‘காரை ஸ்வரங்கள்-2016’ வெற்றி பெற கனடா-காரை கலாச்சார மன்றம் வாழ்த்துகின்றது!

CKCA logoFRANCE KARAI LOGO

'காரை ஸ்வரங்கள்-2016' வெற்றி பெற கனடா-காரை கலாச்சார மன்றம் வாழ்த்துகின்றது!

எமது சகோதர சங்கமான பிரான்ஸ் – காரை நலன்புரிச் சங்கத்தின் 10 ஆவது ஆண்டு சிறப்பு விழாவான 'காரை ஸ்வரங்கள்-2016' இற்கு வாழ்த்துச் செய்தி வழங்குவதில் கனடா-காரை கலாச்சார மன்றம் பெருமகிழ்ச்சி அடைகின்றது. 

புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வாழும் எமது காரை உறவுகள் ஒன்றிணைந்து உருவாக்கிய பிரான்ஸ் – காரை நலன் புரிச் சங்கம்; ஒரு தசாப்தத்தைக் கடந்து அதன் வளர்ச்சிப் பாதையில் ஒரு முக்கிய மைல் கல்லை அடைந்திருப்பதை அறிந்து எமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

நாம் பிறந்து வளர்ந்த ஊரின் நினைவுகளை மீட்டவும், எமது கலை பண்பாட்டு அடையாளங்களை எமது அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லவும், எமது ஊர் வாழ் உறவுகளின் நலன்களுக்கு உதவிடவும் பல திட்டங்களை நிறைவேற்றி பத்தாவது ஆண்டில் வெற்றி நடைபோடும பிரான்ஸ் – காரை நலன்புரிச் சங்கத்தின் பணிகளை கனடா வாழ் காரை உறவுகளின் சார்பில் கனடா – காரை கலாச்சார மன்றம் பாராட்டி வாழ்த்துகின்றது.

உலகெங்கும் பரந்து வாழும் எமது உறவுகள் ஒன்றுகூடி மகிழ்வதற்கும், எமது இளம் தலைமுறையினர் தமது மொழி, கலைத் திறன்களை வெளிப்படுத்தி அரங்கேற்றுவதற்கும் இவ்வாறான விழாக்கள் உதவுகின்றன. 

அத்தகைய சிறப்புமிக்க விழாவான 'காரை ஸ்வரங்கள் – 2016' பொலிவு பெற்று வெற்றி விழாவாக விளங்க எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பரத்துறை சௌந்தராம்பிகா சமேத சுந்தரேசுவரப் பெருமானின் அருள் கிடைக்க வேண்டி வாழ்த்துகின்றோம்.

நிர்வாகம்
கனடா-காரை கலாச்சார மன்றம்