Tag: Karai Hindu O.S.A

பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் போசகர், பொருளாளர் ஆகியோர் தாய்ச் சங்கத்தின் கூட்டத்தில் கலந்துகொண்டனர்

பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் போசகர், பொருளாளர் ஆகியோர் தாய்ச் சங்கத்தின் கூட்டத்தில் கலந்துகொண்டனர்

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய(காரைநகர் இந்துக்கல்லூரி) பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் போசகர் சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம், பொருளாளர் திரு.மா.கனகசபாபதி ஆகியோர் பாடசாலையின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கடந்த செவ்வாய்கிழமை(29.12.2015) அன்று நடைபெற்ற பழைய மாணவர்களின் தாய்ச்சங்கத்தின் கூட்டத்திற்கு அதன் நிர்வாகிகளின் அழைப்பின் பேரில் சமூகமளித்திருந்தனர்.

கனடாக் கிளையின் நிர்வாக சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமையவும் அத்தீர்மானத்தினை தாய்ச்சங்க நிர்வாகத்திடம் தெரிவிக்குமாறு கனடாக் கிளை நிர்வாகம் வேண்டிக்கொண்டமைக்கு அமையவும் போசகர் திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் மேற்படி கூட்டத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

Visuvalingam-Mas-W

அதாவது தாய்ச்சங்க நிர்வாகம் எந்தவொரு விண்ணப்பத்தினையும் எழுத்து மூலமாகவே கனடாக் கிளை நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமெனவும் அத்தோடு கனடாக் கிளை தாய்ச்சங்கத்திற்கு அனுப்பி வைக்கும் நிதிக்கான கணக்கு விபரங்களை உடனுக்குடன் அனுப்பி வைத்து உதவ வேண்டுமெனவும் அப்போதுதான் கனடாக் கிளையின் நிர்வாக சபை அவற்றினை ஆராய்ந்து முடிவெடுக்க முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.

கனடாக் கிளையின் பொருளாளர் திரு.மா.கனகசபாபதி அவர்களும் போசகர் குறிப்பிட்ட மேற்படி கருத்தினை வழிமொழிந்திருந்தார்.

Kanagasabapathy-W

மேலும் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் பாடசாலையின் தற்போதுள்ள “கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம்” என்ற பெயரை “காரைநகர் இந்துக்கல்லூரி” என்று மாற்றுவதற்கான அனுமதிக் கடிதம் கல்வித்திணைக்களத்திடமிருந்து தமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்து கனடாக் கிளையின் போசகர் சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்களைக் கருத்துத் தெரிவிக்குமாறு கூறினார்.

திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் தனது கருத்துரையில் பாடசாலையின் பெயரை மாற்றவேண்டிய அவசியம் இல்லை எனவும் அப்படி மாற்றுவதாயின் புதிய பெயர் எதுவும் தேட வேண்டிய அவசியமில்லை எனவும், இப்பாடசாலையைத் தோற்றுவித்தவர்களுடைய எண்ணக்கருவைச் சிதைக்காதவாறு மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களும், சயம்பு உபாத்தியாயரும் இணைந்து இட்ட நாமமாகிய ‘திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் வித்தியாசாலை’ என்ற பெயரையல்லவா மீண்டும் மாற்ற வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் தமது கருத்தில் பாடசாலையின் பெயரை மாற்றுவதில் கவனம் செலுத்துபவர்கள், பாடசாலையின் தரத்தை உயர்த்துவதிலேயே கவனம் செலுத்த வேண்டுமெனவும் சிறிய பௌதீக வளம் கொண்ட பாடசாலைகளை எடுத்துக்காட்டாகக் கூறி அவை பின்னர் அதிசிறந்த முதல்தர பாடசாலைகளாக எவ்வாறு தரமுயர்ந்தன என்றும் விளக்கிக் கூறியிருந்தார்.

பாடசாலையின் பெயர் மாற்ற விவகாரத்தில் தாம் தலையிட  விரும்பவில்லை என்பது தனது தனிப்பட்ட கருத்தாகும் என இக்கூட்டத்தில் பொருளாளர் திரு.மா. கனகசபாபதி அவர்கள் தெரிவித்தார்.

பிருத்தானியாவில் ‘சைவாசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்’ நூல் வெளியீட்டு விழா சிறப்புற பழைய மாணவர் சங்க கனடாக் கிளை வாழ்த்து

OSA KARAI HINDU LOGO

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சைவத்தையும் தமிழையும் பாதுகாக்க கல்வி என்னும் கருவியைத் தனது கையிலெடுத்தவர் எமது காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள். 
காரைநகரிலும், யாழ் குடாநாட்டிலும் இன்றும் சைவப் பாரம்பரியம் மிக்க பாடசாலைகளாக விளங்கி சாதனைகள் படைத்து வரும் கல்விக்கூடங்களையும் ஆசிரியர் கலாசாலையையும் நிறுவிட மூலகர்த்தாவாக தனது உடல், பொருள், ஆவி அத்தனையையும் அர்ப்பணித்து உழைத்த காரைநகர் தந்த அருணாசல உபாத்தியாயர் அவர்கள் நாவலர் பெருமானுக்கு அடுத்து வைத்துப் போற்றப்படுகின்றார்.  
சைவப்பாரம்பரியத்தைப் பேணியவாறு கல்விப்பயிர் வளர்ந்த மகான் அருணாசலம் அவர்களுக்கு காரைநகர் மைந்தர்கள் ஒவ்வொருவரும் நன்றிக்கடன்பட்டவர்கள் ஆவார். 
அந்த நன்றிக் கடனைச் செலுத்தும் வகையில் பிருத்தானியா வாழ் காரை மைந்தர்களின் அமைப்பான பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கம் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களின் சரிதம் அடங்கிய 'சைவாசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்' என்ற நூல் வெளியிட்டு விழாவை ஏற்பாடு செய்துள்ளது. 
மேற்படி நூலின் முதல் பதிப்பு காரைநகர் சைவமகா சபையினால் 1971 ஆம் ஆண்டு காரைநகரில் வெளியிடப்பட்டது. இந்நூலின் மூலப்படியுடன் மகான் ச.அருணாசலம் அவர்கள் பற்றிய மேலும் கட்டுரைகள், தகவல்கள் அடங்கிய இரண்டாம் பதிப்பு கனடா சைவ சித்தாந்த மன்றத்தினால் கடந்த ஜுலை மாதம் கனடாவில் வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 
தமக்கே உரித்தான தனித்துவமான துடிப்புடனும் பொறுப்புடனும் மிகச் சிறப்பாக இந்நூலினை பிருத்தானியா வாழ் காரை மக்களுக்கும்; கல்வியாளர்கள், சைவத் தமிழ் அன்பர்களு;ககும் அறிமுகஞ் செய்து வெளியிட இருக்கும் பிருத்தானியா காரை நலன்புரிச்சங்கத்திற்கு தமது பாராட்டுகளைத் தெரிவிப்பதுடன் இந்நூல் வெளியீட்டு விழா வெற்றி பெற கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வாழ்த்துகின்றது

 

அமரர். மார்கண்டு பாலசிங்கம் அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் கண்ணீர் அஞ்சலி

எமது கல்லூரியின் முன்னாள் அதிபர் திருமதி.தேவநாயகி பாலசிங்கம் அவர்களின் அன்புக் கணவரும் எமது கல்லூரியின் பழைய மாணவருமான திரு.மார்க்கண்டு பாலசிங்கம் (முன்னாள் உதவி முகாமையாளர், மக்கள் வங்கி) அவர்கள் செவ்வாய்கிழமை (18.08.2015) அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார் என்ற செய்தி அறிந்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளை ஆழ்ந்த துயரம் அடைந்துள்ளது.

எமது கல்லூரியின் பழைய மாணவியும், விஞ்ஞான பட்டதாரியுமான திருமதி. தேவநாயகி பாலசிங்கம் அவர்கள் எமது கல்லூரியில் 23 ஆண்டு காலமாக உயிரியல் விஞ்ஞான ஆசிரியராகவும், பிரதி அதிபராகவும், அதிபராகவும் சேவையாற்றியவர் ஆவார். கல்லூரியின் முதலாவது பெண் அதிபர் என்ற பெருமையைப் பெறுவதுடன்1991 இடப்பெயர்வு காலத்தில் கல்லூரியின் தனித்துவத்தைப் பேணி வளர்ப்பதில் அரும்பாடுபட்டார். காரைநகரில் மீளக் குடியேறியபோது கல்லூரியை துணிவுடன் சொந்த இடத்தில் இயங்க வைத்து மீளக்கட்டியெழுப்புவதற்கு ஆரம்ப கர்த்தாவாக இருந்து ஏனைய பாடசாலைகளுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்த அதிபர் திருமதி.தே.பாலசிங்கம் அவர்கள் ஆவார்.

இத்தகைய அர்ப்பணிப்பும் துணிவும் ஆளுமையும்மிக்க அதிபர் திருமதி.தேவநாயகி பாலசிங்கம் அவர்கள் எமது கல்லூரியின் வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகளுக்கு அவருக்குப் பின்னால் உறுதுiணையாகவிருந்து உற்சாகமளித்தவர் அவரின் அன்பிற்குரிய வாழ்க்கைத் துணைவர் திரு.மார்க்கண்டு பாலசிங்கம் அவர்கள் என்றால் அது மிகையாகாது.

அத்தகைய அன்புக் கணவரை இழந்து தவிக்கும் எமது கல்லூரியின் முன்னாள் அதிபர் திருமதி.தேவநாயகி பாலசிங்கம் அவர்களுக்கும் அவரது புதல்வர் மற்றும் குடும்பத்தினருக்கும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளை அநுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய ஈழத்துச் சிதம்பரத்தில் உறையும் சிவகாமி சமேத நடராசப் பெருமானை இறைஞ்சுகின்றது.

கலாநிதி..தியாகரசா ..வித்தியாலய(காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்கம்கனடா

முழுமையான கண்ணீர் அஞ்சலியைக் கீழே காணலாம்.

