Category: Google Photos

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற தீர்த்தத்திருவிழாக் காட்சிகள்

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவத்தில் இன்று நடைபெற்ற தேர்த்திருவிழா காட்சிகள்.

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவத்தில் 24/06/2014 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சப்பரத்திருவிழா காட்சிகள்

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 7ம் நாளான திங்கள்கிழமை இரவு மற்றும் 8ம் நாளான செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பகல் திருவிழாக் காட்சிகள்.

மடத்துக்கரை ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தியும் சகஸ்ர (1008) சங்காபிஷேகமும் 22/06/2014 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. தொடர்ந்து இரவு இடம்பெற்ற திருவிழாக் காட்சிகள்

மடத்துக்கரை ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தியும் சகஸ்ர (1008) சங்காபிஷேகமும் 22/06/2014 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

சத்திரந்தை ஞானவைரவர் ஆலயத்திலும் மண்டலாபிஷேக பூர்த்தியும் 108 சங்காபிஷேகமும் 22/06/2014 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 5ம் நாளான நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற பகல் திருவிழாக் காட்சிகள்.

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 5ம் நாளான நேற்று சனிக்கிழமை இரவு மற்றும் 6ம் நாளான ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பகல் திருவிழா ,மாம்பழத்திருவிழாக் காட்சிகள்.

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 6ம் நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மற்றும் 7ம் நாளான இன்று திங்கள்கிழமை இடம்பெற்ற பகல் திருவிழா மற்றும் வேட்டைத்திருவிழாக் காட்சிகள்.

களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் நான்காம் நாளான இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவிழா காட்சிகள்.

களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவம் கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து பத்துத் தினங்கள் சிறப்பாக நடைபெற்று வரும் மகோற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற திருவிழாவின் இரவுக்காட்சிகள்

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று புதன்கிழமை பகல் காட்சிகள்

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்து பத்துத் தினங்கள் சிறப்பாக நடைபெற உள்ள மகோற்சவத்தின் தேர்த்திருவிழா எதிர்வரும் 25ம் திகதி புதன் கிழமையும் தீர்த்தத் திருவிழா26ம் திகதி வியாழக்கிழமையும் நடைபெற உள்ளது.

காரைநகர் சத்திரந்தை ஞானவைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று புதன்கிழமை முற்பகல் 10.27மணிமுதல் 11.27 மணிவரையுள்ள சுபவேளையில் நடைபெற்றது.

காரைநகர் சத்திரந்தை ஞானவைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று புதன்கிழமை முற்பகல் 10.27மணிமுதல் 11.27 மணிவரையுள்ள சுபவேளையில் நடைபெற்றது.

இந்த ஆலயம் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் முற்று முழுதாகப் புதிதாக அமைக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் சிறப்பாக இடம்பெற்றது.

கும்பாபிஷேகத்திற்கு முதல் நாள் செவ்வாய்க்கிழமை இரவு மற்றும் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கும்பாபிஷேகக் காட்சிகள் தொடர்ந்து இரவு இடம்பெற்ற திருவிழாக்காட்சிகளைப் படங்களில் காணலாம்.

காரைநகர் சத்திரந்தை ஞானவைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம்

காரைநகர் சத்திரந்தை ஞானவைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை புதன்கிழமை முற்பகல் 10.27மணிமுதல் 11.27 மணிவரையுள்ள சுபவேளையில் நடைபெற உள்ளது.

 இந்த ஆலயம் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் முற்று முழுதாகப் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. ஈழத்துச் சிதம்பர பிரதம சிவாச்சாரியார் சிவசிறி வி.ஈஸ்வரக்குருக்கள் தலைமைதாங்கி மகாகும்பாபிஷேகத்தை நடத்திவைக்க உள்ளார்.

களபூமி தெருவடிப் பிள்ளையார் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கஜலட்சுமி ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.

மரணஅறிவித்தல்,திரு.சுந்தரலிங்கம் சங்கரபிள்ளை புதுறோட், காரைநகர்.(கனடா)

 

                                               

                                                                     மரணஅறிவித்தல்                                             

                                                

PHOTO

                                          திரு.சுந்தரலிங்கம் சங்கரபிள்ளை

                                                         புதுறோட், காரைநகர்.(கனடா)

 

              தோற்றம்  :1949-11-05                                                                           மறைவு  : 2014-06-02

 

