Category: Google Photos

மழை இன்றி குடிக்க தண்ணீா் இன்றி தவித்த காரைநகா் மக்கள் நேற்றிரவு தொடக்கம் பெய்துவரும் மழையால் சந்தோசமடைந்து​ள்ளனா் வயல்களில் நீா்மட்டம் ஏறி வருகின்றது

மரண அறிவித்தல், செல்லத்துரை கணேசபிள்ளை

received_10204997890210652

காரைநகர் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ அம்பாளுக்கு மூன்றாவது கோபுரம்

காரைநகா் மணற்காடு  கும்பநாயகி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்திற்கு மேலும் ஒரு மூன்று தளத்தினாலான கோபுரம் ஒன்று அமைப்பதற்கான பூா்வாங்க வேலைகள் இன்று 2014.11.17 திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. 02.02.2015 அன்று கும்பாபிஷேக தினம் அறிவிக்கப்பட்ட நிலையில் திருப்பணிச்சபையினா் ஆலயத்தின் வடக்குப்பக்கத்திற்கான கோபுரத்திற்கே இன்று பூா்வாங்க வேலைகளை ஆரம்பித்தனா். ஏற்கனவே ஆலயத்தின் இராஜகோபுரம் , தெற்குப்பக்க  மூன்றுதள கோபுரம் ஆகியவை அமைத்து முடிக்கப்பட்டிருக்கும் நிலையில் அம்பாளுக்கு இது மூன்றாவது கோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய மூன்றாவது கோபுரத்திற்கான பூா்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்படுவதை படங்களில் காணலாம்.

பரிசளிப்பு விழா 2014. யா/வலந்தலைவடக்குஅ.மி.த.க.வித்தியாலயம், காரைநகர்.

10.11-NEW

தாயகத்தில் இருந்து வருகை தந்துள்ள செஞ்;சொற் செல்வர், சிவத்தமிழ் செல்வர், கலாநிதி சிவத்திரு ஆறுதிருமுருகன் அவர்களது சிறப்பு சொற்பொழிவு!

Aruthirumurugan Speech-18-11-20140001

கண்ணீர் அஞ்சலி, திரு.சிவகுரு கந்தையா(மதவாச்சி) தங்கோடை, காரைநகர்

Sivaguguru0001

தீவக கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் பௌர்ணமி கலைவிழா 06.11.2014 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் தி.ஜோண்குயின்ரஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்விபண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் ஓய்வுநிலை பிரதிச் செயலாளர் ப.விக்னேஸ்வரனும் கௌரவ விருந்தினராக ஓய்வுநிலை வடமாகாணக் கல்விப்பணிப்பாளர் வீ.இராசையாவும் சிறப்பு விருந்தினராக ஓய்வுநிலைக் கல்விப்பணிப்பாளர் வீ.இராதாகிருஸ்ணனும் கலந்து கொண்டனர்.

 

இராண்டு நினைவஞ்சலி, அமரர் சிற்றம்பலம் பாலசிங்கம்

1

காரைநகர் பிரதேச செயலர் பிரிவு சர்வதேச சிறுவர்,முதியோர் மற்றும் மாற்றாற்றல் உடையோர் தின விழா கடந்த வியாழக்கிழமை மாலை காரைநகர் பிரதேச கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

கருங்காலி போசிட்டு முருகன் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாணம் திருவிழா காட்சிகள்…!

‘காரை வசந்தம் – 2014’

BS1_2006 (Copy)

 

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் 25வது ஆண்டு நிறைவில் 14வது காரை வசந்தம் 25.10.2014 சனிக்கிழமை ஸ்காபுரோவில் கோலாகலாமாக முன்னெடுக்கப்பட்டது.

பிரதம விருந்தினராக  California, USA இல் வதியும் திரு.மகேஸ்வரன் பாலசுப்பிரமணியம் B.Sc.Eng(Hons)  அவர்களும், சிறப்பு விருந்தினராக  Boston USA இல் வதியும் திரு.விக்கினேஸ்வரன் தர்மலிங்கம் B.Sc.Eng(Hon), York Cinima  அதிபர் திரு.மனோ சுப்பிரமணியம், பல்வைத்தியர் ஆதிகணபதி சோமசுந்தரம், வீடு விற்பனை முகவர் திரு.ராஜ் நடராஜா அவர்களும்,

கௌரவ விருந்தினர்களாக முன்னாள் மன்றத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர். மன்றத்தின் 25வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு சிறப்பு விழா மலர் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிகள் 5.30 மணிக்கு ஆரம்பமாகின. நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாகவும், தரமானதாகவும் அமைந்திருந்தன. இலையுதில் காலத்தின் இதமான குளிர்காலத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுகள் 1200 பார்வையாளர்கள் அமர்ந்து கொள்ள வசதியான மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போதிலும் மண்டபம் நிறைந்தளவில் பார்வையாளர்கள் பிரசன்னம் இருந்திருக்கவில்லையாயினும் மன்றத்தின் வளர்ச்சியிலும், மண்ணின் பெருமையிலும் எப்போதும் அக்கறை உள்ளவர்களும், அனுசரணையாளர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் கலைஞர்கள் என எதிர்பார்த்த பலரும் கலந்து கொண்டிருந்த காரை வசந்தம் 2014 இதனை மேடையேற்றிய திரு.தம்பிஐயா பரமானந்தராஜா தலைமையிலான நிர்வாக சபையினரின் முயற்சிக்கு கிடைத்த பெரும் வெற்றியாகவே குறிப்பிடப்படவேண்டும்.

