Category: Google Photos

கர்நாடக இசைக் கச்சேரி

VK_16-08-2014_copy

செல்வி நவரத்தினம் சாரதா(கிளி)

 

 
செல்வி நவரத்தினம் சாரதா(கிளி)
(முன்னாள் மட்டக்களப்பு கட்டிடபொருள் கூட்டுத்தாபன கணக்காளர், காசாளர்- பிரான்ஸ்)
விண்ணில் : 2 ஓகஸ்ட் 2014

 

 

 

 

 

 

 

 

 

 
 

யாழ். காரைநகர் மல்லிகையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் சாரதா அவர்கள் 02-08-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் தனபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,

பாக்கியராசா, ஸ்ரீகரலட்சுமி, தர்மராசா, லலிதா, கோகனதை, நிர்மலாதேவி, அரிகரராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நாகபூசனி, காலஞ்சென்ற குலசேகரம், சுந்தராம்பாள், கனகசுந்தரம், நடராசா, பாலசுப்பிரமணியம், சிவமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கோபிராஜ், பத்மஜா, கோபிரஞ்சன், பிரணவராஜ், அபிநயனி, அபிராம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுகிர்தராசா, சற்குணராசா, விமலராசா, ஸ்ரீகுலராசா ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

தேவஜனனி, தேவரஜனி, காலஞ்சென்ற தேவரஜீவன், தேவசஞ்ஜீவன், ஜனனி, அனிகா, ரேவதி, காயத்திரி, கௌரி, குகன் ஆகியோரின் அன்புப்  பெரிய தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள் பார்வைக்கு
 
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/08/2014, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: la Maison Funeraire, 7 Bouleuatd, Menilmontant, 75011 Paris, France (Metro Philippe, Auguste No 2 )
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 04/08/2014, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: la Maison Funeraire, 7 Bouleuatd, Menilmontant, 75011 Paris, France (Metro Philippe, Auguste No 2 )
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 05/08/2014, 09:45 மு.ப — 11:45 மு.ப
முகவரி: la Maison Funeraire, 7 Bouleuatd, Menilmontant, 75011 Paris, France (Metro Philippe, Auguste No 2 )
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 05/08/2014, 01:15 பி.ப
முகவரி: Cimetière du Père-Lachaise, Rue du Repos, Paris 20, Paris,Metro Gambetta France.
தொடர்புகளுக்கு
— — பிரான்ஸ்
தொலைபேசி: +33148654401
அரி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33609741205
சுந்தா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33634171810
தர்மராசா(MGR) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776033259

கண்ணீர் அஞ்சலி! அமரர் வேலுப்பிள்ளை சுந்தரேசு (Retired Ceylon Fisheries Corporation Regional Manager) களபூமி, காரைநகர். மறைவு: 30.07.2014

theesan_-_karai_copy_Final

ஓராண்டு நினைவஞ்சலி அமரர் மனோரஞ்சனா கனகசபாபதி

manoranjana-first-year0001

கண்ணீர் அஞ்சலி, ஸ்ரீமதி சரஸ்வதி தேவராஜசர்மா

ee

காரைநகர் ஈழத்துச் சிதம்பர தேவி பெருந்திருவிழாவின் தேர்த் திருவிழா இன்று நடைபெற்றது.இன்றைய தேர்த்திருவிழாக் காட்சிகள்.

ஆடி அமவாசை தினமான 26/07/2014 காரைநகர் ஈழத்துச்சிதம்பர புனித தீத்தக்கரையில் ஆயிரத்திற்குமேற்பட்டோர் தீத்தமாடிப் பிதிர்க்கடன் நிறைவேற்றினர்.

யாழ்ற்ரன் கல்லூரியில் சரஸ்வதிசிலை திறப்புவிழா வைபவம்

யாழ்ற்ரன் கல்லூரியில் முன்னால் உள்ள பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலை கல்லூரியின் பழைய மாணவரும் சிலையை ஸ்தாபிப்பதற்கு தனது முழுமையான பங்களிப்பைச் செய்தவருமான சுவிஸ்நாதன் என்று எல்லோராலும் அழைக்கப்படும் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களால் 28.07.2014 மு.ப 9.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.

அவருடன் யாழ்மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபரும் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து சுவிஸ்நாதன் அவர்களால் கல்லூரி நுழைவாயிலில் அமைக்கப்படவிருக்கும் அலங்காரவளைவிற்கான அடிக்கல்லும் நாட்டி வைக்கப்பட்டது. இதற்கு முன்னதாக விருந்தினர்கள் கல்லூரியின் மாணவதலைவர்கள் ,கல்லூரியின் பான்ட் இசைக்குழு ஆகியோரால் மணற்காட்டு அம்மன் கோயிலில் நடந்த விசேட பூசையைத் தொடர்ந்து கல்லூரிக்கு அழைத்துவரப்பட்டனர்.

