Category: யா/ கலாநிதி ஆ.தியாகராஜா ம.ம.வி

கனடா-காரை கலாச்சார மன்றம் காரைநகர் இந்துக் கல்லூரிக்கு பல்லூடக கற்கை நெறி பாடத்திட்டத்திற்கான நிதி முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது

Untitledகனடா காரை கலாச்சார மன்றம் கடந்த ஏப்ரல் மாதம் காரைநகர் பாடசாலைகளிற்கு உடனடி கற்றல் தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாக நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்திற்கு பல்லூடக கற்கை நெறி பாடத்திட்டத்திற்காக 13, 60000( பதின்மூன்று இலட்சத்து ஆறுபதினாயிரம்) ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருந்தது இதுவரை தாமதிக்கப்பட்டிருந்த அந்நிதியில் இருந்து முதற்கட்டமாக 6 இலட்சம் ரூபாய்கள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை 15.08.2014 அன்று கல்லூரி அதிபரும் பழைய மாணவர் சங்க தலைவருமான திருமதி வாசுகி தவபாலன் அவர்களிடம் காரைநகர் அபிவிருத்தி சபையினர் கையளித்தனர்.

நிதியினை பெற்றுக்கொண்ட கல்லூரி அதிபர் கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு நன்றி தெரிவித்து எழுதிய கடிதம் கீழே தரப்பட்டுள்ளது.

 

 

Multi_media_Room_Renovation0001

 

 

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் மேம்பாடு நோக்கி நடத்தப்படும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்குமாறு பழைய மாணவர் சங்கம் விடுக்கும் அன்பான வேண்டுகோள்.

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் (காரைநகர் இந்துக் கல்லூரி) கற்றல் கற்பித்தல் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிற்கான தேவைகள் மாற்றமடைந்து வரும் தற்போதய கல்வி முறைகளின் கீழ் அதிகரித்துக் காணப்படுகின்றன. எனவே இச்செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுப்பதற்கான வசதி வாய்ப்புக்கள் கிடைக்க ஏற்பாடு செய்வதன் மூலம் காரைநகரின் முதன்மைப் பாடசாலையும் தீவக வலயத்தில் முதல்நிலைப் பாடசாலையுமாக விளங்கும் இப்பாடசாலையினை நகர்ப்புற பாடசாலைகளிற்கு இணையானதாக மாற்றியமைக்க முடியும். அப்படிச்செய்வதன் மூலம் வசதியுள்ளவர்கள் நகர்ப்புறப்பாடசாலைகளை நாடுவதை தவிர்த்து பொருளாதார வசதியற்றவர்கள் தரமான கல்விச்சேவையினை பெறக்கூடிய நிலையினை ஏற்படுத்த முடியும். இக்கல்லூரியில் பல தேவைகள் பாடசாலைச் சமூகத்தினால் இனம்காணப்பட்டு நிறைவுசெய்யபடவேண்டியிருப்பதாக தெரிவித்து உதவிகளிற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில அண்மையில் தொடங்கப்பட்ட பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை பாடசாலையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளிற்கு உதவுவதில் கனடா வாழ் பழைய மாணவர்களினதும் நலன் விரும்பிகளினதும்; பேராதரவுடன் செயலாற்றி வருவதையும் கடந்த இரு வருடங்களில் பாடசாலையின் மேம்பாட்டிற்கு காத்திரமான பங்களிப்பினை வழங்கி வந்ததையும் யாவரும் அறிந்திருப்பீர்கள். மேலும் பல முக்கியமான திட்டங்களிற்கு உதவுவதற்கு அடிப்படையாக சங்கத்தின் நிதி வளத்தினை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தனை அனைவரும் உணர்ந்திருப்பீர்கள் என நம்புகின்றோம். 

சங்கத்தின் நிதி வளத்தினை பெருக்கி பாடசாலையின் துரித வளர்ச்சிக்கு உதவவேண்டும் என்கின்ற நோக்கோடு கர்நாடக இசை உலகில் பிரபல முன்னணிக் கலைஞராக விளங்குகின்ற கலைமாமணி திருமதி பூஷணி கல்யாணராமனின் இன்னிசைக் கச்சேரியினை எதிர்வரும் ஆகஸ்டு மாதம் 23ஆம்திகதி மாலை 6.00 மணிக்கு 1380 Birchmount Rd (Birchmount&Laurence) என்கின்ற புதிய அமைவிடத்திலுள்ள கனடா கந்தசுவாமி கோயில் கலை அரங்கில் நடாத்துவதற்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்விற்கு பழைய மாணவர்கள் காரைநகர் மக்கள் நலன் விரும்பிகள் இசை ரசிகர்கள் என அனைவரும் திரண்டு வந்து குறிப்பிட்ட அன்பளிப்பு தொகையினை வழங்கி ஆதரவளிப்பதன் ஊடாக எம்மால் பாடசாலை அபிவிருத்திக்கு உதவும் பணிகளிற்கு வலுச்சேர்ப்பதுடன் அரிய இனிய கச்சேரியினையும்  கண்டு களிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்.


