Muthu Ponnampalam

Author's posts

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 08.04.2024 திங்கட்கிழமை நடைபெற்ற தீர்த்த திருவிழா காணொளி!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 07.04.2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்த் திருவிழா காணொளி!

கனடா காரை கலாச்சார மன்றம் நிர்வாக செயற்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல். (28.04.2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணி)

கனடா காரை கலாச்சார மன்றம்

நிர்வாக செயற்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல்

28.04.2024 (Apr 28, 2024) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணி

கனடா  காரை கலாச்சார மன்ற நிர்வாக சபைபோஷகர்  சபைகணக்காய்வாளர்

2024 – 2025 அங்கத்தவர்கள் தேர்வுக்கான  பொதுத் தேர்தல்

நடைமுறை வழிகாட்டல் ஆவணம்

பின்வரும் நிர்வாக செயற்குழு உறுப்பினர் பதவிகளிற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

  1. தலைவர்
  2. உப தலைவர்
  3. செயலாளர்
  4. உப செயலாளர்
  5. பொருளாளர்
  6. உப பொருளாளர்
  7. 13 நிர்வாக சபை உறுப்பினர்கள்
  8. 6 தயார்நிலை உறுப்பினர்கள்
  9. 3 திட்டமிடல் போசகர் சபை உறுப்பினர்கள்

கனடாவில் வதியும் காரைநகருடன் தொடர்புடைய 18 வயதிற்கு மேற்பட்ட இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். இத் தேர்தலில் பங்கு பற்றி போட்டியிடும் உரிமையும், வாக்களிக்கும் உரிமையும் 2023, 2024ம் ஆண்டிற்கான வருட சந்தா கட்டி அங்கத்துவம் பெற்று, பொது சபை உறுப்பினர் அந்தஸ்த்தில் உள்ள அனைவருக்கும் உண்டு. ஆனாலும் 2024ம் ஆண்டுக்குரிய அங்கத்துவ பணத்தினை குறைந்தபட்சம் பொதுக்கூட்டத்திற்கு 3 நாட்களிற்கு முன்னர் செலுத்தி தமது அங்கத்துவத்தினை புதுப்பித்துக் கொண்டவர்கள் மட்டுமே அமையவுள்ள புதிய நிர்வாக சபையில் அங்கம் வகிக்கும் தகைமை பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.

சேவை மனப்பான்மை உடைய அனைவரும் எந்த பதவிகளுக்கும் விண்ணப்பம் செய்யலாம்.

மேற்படி தேர்தலில் பங்குபற்ற விரும்பும் அனைவரும் 26.04.2024 (Apr 26,2024) வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12:00 மணிக்கு முன்னதாக தமது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புதல் வேண்டும்.

தேர்தல் எதிர்வரும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொது சபை கூட்டத்தின் (28.04.2024) போது நடைபெறும்.

இத் தேர்தலில் தெரிவு செய்பவரின் பதவிக்காலம் தேர்தல் தினத்தில் இருந்து 2026 ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடையும்.

பொது சபை அந்தஸ்த்தில் உள்ள ஒருவர் எத்தனை பதவிக்களுக்கும் விண்ணப்பம் செய்யலாம். ஆனால் அவர் விண்னப்பித்த பதவிகளில் எதாவது ஒரு பதவிக்கு தேர்தலின் போது தெரிவு செய்யப்பட்டால், அதன் பின்பு வரும் பதவிகளுக்குகான அவருடைய விண்ணப்பங்கள் பரிசீலன செய்யப்படமாட்டாது. தெரிவு செய்யப்பட்ட பதவியில் இருந்து, குறித்த நபர் தன்னை விலக்கிக் கொண்டாலும் மற்றும் பதவிகளுக்கான போட்டியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டதாகவே கருதப்படும்.

குறித்த பதவிக்கு ஒன்றிற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றால் வாக்கெடுப்பு மூலம் தெரிவு இடம்பெறும்.

