ஸ்கந்த மகாயாகம் காரைநகர் புகலி சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் கடந்த் 6ம் திகதி செவ்வாய்க்கிழமை தொடக்கம் 15ம் திகதி வியாழக்கிழமை வரை பத்துத் தினங்கள் நடைபெற்று வருகின்றது.

5ம் திகதி திங்கட்கிழமை ஆலயத்திலிருந்து ஊர்வலம் யாழ்ப்பாணத்தில் பல்வேறு பிரதேசங்களுக்குச் சென்று மீண்டும் இரவு ஆலயத்தை வந்தடைந்தது. ஸ்கந்த மகாயாக ஆரம்பக் கிரியைகள் 6ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 7.25 மணிக்கு விநாயக வழிபாட்டுடன் ஆரம்பமாகி தினமும் காலை,மாலை யாகம் நடைபெற்று மயூர பூசையும் இடம்பெற்று வருகின்றது.

 எதிர்வரும் 15ம் திகதி வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கு விநாயக வழிபாட்டுடன் ஸ்கந்த மகாயாக கோமம் இடம்பெறும். மாலை விசேட பூசையுடன் முருகப்பெருமான் வீதியுலாவும் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளது.

இவ்வாலயத்தில் கடந்த வருடம் தென்னிலங்கை மற்றும் பாகிஸ்தான் குதிரைகள் கொண்டுவரப்பட்டு அஸ்வமேத மகாயாகம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.இவ்வாண்டும் ஸ்கந்த மகாயாகத்திற்கும் மயூரபூசைக்குமாக மயில்கள் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஸ்கந்த மகாயாகத்தின் 3ம் நாளான நேற்று முந்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற யாகக் காட்சிகள்.