கனடா காரை கலாசார மன்றம் விடுக்கும் அறிவித்தல்!

CKCA LOGO (Copy)

கனடா-காரை கலாசார மன்றம் முன்னெடுத்துள்ள காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டத்திற்கு காரைநகர் பாடசாலைகளின் வளர்ச்சியையினையும் கருத்தில் கொண்டு முன்வந்து வங்கிய நிதியுதவி மூலம் 12 ஆரம்ப பாடசாலைகளிற்கு தலா 10 இலட்சம் வரை நிரந்தர வைப்பில் இட்டு வழங்கப்படவுள்ளது.

இதுவரை இத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்க முன்வந்து தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டவர்கள் தயவு செய்து உடனடியாக கனடா காரை கலாசார மன்றத்தின் வங்கி கணக்கில் தங்களது நன்கொடையினை செலுத்தி உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம். கனடா காரை கலாசார மன்றத்தின் வங்கி கணக்கு வருமாறு:

Bank: TD Canada Trust

Account Number: 711

Transit Number: 1029

வங்கிக் கணக்கில் வைப்பில் இட்ட பின்னர் தயவு செய்து மன்றத்தின் தொலைபேசி இலக்கமான 416 642 4912 என்ற இலக்கத்தில் அழைத்து அறியத்தரவும்.

கனடா-காரை கலாசார மன்றத்தின் நிர்வாகம் மேற்படி பாடசாலைகளிற்கான இத்திட்டத்தை எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னதாக திட்டமிட்ட வகையில் வைப்பில் இட்டு வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் நிரந்தர வைப்பில் இட்டு வழங்குவது தொடர்பாகவும். வைப்பில் இடப்படும் நிரந்தர நிதியத்தின் மூலமும் பாடசாலைகள் முன்னெடுக்கவுள்ள கற்றல். கற்பித்தல் செயற்பாடுகள் பற்றிய முழுமையான விபரம் இவ்விணையத்தளத்தில் தரப்பட்டுள்ளது.

31.12.2014 அன்று காரைநகர் கோட்ட கல்வி அதிகாரியின் பணிமனையில் நடைபெற்ற பாடசாலை அதிபர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு கனடா காரை கலாச்சார மன்றத்தினரால் அதற்குரிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கனடா காரை கலாசார மன்றத்தின் தற்போதைய நிர்வாக சபையினரால் நடாத்தப்பட்ட காரை வசந்தம் – 2014 மூலமும். மற்றும் பாடசாலைகளிற்கான நிதியத்திற்கான நிதி சேகரிப்பின் மூலமும் 85.000 டொலர்கள்; வரை பெற்றுக்கொள்ள கனடா வாழ் காரை மக்கள் தங்கள் பெயரினை பதிந்துள்ளனர். அத்துடன் கனடா காரை கலாசார மன்றத்தின் நிரந்தர வைப்பு நிதியங்களில் இருந்து மேற்கொண்டு 35.000 டொலர்கள் வரை பெற்றுக்கொள்வதற்கான அனுமதியினை பொதுச்சபையின் மூலம் பெற்றுக்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கனடா-காரை கலாசார மன்றத்தின் காரைநகர் ஆரம்ப பாடசாலைகளிற்கான இந்நிரந்தர திட்டத்தின் மூலம் கனடா காரை கலாசார மன்றமும். கனடா வாழ் காரை மக்களும் பெருமை கொள்ளத்தக்கதுடன் இப்பாடசாலை திட்டத்தில் பங்கெடுக்கும் அனைத்து பங்காளிகளும் ஊரின் பெயரால். மண்ணின் பெயரால். மன்றத்தின் பெயரால் கௌரவத்தினையும் பெற்றுக் கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை.

கனடா-காரை கலாசார மன்றம் ஆரம்பிக்கப்பட்டு 25 வது ஆண்டு முடிவில் மன்றத்தின் பெயரால் நிறைவேற்றப்படவுள்ள இக்குறிப்பிடத்தக்க இச்செயலானது மன்றத்தின் வளர்ச்சிப் படியில் ஓர் மைல் கல்லாக அமையும் என்பது அனைவரும் அறிந்து கொள்ளத்தக்கது.

நிர்வாகம்

கனடா-காரை கலாசார மன்றம்