இந்த ஆண்டு காரை வசந்தத்தின் சிறப்பம்சம்

முற்றிலும் காரைநகரைச் சேர்ந்த சிறார்கள் பங்குபற்றிய காரை வசந்தத்திற்கென பிரத்தியேகமாகத் தயாரித்து வழங்கப்பட்ட மிகத் தரமான கலைப் படைப்புகள் அரங்கேறியிருந்தமை இவ்வாண்டு காரை வசந்தத்தின் சிறப்பம்சமாகும். 
கனடாப் பண் தமிழ் பண் மன்றப் பண் தொடக்கம் கிராமிய நடனம், இன்னிசைக் கச்சேரி, வயலின் கச்சேரி, கீ போட் இசை, திரை இசைப் பாடல்கள், திரை இசை நடனம், நிகழ்ச்சித் தொகுப்பு வரை பல்சுவைப் கலைப் படைப்புகளை காரைநகரைச் சேர்ந்த சிறார்கள் தயாரித்து வழங்கியிருந்தார்கள். கனடா-காரை கலாச்சார மன்றத்தின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க இம்முயற்சிக்கு காரைநகரைச் சேர்ந்த கலைப் பட்டதாரியான நாட்டிய கலைமணி திருமதி.ஞானம்பிகை குணரட்ணம் அவர்களின் பங்கு பராட்டுக்குரியது. 

'காரை வசந்தம் – 2014' விழா மலரில் காரைநகரில் இன்று கல்விச் சேவையில் ஈடுபடும் அனைத்து பாடசாலைகளின் விபரங்களும் தனித்தனியாக எடுத்து வரப்பட்டுள்ளதோடு, காரைநகர் பிரதேச செயலரின் இன்றைய காரைநகர் பற்றிய தெளிவான விபரங்களும், 9 கிராம சேவகர்கள் பிரிவுகளில் இருந்தும் தனித்தனியாக அவற்றின் விபரங்களும் எடுத்து வரப்பட்டிருந்ததோடு, காரைநகர் அபிவிருத்தி சபையின் இவ்வருட செயற்பாடுகள் மற்றும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் கடந்த 25 வருட கால செயற்பாடுகள் என அனைத்தும் தெளிவாகவும் விபரமாகவும்  எடுத்து வரப்பட்டிருந்தன. அத்துடன் கனடா காரை கலாச்சார மன்றத்தின் 25 வருட பூர்த்தியை முன்னிட்டு அட்டைப்படமும் மலரினை சிறப்படைய வைத்துள்ளதுடன் தரமான வெளியீடாக காரைநகர் மண்ணின் விபரங்களை எடுத்து வந்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்;த்திருந்தது.

'காரை வசந்தம் – 2014' நிகழ்வுகளின் புகைப்படங்கள் இங்கே எடுத்து வரப்பட்டுள்ளன. 

கருங்காலி போசிட்டு முருகன் கோயிலில் இன்று நடைபெற்ற சூரன் போர் திருவிழா காட்சிகள்…!

தொழில்சார் வழிகாட்டல் பட்டறை உயர்தரப் பாடசாலை மாணவர்களுக்கும் ( தரம் 9 – 12) பெற்றோருக்கும் “பல்கலைக்கழகம்/கல்லூரிக்கான வழிகாட்டல்”

Page+1+of+1

சூரன் போர் காரைநகரில் உள்ள பெரும்பாலான முருகன் ஆலயங்களில் இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது. காரைநகர் புதுறோட் கதிர்காமசுவாமி கோவிலில் இடம்பெற்ற சூரன் போர்க் காட்சிகள்

பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் இடம்பெற்ற சூரன் போர்க் காட்சிகள்.

பாலாவோடை ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயில் நிர்வாக சபையினர் விடுக்கும் அறிவித்தல்!

Scan10411-20140920-112908

கந்தசஷ்டி உற்சவம் 24.10.2014 வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி உள்ளது.