நிர்வாகம், பழைய மாணவர் சங்கம் – கனடா. 23-07-2014

flyer3_copy_(6)

யா/ கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலய 2013ஆம் ஆண்டிற்கான அதிபரின் பரிசில் தின அறிக்கை

 

காரைநகர் கலாநிதி ஆ. தியாகராசா ம.ம.வித்தியாலய வருடாந்தப் பரிசுத்தின விழாவும் நிறுவுனர் தினமும் 04/07/2014 வெள்ளிக்கிழமை மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

வித்தியாலய அதிபர் திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் காலை 9.30 மணிக்கு மடத்துக்கரை முத்துமாரி அம்மன் ஆலய முன்றலிலிருந்து விருந்தினர்கள் மாணவர்களின் கலைநிகழ்வுகள்,பாண்ட் வாத்திய இசை என்பவற்றுடன் அழைத்துவரப்பட்டு நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் நிகழ்வுகள் மிகவும் சிறப்பான முறையில் நகரப் பாடசாலைகளுக்கு இணையாக இடம்பெற்றது.

 

யா/ கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலய 2013ஆம் ஆண்டிற்கான அதிபரின் பரிசில் தின அறிக்கை

இங்கே அழுத்துக

காரைநகர் கலாநிதி ஆ. தியாகராசா ம.ம.வித்தியாலய வருடாந்தப் பரிசுத்தின விழாவும் நிறுவுனர் தினமும் 04/07/2014 வெள்ளிக்கிழமை மிகவும் கோலாகலமாக நடைபெற்றது

காரைநகர் கலாநிதி ஆ. தியாகராசா ம.ம.வித்தியாலய வருடாந்தப் பரிசுத்தின விழாவும் நிறுவுனர் தினமும் 04/07/2014 வெள்ளிக்கிழமை மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

வித்தியாலய அதிபர் திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் காலை 9.30 மணிக்கு மடத்துக்கரை முத்துமாரி அம்மன் ஆலய முன்றலிலிருந்து விருந்தினர்கள் மாணவர்களின் கலைநிகழ்வுகள்,பாண்ட் வாத்திய இசை என்பவற்றுடன் அழைத்துவரப்பட்டு நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் நிகழ்வுகள் மிகவும் சிறப்பான முறையில் நகரப் பாடசாலைகளுக்கு இணையாக இடம்பெற்றது.

பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடமாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் அவர்களும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் தி.ஜோன்குயின்ரஸ் அவர்களும் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்ட வவுனியா வலய ஓய்வுநிலைக் கல்விப்பணிப்பாளர் மேகநாதன் அவர்களுடன் முன்னாள் கல்விப்பணிப்பாளர் இராதாகிருஸ்ணன்,காரைநகர் கோட்டக்கல்வி அதிகாரி பு.ஸ்ரீவிக்னேஸ்வரன் ஆகியோரும் மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கினர்.

தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

மருத்துவக் கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம் ஒன்றரை மில்லியன் ரூபா நிரந்தர வைப்பிலிட்டு தொடக்கி வைக்கப்பட்டது. இந்த நிதியத்தின் அறிமுக உரையினை பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் க.நிமலதாசன் நிகழ்த்தினார்.இந்த நிதியத்தின் வட்டிப்பணத்திலிருந்து வருடாந்தப் பரிசளிப்பு விழாவினை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