இறுதியாக கல்லூரியின் பிரதான மண்டபத்தில் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்லூரி அதிபர் தனது தலைமை உரையில் கல்லூரியின் பழைய மாணவரும் அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய சுவிஸ்நாதன் அவர்கள் கல்லூரி அன்னைக்கு ஆற்றிவரும் சேவையை மனதாரப் பாராட்டினார்.

அவரின் குறிப்பிடத்தக்க சேவைகளான கணினிஆய்வு கூடத்தின் அபிவிருத்தி வேலைகள் ஏழைமாணவருக்கான புலமைப்பரிசில் திட்டம் ஆகியவற்றைக் கோடிட்டுக் காட்டி அன்னை சரஸ்வதிக்கு சிலை அமைத்தமைக்கும் அதிபர் தனது உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்தார்.

கல்லூரியின் நுழைவாயிலில் அலங்கார வளைவு அமைப்பதற்கும் அதிபர் தனது நன்றி உரையில் குறிப்பிட்டார்.
இதனைக் கௌரவிக்கும் முகமாக கல்லூரி அதிபர் அவர்கள், சுவிஸ் நாதன் அவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். மேலும் கல்லூரியுடன் தொடர்புகளை மேற்கொண்டு இச்சேவைகளை வழங்கி உதவி அளிக்கும் பிரதேச சபை உறுப்பினர் திரு. பாலச்சந்திரன் அவர்களையும், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பொலிஸ்மா அதிபர் அவர்களையும் அதிபர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

சிறப்பு விருந்தினர் பிராந்திய பொலிஸ்மா அதிபர், பாடசாலை அபிவிருத்திச்சங்க செயலாளர் திரு.சிற்சபேசன் ,கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்னேஸ்வரன் ,பிரதேச சபை உறுப்பினர் திரு. பாலச்சந்திரன் ஆகியோரின் உரைகளுடன் விழா இனிதே நிறைவேறியது.

 

 

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் மேம்பாடு நோக்கி நடத்தப்படும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்குமாறு பழைய மாணவர் சங்கம் விடுக்கும் அன்பான வேண்டுகோள்.

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் (காரைநகர் இந்துக் கல்லூரி) கற்றல் கற்பித்தல் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிற்கான தேவைகள் மாற்றமடைந்து வரும் தற்போதய கல்வி முறைகளின் கீழ் அதிகரித்துக் காணப்படுகின்றன. எனவே இச்செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுப்பதற்கான வசதி வாய்ப்புக்கள் கிடைக்க ஏற்பாடு செய்வதன் மூலம் காரைநகரின் முதன்மைப் பாடசாலையும் தீவக வலயத்தில் முதல்நிலைப் பாடசாலையுமாக விளங்கும் இப்பாடசாலையினை நகர்ப்புற பாடசாலைகளிற்கு இணையானதாக மாற்றியமைக்க முடியும். அப்படிச்செய்வதன் மூலம் வசதியுள்ளவர்கள் நகர்ப்புறப்பாடசாலைகளை நாடுவதை தவிர்த்து பொருளாதார வசதியற்றவர்கள் தரமான கல்விச்சேவையினை பெறக்கூடிய நிலையினை ஏற்படுத்த முடியும். இக்கல்லூரியில் பல தேவைகள் பாடசாலைச் சமூகத்தினால் இனம்காணப்பட்டு நிறைவுசெய்யபடவேண்டியிருப்பதாக தெரிவித்து உதவிகளிற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில அண்மையில் தொடங்கப்பட்ட பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை பாடசாலையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளிற்கு உதவுவதில் கனடா வாழ் பழைய மாணவர்களினதும் நலன் விரும்பிகளினதும்; பேராதரவுடன் செயலாற்றி வருவதையும் கடந்த இரு வருடங்களில் பாடசாலையின் மேம்பாட்டிற்கு காத்திரமான பங்களிப்பினை வழங்கி வந்ததையும் யாவரும் அறிந்திருப்பீர்கள். மேலும் பல முக்கியமான திட்டங்களிற்கு உதவுவதற்கு அடிப்படையாக சங்கத்தின் நிதி வளத்தினை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தனை அனைவரும் உணர்ந்திருப்பீர்கள் என நம்புகின்றோம். 