Tribute Balasingam OSA

 

தேசிய மட்ட சாதனையாளர் செல்வி அமிர்தா ஆனந்தராசாவினை பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை பாராட்டி வாழ்த்துகின்றது

KARAI HINDU LOGO

தேசிய மட்ட சாதனையாளர் செல்வி.அமிர்தா ஆனந்தராசாவிற்கும் அவரைப் பயிற்றுவித்த ஆசிரியைகள், அதிபர் அகியோருக்கு பழைய மாணவர் சங்க கனடாக் கிளை தமது பாராட்டினையும் வாழ்த்தினையும் கல்லூரி அதிபர் ஊடாக அனுப்பி வைத்துள்ளனர்.
அக்கடிதத்தில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் சமுர்த்தி பயனாளிகளின் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் மத்தியில் தேசிய ரீதியாக நடைபெற்ற தனிப்பாடல் போட்டியில் எமது பாடசாலையின் மாணவி செல்வி அமிர்தா ஆனந்தராசா இரண்டாவது இடத்தினைப் பெற்றுக்கொண்ட செய்தி தங்கள் மூலமாக அறிந்து பழைய மாணவர் சங்கத்தின் கன்டா கிளை மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றது. சாதனைப் பதிவுகளை ஏற்படுத்தி பாடசாலைக்கு பெருமை சேர்த்து வருகின்ற மாணவர்களின் பட்டியலில் தனது பெயரையும் இணைத்துக்கொண்ட செல்வி அமிர்தா ஆனந்தராசாவினை எமது சங்கம் பாராட்டி வாழ்த்துகின்றது.

பாடசாலையின் இசைத்துறை ஆசிரியைகளான திருமதி கலாசக்தி றொபேசன திருமதி பங்கையற்செல்வி முகுந்தன் ஆகியோர் வழங்கிய பயிற்சி செல்வி அமிர்தாவின் உழைப்பு என்பனவற்றுடன் தங்களுடைய மேலான நெறிப்படுத்தலும் இணைந்து செல்வி அமிர்தாவின்; வெற்றிக்கு வழிவகுத்திருந்தன என்ற வகையில் தங்களையும் இசைத்துறை ஆசிரியைகள் இருவரையும் கூடவே எமது சங்கம் பாராட்டி நன்றி கூறுகின்றது.

மு.வேலாயுதபிள்ளை               கனக சிவகுமாரன்             மா.கனகசபாபதி
தலைவர்                                         செயலாளர்                           பொருளாளர்

முழுமையான கடிதத்தின் பிரதியைக் கீழே காணலாம்.

Amirtha.Appreciation Message-page-001

 

‘சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம்’ நூல் வெளியீட்டு விழா சிறப்புற்று விளங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வாழ்த்துகின்றது

schoollogo

சிவநெறிச் செல்வர் திரு.தி.விசுவலிங்கம் 
தலைவர், 
சைவ சித்தாந்த மன்றம் கனடா. 
பேரன்புடையீர்!


'சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம்' நூல் வெளியீட்டு விழா சிறப்புற்று விளங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வாழ்த்துகின்றது


அந்நிய ஆதிக்கத்தின் பிடியில் சிக்கி சைவ சமயம் வீழ்ச்சியடைந்து வந்த காலகட்டத்தில் அதன் எழுச்சிக்கு வித்திட்டு உழைத்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களின் பணிகளை தொடர்ந்து செயற்படுத்த தனது வாழ்நாளை அர்ப்பணித்திருந்த காரைநகர் தந்த மகான் ஸ்ரீமான் அருணாசல உபாத்தியாயர் அவர்களின் அளப்பரிய சைவப்பணிகளை வெளிப்படுத்துகின்ற 'சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம்' என்கின்ற அரிய நூலினை தங்களது மன்றம் மறுபிரசுரம் செய்து வெளியிடவிருப்பது அறிந்து எமது சங்கம் மகிழ்ச்சியடைகின்றது. 


ஸ்ரீமான் அருணாசல உபாத்தியாயர் அவர்கள் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் சைவ பாடசாலைகளையும் சைவ ஆசிரிய கலாசாலைகளையும் தோற்றுவிக்க முன்னின்று உழைத்த பெருமகனாவார். இன்று கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் என அழைக்கப்பட்டு வருகின்ற காரைநகரின் முதன்மைப் ;பாடசாலையினை காரைநகர் இந்து ஆங்கில வித்தியாசாலை என்ற பெயரில் ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களால் நிறுவப்படுவதற்கும் வியாவில் சைவ வித்தியாலயம், சுப்பிரமணிய வித்தியாசாலை ஆகிய கல்வி நிறுவனங்கள் தோற்றம் பெறுவதற்கும் அருணாசல உபாத்தியாயர் அவர்களே மூல காரணமாக அமைந்து விளங்கினார் என்பது வரலாறாகும். 


அனைவராலும் விதந்து போற்றப்படுகின்ற காரை மக்களின் சைவப் பாரம்பரியம் மேம்பட்டு விளங்கவும் நீடித்து நிலைபெறவும் காரணமாக விளங்கிய அருணாசல உபாத்தியாயர் காரை மக்களால் மட்டுமன்றி சைவத்தமிழ் மக்கள் அனைவராலும் என்றென்றும் நினைவு கூரப்படவேண்டியவராவார். 


சைவசமயம் சார்ந்த அரிய பல நூல்களை தேர்ந்தெடுத்து அவை சைவ மக்களை சென்றடைந்து பயனடையும்வண்ணம் மறு பிரசுரம்செய்து வெளியிட்டு வருகின்ற தங்களது பணி பாராட்டுக்குரியதாகும். அந்த வரிசையில் சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் என்ற நூலின் வெளியீடு வரலாற்றில் பதிவுசெய்யப்டவேண்டியதொன்றாகும். 


எதிர்வரும் யூலை25ஆம் திகதி Scarborough Civic Centre  மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நூலின் வெளியீட்டு விழா சிறப்புற்று விளங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வாழ்த்துகின்றது. 


மு.வேலாயுதபிள்ளை         கனக சிவகுமாரன்                             மா.கனகசபாபதி 
தலைவர்                                    செயலாளர்                                            பொருளாளர்


முழுமையான வாழ்த்துச் செய்தியைக் கீழே காணலாம் 

Greeting-Message-for-Book-Release-OSA

கர்நாடக இசை பயிலும் மாணவர்கள் பயன்பெற்ற பயிற்சிப்பட்டறை (Workshop)

கர்நாடக இசையைப் பயிற்றுவிப்பதில் அனுபவமும் ஆற்றலும் பயிற்சியும் மிக்க யாழ். பல்கலைக்கழக இசைத்துறை மூதுநிலை விரிவுரையாளர் செல்வி.பரமேஸ்வரி கணேசன் M.A(Music), M.Phil(Music)  அவர்களால் கடந்த (28.06.2015) அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 இற்கு ஸ்காபுரோ நகரசபை மண்டபத்தில் நடத்தப்பட்ட பயிற்சிப் பட்டறை(Workshop) வாய்ப்பாட்டு இசை பயிலும் மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பாக அமைந்திருந்தது.


கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பயிற்சிப்பட்றையில் பின்வரும் இரு தொனிப்பொருட்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.


1.குரலிசையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படைப் பயிற்சி முறைகள்


2. குரலிசையும் கமகங்களின் முக்கியத்துவமும்


ரொரன்ரோவில் கர்நாடக இசை பயின்றுவரும் மாணவர்கள் ஆர்வத்துடன் இப்பயிற்சிப் பட்டறையில் பங்குபற்றிப் பயன்பெற்றனர். வாய்ப்பாட்டு இசை கற்கும்போது குரலிசையில் கடைப்பிடிக்க வேண்டிய நுணுக்கங்களைச் செயல் முறையுடன் விரிவுரையாளர் செல்வி பரமேஸ்வரி அவர்கள் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருந்தமை குறிபபிடத்தக்கது.


கர்நாடக சங்கீதம் பயிலும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இப்பயிற்சிப் பட்டறை அமைந்திருந்ததாக பெற்றோர் தரப்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.


பயிற்சிப்பட்டறையில் எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்.

Dsc_0866 Dsc_0862 Dsc_0859 Dsc_0858 Dsc_0855

 

செல்வி பரமேஸ்வரி கணேசன் கனடாவிற்கான கலைப் பயணத்தினை நிறைவு செய்துகொண்டு தாயகம் திரும்பினார்

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் (காரைநகர் இந்துக் கல்லூரி) மேம்பாட்டு நிதிக்காக பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இன்னிசைக் கச்சேரியில் கலந்துகொள்ளும்பொருட்டு அச்சங்கத்தின் அழைப்பிற்கிணங்க கலைப் பயணத்தினை மேற்கொண்டு கனடாவிற்கு வருகைதந்திருந்த யாழ் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் செல்வி பரமேஸ்வரி கணேசன் 03-07-2015 அன்று வெள்ளிக்கிழமை மாலை ரொரன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையம் வழியாக தாயகம் திரும்பினார்.


செல்வி பரமேஸ்வரி குறுகிய கால கலைப்பயணத்தினூடாக ஆயிரக்கணக்கான கனடா வாழ் கர்நாடக சங்கீத ரசிகர்களை தம்வசப்படுத்தியதுடன் இசை ரசிகர்களினதும் கனடா வாழ் காரைநகர் மக்களினதும் அன்பினை சுமந்தவண்ணம் தாயகம் திரும்பியுள்ளார்.


பழைய மாணவர் சங்க கனடா கிளை நிர்வாகிகளும் உறுப்பினர்களும் செல்வி பரமேஸ்வரியை விமானநிலையம்வரை சென்று அன்புடன் வழியனுப்பி வைத்திருந்தனர்.


விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றை கீழே காணலாம். 

Dsc_0880 Dsc_0926 Dsc_0920 Dsc_0916 Dsc_0914 Dsc_0913 Dsc_0912 Dsc_0910 Dsc_0909 Dsc_0906 Dsc_0902 Dsc_0900 Dsc_0898 Dsc_0897 Dsc_0893 Dsc_0891 Dsc_0888 Dsc_0885 Dsc_0881Dsc_0882Dsc_0908

 

செல்வி பரமேஸ்வரி கணேசனுக்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை மதிய போசன விருந்து வழங்கி மதிப்பளித்தது

பழைய மாணவர் சங்கத்தின் அழைப்பினை ஏற்று கனடாவிற்கு வருகை தந்து பாடசாலை மேம்பாட்டு நிதிக்காக இசைக் கச்சேரியினை நிகழ்த்திய பாடசாலையின் பெருமைக்குரிய பழைய மாணவியும் யாழ் பல்கலைக்கழக இசைத்துறை முதுநிலை விரிவுரையாளருமான செல்வி பரமேஸ்வரி கணேசன் அவர்களிற்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை நிர்வாகம் சென்ற 01-07-2015 அன்று புதன் கிழமை மதியபோசன விருந்தளித்து மதிப்பளித்திருந்தது.


சங்கத்தின் போசகர் சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்களின் தலைமையில் சங்கத்தின் பொருளாளர் திரு.மா.கனகசபாபதி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றிருந்த இந்நிகழ்வில் நிர்வாகசபை உறுப்பினர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.


