கனடா – காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.

கனடா – காரை கலாச்சார மன்றத்தின்

வருடாந்த கோடைகால ஒன்றுகூடல்

04.08.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.

வருடாவருடம் காரை உறவுகள் அனைவரும் கலந்து சிறப்பித்து, ஊர் நினைவுகளை கொண்டாடி மகிழ்கின்ற விழாவாக ஒன்றுகூடல் அமைந்து வருகின்றது. வழமைபோல இந்தவருடமும் 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00மணிக்கு ஆரம்பித்து மாலை 7.00 மணி வரை கனடா வாழ் காரை மக்களின் வருடாந்த கோடை கால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டிகளும் Morningside பூங்காவில் சிறப்பாக நடைபெற்றது.

பல நூற்றுக்கணக்கான கனடா வாழ் காரை மக்கள் ஒன்று கூடலில் கலந்து சிறப்பித்து ஊரின் நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தும் காரை மண்ணை பெருமைப்படுத்தினர். அத்துடன் எமது ஊர் குறித்த சிந்தனையையும் ஈடுபாட்டினையும் எமது இளம் சந்ததிக்கு வழியேற்படுத்திக்கொடுத்துள்ளது.

உணவுகளின் பரிமாற்றமும் விளையாட்டுப் போட்டிகளும் சிறப்பான முறையில் கனடா காரை கலாச்சார மன்றத்தின் சீரிய திட்டமிடலுடன் கூடிய நெறிப்படுத்தலில் உறுப்பினர்களும், தொண்டர்களும், இளையோரும் ஊர் உணர்வோடு மிகுந்த முனைப்புடன் செயலாற்றினர்.

சுடச்சுட அப்பம்,பாணும் பருப்பும்,பழஞ்சோற்றுத் தண்ணீர் அதனை தொடர்ந்து BBQ,மதிய போசனம், ஊர் சுவையுடன் கூடிய சைவ மற்றும் அசைவ கூழ், மாலையில் கொத்து றொட்டியுடன் சுவை மிக்க இனிய கனடிய சோளம் இவற்றுடன் சிறுவர்களிற்கு தும்பு மிட்டாஸ், ஐஸ்கிறீம், Frezee மற்றும் குளிர் பானங்களுடன் நாள் முழுவதும் வழங்கப்பட்டன.

சிறியோர், இளையோர், பெரியோர், முதியோர் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்ற கவர்ச்சி மிகு விளையாட்டுக்களுடன் சிறுவர்களுக்கான வினோத உடைப் போட்டியும், குழு விளையாட்டுக்களான தாம்பிழுவைப் போர், தாய்ச்சி போட்டிகளும் இல்லங்களுக்கிடையே நடைபெற்றது.

விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டது. அத்துடன் தாய்ச்சி போட்டியில் வெற்றி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு அமரர் சரவணமுத்து பத்மநாதன் ( பட்டு மாமா ) (முன்னைநாள் செயலாளர் வாரிவளவு நல்லியக்கச் சபை) அவர்களின் ஞாபகார்த்தமாக கேடயம் வழங்கப்பட்டதுடன் இல்லங்களுக்கிடையேயான போட்டியில் வெற்றி பெற்ற இல்லத்திற்கு அமரர் நடராசா குலேந்திரன் (காரை விளையாட்டுக்கழக உதைபந்தாட்ட வீரர்) அவர்களின் ஞாபகார்த்தமாக கேடயம் வழங்கப்பட்டது.

இளைய தலை முறையினரின் சிறப்பான பங்களிப்பும், நெறியாள்கையும் மிகவும் பிரமிக்கவைத்தது. அமைதியாகவும், மகிழ்ச்சிகரமாகவும் நடைபெற்ற இந்த வருட ஒன்றுகூடல் கலந்து கொண்டவர்களை பெருமையடையச்செய்துள்ளதுடன் மண்ணின் புகழை நிலை நிறுத்தியுள்ளது.

இவ்வருட ஒன்றுகூடலை சிறப்புற நடாத்துவதற்கு ஒத்துழைத்த இளைய தலைமுறையினர், நிர்வாகசபை உறுப்பினர்கள், தொண்டர்கள், அனுசரணையாளர்கள், பல விதமான உதவிகள் புரிந்த நல்லுள்ளம்கள், பங்கு பற்றியவர்கள் அனைவருக்கும் கனடா காரை கலாச்சார மன்றம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.

நன்றி

 

நிர்வாகம்
கனடா- காரை கலாச்சார மன்றம்

 

 

 

[su_slider source=”media: 89949,89950,89951,89952,89953,89954,89955,89956,89957,89958,89959,89960,89961,89962,89963,89964,89965,89966,89967,89968,89969,89970,89971,89972,89973,89974,89975,89976,89977,89978,89979,89980,89981,89982,89983,89984,89985″ limit=”100″ width=”920″ height=”640″]

 

 

காரைஒன்றுகூடல் காணொளி கூடிய விரைவில் எடுத்து வரப்படும்.

 

 

காரை ஒன்றுகூடல் முழுமையான புகைப்படங்களை பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

 

https://photos.app.goo.gl/qCDzWuP7aVB4yp8E9