‘காரை வசந்தம் – 2014’

BS1_2006 (Copy)

 

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் 25வது ஆண்டு நிறைவில் 14வது காரை வசந்தம் 25.10.2014 சனிக்கிழமை ஸ்காபுரோவில் கோலாகலாமாக முன்னெடுக்கப்பட்டது.

பிரதம விருந்தினராக  California, USA இல் வதியும் திரு.மகேஸ்வரன் பாலசுப்பிரமணியம் B.Sc.Eng(Hons)  அவர்களும், சிறப்பு விருந்தினராக  Boston USA இல் வதியும் திரு.விக்கினேஸ்வரன் தர்மலிங்கம் B.Sc.Eng(Hon), York Cinima  அதிபர் திரு.மனோ சுப்பிரமணியம், பல்வைத்தியர் ஆதிகணபதி சோமசுந்தரம், வீடு விற்பனை முகவர் திரு.ராஜ் நடராஜா அவர்களும்,

கௌரவ விருந்தினர்களாக முன்னாள் மன்றத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர். மன்றத்தின் 25வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு சிறப்பு விழா மலர் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிகள் 5.30 மணிக்கு ஆரம்பமாகின. நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாகவும், தரமானதாகவும் அமைந்திருந்தன. இலையுதில் காலத்தின் இதமான குளிர்காலத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுகள் 1200 பார்வையாளர்கள் அமர்ந்து கொள்ள வசதியான மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போதிலும் மண்டபம் நிறைந்தளவில் பார்வையாளர்கள் பிரசன்னம் இருந்திருக்கவில்லையாயினும் மன்றத்தின் வளர்ச்சியிலும், மண்ணின் பெருமையிலும் எப்போதும் அக்கறை உள்ளவர்களும், அனுசரணையாளர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் கலைஞர்கள் என எதிர்பார்த்த பலரும் கலந்து கொண்டிருந்த காரை வசந்தம் 2014 இதனை மேடையேற்றிய திரு.தம்பிஐயா பரமானந்தராஜா தலைமையிலான நிர்வாக சபையினரின் முயற்சிக்கு கிடைத்த பெரும் வெற்றியாகவே குறிப்பிடப்படவேண்டும்.

இந்த ஆண்டு காரை வசந்தத்தின் சிறப்பம்சம்

முற்றிலும் காரைநகரைச் சேர்ந்த சிறார்கள் பங்குபற்றிய காரை வசந்தத்திற்கென பிரத்தியேகமாகத் தயாரித்து வழங்கப்பட்ட மிகத் தரமான கலைப் படைப்புகள் அரங்கேறியிருந்தமை இவ்வாண்டு காரை வசந்தத்தின் சிறப்பம்சமாகும். 
கனடாப் பண் தமிழ் பண் மன்றப் பண் தொடக்கம் கிராமிய நடனம், இன்னிசைக் கச்சேரி, வயலின் கச்சேரி, கீ போட் இசை, திரை இசைப் பாடல்கள், திரை இசை நடனம், நிகழ்ச்சித் தொகுப்பு வரை பல்சுவைப் கலைப் படைப்புகளை காரைநகரைச் சேர்ந்த சிறார்கள் தயாரித்து வழங்கியிருந்தார்கள். கனடா-காரை கலாச்சார மன்றத்தின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க இம்முயற்சிக்கு காரைநகரைச் சேர்ந்த கலைப் பட்டதாரியான நாட்டிய கலைமணி திருமதி.ஞானம்பிகை குணரட்ணம் அவர்களின் பங்கு பராட்டுக்குரியது. 

'காரை வசந்தம் – 2014' விழா மலரில் காரைநகரில் இன்று கல்விச் சேவையில் ஈடுபடும் அனைத்து பாடசாலைகளின் விபரங்களும் தனித்தனியாக எடுத்து வரப்பட்டுள்ளதோடு, காரைநகர் பிரதேச செயலரின் இன்றைய காரைநகர் பற்றிய தெளிவான விபரங்களும், 9 கிராம சேவகர்கள் பிரிவுகளில் இருந்தும் தனித்தனியாக அவற்றின் விபரங்களும் எடுத்து வரப்பட்டிருந்ததோடு, காரைநகர் அபிவிருத்தி சபையின் இவ்வருட செயற்பாடுகள் மற்றும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் கடந்த 25 வருட கால செயற்பாடுகள் என அனைத்தும் தெளிவாகவும் விபரமாகவும்  எடுத்து வரப்பட்டிருந்தன. அத்துடன் கனடா காரை கலாச்சார மன்றத்தின் 25 வருட பூர்த்தியை முன்னிட்டு அட்டைப்படமும் மலரினை சிறப்படைய வைத்துள்ளதுடன் தரமான வெளியீடாக காரைநகர் மண்ணின் விபரங்களை எடுத்து வந்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்;த்திருந்தது.

'காரை வசந்தம் – 2014' நிகழ்வுகளின் புகைப்படங்கள் இங்கே எடுத்து வரப்பட்டுள்ளன.