சங்கத்தின் போசகரும் கனடா சைவ சித்தாந்த மன்றத் தலைவருமான சிவநெறிச்செல்வர் திரு.தி. விசுவலிங்கம் அவர்கள் தமது உரையில் செல்வி பரமேசுவரி கணேசன் அவர்கள் கனடா பழைய மாணவர் சங்கத்தின் அழைப்பை ஏற்று வந்து இன்னிசைக் கச்சேரியை நிகழ்த்தி எல்லோரையும் இன்புறச் செய்து பெருமைப்படுத்தியமைக்கு நன்றி கூறினார். எல்லோரும் மூன்று மணித்தியாலத்திற்கு மேலாக நடைபெற்ற கச்சேரியில் அசையாமல் இருந்து கச்சேரியை இரசித்துக் கொண்டிருந்தது பிரமிக்கச் செய்தது. செல்வி அவர்கள் இசைத்துறையில் மேன்மேலும் வளர்ச்சி பெற்று கலாநிதிப் பட்டம் பெற்று பல்கலைக்கழகப் பேராசிரியராக வரவேண்டும் என்றும், வாய்ப்புகள் கிடைக்கும்போது வேறு நாடுகளுக்கும் சென்று சிறப்புற வேண்டும் என்றும் வாழ்த்தினார்.


இங்கு உரையாற்றிய சங்கத்தின் செயலாளர் திரு.கனக.சிவகுமாரன் ஈழத்தின் முன்னணி இசைக்கலைஞர் ஒருவரை இனம்கண்டு எமது சங்கம் இங்கு வரவழைத்தமையையிட்டு கனடாவின் இசைத்துறை வட்டாரம் உள்ளிட்ட பலதரப்பட்டவர்களிடமிருந்தும் எமது சங்கத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருவதை குறிப்பிட்டதுடன் இதையிட்டு எமது சங்கமும் கனடா வாழ் பழைய மாணவர்களும் பெருமைப்படமுடியும் எனக் குறிப்பிட்டார். மேலும் செல்வி பரமேஸ்வரியின் கனடாவிற்கான வருகை சங்கத்தின் வளர்ச்சிப்பாதையில் முக்கியமான படிக்கல்லாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். அரங்கம் நிறைந்த இசை ரசிகர்கள் மத்தியில் அற்புதமான இசை நிகழ்ச்சியை வழங்கி பாடசாலையின் மேம்பாட்டிற்கு உதவியது மட்டுமல்லாது பாடசாலைக்கும் தாம் பிறந்த காரை மண்ணிற்கும் பெருமை சேர்த்த செல்வி பரமேஸ்வரிக்கு சங்கத்தின் சார்பில் பாராட்டினையும் நன்றியினையும் தெரிவித்துக்கொண்டார்.


சங்கத்தின் உத்தியோபூர்வ இணையத்தளமான karaihinducanada.com   நிர்வாகி திருமதி கிருஷ்ணவேணி சோதிநாதன் அவர்கள் பேசுகையில் செல்வி. பரமேஸ்வரி கணேசன் அவர்கள் ஓர் இசைக் குடும்பத்தில் பிறந்து எம்மில் பலருடன் குழந்தையாகப் பழகி இன்று இசை வானில் குயிலாக உயரப் பறந்தாலும் தான் கல்வி கற்ற பாடசாலையையும் எம்மையும் மறவாமால் எமது அழைப்பை ஏற்று இங்கு வந்து இங்குள்ள முன்னணி சங்கீத வித்துவான்களும் கர்நாடக சங்கீத இசை ரசிகர்களும் பாராட்டும்படியாக அருமையான இசைக் கச்சேரிகளை நடத்தியமை எமக்கு எல்லாம் மகிழ்ச்சியும் பெருமையுமாக இருக்கின்றது எனக் கூறி அவருக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.


இந்நிகழ்வில் வைத்து பழைய மாணவர் சங்க கனடா கிளையின் சார்பில் சிறிய சன்மானத் தொகை பொருளாளர் திரு.மா.கனகசபாபதி அவர்களினால் செல்வி பரமேஸ்வரியிடம் கையளிக்கப்பட்டது.


செல்வி பரமேஸ்வரி தமக்கு வழங்கப்பட்ட மதிப்பிற்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார். அவர் தமதுரையில் நீங்கள் என்மீது இவ்வளவு அன்பும் மதிப்பும் கொண்டிருப்பதற்குக் காரணம் நீங்கள் ஒவ்வொருவரும் எனது தந்தையார் மீது (நாதஸ்வரக் கலைஞர் காரையம்பதி என்.கே.கணேசன்) குறிப்பாக காரைநகர் மக்கள் வைத்துள்ள அன்பும் மதிப்புமே எனவும் தமது தந்தையாரின் ஆத்மா தம்மை ஆசிர்வதித்து வருவதே பல்வேறு சவால்களையும் தாண்டி இசையுலகில் உயர்ந்து விளங்க காரணமாக அமைந்திருப்பதாகத் தெரிவித்தார்.


மேலும் செல்வி.பரமேஸ்வரி கணேசன் அவர்கள் தமது உரையில் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் தாம் பயின்ற பாடசாலையின் மேம்பாட்டிற்கு இசைக் கச்சேரியினை வழங்கியதையிட்டு மனநிறைவடைவதுடன் தாம் கனடாவில் தங்கியிருந்த குறுகிய காலப்பகுதியில் இங்குள்ள மூத்த கலைஞர்கள் முன்னணிக் கலைஞர்கள் மற்றும் இசைவளர்க்கும் அமைப்புக்கள் தமக்கு வழங்கிய வரவேற்பும் மதிப்பளிப்பும் தம்மை பெரிதும் ஊக்கிவித்திருப்பதாகவும் தாம் வேறு பல நாடுகளுக்கு கலைப்பயணம் மேற்கொண்டிருந்தாலும் கனடாவிற்கான பயணமே என்னை உலகப்புகழ் அடைய வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். தம்மை இங்கு வரவழைத்ததன்மூலம் இவற்றிற்கெல்லாம் மூலகாரணமாகவிருந்து செயற்பட்ட பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை நிர்வாகத்திற்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 

Img_2778 Img_2779 Img_2780 Img_2781 Img_2782 Img_2783 Img_2784 Img_2785 Img_2786 Img_2787 Img_2789 Img_2790 Img_2791 Img_2792 Img_2793 Img_2794 Img_2795 Img_2796 Img_2798 Img_2799 Img_2800 Img_2801 Img_2802 Img_2803 Img_2804 Img_2805 Img_2806 Img_2808 Img_2809 Img_2810 Img_2811 Img_2812 Img_2813 Img_2814 Img_2815 Img_2816 Img_2817 Img_2818 Img_2819 Img_2821 Img_2822 Img_2829

 

மூன்று மணிநேரம் ரசிகர்களை சங்கீத சாகரத்தில் மூழ்க வைத்த செல்வி பரமேஸ்வரி கணேசன் அவர்களின் இன்னிசைக் கச்சேரி

Dsc_0772

ஈழத்து நாதஸ்வர வித்துவான் காரையம்பதி அமரர்.N.K. கணேசன் அவர்களின் புதல்வியும் யாழ்.பல்கலைக்கழக இசைத்துறையின் முதுநிலை விரிவுரையாளருமாகிய இராகசுரபி செல்வி.பரமேஸ்வரி கணேசன் M.A., M.Phil. அவர்களின் கர்நாடக சங்கீதக் கச்சேரி ரசிகர்களை மூன்று மணிநேரம் சங்கீத சாகரத்தில் மூழ்கடித்த வெற்றி நிகழ்வாக நடைபெற்றது.

அருமையான இந்த இன்னிசைக் கச்சேரிக்கு பக்கவாத்திமாக வயலின் வித்துவான் திரு. A.ஜெயதேவன் அவர்களும் காரைநகர் தந்த மிருதங்க வித்துவான் யாழ்ப்பாணம் T.செந்தூரன் அவர்களும் அணிசெய்து கச்சேரியை மேலும் மெருகூட்டியிருந்தனர்.

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய மேம்பாட்டு நிதிக்காக பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இன்னிசைக் கச்சேரி கனடா கந்தசுவாமி கோயில் கலை அரங்கத்தில் சென்ற சனிக்கிழமை (27.06.2015) அன்று மாலை 6:00 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.

நிகழ்விற்கான நிதி அநுசரணையை குழந்தை மருத்துவ நிபுணர் மருத்துவ கலாநிதி வி.விஜயரத்தினம், மருத்துவ கலாநிதி இராமலிங்கம் செல்வராசா அவரது பாரியார் மருத்துவ கலாநிதி திருமதி.சறோ செல்வராசா, தொழிலதிபர் மகாதேவன் பாலசுப்பிரமணியம், காசிப்பிள்ளை சக புத்திரர்கள் துரித பணமாற்றுச் சேவை நிறுவனத்தின் திரு.முருகேசு காசிப்பிள்ளை, இதயநோய் வைத்திய நிபுணர் மருத்துவகலாநிதி ராதகோபாலன் செல்வரத்தினம், பிரபல மோட்டார் வாகன விற்பனை முகவர் திரு.அண்டி திருச்செல்வம், பிரபல வீடு விற்பனை முகவர் திரு.ரவி ரவீந்திரன், பிரபல வீடு விற்பனை முகவர் திரு.ராஜ் நடராஜா, ஜக்கிய அமெரிக்க இராச்சியத்தில் பொறியியலாளராக பணியாற்றும் திரு.சிற்றம்பலம் திருஞானசம்பந்தன் அவரது பாரியார் நிர்மலாதேவி, karainews.com  இணையத்தள ஆசிரியர் திரு.தீசன் திரவியநாதன், ஆகியோர் வழங்கி உதவியிருந்தனர். 

நிகழ்விற்கு பிரதம விருந்தினராக எமது கல்லூரியில் விளையாட்டிலும், கல்வியிலும் சாதனைகள் படைத்த சிறப்பு மிக்க பழைய மாணவர் இருதய மருத்துவ நிபுணர் மருத்துவகலாநிதி ராதகோபாலன் செல்வரத்தினம் அவர்கள் அமெரிக்காவிலிருந்து வருகை தந்து சிறப்பித்திருந்தார்.

கௌரவ விருந்தினராக தொழிலதிபர் திரு. பாலசுப்பிரமணியம் மகாதேவன் அவர்களும் அவர்தம் பாரியார் திருமதி.பவானி மகாதேவன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு ஈழத்து முன்னணிக் கலைஞர்களான இன்னிசை வேந்தர் சங்கீதபூஷணம் திரு.பொன்.சுந்தரலிங்கம், இசைக்குயில் திருமதி.விஜயலக்ஷ்மி ஸ்ரீநிவாசகம், பல்கலை வேந்தர் திரு.வர்ணராமேஸ்வரன், இசைக்கலா வித்தகர் திரு.மோகன் திருச்செல்வம், இசைக்கலைமணி திருமதி.ராதிகா நாகேந்திர சர்மா, நாட்டியகலைமணி திருமதி.ஞானாம்பிகை குணரத்தினம், பரதகலா வித்தகர் திருமதி.சித்திரா தர்மலிங்கம் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர்கள், காரைநகர் மக்கள் மற்றும் கனடா வாழ் சங்கீத இசை ரசிகர்கள் என பல நூற்றுக்கணக்கான ரசிகர்கள் சமூகமளித்திருந்து மண்டபத்தை நிரப்பியிருந்தனர். 