சங்கத்தின் நிதி வளத்தினை பெருக்கி பாடசாலையின் துரித வளர்ச்சிக்கு உதவவேண்டும் என்கின்ற நோக்கோடு கர்நாடக இசை உலகில் பிரபல முன்னணிக் கலைஞராக விளங்குகின்ற கலைமாமணி திருமதி பூஷணி கல்யாணராமனின் இன்னிசைக் கச்சேரியினை எதிர்வரும் ஆகஸ்டு மாதம் 23ஆம்திகதி மாலை 6.00 மணிக்கு 1380 Birchmount Rd (Birchmount&Laurence) என்கின்ற புதிய அமைவிடத்திலுள்ள கனடா கந்தசுவாமி கோயில் கலை அரங்கில் நடாத்துவதற்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்விற்கு பழைய மாணவர்கள் காரைநகர் மக்கள் நலன் விரும்பிகள் இசை ரசிகர்கள் என அனைவரும் திரண்டு வந்து குறிப்பிட்ட அன்பளிப்பு தொகையினை வழங்கி ஆதரவளிப்பதன் ஊடாக எம்மால் பாடசாலை அபிவிருத்திக்கு உதவும் பணிகளிற்கு வலுச்சேர்ப்பதுடன் அரிய இனிய கச்சேரியினையும்  கண்டு களிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்.


நிர்வாகம், பழைய மாணவர் சங்கம் – கனடா. 23-07-2014

flyer3_copy_(6)

கனடா-காரை கலாச்சார மன்றம் நடாத்திய ‘காரை ஒன்றுகூடல் – 2014’ நிகழ்வுகளின் விபரம்! அனுசரணையாளர்கள், பரிசுபெற்றோர், நிதி நிலமை!

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த நிகழ்வுகளில் கனடா காரை மக்களின் பெரும் ஆதரவுடன் இடம்பெற்று வரும் காரை ஒன்றுகூடல் நிகழ்வு இவ்வருடம் 06.07.2014 அன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வுகளிற்கு அனுசரணை வழங்கியவர்கள், பங்கு பற்றியவர்கள், இந்நிகழ்வினை நடாத்துவதற்கு பல வழிகளிலும் உதவி வழங்கியவர்கள் அனைவருக்கும் கனடா காரை கலாச்சார மன்றம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.
'காரை ஒன்றுகூடல் – 2014' நிகழ்;வு காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அபிவிருத்திக்கு உதவும் நோக்குடன் இவ்வருடம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அனுசரணையாளர்கள் வழங்கிய நிதி உதவிகள் மூலமும் கலந்து கொண்ட காரை மக்கள் வழங்கிய நிதி உதவிகள் மூலமும் இவ்வருட ஒன்றுகூடல் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளதுடன் காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அபிவிருத்திக்கென 2,300 டொலர்கள் வரையில் அனுப்புவதற்கும் கிடைக்கப்பெற்றுள்ளது. ஊர் நினைவுகளோடு கலந்து சிறப்பித்த கனடா வாழ் காரை மக்கள் அனைவருக்கும் நன்றி!
கனடா காரை கலாச்சார மன்றத்தினால் முன்னெடுக்கப்டுகின்ற ஆரம்ப பாடசாலைகளின் அபிவிருத்திக்கு உதவுவதற்கு மேற்கொண்டு நீங்கள் நிதி உதவி வழங்கமாறு கேட்டுக் கொள்கின்றோம். மேற்கொண்டு நீங்கள் வழங்கும் நிதி முழுமையாக இந்நிதியுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டு ஆரம்ப பாடசாலைகளின் வளர்ச்சிக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது.

கனடா காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஒன்று கூடல் 2014 வரவு செலவு அறிக்கை,

அனுசரணை வழங்கியவர்களின் பெயர் விபரங்கள்:

இங்கே அழுத்துக

 

கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்திய 'காரை ஒன்றுகூடல் – 2014' விளையாட்டு போட்டிகளில் பரிசு பெற்ற போட்டியாளர்கள் விபரம்:

50 மீற்றர் ஓட்டம் – 5 வயது ஆண்கள்
1வது இடம்: கஜானன் வரதராஜா
2வது இடம்: அஜீஷ் ஜெகன்
3வது இடம்: அனக்ஷன் நந்தகுமார்

50 மீற்றர் ஓட்டம் – 5 வயது பெண்கள்
1வது இடம்: விதுஸா ஜெயரத்தினம்
2வது இடம்: பைரவி சிவராசா
3வது இடம்: தயானி நடனசபேசன்

