    செல்வன் அ. பிரணவரூபன்
2.    செல்வன் ஏ. கோபிநாத்
3.    செல்வன் சு. ஜீவிதன்
4.    செல்வன் இ. ஜீவரங்கன்
5.    செல்வி வ. நிலா
6.    செல்வி சி. ஜிவிசா
7.    செல்வி வி. கஜந்தினி
8.    செல்வி உ. பிருந்தா
9.    செல்வி க. டிலோசினி
10.    செல்வி சு. லக்சிகா
11.    செல்வி ஆ. அபிராமி
12.    செல்வி கா. கோகுலதர்சா
13.    செல்வி க. பூர்விகா


நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 

20160504_190148 20160504_190148W 20160504_195356 20160504_195427 20160504_195439 20160504_195902 20160504_200026 20160504_200444 20160504_200512 20160504_200733

இந்துக் கல்லூரியில் நடைபெற்ற கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா

இந்துக் கல்லூரியில் நடைபெற்ற கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா

காரைநகர் இந்துக் கல்லூரியில் வெள்ளி விழா அதிபராகச் சேவையாற்றி பாடசாலையை உயர்நிலைக்கு உயர்த்திய சிற்பியாகிய அமரர்.கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் 100 ஆவது பிறந்த நாள் கடந்த 17.04.2016 ஆகும்.  

பாடசாலையின் வரலாற்றில், கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் காலமே 'பொற்காலம்' என்று அறிஞர்களினால்  போற்றப்படுகின்றது. 

அந்தவகையில், பாடசாலை சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னாரின் நூற்றாண்டு விழா 17.04.2016 அன்று நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

நிகழ்வில் நினைவுப்பேருரை, சிறப்புரைகள், சிந்தனை அரங்கம், இசை நிகழ்ச்சி, மாணவர் நிகழ்ச்சி என்பன இடம்பெற்றன. 

நிகழ்வில் எடுக்கப்பட்ட சில படங்களைக் கீழே காணலாம்.

IMG_0213 IMG_0214 IMG_0215 IMG_0216 IMG_0217 IMG_0218 IMG_0219 IMG_0220 IMG_0222 (1) IMG_0229 IMG_0232 IMG_0234 IMG_0236 IMG_0237 IMG_0243 IMG_0245 IMG_0246 IMG_0253 IMG_0257 IMG_0262 IMG_0263 IMG_0268 IMG_0269 IMG_0272 IMG_0277 IMG_0279 IMG_0280 IMG_0282 IMG_0284 IMG_0289 IMG_0293 IMG_0294

அமரர்.கலாநிதி.ஆ.தியாகராசா நூற்றாண்டு விழா அழைப்பிதழ்

20160414_08431920160414_084340

காரைநகர் இந்துக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற வெற்றியாளர்கள் தின விழா(Winners Day)

DSC_6517 (Copy) (Copy)

காரைநகர் இந்துக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற வெற்றியாளர்கள் தின விழா(Winners Day) 

காரைநகர் இந்துக் கல்லூரியில் தேசிய மட்டத்தில் சாதனைப் பதிவுகளை ஏற்படுத்திய வெற்றியாளர்களைப்; பாராட்டி மதிப்பளிக்கும் வகையில் நடைபெற்ற வெற்றியாளர் தினம் நேற்று புதன்கிழமை (23.04.2016) அன்று யாழ் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாரும் பழைய மாணவியுமாகிய கலாநிதி.திருமதி.வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம் அவர்களின் தலைமையில் கல்லூரியின் நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. 

பிரதம விருந்தினராக வடமாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத் துறை அமைச்சர் த.குருகுலராசாவும் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார்,தேசிய கல்வி நிறுவகப் பிரதிப் பணிப்பாளர் நாயகம் றஞ்சித் சந்திரசேகர,தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் சு.சுந்தரசிவம் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.


இந்நிகழ்வில் தேசிய,மாகாண மட்டங்களில் கலந்துகொண்டு சாதனை படைத்த மாணவர்களும் அவர்களை ஊக்கப்படுத்திய ஆசிரியர்களும் விருந்தினர்களால் பதக்கம் அணிவிக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

பழைய மாணவர்களான கலாநிதி திருமதி.வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம் அவர்களும், தொழிலதிபர் திரு.பரமநாதர் தவராசா (லண்டன்) அவர்களும் விழாவிற்கு நிதி அநுசரணை வழங்கி உதவியிருந்தனர்.


விழாவில் எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பினைக் கீழே காணலாம்.