Tag: வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலை(சடையாளி)

வலந்தலை வடக்கு அ.மி.த.க.வித்தியாலய 2016 ம் ஆண்டு செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு 23ந் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது

 வலந்தலை வடக்கு அ.மி.த.க.வித்தியாலய 2016 ம் ஆண்டு செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு 23ந் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இவ் விழாவானது மிகவும் சிறப்பான முறையில் அதிபர் செல்வி விமலாதேவி விசுவநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக காரைநகர் கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு.ஆ. குமரேசமூர்த்தி அவர்களும், சிறப்பு விருந்தினராக ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு.கு. செல்வகுமார் அவர்களும், கௌரவ விருந்தினராக காரைநகர் அபிவிருத்திச்சபை பொருளாளா் திரு.க. பாலச்சந்திரன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

 

இன்று 05.12.2015 யா /வலந்தலை ,வடக்கு அ. மி . த.க .வித்தியாலய பரிசளிப்பு விழாவானது மிகவும் சிறப்பான முறையில் அதிபர் செல்வி விமலாதேவி விசுவநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

PHOTO

    இன்று 05.12.2015  யா /வலந்தலை ,வடக்கு அ. மி . த.க .வித்தியாலய பரிசளிப்பு விழாவானது மிகவும் சிறப்பான முறையில் அதிபர் செல்வி விமலாதேவி விசுவநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு முதன்மை விருந்தினராக திரு த. இராசலிங்கம் [ஓய்வுநிலை ஆரம்பக்கல்வி பிரதிகல்வி பணிப்பாளர் மாகாணத்தினைக்களம் -வடமாகாணம் ] சிறப்பு விருந்தினராக திரு வி .தனிநாயகம் [ஆரம்பக்கல்வி-
பிரதிகல்விபபணிப்பாளர் ] கௌரவ விருந்தினராக திரு ,இ .இராசதுரை [காரை வடகிழக்கு கிராமசேவையாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

நன்றி 

வலந்தலை இளையோர் அமைப்பு 

வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலை(சடையாளி)

அண்மையில் கனடா காரை கலாசார மன்றத்தின் தலைவர் திரு.தம்பிஐயா பரமானந்தராஜா மற்றும் செயலாளர் திரு.தீசன் திரவியநாதன் மற்றும் நிர்வாக சபை அங்கத்தவர்கள் சிலர் நத்தார் விடுமுறையினை முன்னிட்டு சொந்த ஊராம் காரை மண்ணின் மீது பற்றுவைத்து ஈழத்து சிதம்பரம் திருவெம்பாவை முன்னிட்டு மண்ணையும் மக்களையும் தரிசிக்க சென்று வந்தனர். காரைநகர் பாடசாலைகள் அனைத்தினையும் அவசரம் இன்றி நிதானமாக சென்று உண்மை நிலமைகளை அறிந்து வந்துள்ளதுடன், காரைநகர் ஆரம்ப பாடசாலைகள் அனைத்திற்கும் கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக நிரந்தர வைப்பில் இட்டு வழங்கப்படவுள்ள நிதியத்தின் மூலம் இப்பாடசாலைகளில் செயற்படுத்தப்படவுள்ள திட்டங்களையும் ஒழுங்கு செய்து வந்துள்ளனர்.

அந்த வகையில் இதோ வலந்தலை வடக்கு அ.மி.த.க.பாடாலை சடைளாளி பாடசாலைக்கு விஜயம் செய்து திரட்டிய தகவல்கள் வருமாறு:

வலந்தலை வடக்கு அ.மி.த.க. பாடசாலை சடையாளி மல்லிகை வீதியில் அமைந்துள்ளது. இப்பாடசாலை வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் சீவல் தொழிலாளர் மற்றும் கடல்தொழில் குடும்பங்கள் நிறைந்து வாழும் பகுதியில் அமைந்துள்ளது. இப்பாடசாலைக்கு வருகை தரும் சிறுவர்களில் பெரும்பாண்மையானவர்கள் மல்லிகை, சடையாளி, பெரியமணல், மாப்பாணவூரி, நடுத்தெரு, சிவன்கோயிலடி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள்.

இப்பாடசாலையின் அதிபராக செல்வி விமலாதேவி விஸ்வநாதன் அவர்கள் கடமையாற்றி வருகின்றார்கள். கனடா காரை கலாசார மன்றத்தின் தலைவர், செயலாளர் ஆகியோரை பழைய மாணவர் சங்க கூட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்து அதன்போது அழைத்து பாடசாலையின் நிலமையினை தெரியப்படுத்தியிருந்தார்.