நிகழ்வுகளை கல்லூரியின் சிறப்பு மிக்க பழைய மாணவர் பேராசிரியர் தில்லைநாதன் சிவகுமாரன், கனடா-காரை கலாச்சார மன்ற போசகர் சபை இணைப்பாளர் திரு.வேலுப்பிள்ளை இராசேந்திரம் அவர்களும் பாரியாரும், கல்லூரியின் மூத்த பழைய மாணவர் திரு.முருகேசு சின்னத்துரை அவர்களும் பாரியாரும் ஆகியோர் மங்கள விளக்கேற்றி தொடக்கி வைத்தனர்.

கனடாப் பண் தமிழ் பண் ஆகியவற்றை திரு.கார்த்திக் இராமலிங்கம் அவர்களின் மாணவியான செல்வி ராகவி மனோராகவன் பண்ணோடு இசைத்தார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் நிர்வாக சபை உறுப்பினரும் இணையத்தள நிர்வாகியுமான திருமதி.கிருஷ்ணவேணி சோதிநாதன் அவர்கள் நிகழ்விற்கு வருகை தந்தவர்களை வரவேற்று உரையாற்றினார்.

கல்லூரியின் பழைய மாணவரும் காரைநகர் தந்த வாய்ப்பாட்டுக் கலைஞருமான அமரர் சங்கீதபூஷணம் காரை ஆ.புண்ணியமூர்த்தி அவர்களின் குரலில் பாடப்பட்டு பதிவு செய்யப்பட்ட கல்லூரிப் பண் இசைக்கப்பட்டது.

அடுத்து வந்த மூன்று மணிநேரத்திற்கு செல்வி.பரமேஸ்வரி கணேசன் அவர்களின் கரைபுரண்டோடும் கர்நாடக இசை வெள்ளத்திற்காக அரங்கம் விரிந்தது. ஆவலோடு தமது இருக்கைகளில் நிமிர்ந்து இருந்த ரசிகர்கள் தம்மை மறந்து தாளம் போட்டு இசையரசியின் இசைக் கோலங்களை ரசித்தனர்.

ஒவ்வொரு உருப்படியும் பாடத் தொடங்கும் போதும் முடியும்போதும் இராக ஆலாபனை செய்தபோதும் அரங்கத்தில் ரசிகர்களின் கரவொலி எதிரொலித்தது.

காம்போதி, ஆபேதி, லதாங்கி ஆகிய மூன்று இராகங்களிலும் ஆலாபனை செய்திருந்தார். அதில் லதாங்கி இராகத்தில் அமைந்திருந்த ‘பிறவா வரம் தாரும்’ என்னும் பாபநாபன் சிவன் அவர்களின் கீர்த்தனையும் ஆபேதி இராகத்தில் அமைந்த ஸ்ரீதியாகராஜர் இயற்றிய  ‘நகுமோ’ எனத் தொடங்கும் கீர்த்தனையும் ரசிகர்களின் மனதை வெகுவாகக் கவர்ந்திருந்தது.

ஒவ்வொரு பாடல் முடிவிலும் கற்பனாஸ்வரம் பாடி முடிக்கும் போதும் ஜோன்புரி இராகத்தில் சிவபுராணத்தின் சில வரிகளை இசைத்தபின் அதே இராகத்தில் ‘எப்போ வருவாரோ’ என்ற பாடலைப் பாடிய போதும் ரசிகர்கள் கரவொலி எழுப்பி உற்சாகப்படுததினர்.

வீரமணி ஐயர் அவர்களின் பாடலைப் பாடியபோதும், ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ‘குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா’ என்ற புகழ்பெற்ற பாடலைப் பாடிய போதும் சபையோர்  உற்சாகப்படுத்திய கரவொலியில் அரங்கு நிறைந்தது.

பக்கவாத்தியக் கலைஞர்களும் தாம் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்று தம்பங்கை நிரூபித்தனர். வயலின் வித்துவான் A.ஜெயதேவன் அவர்களும் மிருதங்க வித்துவான் யாழ்ப்பாணம் T.செந்தூரன் அவர்களும் தனியாவர்த்தனம் வாசித்தபோது மண்டபம் இசைப் பிரவாகத்தில் மூழ்கித் திணறியது.

அடுத்து பிரதம விருந்தினர் இருதய மருத்துவ நிபுணர் மருத்துவகலாநிதி ராதகோபாலன் செல்வரத்தினம் அவர்களை சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினர் திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம் பொன்னாடை போர்த்து கௌரவித்தார். பிரதம விருத்தினர் உரையாற்றும்போது பல ஆண்டுகளாக தமிழ் பேசும் வாய்ப்பு தமக்கு இருக்கவில்லை என்றும் அதனால் தனது தமிழ் மறந்து போய்விட்டதாகவும் ஆனால் இன்று இந்த இசைக் கச்சேரியைக் கேட்டுக்கொண்டிருக்கும் போது தனது தாய்மொழி, பண்பாடு, பாரம்பரியம் எல்லாம் மீண்டும் நினைவுக்கு வருகின்றது என்றும் கூறினார். இருதய மாற்று சத்திர சிகிச்சை நிபுணரான மருத்தவகலாநிதி ராதகோபாலன், எமது நினைவுகள் எமது இதயங்களில் பதிவுசெய்யப்படுவதாகவும் அதற்கு எடுத்துக்காட்டாக தமது அநுபவத்தில் இருதய மாற்று சிகிச்சை செய்த ஒரு பத்து வயது சிறுமியின் வாழ்வில் இடம்பெற்ற சம்பவத்தை உணர்வு பூர்வமாகக் கூறினார்.

மேலும் அவர் தனது உரையில் இன்று எமது கல்லூரியின் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை தாம் கல்வி கற்ற பாடசாலையை மறக்காது பல்வேறு வகையான உதவித்திட்டங்களை எமது பாடசாலைக்கு செ;ய்து வருவதற்கு காரணம் எங்கள் வாழ்விற்கு அத்திவாரம் இட்ட எமது பள்ளிக்கால நினைவுகள் எம் ஒவ்வொருவரினதும் இதயத்தில் அழியாது இடம்பிடித்திருப்பதாகும் என்றும் கூறி சங்கத்தின் செயற்பாடுகளுக்குத் தமது வாழ்த்தினைத் தெரிவித்தார்.

அடுத்து இளம்கலைஞர் மன்ற நிறுவுநர் இன்னிசை வேந்தர் சங்கீதபூசணம் பொன்.சுந்தரலிங்கம் அவர்கள் அரங்கத்தின் நாயகி செல்வி பரமேஸ்வரி கணேசன் அவர்களுக்கு பாராட்டுரையை வழங்கினார். திரு.பொன்.சுந்தரலிங்கம் அவர்களை சங்கத்தின் பொருளாளர் திரு.மா.கனகசபாபதி அவர்கள் பொன்னாடை போர்த்துக் கௌரவித்தார். இன்னிசை வேந்தரின் பாரியார் திருமதி.பொன் சுந்தரலிங்கம் அவர்கள் செல்வி.பரமேஸ்வரி கணேசன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். 

 இன்னிசை வேந்தர் தனது உரையில் ஈழத்தில் பல இன்னல்களுக்கு மத்தியில் தமது கலைத்துறையை வளர்த்து வருகின்ற இவ்வாறான கலைஞர்களை இனம் கண்டு நாம் ஊக்குவிக்க வேண்டும் எனவும் செல்வி.பரமேஸ்வரி கணேசன் அவர்களுக்கு “இசையே அவரின் உயிர் “ எனவும் இன்று அவர் தனது திறiமையினால் தமது தந்தையாரையும் விஞ்சுமளவுக்கு உயர்ந்திருக்கிறார் எனவும கூறி பாராட்டியபோது சபையோர் தமது பலத்த கரவொலியால் அதனை வழிமொழிந்தனர்.

அடுத்து செல்வி.பரமேஸ்வரி கணேசன் அவர்களை பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் நிறுவுனர்களில் ஒருவரும் எமது கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபருமாகிய அமரர்.சின்னத்திம்பி தம்பிராஜா அவர்களின் பாரியாரும் கல்லூரியின் முன்னாள் ஆசிரியையுமாகிய திருமதி.மனோன்மணி தம்பிராஜா அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். சங்கத்தின் போசகர் சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் சங்கத்தின் சார்பில் நினைவுக் கேடயத்தை வாசித்து செல்வி பரமேஸ்வரி அவர்களுக்கு வழங்கினார்.

வயலின் இசை வேந்தன் A.ஜெயதேவன் அவர்களை குழந்தைகள் மருத்துவ நிபுணர் மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம்அவர்களும் மிருதங்க வித்துவான் யாழ்ப்;பாணம்T.செந்தூரன் அவர்களை தொழலதிபர் திரு.பாலசுப்பிரமணியம் மகாதேவன் அவர்களும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் முன்னாள் தலைவரும் தற்போதயை போசகருமாகிய திரு.ரவி ரவீந்திரன் அவர்கள் கனடா-காரை கலாச்சார மன்றத்தின் சார்பில் நினைவுக் கேடயத்தை வழங்கினார்.

அடுத்து கலைஞர்கள் இசைக்குயில் திருமதி.விஜயலக்ஷ்மி ஸ்ரீனிவாசகம், நாட்டியகலைமணி திருமதி.ஞானாம்பிகை குணரத்தினம், இசைக்கலைமணி திருமதி.ராதிகா நாகேந்திரசர்மா ஆகியோர் இன்னிசை அரசி செல்வி.பரமேஸ்வரி கணேசன் அவர்களை பொன்னாடை போர்த்திக் கௌரவித்தினர்.

அடுத்து கௌரவ விருந்தினர் தொழிலதிபர் திரு.பாலசுப்பிரமணியம் மகாதேவன் அவர்களையும் பாரியாரையும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளை நிர்வாக சபை உறுப்பினர் திரு.திருவேங்கடம் சந்திரசோதி தம்பதிகள் பொன்னாடை போர்த்தி மலர்ச்செண்டு வழங்கிக் கௌரவித்தினர்.

அடுத்து செல்வி.பரமேஸ்வரி கணேசன் அவர்கள் தமது பதிலுரையில் தான் கல்வி கற்ற பாடசாலையின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தம் மனதில் நீண்ட நாட்களாக இருந்ததாகவும், அதனை நிறைவேற்றவும் இவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டத்தின் மத்தியில் தனது இசைக்கச்சேரியை வழங்குவதற்கும் தமக்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்த பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளைக்கு தமது நன்றியைக் கூறினார்.