பழம் பொறுக்குதல் – 5 வயது ஆண்கள்
1வது இடம்: அனெக்ஷன் நந்தகுமார்
2வது இடம்: அஜீஷ் ஜெகன்
3வது இடம்: கஜானன் வரதராசன்

பழம் பொறுக்குதல் – 5 வயது பெண்கள்
1வது இடம்: விதுஜா ஜெயரட்ணம்
2வது இடம்: பைரவி சிவராசா
3வது இடம்: தயானி நடனசபேசன்

100 மீற்றர் ஓட்டம் – 7 வயது ஆண்கள்
1வது இடம்: அருஷன் சுதாகரன்
2வது இடம்: அர்வின் சண்முகராசா
3வது இடம்: ஜெயந்தன் கேதீஸ்வரன்

100 மீற்றர் ஓட்டம் – 7 வயது பெண்கள்
1வது இடம்: திவ்யா ஜெயபாலன்
2வது இடம்: ஆதினி விநாயகமூர்த்தி
3வது இடம்: ஆரணி துஷ்யந்தன்

சாப்பிட்டுவிட்டு ஓடுதல் – 7 வயது ஆண்கள்
1வது இடம்: அஜந்தன் கேதீஸ்வரன்
2வது இடம்: சுபேதன் ரவிச்சந்திரன்
3வது இடம்: ஜெயந்தன் கேதீஸ்வரன்

சாப்பிட்டுவிட்டு ஓடுதல் – 7 வயது பெண்கள்
1வது இடம்: நிந்துஷா மோகனேந்திரன்
2வது இடம்: நேத்திரா நாதன்
3வது இடம்: கஜானி பிரகலாதீஸ்வரன்


100 மீற்றர் ஓட்டம் – 9 வயது ஆண்கள்
1வது இடம்: சந்தோஷ் ஜெகன்
2வது இடம்: ஆனந் சற்குணராசா
3வது இடம்: அகிலன் சுரேந்திரன்

100 மீற்றர் ஓட்டம் – 9 வயது பெண்கள்
1வது இடம்: வாசுகி தயானந்தராசா
2வது இடம்: அபிஷா பிரபாகரன்
3வது இடம்: தீபிகா பிரமேந்திரதீசன்

பலூன் ஓட்டம் – 9 வயது ஆண்கள்
1வது இடம்: அகிலன் சுரேந்திரன்
2வது இடம்: சந்தோஷ் ஜெகன்
3வது இடம்: ஆனந் சற்குணராசா

பலூன் ஓட்டம் – 9 வயது பெண்கள்
1வது இடம்: தீபிகா பிரமேந்திரதீசன்
2வது இடம்: ஹரினி கதாதரன்
3வது இடம்: வாசுகி தயானந்தராசா

100 மீற்றர் ஓட்டம் – 11 வயது ஆண்கள்
1வது இடம்: தனுஷன் மகாராசா
2வது இடம்: சிவானன் சிவகுமாரன்
3வது இடம்: சுதா சிவா

100 மீற்றர் ஓட்டம் – 11 வயது பெண்கள்
1வது இடம்: கஜானா வரதராசா
2ம் இடம்: நிலக்ஷனா வரதராசன்
3ம் இடம்: சஜினி குணரத்தினம்

பலூன் ஓட்டம் – 11 வயது ஆண்கள்
1வது இடம்: ராகுலன் ஜீவான்தராசா
2வது இடம்: அனோஜன் சுதாகரன்
3வது இடம்: சுதா சிவா

பலூன் ஓட்டம் – 11 வயது பெண்கள்
1வது இடம்: கஜானா வரதராசன்
2வது இடம்: சஜேனி குணரத்தினம்
3வது இடம்: பிரியங்கா கேதீஸ்வரன்

தேசிக்காய் ஓட்டம் – 11 வயது பெண்கள்
1வது இடம்: கஜானா வரதராசா
2வது இடம்: சஜானி குணரத்தினம்
3வது இடம்: பிரியங்கா கேதீஸ்வரன்

100 மீற்றர் ஓட்டம் – 13 வயது ஆண்கள்
1வது இடம்: ஜதுஷன் கோடீஸ்வரன்
2வது இடம்: பிரவின் பிரமேந்திரதீசன்
3வது இடம்: நிலுக்ஷன் தயானந்தராசா

100 மீற்றர் ஓட்டம் – 13 வயது பெண்கள்
1வது இடம்: நிலானி பரமானந்தராசா
2வது இடம்: அபினயா பிரபாகரன்
3வது இடம்: அக்கிகா அரியரட்ணம்