கனடா காரை கலாசார மன்றம் 2014ம் ஆண்டு கணணி கல்வி, ஆங்கில கல்வி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களிற்கான விசேட வகுப்புகளிற்காக ஒரு இலட்சம் ரூபாய்களை வழங்கியுள்ளதுடன், இப்பாடசாலையின் வேண்டுகோளிற்கமையவும் மலசல கூட சுத்திகரிப்பு, மதிய உணவு சமையளலாளர் கொடுப்பனவு, மேலதிக மின்;கட்டணம் ஆகிய அடிப்படை, அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு 10 இலட்சம் ரூபா நிரந்தர நிதியத்திட்டத்தினை செயற்படுத்த தீர்மானிக்கப்பட்ட காரணங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்பாடசாலையில் கணணி கல்வி வசதி கல்வி திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள போதிலும் மேலதிக மின்கட்டணம் மாதந்தோறும் துண்டுவிழும் தொகையாகவே இருந்து வருகின்றது. அத்துடன் அண்மையில் இலண்டன் காரை நலன்புரிச் சங்கத்தினரால் கணணி அறைக்குரிய நிலம் செப்பனிட்டு வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இப்பாடசாலையின் தற்போதைய நிறைவேற்றப்பட வேண்டிய தேவைகளாக பாடசாலையின் கிழக்கு பகுதி எல்லை காணி எல்லை பராமரிப்பற்ற வகையில் செப்பனிடப்படாது உள்ளதுடன், கிழக்கு பகுதி காணியினை பெற்றுக் கொண்டு பாடசாலைக்கான சிறிய விளையாட்டு மைதானத்தை அமைத்துக்கொள்ள வேண்டிய தேவை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் கனடா காரை கலாசார மன்றத்தின் நிதி உதவியுடன் 2014ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட மேலதிக கணணி கல்வி, ஆங்கில கல்வி மற்றும் மெல்ல கற்போருக்கான மேலதிக வகுப்புக்கள் 2014 டிசம்பர் மாதத்துடன் முடிவடைய இருப்பதால் மேற்கொண்டு 2015ம் ஆண்ட இவ்வகுப்புக்களை முன்னெடுத்து செல்ல நிதியுதவியினை எதிர்பார்த்து இருப்பதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டது.

கல்வித் திணைக்களத்தின் உதவியோடு கட்ப்பட்ட சமையலறை புதுப்பொலிவுடன் விளங்கி வந்தாலும் தினமும் 100க்கும் மேற்பட்ட மாணவர்களிற்கு தினமும் மதிய உணவு சமைத்து வழங்குவதற்குரிய கட்டணம் திணைக்களத்தினால் வழங்கப்படுவதில்லை. அவ்வப்போது சிரமதான முறையில் ஒரு சில பெற்றோர்கள் முன்வந்தாலும் இச்செயற்பாட்டினை முறையாக வழமையாக செயற்படுத்துவதில் இப்பாடசாலை பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றது. கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக வழங்கப்படும் நிதியத்தில் இருந்து கிடைக்கப்பெறும் மாதந்த வட்டி பணத்தின் ஊடாக மதிய போசன சமையலாளர் ஒருவர் நிரந்தரமாக குறைந்த நிவேதனத்துடன் அமர்த்துவதற்கு ஏதுவாக அமையும் என்பதுடன், ஆரம்ப பாடசாலைகளிற்கு ஏற்றவகையில் ஆறு கணணிகளுடன் திணைக்களத்தினால் அமைத்து வழங்கப்பட்ட கணணி அறை மேலதிக மின்சார கட்டணங்களின் இடர்பாடு இன்றி பாடசாலை நேரத்தில் முழு நேரமும் பாவனைக்கு உட்படுத்தக்கூடியவாறு திறந்திருக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி இப்பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியர்களில் பெரும்பாலனோர் வெளியிடங்களில் இருந்து வருபவர்களாகவும், கல்வி கற்கும் மாணவர்கள் சிறுவர்களாக இருப்பதாலும் கழிப்பிட துப்பரவு பணியானது அதிபர் அவர்களுக்கு மிகவும் சவாலான ஒரு விடயமாகவே இருந்து வந்துள்ளது. கனடா காரை கலாசார மன்றத்தின் நிரந்தர நிதியத்தின் மூலம் நிரந்தரமான ஒரு துப்பரவாளரை நியமித்துக் கொள்ளவும் அதன் மூலம் அதிபர் ஆசிரியர்கள் தமது பொன்னான நேரத்தை கற்பித்தலில் ஈடுபடுத்திக் கொள்ளவும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. 