நிறைவாக பழைய மாணவர் சங்க செயலாளர் திரு.கனக.சிவகுமாரன் அவர்கள் நிகழ்வின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார்.

கல்லூரியின் பழைய மாணவரும் பிரபல அறிவிப்பாளருமான திரு.பாலசுப்பிரமணியம் ஞானபண்டிதன் எமது ஊரில் பிறந்து கலை ஈடுபாட்டுடன் வளர்ந்த தமது அநுபவத்தில் செல்வி.கணேசன் குடும்பத்தினரை நன்கு அறிந்தவராக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருந்தார்.

வெளியே அடை மழை பொழிந்து கொண்டிருந்தாலும் அதனையும் பொருட்படுத்தாது இனிமைiயான கர்நாடக சங்கீத இசைக் கச்சேரியை பொறுமையாக இருந்து ரசித்து மகிழ்ந்ததோடு எமது மண்ணின் மகளை இசையின் அரசியை எமது ஊர்மக்களும் இசை ரசிகர்களும் வாழ்த்தி தமது அன்பினைத் தெரிவித்தனர்.

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 

அரங்கம் நிறைந்த சங்கீத ரசிகர்களுடன் வெற்றி நிகழ்வாக நடந்தேறிய செல்வி.பரமேஸ்வரி கணேசன் அவர்களின் இன்னிசைக் கச்சேரி

ஈழத்து நாதஸ்வர வித்துவான் காரையம்பதி அமரர் N.K. கணேசன் அவர்களின் புதல்வியும் யாழ்.பல்கலைக்கழக இசைத்துறையின் முதுநிலை விரிவுரையாளருமாகிய இராகசுரபி செல்வி.பரமேஸ்வரி கணேசன் M.A., M.Phil. அவர்களின் கர்நாடக சங்கீதக் கச்சேரி அரங்கம் நிறைந்த இசை ரசிகர்கள் மத்தியில் வெற்றி நிகழ்வாக நடைபெற்றது.

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய மேம்பாட்டு நிதிக்காக பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி கனடா-கந்தசுவாமி கோயில் கலை அரங்கத்தில் நேற்று சனிக்கிழமை (27.06.2015) அன்று மாலை 5:30 இற்கு நடைபெற்றிருந்தது. 

இந்நிகழ்ச்சிக்கு ஈழத்து முன்னணிக் கலைஞர்கள், பாடசாலையின் பழைய மாணவர்கள், காரைநகர் மக்கள் மற்றும் கனடா வாழ் சங்கீத இசை ரசிகர்கள் என பல நூற்றுக்கணக்கான ரசிகர்கள் சமூகமளித்து கச்சேரியை ரசித்தனர். 
வெளியே பெரும் மழை பொழிந்து கொண்டிருந்தாலும் அதனையும் பொருட்படுததாது இந்த இசை வெள்ளத்தில் பெருந்திரளான ரசிகர் கூட்டம் மூழ்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் எடுக்கப்பட்ட சில படங்களைக் கீழே காணலாம். முழுமையான செய்தியுடன் படத்தொகுப்பும் மிக விரைவில் எடுத்து வரப்படும். 

Dsc_0676 Dsc_0693 Dsc_0695 Dsc_0705 Dsc_0737 Dsc_0741

செல்வி. பரமேஸ்வரி கணேசன் அவர்களின் இன்னிசைக் கச்சேரி நிகழ்ச்சி நிரலும் அநுசரணையாளர்களும்

Parama - flyer 3 ST

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய(காரைநகர் இந்துக் கல்லூரி) மேம்பாட்டு நிதிக்காக பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை மாலை 5:30 மணிக்கு நடைபெற இருக்கும் யாழ் பல்கலைக் கழக முதுநிலை விரிவுரையாளர் செல்வி. பரமேஸ்வரி கணேசன் M.A, M.Phil  அவர்களின் இன்னிசைக் கச்சேரி நிகழ்வின் நிகழ்ச்சி நிரலும் நிகழ்வின் அநுசரணையாளர்கள் மற்றும் கச்சேரிக்கு அடுத்த நாளாகிய ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 இற்கு Scarborough Civic Centre  இல் நடைபெறவிருக்கும் பயிற்சிப் பட்டறை (Workshop) பற்றிய விபரங்களையும் கீழே காணலாம். 

program-2015program-2-2015

 

கீதவாணி வானொலியில் யாழ் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் செல்வி.பரமேஸ்வரி கணேசன் அவர்களின் நேர்காணல்

காரைமண் பெற்றெடுத்த ஈழத்தின் பிரபல வாய்ப்பாட்டு இசைக் கலைஞரும் யாழ். பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளருமாகிய செல்வி பரமேஸ்வரி கணேசன் M.A, M.Phil. அவர்களுடனான நேர்காணல் நிகழ்ச்சி கீதவாணி வானொலியில் இன்று வெள்ளிக்கிழமை (26.06.2015) மாலை 5:00 மணியிலிருந்து நேரடியாக ஒலிபரப்பாக உள்ளது என்பதை அறியத்தருகின்றோம். 

(647)490-2372 என்ற தொலைபேசி இலக்கத்தை அழுத்தி தொலைபேசி வழியாகவும் இந்நிகழ்ச்சியை நேயர்கள் கேட்க முடியும் என்பதை அறியத்தருகின்றோம். 

இந்நிகழ்ச்சியை இணையத்தளம் வழியாக உலகெங்கும் கேட்பதற்கு என்ற இணைய முகவரியை அழுத்திக் கேட்கலாம். 

http://tamilradios.com/geethavani-fm.html

TVI தொலைக்காட்சியில் யாழ் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் செல்வி.பரமேஸ்வரி கணேசன் அவர்களின் நேர்காணலின் மறுஒளிபரப்பு

காரைமண் பெற்றெடுத்த ஈழத்தின் பிரபல வாய்ப்பாட்டு இசைக் கலைஞரும் யாழ். பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளருமாகிய செல்வி பரமேஸ்வரி கணேசன் M.A, M.Phil.  அவர்களுடனான நேர்காணல் நிகழ்ச்சியின் மறுஒளிபரப்பு TVI தொலைக்காட்சியில் நாளை சனிக்கிழமை(27.06.2015) காலை 7:30 இற்கு ஒளிபரப்பாக உள்ளது என்பதையும் அறியத்தருகின்றோம். 

 

செல்வி பரமேஸ்வரி கணேசன் M.A,M.Phil அவர்களின் இன்னிசைக்கச்சேரி வெற்றிபெற சுவிஸ்-காரை அபிவிருத்தி சபையின் வாழ்த்துரை

                                                              உ
                                           சிவமயம்

photo

தலைவர்/செயலாளர்/நிர்வாகசபை
யா/தியாகராஜா ம.ம.வி,( காரைநகர் இந்துக் கல்லூரி)
பழைய மாணவர் சங்கம் – கனடா

          இலங்கையின் தலையாக விளங்குகின்ற யாழ்ப்பாணமாவட்டத்தின் கற்றோர் நிறைந்த, பண்பாடு மலிந்த, பாரம்பரிய விழுமியங்களை கண்போல காப்பாற்றிவருகின்ற சிவபூமி எனப் போற்றப்படும் காரைநகர் திரு நிறைந்த தெய்வீக பூமியாகும். இங்கு வாழும் சான்றோர்கள் சைவசமய சீலர்களாக பக்தி உள்ளத்துடன் வாழ்கின்றனர்.

         சிவநெறி தலைத்தோங்கும் ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோவில் நாதஸ்வர வித்துவான் காரையம்பதி திரு.N.K. கணேசன் கைலாயக்கம்பர், அவர்களின் புதல்வி இராகசுரபி செல்வி பரமேஸ்வரி M.A,M.Phil (இசைக்கல்வி விரிவுரையாளர். யாழ் பல்கலைக்கழகம்) அவர்கள் யா/தியாகராஜா ம.ம.வி,( காரைநகர் இந்துக் கல்லூரி) மேம்பாட்டு நிதிக்காக நாளை (27.06.2015) நடாத்தவிருக்கும் இன்னிசைக் கச்சேரிக்கு எமது  வாழ்த்துக்கள்.

      "இசையால் வசமாக இதயம் ஏது". என்ற கூற்றுக்கிணங்க காலத்தின் தேவைகருதி  தற்பொழுது புலம்பெயர் தேசங்களில் எமது கிராமத்து இளம் சமூதாயத்தினர் இசைத்துறையில் கூடுதல் ஆர்வத்துடன் சங்கீதம் பயிலுகின்றனர். அவர்களுக்கு ஓரு உறவுப்பாலத்தை ஏற்பாடு செய்த  பழைய மாணவர் சங்கம்-கனடாக்கிளைக்கு எமது வாழ்த்துக்களும், பாராட்டுதல்களும்.

       "இன்னிசைக் கச்சேரி"  சிறப்புற அமைய ஈழத்துச் சிதம்பர ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ ஆனந்த தாண்டவ நடராஜனின் சௌபாக்கியங்கள் கிடைத்து இன்புற வாழ்த்துகின்றோம்.

                        "இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க"
                                                  நன்றி
                                                                                                    இங்ஙனம்.
                                                                            சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                                 செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                     சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                                      26.06.2015

swisskarai26-06-2015

TVI தொலைக்காட்சியில் இராகசுரபி.செல்வி.பரமேஸ்வரி கணேசன் அவர்களின் நேர்காணல்

காரைமண் பெற்றெடுத்த ஈழத்தின் பிரபல வாய்ப்பாட்டு இசைக்கலைஞர் இராகசுரபி செல்வி பரமேஸ்வரி கணேசன் அவர்களுடனான நேர்காணல் நிகழ்ச்சி TVI தொலைக்காட்சியில் இன்று வியாழக்கிழமை (25.06.2015) மாலை 5:00 – 6:00 மணி வரையான இடைநேரத்தில் ஒளிபரப்பாக உள்ளது என்பதை அறியத்தருகின்றோம். 

 

காரைநகர் தந்த இசைக்கலைஞர் இராகசுரபி செல்வி. பரமேஸ்வரி கணேசன் ரொரன்ரோ வந்தடைந்தார்

யாழ் பல்கலைக்கழக இசைத்துறை முதுநிலை விரிவுரையாளரும் ஈழத்தமிழ் இசையுலகின் பிரபல வாய்ப்பாட்டுக் கலைஞரும் எமது காரை மண்ணின் மகளுமாகிய இராகசுரபி செல்வி பரமேஸ்வரி கணேசன் அவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை(23.06.2015) அன்று இரவு ரொரன்ரோ வந்தடைந்தார். 