குறித்த ஒரு பதவிக்கு விண்ணப்பம் கிடைத்திருந்தும், தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன்னதாக யாராவது ஒருவர் விண்னப்பத்தினை வாபஸ் செய்தால், அப் பதவிக்கு கூட்டத்தில் சமூகமளித்த பொது சபை உறுப்பினர்கள் மத்தியிலிருந்து தெரிவு செய்யப்படுவர்.

மேற் குறித்த பதவிகளில் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறாத பதவிகளிற்கான தெரிவு மட்டுமே கூட்டத்தில் சமூகமளித்த பொது சபை உறுப்பினர்கள் மத்தியிலிருந்து இடம்பெறும்.

குறிப்பு:

கணக்காய்வாளர் பொது சபை அங்கத்தவர்களினால் கூட்டத்தில் சமூகமளித்த பொது சபை உறுப்பினர்கள் மத்தியிலிருந்து நியமிக்கப்படுவார்.

விண்ணப்ப படிவத்தில் உள்ள சகல கேள்விகளுக்குமான பதில்களும் நிரப்பப்பட வேண்டும். விண்ணப்பதாரிக்கு பொருத்தமற்ற வினாக்கள் இருப்பின் N/A என குறிப்பிட வேண்டும்.

விண்ணப்ப படிவங்களை 26.04.2024 (Apr 26, 2024) வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12:00 மணிக்கு முன்னதாக ckcaelection2024@karainagar.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். விண்ணப்பபடிவங்கள் ஒப்பம் இடப்பட்டிருக்க வேண்டும்.

நன்றி

          திட்டமிடல் போசகர் சபை
கனடா காரை கலாச்சார மன்றம்.

 

விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ள தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://karainagar.com/pages/wp-content/uploads/2024/04/CKCA-Election-Application-2024.pdf

 

 

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 06.04.2024 சனிக்கிழமை நடைபெற்ற சப்பறத் திருவிழா காணொளி!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 06.04.2024 சனிக்கிழமை நடைபெற்ற 13ஆம் நாள் திருவிழா காணொளி!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய தேர்த் திருவிழா 07.04.2024 ஞாயிற்றுக்கிழமை சிவன் தொலைக்காட்சி ஊடாக இலங்கை நேரம் காலை 5.30 மணி முதல் நேரலையாக காண்பிக்கப்படும்.

காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் – 2024

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 05.04.2024 வெள்ளிக்கிழமை நடைபெற்ற 12ஆம் நாள் திருவிழா காணொளி!

கனடா காரை கலாச்சார மன்றம் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும். (28.04.2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணி)

கனடா காரை கலாச்சார மன்றம்

பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்.

(28.04.2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணி)

கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொதுக்கூட்டமும் 2024/2025 ஆண்டிற்குரிய புதிய நிர்வாக சபை தெரிவு ஆகியன 28.04.2024 ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் 2023ம், 2024ம் ஆண்டுக்குரிய அங்கத்தவர்கள் அனைவரும் பங்குபற்றலாம். ஆனாலும் 2024ம் ஆண்டுக்குரிய அங்கத்துவ பணத்தினை குறைந்தபட்சம் பொதுக்கூட்டத்திற்கு 3 நாட்களிற்கு முன்னர் செலுத்தி தமது அங்கத்துவத்தினை புதுப்பித்துக் கொண்டவர்கள் மட்டுமே அமையவுள்ள புதிய நிர்வாக சபையில் அங்கம் வகிக்கும் தகைமை பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.

அங்கத்தவர்களாக இணைந்து கொள்ள விரும்புவர்கள் கீழே உள்ள படிவத்தை நிரப்பி அத்துடன் உடனடியாக karainagar@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு e-Transfer மூலம் பணத்தினை ($20.00) செலுத்தலாம். மேலும் மன்ற மின்னஞ்சல் Karainagar@gmail.com என்ற முகவரியுடன் தொடர்புகொண்டு தங்கள் அங்கத்துவதை பெற்றுக்கொள்ளலாம்.