கனடா-காரை கலாசார மன்றத்தின் இந்த நிரந்தர நிதியத்தின் மூலம் ஆரம்ப பாடசாலை அதிபர்களின் செயற்பாடுகள் பல இலகுவாக்கப்படுவதுடன் மாதாந்தம் ஏற்படும் எதிர்பாராத செலவுகளை எண்ணி கற்பித்தல் செயற்பாடுகள் பாதிப்படையும் செயலை குறைத்துள்ளதால் காரைநகர் ஆரம்ப பாடசாலை அதிபர்கள் மிகுந்த மகிழ்சியடைந்துள்ளதுடன் கனடா காரை கலாசார மன்றத்தின் இச்செயலை வியந்து பாராட்டியும் வருகின்றனர்.

கனடா காரை கலாசார மன்றத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் நேரடியாக பாடசாலை அதிபர்களிடம் நிர்வாக சபையின் தீர்மானத்தை தெரிவித்ததுடன் நேரடியாக ஒவ்வொரு பாடசாலைகளிற்கும் சென்று பாடசாலைகளின் நிலமைகளை அவதானித்த செயற்பாட்டினை மெய்ச்சியதுடன் வெளிநாடுகளில் வாழும் காரை மக்கள் தாம் கற்ற பாடசாலைகளின் நிலமைகளை அவதானித்து வருவதையிட்டு பெருமிதம் அடைந்தனர்.

கனடா-காரை கலாசார மன்றத்தின் இந்நிதியத்தின் ஊடாக வழங்கப்படும் நிரந்தர வைப்பு நிதி கல்வித்திணைக்கள அதிகாரி தலைமையில் நடைபெற்ற அதிபர்கள் கூட்டத்தில் தெரிவித்தது போன்று 2015 மார்ச் மாத இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாத முற்பகுதியிலோ வழங்கப்படவுள்ளதுடன், இந்நிதியத்தினை இட்டு வழங்குவதற்கான ஆரம்ப முயற்சிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக பாடசாலைகளின் நிதியத்திற்கென கடந்த வருடம் முதல் காரை வசந்தம் மற்றும் பாடசாலை திட்டத்திற்கென திரட்டப்பட்ட நிதி 85,000 டொலர்களாகும். இந்நிதியின் 75 வீதமான நிதி வாக்குறுதி அளிக்கப்பட்டதன் பிரகாரம் கனடா வாழ் காரைநகர் மக்களினால் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இன்னமும் 25 வீதமான நிதி இன்னமும் வாக்குறுதி அளிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்படவுள்ளது. அத்துடன் கனடா காரை கலாசார மன்றத்தின் நிரந்தர வைப்பில் கனடாவிலும், இலங்கையிலும் இருந்த நிதி 35 இலட்சம் ரூபாய்கள் வரையான நிதியினை இந்நிதியத்திற்கு பெற்றுக்கொள்ள முறையாக பொதுக்கூட்டத்தின் மூலம் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கனடா காரை கலாசார மன்றத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் மிகவிரைவில் நடைபெறவுள்ள நிலையில் காரைநகர் ஆரம்ப பாடசாலைகளிற்கான நிரந்தர வைப்பு நிதியம் அதற்கு முன்னர் வைப்பில் இடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவதில் தற்போதைய நிர்வாக சபை உறுப்பினர்கள் பலத்த சவால்களிற்கு மத்தியிலும் ஊரிற்கான கல்விப்பணியில் ஈடுபட்டுள்ளது கனடா காரை கலாசார மன்றத்தின் வளர்ச்சிக்காக நேர்மையுடனும், சேவை நோக்குடனும் பாடுபட்ட, பாடுபடும் அங்கத்தவர்கள் கண்கூடாக கண்டு வருகின்றார்கள்.

காரைநகர் பாடசாலைகளிற்கு விஜயம் செய்து தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் நேரடியாக கண்டு கொண்ட அனைத்து பாடசாலைகளின் விபரங்களும் கனடா வாழ் காரை மக்களிற்கு வெகுவிரைவில் தெரியப்படுத்தப்படும். நன்றி! 

கனடா-காரை கலாசார மன்றம்

நிர்வாகம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 19 20 21 22 23 24 25 26