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் பழைய மாணவியான செல்வி பரமேஸ்வரி பாடசாலையின் மேம்பாட்டு நிதிக்காக பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஏற்பாட்டில் எதிர்வரும் யூன் மாதம் 27ஆம் திகதி நடத்தப்படவுள்ள நிகழ்வில் கலந்துகொண்டு இசைக்கச்சேரி நிகழ்த்துவதற்காகவே இங்கு வருகை தந்துள்ளார். 

காரை மண்ணிற்கு பெருமை சேர்த்த நாதஸ்வரக் கலைஞர் அமரர் காரையம்பதி N.K.கணேசனின் புதல்வியான செல்வி பரமேஸ்வரி நிகழ்த்தவிருக்கம் இன்னிசைக் கச்சேரி கர்நாடக இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.  

இராகசுரபி செல்வி பரமேஸ்வரி கணேசன் அவர்களை பழைய மாணவர் சங்க நிர்வாகத்தினர் ரொரன்ரோ சர்வதேச விமான நிலையத்தில் மலர்ச்செண்டு கொடுத்து பொன்னாடை போர்த்து வரவேற்றனர். 

படங்களைக் கீழே காணலாம். 

Dsc_0617Dsc_0618 Dsc_0619 Dsc_0620 Dsc_0621 Dsc_0622 Dsc_0623 Dsc_0625 Dsc_0626 Dsc_0627 Dsc_0628 Dsc_0629 Dsc_0630 Dsc_0631 Dsc_0632 Dsc_0633 Dsc_0635 Dsc_0637

 

 

 

காரைநகர் தந்த கலைஞர் இராகசுரபி செல்வி பரமேஸ்வரி கணேசன் அவர்களின் இன்னிசைக் கச்சேரி

தமது குரலிசையினால் அனைவரையும் கவர்ந்த காரைநகர் தந்த இசைக்கலைஞரும் நாதஸ்வரக் கலைஞர் அமரர் காரையம்பதி N.K.கணேசனின் புதல்வியும் யாழ் பல்கலைக்கழக இசைத்துறை முதுநிலை விரிவுரையாளருமாகிய இராகசுரபி செல்வி பரமேஸ்வரி கணேசக்கம்பர் M.A, M.Phil  அவர்கள் சுவிற்சலாந்து ஜேர்மனி பிரான்ஸ் பின்லண்ட் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு கலைப்பயணம் மேற்கொண்ட வரிசையில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய (காரைநகர் இந்துக்கல்லூரி) பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் அழைப்பினை ஏற்று கனடாவிற்கு  கலைப்பயணம் மேற்கொண்டு இவ்வாரம் ரொரன்ரோவை வந்தடையவிருக்கின்றார். 

இந்நிலையில், ஈழத்து இளம் கலைஞராகிய செல்வி. பரமேஸ்வரி கணேசன் அவர்களை வரவழைத்து அவரின் இன்னிசைக் கச்சேரியை கனடாவில் நடத்தும் ஏற்பாட்டிற்கு பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளனர்.   

ஈழத்தில் தமது திறமைகளை வெளிப்படுத்தி வரும் இவ்வாறான கலைஞர்களை இனம்கண்டு அவர்களை புலம்பெயர்நாடுகளுக்கு அழைத்து கச்சேரிகளையும் கலைநிகழ்வுகளையும் நடத்துவது மிகவும் வரவேற்கத்தக்க விடயம் என ஈழத்தைச் சேர்ந்த ரொரன்ரோவின் முன்னணிக் கலைஞர்களான சங்கீதபூசணம்.பொன்.சுந்தரலிங்கம், சங்கீதவித்துவான் பண்ணிசைமாமணி திருமதி.பராசக்தி விநாயகதேவராஜா, பல்கலை வித்தகரும் குரலிசை நிபுணருமான திரு.வர்ணராமேஸ்வரன், நாட்டியக்கலைமணி திருமதி.ஞானாம்பிகை குணரட்ணம், பரதகலா வித்தகர் திருமதி.சித்திரா தர்மலிங்கம் ஆகியோர் தெரிவித்துள்ளதுடன் தமது முழுமையான ஆதரவினையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இராகசுரபி.செல்வி.பரமேஸ்வரி கணேசக்கம்பர் அவர்களின் இன்னிசைக் கச்சேரி வரும் சனிக்கிழமை (27.06.2015) அன்று மாலை 5:30 இற்கு கனடா கந்தசுவாமி கோயில் கலையரங்கில் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற உள்ளது. 

கச்சேரிக்குப் பக்கவாத்தியங்களாக வயலின் இசையினை வயலின் வித்துவான் A.ஜெயதேவன் அவர்களும், மிருதங்க இசையினை காரைநகர் தந்த கலைஞர் மிருதங்க வித்துவான் 'யாழ்ப்பாணம்'T.செந்தூரன் அவர்களும் வழங்கி அணிசெய்ய இருக்கின்றனர்.  

கச்சேரிக்கு அடுத்த நாளாகிய ஞாயிற்றுக்கிழமை (28.06.2015) அன்று காலை 8:30 இற்கு ஸ்காபுரோ நகரசபை மண்டபத்தில் வாய்ப்பாட்டு இசை பயிலும் மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறை(Workshop) ஓன்றும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

முழுமையான அறிவித்தலைக் கீழே காணலாம். 

Parama - flyer 3 Web

 

கர்நாடக இசை பயிலும் மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறை (Workshop)

அழகிய நுண்கலைகளில் ஒன்றான கர்நாடக இசை என்பது தனியே பாடுவதுடனும் கேட்பதுடனும் நின்றுவிடுவதில்லை. அதற்கு மேலாக நீண்ட வரலாற்றினையும் பல வடிவங்களையும் கொண்ட மிக ஆழமான இசை கர்நாடக இசையாகும். 

இத்தகைய உன்னதமான இசைக் கலையை உண்மையிலேயே ஆர்வத்துடன் பயிலும் மாணவர்கள் தமது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டு அதன் நுணுக்கங்களைப் பல்வேறு பரிமாணங்களில் பயில வேண்டியவர்களாக இருக்கிறார்கள். 

அந்த வகையில், கர்நாடக இசையைப் பயிற்றுவிப்பதில் அனுபவமும் ஆற்றலும் பயிற்சியும் மிக்க யாழ். பல்கலைக்கழக இசைத்துறை மூத்த விரிவுரையாளர் செல்வி.பரமேஸ்வரி கணேசன் M.A(Music), M.Phil(Music) அவர்களால் இம்மாதம் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 இற்கு ஸ்காபுரோ நகரசபை மண்டபத்தில்  நடத்தப்படவுள்ள பயிற்சிப் பட்டறை(Workshop) வாய்ப்பாட்டு இசை பயிலம் மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. 

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய (காரைநகர் இந்துக் கல்லூரி)  பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெறும் இப்பயிற்சிப்பட்றையில் பின்வரும் இரு தொனிப்பொருள்களில் பயிற்சிகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

1.குரலிசையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படைப் பயிற்சி முறைகள்

2. குரலிசையும் கமகங்களின் முக்கியத்துவமும்

இவ்வரிய வாய்ப்பினைத் தவறவிடாது இப்பயிற்சிப்பட்டறையில் பங்கபற்ற விரும்பும் இசை பயிலும் மாணவர்கள் தமது பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். 

பதிவுகளுக்கு: 

திருமதி.செல்வா இந்திரராணி சித்திரவடிவேல் (647) 407-6510

திரு.மா.கனகசபாபதி (647)639-2930

முழுமையான அறிவித்தலைக் கீழே காணலாம்.

Workshop

 

கர்நாடக இசை பயிலும் மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறை (WORKSHOP)

workshop-2 copy

கனடாவில் காரைநகர் தந்த இசைக்கலைஞர் இராகசுரபி செல்வி பரமேஸ்வரி கணேசன் அவர்களின் இன்னிசைக் கச்சேரி

ஈழத்துச் சிதம்பர தேவஸ்தான ஆஸ்தான வித்துவான், நாதஸ்வரக் கலைஞர் காரையம்பதி அமரர் N.K. கணேசன் அவர்களின் புதல்வியும்    யாழ். பல்கலைக்கழக இசைத்துறை மூத்த விரிவுரையாளருமான செல்வி. பரமேஸ்வரி கணேசன் M.A M.Phil.  அவர்களின் இன்னிசைக் கச்சேரி இம்மாதம் 27 ஆம் திகதி (27.06.2015) சனிக்கிழமை மாலை 5:30 இற்கு கனடா கந்தசுவாமி கோவில் கலை அரங்கில் நடைபெற உள்ளது. 

கல்வி நிறுவனம் ஒன்றின் மேம்பாட்டிற்கு உதவுவதுடன் இனிமையான இசையின் சுக அனுபவத்தினை பெறுகின்ற அரிய வாய்ப்பினை தவறவிடாது வருகை தருமாறு அனைவரும்  அன்போடு அழைக்கப்படுகின்றார்கள். 

அன்பளிப்பு: $100.00, $50.00, $20.00

மேலதிக தொடர்புகளுக்கு: (647)766-2522, (647)639-2930

இந்நிகழ்ச்சி பற்றிய முழுமையான அறிவித்தலைக் கீழே காணலாம். 

Parama - flyer2

 

காரை மண் பெற்றெடுத்த பிரபல இசைக்கலைஞர் இராகசுரபி செல்வி பரமேஸ்வரி கணேசன் கனடாவிற்கு வருகைதரவுள்ளார்.

Parameswary.Kகலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய(காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்க கனடா கிளையின் அழைப்பினை ஏற்று யாழ் பல்கலைக்கழக இசைத் துறை மூத்த விரிவுரையாளரும் தமிழ் இசையுலகின் பிரபல வாய்ப்பாட்டுக் கலைஞருமாகிய இராகசுரபி செல்வி பரமேஸ்வரி கணேசன் இம்மாத இறுதியில் கனடாவிற்கு வருகை தரவுள்ளார். 

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் பழைய மாணவியான செல்வி பரமேஸ்வரி பாடசாலையின் மேம்பாட்டு நிதிக்காக பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் யூன் மாதம் 27ஆம் திகதி நடத்தப்படவுள்ள நிகழ்வில் கலந்துகொண்டு இசைக்கச்சேரி நிகழ்த்தவுள்ளார். 

தமது இசைத்திறமையினால் காரை மண்ணிற்கு பெருமை சேர்த்த நாதஸ்வரக் கலைஞர் அமரர் காரையம்பதி N.K.கணேசனின் புதல்வியான செல்வி பரமேஸ்வரி சுவிற்சலாந்து ஜேர்மனி பிரான்ஸ் பின்லண்ட் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிற்கு கலைப் பயணங்களை மேற்கொண்டிருந்தவர் என்பதுடன் கர்நாடக இசையில் M.A., M.Phil.  ஆகிய பட்டங்களைப் பெற்றுக்கொண்டவர். 