நிர்வாக சபை பதவிக்கான அறிவித்தல் மற்றும் நிகழ்ச்சி நிரல் பின்னர் மன்ற இணையத்தளத்தில் எடுத்துவரப்படும்.

காலமும் நேரமும்: 28.04.2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணி

இடம்: Scarborough Civic Centre
Committee Rooms 1 & 2

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வளர்ச்சியிலும், கனடா வாழ் காரைநகர் மக்களின் ஒற்றுமையிலும், காரை மண்ணின் வளர்ச்சியில் அக்கறையும் ஆர்வமும்கொண்டுள்ள அனைத்து கனடா வாழ் காரை மக்களும் குறைந்தபட்சம் பொதுக்கூட்டத்திற்கு மூன்று தினங்களிற்கு முன்னர் அங்கத்துவ பணத்தினை செலுத்தி இப்பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி

                              நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

அங்கத்தவர்களாக இணைந்து கொள்ள விரும்புவர்கள் கீழே உள்ள இணைப்பை அழுத்தி அதில் உள்ள படிவத்தை நிரப்பி Karainagar@gmail.com என்ற மன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

https://karainagar.com/pages/wp-content/uploads/2024/02/CKCA-MEMBERSHIP-FORM-.pdf

 

மரண அறிவித்தல், Dr.கணேசபிள்ளை சிவகுருநாதன் (ஓய்வுபெற்ற முகாமைத்துவ பீடாதிபதி ஊவா – வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்) (அறுகம்புலம், காரைநகர்) (வைமன் வீதி, நல்லூர்)

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 04.04.2024 வியாழக்கிழமை நடைபெற்ற 11ஆம் நாள் திருவிழா காணொளி!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 03.04.2024 புதன்கிழமை நடைபெற்ற 10ஆம் நாள் திருவிழா காணொளி!

திருமதி கந்தையா சிவமணி அவர்களின் மறைவு குறித்து கனடா காரை கலாசார மன்றம் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 02.04.2024 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 9ஆம் நாள் திருவிழா காணொளி!

மரண அறிவித்தல், திருமதி.சிவமணி கந்தையா (பலுகாடு, காரைநகர்) (நீலிப்பந்தனை, காரைநகர்) (கனடா)

மரண அறிவித்தல்

                                                           திருமதி.சிவமணி கந்தையா

உதயம் : 17/10/1928                                                                                                          அஸ்தமனம் : 31/03/2024

காலம் சென்றவர்களான காரைநகர் வடக்கை சேர்ந்த சிதம்பரப்பிள்ளை கந்தையா காரைநகர் பலுகாட்டை சேர்ந்த கணபதிப்பிள்ளை தங்கம்மா ஆகியோரின் மகளும்,

காரைநகர் நீலிப்பந்தனையை சேர்ந்த சங்கரப்பிள்ளை ஆறுமுகம் சின்னாச்சிப்பிள்ளை ஆகியோரின் மருமகளும்,

அமரர் கந்தையா அவர்களின் மனைவி சிவமணி அவர்கள் 31/03/2024 அன்று இயற்கை எய்திவிட்டார்.

இவர் பலுகாடு, காரைநகரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து நீலிப்பந்தனை, காரைநகரில் வசித்து பின்னர் கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்தார்.

அன்னார் காலம் சென்றவர்களான அம்பிகை, வரதராசா,பத்மாவதி மற்றும் ஜெகதீசன் ஆகியோரின் சகோதரியும்,

காலம் சென்றவர்களான தம்பிராசா, நல்லம்மா, கதிரவேலு, மற்றும் புனிதவதி ஆகியோரின் மைத்துனியும்,

காலம் சென்றவர்களான பொன்னம்மா, பரிமளம், ஐயம்பிள்ளை ஆகியோரின் மைத்துனியும்,

காலம் சென்றவர்களான சரவணமுத்து, மயில்வாகனம், தங்கமுத்து ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,