200 மீற்றர் ஓட்டம் – 13 வயது ஆண்கள்
1வது இடம்: யாதவன் பஞ்சலிங்கம்
2வது இடம்: யதுஷன் கோடீஸ்வரன்
3வது இடம்: பிரவின் பிரமேந்திரதீசன்

200 மீற்றர் ஓட்டம் – 13 வயது பெண்கள்
1வது இடம்: நிலானி பரமானந்தராசா
2வது இடம்: அக்கிகா அரியரட்ணம்
3வது இடம்: அபினஜா பிரபாகரன்

தேசிக்காய் ஓட்டம் – 13 வயது பெண்கள்
1வது இடம்: நிலானி பரமானந்தராசா
2வது இடம்: அபினஜா பிரபாகரன்
3வது இடம்: ஜனனி ராஜகோபாலன்

100 மீற்றர் ஓட்டம் – 18 வயது ஆண்கள்
1வது இடம்: இந்துஷன் பஞ்சலிங்கம்
2வது இடம்: கஜன் யோகநாதன்
3வது இடம்: ஜனகன் ராஜகோபாலன்

100 மீற்றர் ஓட்டம் – 18 வயது பெண்கள்
1வது இடம்: மதுரா சோதிநாதன்
2வது இடம்: நிதுஜா பரமாந்தராசா
3வது இடம்: சிவராசா ரஞ்சன்

200 மீற்றர் ஓட்டம் – 18 வயது ஆண்கள்
1வது இடம்: இந்துஜன் பஞ்சலிங்கம்
2வது இடம்: ஜனகன் ராஜகோபாலன்

200 மீற்றர் ஓட்டம் – 18 வயது பெண்கள்
1வது இடம்: நிதுஜா பரமானந்தராசா
2வது இடம்: சிறிவர்ஜா ரஞ்சன்

200 மீற்றர் ஓட்டம் – 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள்
1வது இடம்: அனேஜன் திருக்குமார்
2வது இடம்: ரதீசன் துரைராசா
3வது இடம்: பாலகுமார் குமாரரத்தினம்

200 மீற்றர் ஓட்டம் – 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்
1வது இடம்: பவானி யோகதேவன்
2வது இடம்: பாலசுந்தரி ஜெயபாலன்
3வது இடம்: இந்திராதேவி பிரபாகரன்

சாக்கு ஓட்டம் – 18 வயது ஆண்கள்
1வது இடம்: இந்துஜன் பஞ்சலிங்கம்
2வது இடம்: ஜனகன் ராஜகோபாலன்

சாக்கு ஓட்டம் – 18 வயது பெண்கள்
1வது இடம்: சகானா குணரத்தினம்
2வது இடம்: நிதுஜா பரமானந்தராசா
3வது இடம்: மதுரா சோதிநாதன்

சாக்கு ஓட்டம் – 18 வயதுக்கு மேற்பட்டோர் ஆண்கள்
1வது இடம்: தவராசா சங்கரபிள்ளை
2வது இடம்: ரதீஸ்குமார் சிவலிங்கம்
3வது இடம்: பாலகுமார் குணரத்தினம்

சாக்கு ஓட்டம் – 18 வயதுக்கு மேற்பட்டோர் பெண்கள்
1வது இடம்: நந்தினி சுதாகரன்
2வது இடம்: நந்தினி சண்முகராசா
3வது இடம்: தவமலர் குமாரரத்தினம்


வினோத உடைப் போட்டி
1வது இடம்: பிரியங்கா கேதீஸ்வரன் – தொப்பி வியாபாரி
2வது இடம்: சஜினி குணரத்தினம் – பிச்சைக்காரி
3வது இடம்: திவ்யா ஜெயபாலன் – பார்வையற்றோர்
       மீரா செந்தில்நாதன் – பார்வையற்றோர்

வினோத உடைப் போட்டி
கௌரவ முதலிடம்: சண் – சங்கிலியன்
கௌரவ இரண்டாம் இடம்: தியாகராஜா – அரிச்சந்திரன்

 

கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்திய 'காரை ஒன்றுகூடல் – 2014' விளையாட்டு போட்டிகளில் பங்கு பற்றி பரிசில் பெற்றவர்களில் இதுவரை தங்களது பரிசு கேடயங்களை பெற்றுக் கொள்ளாதவர்கள் தயவு செய்து 416 821 8390 என்ற தொலைபேசி இலக்கத்தில் செயலாளரை அழைத்து பெற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

 

 

 

 

காரைநகர் வியாவில் ஜயனார் ஆலய வருடாந்த பெருந்திருவிழாவில் தேர்த் திருவிழா இன்று 25ந் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைநகர் ஈழத்துச் சிதம்பர தேவி பெருந்திருவிழாவில் 24/07/2014 வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற கைலாய வாகனக் காட்சிகள்.