ஈழத்துச் சிதம்பரத்தில் நீண்டகாலம் ஆஸ்த்தான வித்துவானாக (நாதஸ்வரம்) பணியாற்றி காரைநகர் மக்களின் அன்பையும் நன்மதிப்பினையும் பெற்ற கயிலாயக்கம்பரினதும் மற்றொரு நாதஸ்வர வித்துவான் சுப்பையாக்கம்பரினதும் பேத்தியே செல்வி பரமேஸ்வரி என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 

இரண்டு வாரங்கள் கனடாவில் தங்கியிருக்கும் செல்வி பரமேஸ்வரி நிகழ்த்தவுள்ள இசைக்கச்சேரி கனடாவாழ் காரைநகர் மக்களிற்கும் மற்றும் கர்நாடக இசை இரசிகர்களிற்கும் பெருவாய்ப்;பாக அமையும் என தெரிவித்த பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை நிர்வாகம் இவர் மூலமாக கனடாவில் கர்நாடக இசை பயிலும் மாணவர்கள் பயன்பெறும்வகையில் பயிற்சிப்பட்டறை ஒன்றையும் நடத்த திட்டமிட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது. 

 

மூதறிஞர் க.வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் கண்ணீர் வணக்கம்

VaitheesOSA CaST   

 ஆன்மீகப் புரட்சியினை ஏற்படுத்திய ஒப்பற்ற சாதனையாளர்  

                மூதறிஞர் தத்துவ கலாநிதி பண்டிதர் க.வைத்தீஸ்வரக் குருக்கள்

அளப்பரிய ஆன்மிகப் பணியும் தமிழ்ப் பணியும் ஆற்றியதன் மூலம் தாம் பிறந்த காரை மண்ணிற்கு மட்டுமல்லாது தமது வளமான வாழ்விற்கு வழி காட்டிய கற்ற பாடசாலையான கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்திற்கும் பெரும் புகழ் சேர்த்த ஒப்பற்ற சேவையாளர் சிவஸ்ரீ க.வைத்திஸ்வரக் குருக்கள் அவர்கள் 100வது அகவையினை எட்டி வெகு விரைவில் நூற்றாண்டு விழாவினை காணவிருந்த வேளையில் சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தி அறிந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரமும் அடைந்துள்ளது. அன்னார் காரை மண்ணிற்கு பத்தி என்கின்ற விதையினை விதைத்து உரமூட்டி வளர்த்ததுடன்; பவள விழா கண்ட மணிவாசகர் சபையினை நிறுவி அதன் வளாச்சியில் இறுதி மூச்சுவரை ஈடுபட்டு ஆன்மிகப் புரட்சியினை ஏற்படுத்திய ஆளுமையும் பேரறிவும் மிக்க பெரும் சாதனையாளர். நாட்டின் உயர் கல்வி பீடமர்க கருதப்படும் யாழ் பல்கலைக் கழகம் தத்துவகலாநிதி என்கின்ற பட்டத்தினை வழங்கியிருப்பதும்; அகில இலங்கை கம்பன் கழகம் மூதறிஞர் என்கின்ற கௌரவ பட்டத்தினை வழங்கியிருப்பதும் அன்னாரது தமிழறிவின் ஆழத்தினையும் சைவத் தமிழ்ப் பணியின் மகத்துவத்தினையும் உணர்த்துவதாக உள்ளன. அன்னாரது இழப்பானது காரை மண்ணிற்கு மட்டுமல்லாது சைவத் தமிழுலகிற்கே பேரிழப்பாகும். என்றும் சிவ சிந்தனையுடன் வாழ்ந்து சிவனுடைய திருவடிகளை அடைந்து விட்ட அன்னாரது ஆத்மா சாந்தியடைய சௌந்தராம்பிகை சமேத சந்தரேசப் பெருமானை இறைஞ்சுவதுடன் ஆறொணாத் துயருற்றிருக்கும் அன்னாரது பிள்ளைகள் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஆறுதலையும் அனுதாபத்தினையும் பழைய மாணவர் சங்கத்தின கனடா கிளை தெரிவித்துக்கொள்கின்றது.

இவ்வாறு கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வி (காரை இந்து) பழைய மாணவர் சங்க கனடாக் கிளை நிர்வாகத்தினால் வெளியிடப்பட்ட இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

முழுமையான கண்ணீர் வணக்கப் பிரசுரத்தைக் கீழே காணலாம்.

VaitheesOSA Ca

 

கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்கம் – கனடா 3வது ஆண்டுப் பொதுக் கூட்டம்

KARAI HINDU LOGO

இடம்: Scarborough Civic Centre, 150,Borough Dr. Committee Room # 2
காலமும் நேரமும்: 2015 ஏப்பிரல் 25ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணி
தலைமை: சங்கத்தின் தலைவர் திரு. முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்கள்

நிகழ்ச்சி நிரல்

1. கடவுள் வணக்கம், அக வணக்கம்
2. பாடசாலைப் பண் இசைத்தல்
3. தலைவர் முன்னுரை
4. சென்ற ஆண்டுப் பொதுக் கூட்ட அறிக்கை சமர்ப்பித்தல் – செயலாளர்
5. செயற்பாட்டு அறிக்கை சமர்ப்பித்தல் – செயலாளர்
6. வரவு – செலவு அறிக்கை சமர்ப்பித்தல் (ஜனவரி2014 – டிசம்பர்2014) – பொருளாளர்
7. புதிய நிர்வாகசபை தெரிவு: தலைவர், உப தலைவர், செயலாளர், உதவிச் செயலாளர், பொருளாளர், உதவிப் பொருளாளர் ஆகிய உத்தியோகத்தர்களும் ஜந்து நிர்வாக சபை உறுப்பினர்களும் விண்ணப்பித்தோர்
மத்தியிலிருந்தும் விண்ணப்பம் கிடைக்கப்பெறாத பதவிகளிற்கு சமூகமளித்துள்ள உறுப்பினர்கள் மத்தியிலிருந்தும் தெரிவு செய்யப்படுவர். நிர்வாக சபை தெரிவு முறை தொடர்பான விபரத்தினை karaihinducanada.com  இணையத்தளத்திற்கு சென்று பார்வையிடமுடியும்.

8. புதிய தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டு உரையாற்றுதல்
9. அங்கத்தவர் பிரேரணைகள்: 
அ. யாப்புக்கான திருத்தப் பிரேரணைகள்
ஆ. வேறு பிரேரணைகள்
15-04-2015ஆம் திகதிக்கு முன்பாக செயலாளருக்கு எழுத்து மூலமாக அனுப்பிவைக்கப்படும் பிரேரணைகள் மட்டுமே கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்
10. சங்கத்தின் நிதிவளத்தை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்தல்.
11. வேறு விடயங்கள்
12. அங்கத்தவர்கள் கருத்துரைகள்
13. .நன்றியுரையும் கூட்டத்தின் நிறைவும்.

தபால் முகவரி: 3875,Sheppard Avenue Apt # 411 Scarborough ON. M1T 3L6
மின்னஞ்சல் முகவரி: karaihinducanada@gmail.com
தொலைபேசி இல. 647-766-2522

அனைத்து அங்கத்தவர்களும் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டுகின்றோம்.

மு. வேலாயுதபிள்ளை              கனக. சிவகுமாரன்                        ந. பிரகலாதீஸ்வரன்
        தலைவர்                                     செயலாளர்                                        பொருளாளர்

 

கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்கம் – கனடா நிர்வாக சபைத் தேர்தல் – 2015

KARAI HINDU LOGO

போட்டியிட விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

மேற்குறித்த தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும்பொருட்டு தேர்தல் அலவலராக எமது சங்கத்தின் போசகர் சிவநெறிச் செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் நிர்வாகத்தினால் நியமனம் செய்யப்பட்டுள்ளதுடன் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்வது முதல் தேர்தலை நடாத்தி தெரிவுகளை பிரகடனப்படுத்துவது வரைக்குமான பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

25-04-2015ஆம் திகதி நடைபெறவுள்ள ஆண்டுப் பொதுக் கூட்டத்தின் 7வது நிகழ்வாக நிர்வாக சபை தேர்தல் இடம்பெறும்

தலைவர், உப தலைவர், செயலாளர், உதவி செயலாளர், பொருளாளர், உதவி பொருளாளர், மற்றும்; ஐந்து நிர்வாக உறுப்பினர்கள் ஆகிய பதவிகளிற்கு போட்டியிட விரும்பும் அங்கத்தவர்கள் மாதிரி விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து 15-04-2015ஆம் திகதிக்கு முன்னதாக தபாலில் அல்லது மின்னஞ்சல் மூலம் தேர்தல் அலுவலருக்கு அனுப்பிவைக்கலாம். நேரிலும் கையளிக்கமுடியும்.

ஒருவர் ஏதாவது இரு பதவிகளிற்கு விண்ணப்பிக்க முடியும் ஆயினும் இவ்விண்ணப்பங்கள் தனித்தனியாக அனுப்பப்படல்வேண்டும். விண்ணப்பங்கள் அனைத்தும் இரு அங்கத்தவர்களினால் முறையே பிரேரித்து வழிமொழியப்பட்டிருக்க

வேண்டும்  விண்ணப்பங்கள் கிடைத்தமை குறித்து தேர்தல் அலுவலரால் தொலைபேசி வாயிலாக விண்ணப்பதாரிகளிற்கு உறுதிப்படுத்தப்படும்.

விண்ணப்பதாரியும் பிரேரிப்பவரும் வழிமொழிபவரும் விண்ணப்பிப்பதற்கு முன்னதாக சங்க அங்கத்துவத்தை பெற்றவர்களாக இருக்கவேண்டும்.

விண்ணப்பங்கள் அனைத்தும் தேர்தல் அலுவலரும், நிர்வாக சபை உறுப்பினர்களும் கலந்துகொள்ளும் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்ட பின்னர் karaihinducanada.com  இணையத்தளம் ஊடாக அங்கத்தவர்களின் பார்வைக்கு வெளியிடப்படும்.

ஒரு பதவிக்கு ஒன்றிற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறின் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் nதிரிவு இடம்பெறும். விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறாத பதவிகளிற்கான வெற்றிடம் சமூகமளித்திருக்கும்

அங்கத்தவர்கள் மத்தியிலிருந்து நிரப்பப்படும். தேர்தல் ஆரம்பிப்பதற்கு முன்னதாக விண்ணப்பதாரர் விரும்பின் தமது விண்ணப்பத்தினை மீளப்பெற்றுக்கொள்ளமுடியும்.