காரைநகர் புதுறோட்டை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு.சுந்தரலிங்கம் சங்கரப்பிள்ளை அவர்கள் 02.06.2014 திங்கள்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் மனோரஞ்சிதத்தின் அன்பு கணவரும் விக்னா, விவேக்காவின் அன்பு தந்தையுமாவார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சங்கரபிள்ளை நாகம்மாவின் சிரேஷ்ட புத்திரனும் காலஞ்சென்ற சிவசோதி மற்றும் பாக்கியத்தின் மருமகனும், காலஞ்சென்றவர்களான கமலாதேவி, வசந்தி(பபி) மற்றும் யோகேஸ்வரி, நந்தகுமார், சிவகுமார் ஆகியோரின் சகோதரனும், இராஜரட்ணம், இராசையா, மஞ்சுளா, சுகிதா, யோகராஜா(அப்பன்), வில்வராஜா, கங்காகுமாரி, யமுனாகுமாரி, விநாயகமூர்த்தி, நிர்மலா, சஜந்தா, செந்தில்ராஜா, தவயோகராஜா, கஜனி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் Chapel Ridge Funeral Home at 8911 Woodbine Ave, Markham, On, L3R 5G1 இல் 04.06.2014 புதன்கிழமை மாலை 5 மணிமுதல் 9 வரையும், பின்னர் 05.06.2014 வியாழக்கிழமை காலை 8.00 மணிமுதல் 9 மணிவரையும் பார்வைக்காக வைக்கப்பட்டு, ஈமைக்கிரியைகள் தொடர்ந்து 9 மணிமுதல் 11 மணிவரை நடைபெற்று 11.30 மணியளவில் Elgin Mills Cemetery இல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

தொலைபேசி: 416 335 8862

மரண அறிவித்தல், திருமதி யோகம்மா வைத்திலிங்கம்

Sisters Death Notice

காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 9ம் நாளான புதன்கிழமை (21.05.20214) இரவு கிழவன்காடு கலாமன்ற மாணவர்களின் பண்ணிசை நிகழ்வு இடம்பெற்றபோது எடுக்கப்பட்ட படங்கள்.

காரைநகர் வலந்தலை மொந்திபுலத்தில் தீ விபத்து

காரைநகர் கல்லூரி வீதி மொந்திபுலத்தில் உள்ள வளவொன்றில் கொழுத்தப்பட்ட குப்பை அப்பகுதி எங்கும் பரவியதால் 50இற்கும் மேற்பட்ட பனைமரங்கள் எரிந்து நாசமானதுடன் அயல் வீடுகளுக்கும் பரவ ஆரம்பித்தது.

 இதனைக் கண்னுற்ற இளைஞர்கள் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்ததையடுத்து அப்பகுதிக்கு விரைந்த காரைநகர் அபிவிருத்திச் சபைச் செயலாளர் திருப்புகழூர்சிங்கம் எடுத்த தீவிர முயற்சியினால் தீ பரவுவது முற்றாகத் தடுக்கப்பட்டதுடன் தீயினையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மதியம் இடம்பெற்றது. தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த காரைநகர் பகுதி கிராமசேவையாளர்கள்,சமுர்த்திஅலுவலர்கள்,பிரதேசசெயலகஅலுவலர்கள்,பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர்,பிரதேச சபைத் தலைவர்,மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இணைந்து யாழ் மாநகர சபை,பிரதேச சபை தீயணைப்பு படை,கடற்படை ஆகியோரும் தீவிரமாகச் செயற்பட்டு தீயினைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

ஸ்கந்த மகாயாகம் காரைநகர் புகலி சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் கடந்த் 6ம் திகதி செவ்வாய்க்கிழமை தொடக்கம் 15ம் திகதி வியாழக்கிழமை வரை பத்துத் தினங்கள் நடைபெற்று வருகின்றது.இன்றைய காட்சிகள் 15.05.2014

காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் 13ம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. உற்சவக் காட்சிகள்

மிசிசாகா ஜெயதுர்க்கா தேவஸ்தானத்தில் கனடா- காரைநகர் மக்களால் நடத்தப்படும் சப்பறத் திருவிழா

resize

காரைநகர் கருங்காலி முருகமூர்த்தி கோவில் மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காரைநகர் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணி வேலைகள் வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

வடக்கு மேற்குப்புற சிற்ப வேலைப்பாட்டுடன் கூடிய சுவர்கள் கட்டப்பட்டுக்கொண்டிருப்பதையும் மூலஸ்தான வரி வர்க்க வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதையும் காளிகோவிலுக்கு முன்பாகவுள்ள கொட்டகை கழற்றப்பட்டு அங்கும் ஒரு மணிமண்டபம் அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதையும் படங்களில் காணலாம்.

ஸ்கந்த மகாயாகம் காரைநகர் புகலி சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் கடந்த் 6ம் திகதி செவ்வாய்க்கிழமை தொடக்கம் 15ம் திகதி வியாழக்கிழமை வரை பத்துத் தினங்கள் நடைபெற்று வருகின்றது.

