காரைநகர் மடத்துக்கரை ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய புனராவர்த்தன மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 5ம் திகதி திங்கட்கிழமை காலை 8.00 மணிக்கு நடைபெற உள்ளது.

கும்பாபிஷேக ஆரம்பக் கிரியைகள் கடந்த புதன்கிழமை ஆரம்பமாகித் தொடர்ந்து நடைபெற்ற வருகின்றது.

பத்தர்கள் எண்ணெய்க்காப்பு சாத்துதல் நாளை ; ஞாயிற்றுக்கிழமையும் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை இடம்பெறும்

மறுநாள் திங்கட்கிழமை 9.40 மணி தொடக்கம் 10.31 மணிவரை உள்ள சுபவேளையில் மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

கொழும்பு ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் பிரதம குரு சிவஸ்ரீ வை. சுப்பிரமணியக்குருக்கள் பிரதிஷ்டா பிரதம குருவாக இருந்து கும்பாபிஷேகக் கிரியைகளை நடத்தி வைப்பார்.

 கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து நடைபெறும் நிகழ்வில் ஆசியுரைகளை பிரதிஷ்டா பிரதமகுரு வை.சுப்பிரமணியக்குருக்கள்,ஆலய ஆதீனகுரு பிரம்மஸ்ரீ கு.சரவணபவானந்தசர்மா,நல்லைஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரபரமாச்சாரியசுவாமிகள் ஆகியோர் வழங்க உள்ளதுடன் வாழ்த்துரைகளை புலவர் வே.குமாரசாமி,ஓய்வு நிலை அதிபர் ஆ.பாலகிருஸ்ணன்,ந.பரமசிவம் ஆகியோர் வழங்க உள்ளனர்.

நேற்று இரவு இடம்பெற்ற கும்பாபிஷேக ஆரம்பக் கிரியைகளையும் ,யாகசாலைப் பிரவேசத்தையும் படங்களில் காணலாம்.