காரைநகர் வியாவில் ஜயனார் ஆலய வருடாந்த பெருந்திருவிழாவின் மூன்றாம் நாள் திருவிழாவான 19/07/2014 சனிக்கிழமை இரவுத் திருவிழாக் காட்சிகள்.

காரைநகர் வியாவில் ஜயனார் ஆலய வருடாந்த பெருந்திருவிழாவின் மூன்றாம் நாள் திருவிழாவான 19/07/2014 சனிக்கிழமை இரவுத் திருவிழாக் காட்சிகள். நிகழ்வில் விசேட மேளக்கச்சேரி மற்றும் கருவி மாற்றாற்றலுடையோர் சமூக அபிவிருத்தி நிறுவன அங்கத்தவர்களின் பட்டிமன்றம் என்பன இடம்பெற்றது.

ஆலய வருடாந்த பெருந்திருவிழா கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்து பத்துத் தினங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்தப் பெருந்திருவிழாவில் தேர்த் திருவிழா 25ந் திகதி வெள்ளிக்கிழமையும் தீர்த்தத் திருவிழா மறுநாள் சனிக்கிழமையும் நடைபெற உள்ளது.

வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள தேர்த்திருவிழா அன்றைய தினம் காலை 8.30 மணி தொடக்கம் சிவன் ரி.வியில் நேரடி ஒளிபரப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆலய அறங்காவலர் மகாராணி க.சோமசேகரம் தெரிவித்துள்ளார்.

 

கரைச் சங்கமம் 2014

பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கத்தின் ''காரைச் சங்கமம் 2014'' விளையாட்டு ஒன்றுகூடல் 160 இக்கும் மேற்பட்ட விளையாட்டு பங்கேற்பாளர்களுடன், 400 இக்கும் மேற்பட்ட பிருத்தானியா வாழ் காரை மக்கள் சங்கமிப்பில் ………

காரை மக்களுடன் கடமையை கண்காணிக்க வந்த காவல் துறை களம் இறங்கியது ………..

இலங்கை, சுவிஸ்,பிரான்ஸ், ஜெர்மனிய நாட்டு விருந்தினர்களுடன் விழா நிறைவேறியது ……………

பரிசளிப்பில் ஏற்பட்ட பலத்த மழையிலும் மக்கள் பணிவுடன் பொறுத்திருந்தனர்……………

 

 

 

கால் நூற்றாண்டில் கால் பதிக்கும் கண்ணியத்துடன் களமிறங்கும் ”காரைச் சங்கமம் 2014”

பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம் பெருமையுடன் முன்னெடுக்கும் கோடைகால ஒன்றுகூடலான ''காரைச் சங்கமம் 2014'' இக்கு அனைவரையும் சங்கமிக்குமாறு அன்புடன் அழைக்கின்றது பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம்.

பிரதம விருந்தினர்கள் :- இலங்கையில் இருந்து வருகை தந்திருக்கும் பிரபல வர்த்தகரும், காரை அபிவிருத்திசபையின் கடந்த கால நிர்வாகசபையின் செயலாளருமான திரு.இரத்தினகோபால் ஜெயராஜா அவர்களும் பிரபல வர்த்தகரும் Jaffna Herritage உரிமையாளருமான திரு.S.T.பரமேஸ்வரன் அவர்களும் Queency Book Depot உரிமையாளர் திரு.சுந்தரலிங்கம் கணநாதன் அவர்களும் ,

கெளரவ விருந்தினர்களாக:- எமது மண்ணின் மகுடம் இளையதம்பி தயானந்தா அவர்களும் , சுவிஸ் காரை அபிவிருதிசபையின் தலைவர் திரு பூபாலபிள்ளை விவேகானந்தா அவர்களும் , மற்றும் பிரான்ஸ் காரை நலன் புரிச் சங்க செயலாளர் திரு.அருளானந்தம் செல்வச்சந்திரன்( நேரு மாஸ்டர்) அவர்களும் , கனடாவில் இருந்து வருகை தந்திருக்கும் கனேடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஸ்த்தாபகர் திரு. இளையபாரதி அவர்களும்

சிறப்பு விருந்த்தினர்களாக:- ஸ்ரீ யோகி ராம் சுந்தர் அவர்களும் , ஜெர்மனியில் இருந்து வருகை தந்திருக்கும் திரு. விஜயரத்தினம் சத்தியசாய்பாபா( சாயி) ஆகியோர் பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம்.

பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தினால் நடத்தப்படும் காரைச் சங்கமம்-2014 விளையாட்டுப் போட்டியும் கோடைகால ஒன்றுகூடலும்

Sangamam_2014_Flyer_opt[1]

பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தினால் நடத்தப்படும் காரைச் சங்கமம்-2014

பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தினால் நடத்தப்படும் காரைச் சங்கமம்-2014

விளையாட்டுப் போட்டியும் கோடைகால ஒன்றுகூடலும்

பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் திறந்த வெளி மைதானத்தில் மூன்றாவது ஆண்டாக திறந்தவெளி மைதானத்தில் நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டியுடன் கூடிய ஒன்றுகூடல் எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் திகதி (July 20, 2014) ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியளவில் Rosehill Recreation Ground, Rose Hill, Sutton, SM1 3HH (Postal Code for SATNAV SM1 3EU) எனும் இடத்தில் அமைந்துள்ள திறந்த வெளி மைதானத்தில் நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வருவதை பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தினர் பெருமையுடன் அறியத்தருகின்றனர்.

முழுமையான அறிவித்தலைக் கீழே காணலாம்.Members_Letter2014_-20th_July-page-001

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் காரைநகர் பிரதேச செயலகமும் களபூமி கலையகமும் இணைந்து நடாத்தும் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம்

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் காரைநகர் பிரதேச செயலகமும் களபூமி கலையகமும் இணைந்து நடாத்தும் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் களபூமி கலையகத்தில் காரைநகர் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலையக மாணவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆடிக்கொழுக்கட்டை ,கூழ் தயார்செய்து வழங்கப்பட்டது.

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் 06.07.2014 அன்று சிறப்பாக நடைபெற்றது.

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் 06.07.2014 அன்று சிறப்பாக நடைபெற்றது. கனடா வாழ் காரைநகர் மக்கள் மகிழ்ச்சியுடனும் ஊர் நினைவுடனும் கலந்து கொண்டு ஒன்றுகூடலினை சிறப்படைய வைத்துள்ளனர்.

இலண்டன், பிரான்ஸ், நியூசிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து விடுமுறையில் கனடா வந்திருந்த காரைநகர் மக்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர். அத்துடன் இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த தொழிலதிபர் திரு.E.S.P  நாகரத்தினம் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்.

நூற்றி இருபதுக்கும் மேற்பட்ட சிறார்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு மகிழ்ந்தனர். முதியோர்களிற்கான மெதுநடை, இளையோர்களிற்கான ஓட்டம் என்பன பார்வையாளர்களை கவர்ந்திருந்தது. தாச்சி போட்டிகளில் ஆண்கள், பெண்கள் இருசாரருக்கும் தனித்தனியே போட்டிகள் இடம்பெற்றிருந்தன. மிகவும் அமைதியாகவும், மகிழ்ச்சிகரமாகவும் நடைபெற்ற இந்த வருட ஒன்றுகூடல் கலந்து கொண்டவர்களை பெருமையடையச்செய்துள்ளதுடன்; வாயார வாழ்த்தியும் சென்றுள்ளனர்.

அனுசரணையாளர்களின் தாராள மனத்துடன் சிறப்பாக நடைபெற்ற காரை ஒன்றுகூடல் 2014 நிகழ்வுகளின் முதற்கட்ட புகைப்படங்கள் இங்கே எடுத்து வரப்பட்டுள்ளன.

மேலும் பரிசளிப்பு நிகழ்வு புகைப்படங்கள் மற்றும் அனுசரணையாளர்களின் விபரம் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் விபரம் என்பன பின்னர் எடுத்து வரப்படும்.

 

காரைநகர் சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா

காரை ஒன்றுகூடல் 2014

summer3_2014_2

மரண அறிவித்தல்,செல்வி மனோன்மணி கந்தையா – காரைநகர்

                                                                      மரண அறிவித்தல்

                         செல்வி மனோன்மணி கந்தையா – காரைநகர்

                                                                                           

Picture

காரைநகர் இடைப்பிட்டியை பிறப்பிடமாகவும் இல. 38, கரப்பன்காடு, வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட செல்வி மனோன்மணி கந்தையா 04.07.2014 வெள்ளிக்கிழமை இறையடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற சட்டத்தரணி கந்தையா விசாலாட்சிப்பிள்ளை தம்பதிகளின் புதல்வியாவார்.