காரைநகரில் உள்ள அனைத்து முருகன் ஆலயங்களிலும் தினமும் விசேட அபிஷேக பூசை வழிபாடுகளும் கந்த புராணபடலம் ஓதல் சுவாமி திருவீதி உலா வருதல் என்பன இடம்பெற்று வருகின்றது. கிழவன்காடு கந்தசுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற கந்தசஷ்டி உற்சவ நிகழ்வும் சுவாமி திருவீதி உலா வரும் காட்சியும்.

கூட்டுப்பிரார்தனை ஆலயங்களில் அருகி வருகின்ற போதிலும் கிழவன்காடு கலா மன்றம் அதற்குப் புத்துயிர் கொடுத்து வருகின்றது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இங்கு கூட்டுப்பிரார்த்தனை சிறப்பாக நேரம் தவறாது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

களபூமியில் முத்தமிழ் பேரவையின் கலை விழா 26.10.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலையில் ஆசிரியர் திருமதி கமலாம்பிகை லிங்கேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

விருந்தினர்களாக யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தி,கிராமசேவையாளர் இ.திருப்புகழூர்சிங்கம்,காரைநகர் பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் வீ.கண்ணன்,யாழ் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை விரிவுரையாளர் கலாநிதி திருமதி வீரமங்கை யோகரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.மாதர் சங்கத் தலைவி திருமதி ந.இராசமலர் அவர்களின் சேவையைப் பாராட்டி இவ்விழாவில் மதிப்பளிக்கப்பட்டது.

 

காரை வசந்தம் 2014

KARAI

கண்ணீர் அஞ்சலி, திரு.சி.க.கணேசன் கருங்காலி,காரைநகர்

Condolense0001

காரை வசந்தம் விழாவிற்கு தொண்டர்கள் தேவை

CKCA logo

எதிர்வரும் சனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு Sir John A.MacDonalad Collegiate Institute இல் நடைபெறவிருக்கும் 'காரை வசந்தம – 2014' கலைவிழாவில் பணியாற்ற ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு: 

கனடா-காரை கலாச்சார மன்றம்

(416)642-4912

 

மரண அறிவித்தல், திரு.சி.க.கணேசன் கருங்காலி,காரைநகர்

ded-5_copy-new

காரை வசந்தம் 2014


KARAI_VASANTHAM1

காரை வசந்தம் 2014

பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்ட அறிவித்தல்!

Members_letter-2809140001

பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் இவ்வருடத்திற்கான செயற்பாட்டு செய்தி அறிக்கை என்பவற்றை பார்வையிட  இங்கேஅழுத்துக

வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலை(சடையாளி) ஆசிரியர்தினவிழா

இன்றைய ஆசிரியர்தினவிழாவை பெற்றார் திருமதி.ப.கோகிலவாணி தலைமை தாங்கி நடாத்தினார். பிரதம விருந்தினராக  திருமதி.பு.சந்திரராசா மெய்கண்டான் அதிபர் கலந்து சிறப்பித்தார்.

ஆசிரியர் தினவிழாப்படங்கள்

TVI தொலைக்காட்சியில் ‘காரை வசந்தம் – 2014’ விளம்பர நேர்காணல்

CKCA logo

காரை வசந்தம் – 2014 விளம்பர நேர்காணல் இன்று வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு TVI தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது. கனடாவில் இருந்து ஒளிபரப்பாகும் TVI தொலைக்காட்சியில் இன்று மாலை நேரடியாகவும் எதிர்வரும் சனிக்கிழமை 18.10.2014 காலை 7.15 மணிக்கு மறு ஒலிபரப்பும் நடைபெறுகின்றது. காணத்தவறாதீர்கள்.

காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் 10.10.2014 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆசிரியர்தின விழாவில்.

காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ஆசிரியர் தினவிழாவில் பிரதம விருந்தினராக ஓய்வுபெற்ற அதிபர் க.தில்லையம்பலம் கலந்துகொண்டார்.

காரைநகர் ஊரி அ.மி.த.க.பாடசாலை ஆசிரியர் தினவிழாவும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வும் 10.10.2014 வெள்ளிக்கிழமை மாலை பாடசாலை அதிபர் இ.சிறிதரன் தலைமையில்நடைபெற்றது.

காரைநகர் ஊரி அ.மி.த.க.பாடசாலை ஆசிரியர் தினவிழாவும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வும் 10.10.2014 வெள்ளிக்கிழமை மாலை பாடசாலை அதிபர் இ.சிறிதரன் தலைமையில்நடைபெற்றது.இந்நிகழ்விற்கு விருந்தினர்களாக காரைநகர் கோட்டக்கல்விப்பணிப்பாளர் பு.ஸ்ரீவிக்னேஸ்வரன்,காரைநகர் அபிவிருத்திச்சபைச் செயலாளர் இ.திருப்புகழூர்சிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் இவ்வாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன் கௌரவிக்கப்பட்டதுடன் ஆசிரியர் கௌரவிப்பு,கலை நிகழ்ச்சி என்பன இடம்பெற்றன.