தியாகலிங்கம்(இங்கிலாந்து), தர்மராசா(ஐக்கிய அமெரிக்கா), கனகராசா(கனடா), அமரர் மனோரஞ்சனா(கனடா) மற்றும் பஞ்சலிங்கம்(சிவமணி-CTBC,கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அமிர்தநாயகி, மங்கயற்கரசி, காஞ்சனா, அமரர் கனகசபாபதி மற்றும் திருமகள்(உருத்திரா) ஆகியோரின் ஆசை மாமியாரும்,

துஷ்யந்தி தியாகலிங்கம் – துஷ்யந்தன், வர்ஷினி தியாகலிங்கம் – யோனாதன், செந்தூரன் தர்மராசா, சிவப்பேறு அடைந்த பிரணவன் மற்றும் வைகுந்தன் தர்மராசா, ரிஷி கனகராசா, சத்தியசொரூபி கனகசபாபதி – தீபன், சத்தியசிவம் கனகசபாபதி, பிரணவி பஞ்சலிங்கம், வர்ணவி பஞ்சலிங்கம், வாரணன் பஞ்சலிங்கம் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,

ரேயா, மைலன், மிறன், நிலா, மீரா,ஆதி ஆகியோரின் பிரியமான பூட்டியுமாவார்.

பார்வைக்கு:

Chapel Ridge Funeral Home

8911 Woodbine Avenue, Markham ON L3R 5G1

Wednesday 03/04/2024,      5PM to 9PM

இறுதிக்கிரிகை:

Chapel Ridge Funeral Home

8911 Woodbine Avenue, Markham ON L3R 5G1

Thursday 04/04/2024 அன்று காலை 8.00 ஆரம்பமாகி நல்லடக்கம் காலை 11.30க்கு Forest Lawn Mausoleum & Cremation Centrல் நடைபெறும்.

முகவரி 4570 Yonge St, North York, ON M2N 5L612492 Woodbine Avenue, Gormley, ON L0H 1G0

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், ஊரவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:

கனகராசா, மகன்: +1 416-726-6269

பஞ்சலிங்கம், மகன்: +1 416-570-1990

உருத்திரா, மருமகள்: +1 416-706-7884

தருமராசா, மகன்: +1 917-224-0800

தியாகலிங்கம், மகன்: + 44 7971 291959

 

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 01.04.2024 திங்கட்கிழமை நடைபெற்ற 8ஆம் நாள் திருவிழா காணொளி!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 31.03.2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 7ஆம் நாள் திருவிழா காணொளி!

மரண அறிவித்தல், திருமதி.இராமலிங்கம் பூரணம் (பொன்னாவளை,களபூமி,காரைநகர்) (விளானை,களபூமி,காரைநகர்)

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 30.03.2024 சனிக்கிழமை நடைபெற்ற 6ஆம் நாள் திருவிழா காணொளி!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 29.03.2024 வெள்ளிக்கிழமை நடைபெற்ற 5ஆம் நாள் திருவிழா காணொளி!

மரண அறிவித்தல், திரு.செல்வரட்ணம் வரதராஜா (S.M.கேணியடி.புதுறோட்,காரைநகர்) (லண்டன்,பிரித்தானியா)

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 28.03.2024 வியாழக்கிழமை நடைபெற்ற 4ஆம் நாள் திருவிழா காணொளி!

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 27.03.2024 புதன்கிழமை நடைபெற்ற 3ஆம் நாள் திருவிழா காணொளி!

கனடா-காரை கலாசார மன்றத்துக்கும் அதன் செயற்பாட்டாளர்களுக்கும் காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளைக்கும் எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குத் தொடர்பிலான கலந்துரையாடலும் ஆலோசனைக் கூட்டமும். (07.04.2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணி)

கனடா-காரை கலாசார மன்றத்துக்கும்

அதன் செயற்பாட்டாளர்களுக்கும்

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளைக்கும்

எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குத் தொடர்பிலான

கலந்துரையாடலும் ஆலோசனைக் கூட்டமும். 