தபால் முகவரி: Mr. T. Visuvalingam, 1008-50 Elm Drive, Mississauga, ON. L5A 3X2.

மின்னஞ்சல் முகவரி: tvisuvalingam@yahoo.com  தொலைபேசி இல.: 905-566-4822

விண்ணப்பப் படிவத்தை இங்கே அழுத்தித் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 

Application Form

பழைய மாணவர் சங்க கனடா கிளை நடாத்தும் – 125 வது ஆண்டு விழா

Invitation Letter f

Hindu ADDS 2
OSA Flyer

கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்கம் – கனடா நடாத்தும் பேச்சுப் போட்டி பொது அறிவுப்போட்டி பற்றிய அறிவித்தல்

J Drகலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயம்
(காரைநகர் இந்துக் கல்லூரி)
பழைய மாணவர் சங்கம் – கனடா நடாத்தும்
பேச்சுப் போட்டி பொது அறிவுப்போட்டி பற்றிய அறிவித்தல்
கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் (காரைநகர் இந்துக் கல்லூரி) 125வது ஆண்டுவிழாவையொட்டி பேச்சுப் போட்டி  பொது அறிவுப் போட்டி ஆகியன நடாத்தப்படவுள்ளன. போட்டிகள் தொடர்பான விபரங்களை இங்கே பார்வையிடலாம்.

SPEECH copy (1)2

க.பொ.த (சாதாரணம்) பரீட்சைப் பெறுபேறுகள் பரீட்சைத் திணைக்களத்திலிருந்து உத்தியோக பூர்வமாக வெளிவந்துள்ளன.:2013-04-25

Shanthini_K-195x255க.பொ.த (சாதாரணம்) பரீட்சைப் பெறுபேறுகள் பரீட்சைத் திணைக்களத்திலிருந்து உத்தியோக பூர்வமாக வெளிவந்துள்ளன.2013-04-25

 

க.பொ.த.(சாதாரணம்)பரீட்சையில் சாதனைப் பெறுபேறுகளை பெற்றுக்கொடுத்து இந்துவின் மாணவர்கள் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

க.பொ.த.(சாதாரணம்)பரீட்சையில் மிகச்சிறந்த 7 A, B, C என்ற பெறுபேற்றினை பெற்ற இந்துவின் மாணவி சாந்தினி கனகலிங்கம் தீவக வலயத்தில் முதல்நிலை மாணவி என்ற பெருமை கொண்டு விளங்குவதுடன் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற அதிக எண்ணிக்கையையுடைய மாணவர்களை கொண்டு விளங்கும் பாடசாலையாகவும் இந்து விளங்கி தீவக வலயத்தின் முதல்நிலை பாடசாலை என்ற தகைமையினை பெற்றுக்கொண்டுள்ளது.

சிறந்த பெறுபேறுகளைப் பெற்று ஒன்பது பாடங்களிலும் சித்தியெய்திய முதல் பதினான்கு மாணவர்களின் பெயர் விபரமும் அவர்கள்; பெற்றுக்கொண்ட தர விபரமும் கீழ்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

க.பொ.த (சாதாரணம்) தரப் பரீட்சையில் சித்தியெய்தி க.பொ.த உயர்தர வகுப்பில் கற்பதற்கு 26 மாணவர்கள் தகமை அடைந்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பாடவிதான செயற்பாடுகளிலும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் தீவக வலயத்தில் முதன்மைப் பாடசாலை என்கின்ற பெயரை தொடர்ந்து நிலைநாட்டி வருகின்ற காரை இந்து யாழ் நகரப் பாடசாலைகளுடன் போட்டியிடக்கூடிய காலம் தூரத்தில் இல்லை என்பதற்கு கட்டியம் கூறுவதாக கல்லூரியினால் ஏற்படுத்தப்பட்டு வருகின்ற தொடர் சாதனைகள் அமைந்துள்ளன.

J/Dr.A.Thiyagarajah Madhya Maha Vidyalayam

(Karainagar Hindu College)

Karainagar.

G.C.E O/L (2012) Results

No Student Full Name Total Result
1. Shanthini Kanagalingam 7A B C
2. Kasthuri Kopalapillai 5A 2B 2C
3. Rojana Thavaraja 5A B 3C
4. Thanuja Komaleswaran 4A 2B 2C S
5. Dinoja Navarathnaraja 3A 2B 2C 2S
6. Tharanya Somasuntharam 3A B 2C 3S
7. Nimalendran Pirasanth 3A B 2C 3S
8. Gajinthini Nathiseelan 3A B 5S
9. Thulasika Suntharasivam 2A 3B 4C
10. Thushyanthini Ariaputhiran 2A 2B 3C 2S
11. Mekalai Theventhiram 2A B 4C S
12. Thargika Moorthy A 2B 3C 3S
13. Navanithi Kajenthiran A 2B 3C 3S
14. Shajitha Balasingam A 2B 3C 3S

கோட்டமட்ட விளையாட்டுப் போட்டியில் காரை இந்து முன்னணியில்

J Drகோட்டமட்ட விளையாட்டுப் போட்டியில் காரை இந்து முன்னணியில்

காரைநகர் பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியில் 63 முதல் இடங்கள் உட்பட 124 இடங்களைப் பெற்று காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி) முன்னணி வகிக்கின்றது.

காரைநகரில் உள்ள 12 பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வலய மட்டப்போட்டிக்கு தெரிவாகி உள்ள 274 போட்டியாளர்களில் 124 போட்டியாளர்கள் தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் (காரைநகர் இந்துக் கல்லூரி) இருந்து தெரிவாகி காரைநகர் பாடசாலைகளிடையே அதிகூடிய புள்ளிகளைப் பெற்று முதன்நிலை வகிக்கின்றது.

காரைநகர் கோட்ட மட்ட தமிழ்த்தினப் போட்டியிலும் காரை இந்து முன்னணியில்

காரைநகர் கோட்ட மட்ட தமிழ்த்தினப் போட்டியிலும் காரை இந்து முன்னணியில்

காரைநகர் கோட்ட மட்ட தமிழ்த்தினப் போட்டியிலும்; காரைநகர் இந்துக் கல்லூரி ஒன்பது முதல் இடங்கள் உட்பட 17 இடங்களைப் பெற்று முன்னணி வகிக்கின்றது.

ஆரம்பப் பாடசாலை இன்றி தரம் 6–13 வரை கொண்ட தியாகராசா மத்திய மகா வித்தியாலயம்(காரைநகர் இந்துக் கல்லூரி) இவ் ஆண்டு இடம்பெற்ற தமிழ்த்தினப் போட்டியில் அதிகூடிய இடங்களைப் பெற்று முன்னணி வகிப்பதுடன் வலய மட்டப்போட்டியில் அதிகூடிய மாணவர்கள் பங்குபற்றும் பாடசாலையாக தீவக வலயத்தில் தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி) விளங்குகின்றது.

தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி)
காரைநகர் கோட்டமட்ட தமிழ்த்தினப் போட்டி – 2013

 

பிரிவு நிகழ்ச்சி     நிலை மாணவர் பெயர்
II வாசிப்பு 1 அ.பிரணவரூபன்
II     பேச்சு 1 ஏ.கோபிநாத்
III     பேச்சு 2 பா.குலமதி
IV     பேச்சு 1 சி.விஷாளினி
II தனி இசை 3 சி.புருஷோத்தமி
III தனி இசை 1 க.கமலரூபன்
IV தனி இசை 2 இ.பவதாரணி
V தனி இசை 1 பா.வதனி
III தனி நடனம் 2 இ.நிரூபமா
V தனி நடனம் 1 மு.சகீதா
இசைக்குழு    I 2
இசைக்குழு   II 2
நடனம் குழு 1
தமிழறிவு வினாவிடை 2
விவாதம் 2
சமூக நாடகம் 1
நாட்டிய நாடகம் 1

க.பொ.த.(சாதாரணம்) க.பொ.த.(உயர்தரம்) பரீட்சைகளில் சாதனை படைத்து காரை இந்துவிற்கு புகழ்சேர்த்த மாணவர்களிற்கு ஊக்குவிப்பு நிதி வழங்க 40000.00ரூபா பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் உதவப்பட்டுள்ளது.

2Nadarasa Rahiniக.பொ.த.(சாதாரணம்) க.பொ.த.(உயர்தரம்) பரீட்சைகளில் சாதனை படைத்து காரை இந்துவிற்கு புகழ்சேர்த்த மாணவர்களிற்கு ஊக்குவிப்பு நிதி வழங்க 40000.00ரூபா பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் உதவப்பட்டுள்ளது.

க.பொ.த.(உயர்தரம்)தர பரீட்சையில் காரைநகர் கோட்ட மட்டத்தில் முதன்மைச் சித்தி பெற்ற செல்வி ராகினி நடராசாஇ க.பொ.த.(சாதாரணம்) தர பரீட்சையில் தீவக வலய மட்டத்தில் முதன்மைச் சித்தி பெற்ற செல்வி சாந்தினி கனகலிங்கம் ஆகிய இருவருக்கும் மற்றும் சிறப்புச் சித்தி பெற்று பல்கலைக்கழகம் செல்வதற்கான தகமையினையும் உயர்தரவகுப்பிற்கு செல்வதற்கான தகமையினையும் பெற்ற ஏனைய அனைத்து மாணவர்களுக்கும் பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை தமது பாராட்டுக்களை கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களுக்கு ஊடாகத் தெரிவித்துள்ளது.

இவர்களுடைய சாதனையினால் கல்லூரி அடைந்துள்ள பெருமை குறித்து Shanthini_K-195x255மகிழ்வுற்றிருக்கும் கல்லூரிச் சமூகத்துடன் கனடாக் கிளைச் சங்க உறுப்பினர்களும் இணைந்து கொள்வதாகவும் இந்த மாணவர்களை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் அவர்களிற்கு வழங்கி உதவும் பொருட்டு தமது கிளை, நாற்பதினாயிரம் ரூபாவினை(40000 ரூபா) பழைய மாணவர்களின் தாய்ச் சங்கத்தின் கணக்கிற்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் தலைவர் திரு.சி.தம்பிராஜா அவர்கள் இவ்விணையத்தளத்திற்கு அறியத் தந்துள்ளார்.

மேலும் இம்மாணவர்களின் சாதனைக்கு வித்திட்ட முன்னாள் அதிபர் திரு.பொன்.சிவானந்தராசா, தற்போதயை அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் ஆகியோரின் சிறந்த வழிநடத்தலையும் மற்றும் இம்மாணவர்களுக்குக் கல்வி புகட்டிய அனைத்து ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவையையும் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுவதுடன் அவர்களுக்கு கனடாக் கிளைச் சங்கத்தின் சார்பில் தமது நன்றியினையும் அவர் தெரிவித்துள்ளார்.