கணேசலிங்கம், காலஞ் சென்ற நடராஜா, தங்கம்மா, சதாசிவம், லீலாவதி ஆகியோரின் சகோதரியும், சறோஜினிஅம்மா, மகேஸ்வரி, குலசேகரம், புஸ்பராணி, திருஞானசம்பந்தர் ஆகியோரின் மைத்துனியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இல.38 கரப்பன்காடு, வவுனியா இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (06.07.2014) காலை 9 மணிக்கு நடைபெற்று தகனக்கிரியைக்காக தட்சனாமருதங்குள இந்து மயானத்திற்க்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.


உற்றார், உறவினர்கள், அயலவர்கள், நண்பர்கள் அணைவரும் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளவும்.

இல:38, கரப்பன்காடு,                                                                           இடைப்பிட்டி,
வவுனியா.                                                                                                காரைநகர்.

தகவல்:-
எஸ்.கே.சதாசிவம்,
ஓய்வு நிலை அதிபர்.
தொ.பே:-0775411722
மின்னஞ்சல்:-satha.sham@yahoo.com

 

 

 

 

கனடா காரை கலாச்சார மன்றம் ஒன்றுகூடலில் பங்குபற்றும் சிரமதான தொண்டர்களிற்கான அறிவித்தல்!

கனடா காரை கலாச்சார மன்றத்தின் 06.07.2014 அன்று நடைபெறவுள்ள வருடாந்த ஒன்றுகூடலில் பணியாற்ற விரும்பும் தொண்டர்கள் தங்கள் பெயர்களை 04.07.2014 வெள்ளிக்கிழமைக்கு முன்னர் மன்றத்தின் இணையத்தளத்தின் ஊடாகவோ அன்றி 416 642 4912 என்ற தொலைபேசி ஊடாகவோ பதிவு செய்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

04.07.2014 க்கு முன்னர் பதிவு செய்யும் தொண்டர்களிற்கு மட்டுமே தொண்டர் பணிக்குரிய சான்றிதள் வழங்கப்படும்.

கனடா-காரை கலாச்சார மன்றம்

காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலில் 03/07/2014 வியாழக்கிழமை நடைபெற்ற தேர்த் திருவிழா

காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலில் 02/07/2014 நடைபெற்ற சப்பறத் திருவிழா

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் நிறுவுநர் தினமும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் அழைப்பிதழ்

Invit 1Invit 2

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் பூங்காவனத் திருவிழா.

காரைநகர் சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் கோவில் எட்டாம் திருவிழா-பகல் 02.07.2014

காரைநகர் சுப்பிரமணியம் வீதியில் அமைந்துள்ள காரை கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா 29/06/2014 ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.

காரை கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலையின் தலைவர் பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியபாலன் அவர்களும் சிறப்பு விருந்தினராக ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியக் கலாநிதி திருமதி ப. ஆனந்தராஜ் அவர்களும் கௌரவ விருந்தினராக யாழ் இந்துக்கல்லூரி முன்னாள் அதிபரும் உரும்பிராய்,திருநெவ்வேலி கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலைகளின் தலைவருமான அ.பஞ்சலிங்கம் அவர்களும் கலந்து கொண்டதுடன்

காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் வே.ஆணைமுகன்,எதிர்க் கட்சித் தலைவர் வீ.கண்னன்,பிரதேச சபை உறுப்பினர் க.பாலச்சந்திரன்,பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கத் தலைவர் ப.தவராசா, காரைநகர் அபிவிருத்திச் சபையின் உப தலைவரும் யாழ்ற்ரன் கல்லூரி அதிபருமான வே.முருகமூர்த்தி, காரைநகர் அபிவிருத்திச் சபையின் செயலாளரும் கிராமசேவையாளருமான இ.திருப்புகழூர்சிங்கம்,காரை கிட்ஸ் பார்க் பாடசாலைக்கான காணியினை நன்கொடையாக வழங்கியவர்களில் ஒருவரான இராமநாதர் சிவசுப்பிரமணியம்,வியாவில் ஜயனார் ஆலய அறங்காவலரும் முன்னாள் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவருமான மகாராணி க. சோமசேகரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவத்தில் 26/06/2014 வியாழக்கிழமை நடைபெற்ற தீர்த்தத்திருவிழாவின் கொடியிறக்கக் காட்சிகள்.