கனடா-காரை கலாசார மன்றத்துக்கும் அதன் செயற்பாட்டாளர்களுக்கும் காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளைக்கும் எதிராக நஸ்டஈடு கோரி திரு.முத்து பொன்னம்பலம் என்பவரால் ஒன்ராறியயோ உயர் நீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு மன்றத்தினதும் காரைநகர் மக்களினதும் நலன்களை நிலைநாட்டும் வகையில் எதிர்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வழக்குத் தொடர்பில் தெளிவான புரிதலை பொது மக்களுக்கு ஏற்படுத்துவதும் அதற்குச் செலவு செய்யப்படும் நிதி தொடர்பில் தவறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் உண்மை நிலை குறித்து பொது மக்களுக்கு விளக்கமளிக்கப்பட வேண்டியதும் மன்றத்தின் பொறுப்பும் கடமையுமாகும். கனடா-காரை கலாசார மன்றத்தின் ஈராண்டுப் பொதுக் கூட்டம் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இக்கூட்டத்தில் இவ்வழக்குத் தொடர்பிலான உறுதியான தீர்மானம் எடுக்கப்படவேண்டியுள்ளது.

எனவே மேற்குறித்த அனைத்து விடயங்களுக்காகவும் ஓர் ஆலோசனைக் கூட்டத்தினையும் கலந்துரையாடலையும் நடாத்தி நடைபெறவுள்ள ஈராண்டுப் பொதுக் கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்கான முன்மொழிவினை தயார் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கானது மன்றத்தினதும் அதன் செயற்பாட்டாளர்களினதும் நலன்களை மட்டுமல்லாது காரைநகர் மக்களினதும் நலன்களை பாதிப்பதாகவுள்ளதால் கனடா வாழ் காரை மக்களை இதில் கலந்துகொண்டு மன்றத்தையும் அதன் செயற்பாட்டாளர்களையும் பாதுகாக்க உதவுவதுடன் மண்ணின் செயற்பாட்டாளர்கள் எவ்வித தயக்கமோ அச்சமோ இன்றி மண்ணுக்கான பணியில் ஈடுபடுகின்ற நிலையினை ஏற்படுத்த ஆதரவளிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

காலமும் நேரமும்: 07.04.2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணி

இடம்: Scarborough Civic Centre
Committee Rooms 1 & 2

நிர்வாகம்
கனடா-காரை கலாசார மன்றம்.

S.K.சதாசிவம் அவர்கள் எழுதிய “வரலாற்றில் காரைநகர்” என்ற நூல் வெளியீட்டு விழா 31.03.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 26.03.2024 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2ஆம் நாள் பகல் திருவிழா காணொளி!

மரண அறிவித்தல் , திருமதி.அம்பலவாணர் செல்வராணி (வேதரடைப்பு,காரைநகர்) (மார்க்கம், கனடா)

மரண அறிவித்தல்

திருமதி.அம்பலவாணர் செல்வராணி

தோற்றம்: 18/06/1942                                                                                                                 மறைவு: 22/03/2024

காரைநகர் வேதரடைப்பை பிறப்பிடமாகவும், கனடாவை (மார்க்கம்) வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் செல்வராணி அவர்கள் 22/03/2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை (மாஸ்டர்) தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற நமசிவாயம், இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அம்பலவாணரின் அன்பு மனைவியும்,

சதானந்தன், மஞ்சுபாசனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஏகாம்பரநாதன், சிவசக்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

வினிதா, தீபக், சிந்துஜா, யாதவன் ஆகியோரின் அன்புப் பேத்தியாரும்,

காலஞ்சென்ற சுந்தரராஜா, தனிகாசலம், காலஞ்சென்ற புவீந்திரராஜா, கிருபைநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவபாக்கியம், அமிர்தாம்பிகை, கமலாதேவி, விமலராணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

நிகழ்வுகள்:

பார்வைக்கு : 24.03.2024 ஞாயிற்றுக்கிழமை 5.00 Pm – 9.00 Pm
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

பார்வைக்கு : 25.03.2024 திங்கட்கிழமை 8.00 Am – 8.30 Am
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை : 25.03.2024 திங்கட்கிழமை 8.30 Am – 10.45 Am
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தகனம் : 25.03.2024 திங்கட்கிழமை 11.00 Am
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
சதானந்தன் (மகன்) : 905 201 2820
மஞ்சு (மகள்) : 44 7946 275 640
பரம் (மருமகன்) : 44 7980 109 482

மரண அறிவித்தல், திருமதி.தில்லைநாதன் நவரத்தினபூபதி (வளுப்போடை,களபூமி,காரைநகர்) (சக்கலாவோடை,காரைநகர்)

மரண அறிவித்தல்

திருமதி.தில்லைநாதன் நவரத்தினபூபதி

தோற்றம் : 11.02.1938                                                                                                               மறைவு : 19.03.2024

காரைநகர் களபூமி வளுப்போடையை பிறப்பிடமாகவும் சக்கலாவோடையை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாதன் நவரத்தினபூபதி அவர்கள் 19.03.2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான குமாரவேலு கந்தையா நாகரத்தினம் தம்பதியினரின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்றவர்களான அண்ணாமலை கந்தையாபிள்ளை பூரணம் தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற தில்லைநாதன் (முருகன் ஸ்டோர்ஸ், கதிர்வெல,பொலநறுவை) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற இரத்தினபூபதி,இராசபூபதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

அமிர்தலிங்கம்(கனடா),புஸ்பவதி(ஓய்வு நிலை ஆசிரியர்),திலகவதி,சாரதாதேவி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நகுலாதேவி (கனடா),காசிப்பிள்ளை (வேல்முருகன் ஸ்டோர்ஸ், மட்டக்களப்பு),ஏகாம்பரம்,ஜீவானந்தராசா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கிருஸ்ணவேணி,நிசாந்தன்,சதீசன்,திவ்யா,வித்தியா,ஜனாகாந்தன்,கோபிநாத்,துசியந்தன்,சுவாஸ்திகா,கீர்த்தனன்,ராகுலன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,

அதிரன்,ஆதிரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21.03.2024 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்ற பின்னர் பூதவுடல் காரைநகரில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:
அமிர்தலிங்கம் (லிங்கம்) (மகன்)
சாரதா (மகள்) ஜீவா (மருமகன்)
416 740 9462
416 716 6260

திரு.முருகேசு காசிப்பிள்ளை அவர்களின் மறைவு குறித்து கனடா காரை கலாசார மன்றம் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி!

kasippillai 2

கனடா-காரை கலாசார மன்றத்தின் முன்னாள் தலைவர் மு.காசிப்பிள்ளை அவர்களின் மறைவினால் நாளைய தினம் (10.03.2024) நடைபெறவிருந்த கலந்துரையாடலும் ஆலோசனைக் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கனடா-காரை கலாசார மன்றத்தின் முன்னாள் தலைவர் மு.காசிப்பிள்ளை அவர்களின் மறைவினால் நாளைய தினம் (10.03.2024) நடைபெறவிருந்த கலந்துரையாடலும் ஆலோசனைக் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கனடா-காரை கலாசார மன்றத்துக்கும் அதன் செயற்பாட்டாளர்களுக்கும் எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குத் தொடர்பில் நாளைய தினம் (10.03.2024) முற்பகல் 9.30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலும் ஆலோசனைக் கூட்டமும் மன்றத்தின் முன்னாள் தலைவரான திரு.முருகேசு காசிப்பிள்ளை அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  இவ் ஆலோசனைக் கூட்டமும் கலந்துரையாடலும் மீண்டும் நடைபெறவுள்ள திகதியும் இடமும் விரைவில் அறியத்தரப்படும்.

நிர்வாகம்
கனடா-காரை கலாசார மன்றம்.