5ம் திகதி திங்கட்கிழமை ஆலயத்திலிருந்து ஊர்வலம் யாழ்ப்பாணத்தில் பல்வேறு பிரதேசங்களுக்குச் சென்று மீண்டும் இரவு ஆலயத்தை வந்தடைந்தது. ஸ்கந்த மகாயாக ஆரம்பக் கிரியைகள் 6ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 7.25 மணிக்கு விநாயக வழிபாட்டுடன் ஆரம்பமாகி தினமும் காலை,மாலை யாகம் நடைபெற்று மயூர பூசையும் இடம்பெற்று வருகின்றது.

 எதிர்வரும் 15ம் திகதி வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கு விநாயக வழிபாட்டுடன் ஸ்கந்த மகாயாக கோமம் இடம்பெறும். மாலை விசேட பூசையுடன் முருகப்பெருமான் வீதியுலாவும் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளது.

இவ்வாலயத்தில் கடந்த வருடம் தென்னிலங்கை மற்றும் பாகிஸ்தான் குதிரைகள் கொண்டுவரப்பட்டு அஸ்வமேத மகாயாகம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.இவ்வாண்டும் ஸ்கந்த மகாயாகத்திற்கும் மயூரபூசைக்குமாக மயில்கள் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஸ்கந்த மகாயாகத்தின் 3ம் நாளான நேற்று முந்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற யாகக் காட்சிகள்.

காரைநகர் மடத்துக்கரை ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய புனராவர்த்தன மகா கும்பாபிஷேகம் இன்று 5ம் திகதி திங்கட்கிழமை காலை 07.30 மணிமுதல் நடைபெற்றது.கும்பாபிஷேகக் காட்சிகளைப் படங்களில் காணலாம்.

காரைநகர் மடத்துக்கரை ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய புனராவர்த்தன மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 5ம் திகதி திங்கட்கிழமை காலை 8.00 மணிக்கு நடைபெற உள்ளது.

கும்பாபிஷேக ஆரம்பக் கிரியைகள் கடந்த புதன்கிழமை ஆரம்பமாகித் தொடர்ந்து நடைபெற்ற வருகின்றது.

பத்தர்கள் எண்ணெய்க்காப்பு சாத்துதல் நாளை ; ஞாயிற்றுக்கிழமையும் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை இடம்பெறும்

மறுநாள் திங்கட்கிழமை 9.40 மணி தொடக்கம் 10.31 மணிவரை உள்ள சுபவேளையில் மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

கொழும்பு ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் பிரதம குரு சிவஸ்ரீ வை. சுப்பிரமணியக்குருக்கள் பிரதிஷ்டா பிரதம குருவாக இருந்து கும்பாபிஷேகக் கிரியைகளை நடத்தி வைப்பார்.

 கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து நடைபெறும் நிகழ்வில் ஆசியுரைகளை பிரதிஷ்டா பிரதமகுரு வை.சுப்பிரமணியக்குருக்கள்,ஆலய ஆதீனகுரு பிரம்மஸ்ரீ கு.சரவணபவானந்தசர்மா,நல்லைஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரபரமாச்சாரியசுவாமிகள் ஆகியோர் வழங்க உள்ளதுடன் வாழ்த்துரைகளை புலவர் வே.குமாரசாமி,ஓய்வு நிலை அதிபர் ஆ.பாலகிருஸ்ணன்,ந.பரமசிவம் ஆகியோர் வழங்க உள்ளனர்.

நேற்று இரவு இடம்பெற்ற கும்பாபிஷேக ஆரம்பக் கிரியைகளையும் ,யாகசாலைப் பிரவேசத்தையும் படங்களில் காணலாம்.

 

காரைநகர் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கான மேற்கு வீதியில் முற்றிலும் புனரமைக்கப்பட்ட புதிய பூந்தோட்டம் இன்று காலை 7.00 மணியளவில் அம்பாளுக்கு விஷேட பூஜைகளைத் தொடா்ந்து அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

வகைவகையான பூங்கன்றுகள் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் வரவழைக்கப்பட்டு அடியவர்களால் நாட்டப்பட்டது. பூந்தோட்டத்திற்கான தண்ணீா் வசதி விஷேடமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது என திருப்பணிச்சபையினர் அறியத்தருகின்றார்கள். தண்ணீர் வசதி, அழகிய அலங்கார மதில் என்பன அமைக்கப்பட்டுள்ளது என்பதை திருப்பணிச்சபையினர் அறியத்தருவதோடு தொடர்ந்து வரும் படங்களில் ஆலயத்தின் தற்போதைய திருப்பணி வேலைகள் தொடர்பான படங்களையும் காணலாம். (விரும்பும் அடியவர்கள் பூந்தோட்டத்திற்கான பூங்கன்றுகளை அன்பளிப்பு செய்யலாம் என திருப்பணிச்சபையினர் அறியத்தருகின்றனர்.)