DSC_0125 (Copy) DSC_0126 (Copy) DSC_0127 (Copy) DSC_0128 (Copy) DSC_0129 (Copy) DSC_0130 (Copy) DSC_0134 (Copy) DSC_0135 (Copy) DSC_0136 (Copy) DSC_0137 (Copy) DSC_0138 (Copy) DSC_0139 (Copy) DSC_0140 (Copy) DSC_0131 (Copy) DSC_0132 (Copy) DSC_0133 (Copy) DSC_0141 (Copy) DSC_0142 (Copy) DSC_0143 (Copy) DSC_0144 (Copy) DSC_0145 (Copy) DSC_0146 (Copy) DSC_0147 (Copy) DSC_0148 (Copy) DSC_0149 (Copy) DSC_0150 (Copy) DSC_0151 (Copy) DSC_0152 (Copy) DSC_0153 (Copy) DSC_0154 (Copy) DSC_0155 (Copy) DSC_0156 (Copy) DSC_0157 (Copy) DSC_0158 (Copy) DSC_0159 (Copy) DSC_0160 (Copy) DSC_0161 (Copy) DSC_0162 (Copy) DSC_0163 (Copy) DSC_0164 (Copy) DSC_0165 (Copy) DSC_0166 (Copy) DSC_0167 (Copy) DSC_0168 (Copy) DSC_0169 (Copy) DSC_0170 (Copy) DSC_0171 (Copy) DSC_0172 (Copy) DSC_0173 (Copy) DSC_0174 (Copy) DSC_0175 (Copy) DSC_0176 (Copy) DSC_0177 (Copy) DSC_0178 (Copy) DSC_0179 (Copy) DSC_0180 (Copy) DSC_0181 (Copy) DSC_0182 (Copy) DSC_0183 (Copy) DSC_0184 (Copy) DSC_0185 (Copy) DSC_0186 (Copy) DSC_0187 (Copy) DSC_0188 (Copy) DSC_0189 (Copy) DSC_0190 (Copy) DSC_0191 (Copy) DSC_0192 (Copy) DSC_0194 (Copy) DSC_0195 (Copy) DSC_0197 (Copy) DSC_0198 (Copy) DSC_0199 (Copy) DSC_0201 (Copy) DSC_0193 (Copy) DSC_0202 (Copy) DSC_0204 (Copy) DSC_0205 (Copy) DSC_0206 (Copy) DSC_0208 (Copy) DSC_0209 (Copy) DSC_0211 (Copy) DSC_0212 (Copy) DSC_0213 (Copy) DSC_0214 (Copy) DSC_0215 (Copy) DSC_0216 (Copy) DSC_0217 (Copy) DSC_0218 (Copy) DSC_0219 (Copy) DSC_0220 (Copy) DSC_0222 (Copy) DSC_0223 (Copy) DSC_0225 (Copy) DSC_0226 (Copy) DSC_0229 (Copy) DSC_0230 (Copy) DSC_0231 (Copy) DSC_0232 (Copy) DSC_0233 (Copy) DSC_0234 (Copy) DSC_0235 (Copy) DSC_0236 (Copy) DSC_0240 (Copy) DSC_0241 (Copy) DSC_0242 (Copy) DSC_0243 (Copy) DSC_0244 (Copy) DSC_0245 (Copy) DSC_0246 (Copy) DSC_0247 (Copy) DSC_0335 (Copy) DSC_0337 (Copy) DSC_0338 (Copy) DSC_0339 (Copy) DSC_0340 (Copy) DSC_0341 (Copy) DSC_0360 (Copy) DSC_0361 (Copy) DSC_0362 (Copy) DSC_0363 (Copy) DSC_0364 (Copy) DSC_0365 (Copy) DSC_0383 (Copy) DSC_0384 (Copy) DSC_0385 (Copy) DSC_0386 (Copy) DSC_0393 (Copy) DSC_0394 (Copy) DSC_0395 (Copy) DSC_0396 (Copy) DSC_0397 (Copy) DSC_0398 (Copy) DSC_0407 (Copy) DSC_0409 (Copy) DSC_0410 (Copy) DSC_0411 (Copy) DSC_0412 (Copy) DSC_0416 (Copy) DSC_0422 (Copy) DSC_0430 (Copy) DSC_0432 (Copy) DSC_0433 (Copy) DSC_0434 (Copy) DSC_0440 (Copy) DSC_0441 (Copy) DSC_0442 (Copy) DSC_0443 (Copy) DSC_0448 (Copy) DSC_0453 (Copy) DSC_0454 (Copy) DSC_0455 (Copy) DSC_0459 (Copy) DSC_0460 (Copy) DSC_0461 (Copy) DSC_0462 (Copy) DSC_0467 (Copy) DSC_0482 (Copy) DSC_0483 (Copy) DSC_0484 (Copy) DSC_0485 (Copy) DSC_0487 (Copy)DSC_0125 (Copy) DSC_0130 (Copy) DSC_0129 (Copy) DSC_0128 (Copy) DSC_0127 (Copy) DSC_0126 (Copy) DSC_0139 (Copy) DSC_0138 (Copy) DSC_0137 (Copy) DSC_0136 (Copy) DSC_0135 (Copy) DSC_0134 (Copy) DSC_0487 (Copy) DSC_0485 (Copy) DSC_0484 (Copy) DSC_0483 (Copy) DSC_0482 (Copy) DSC_0467 (Copy) DSC_0462 (Copy) DSC_0461 (Copy) DSC_0460 (Copy) DSC_0459 (Copy) DSC_0455 (Copy) DSC_0454 (Copy) DSC_0453 (Copy) DSC_0448 (Copy) DSC_0443 (Copy) DSC_0442 (Copy) DSC_0441 (Copy) DSC_0440 (Copy) DSC_0434 (Copy) DSC_0433 (Copy) DSC_0432 (Copy) DSC_0430 (Copy) DSC_0422 (Copy) DSC_0416 (Copy) DSC_0412 (Copy) DSC_0411 (Copy) DSC_0410 (Copy) DSC_0409 (Copy) DSC_0407 (Copy) DSC_0398 (Copy) DSC_0397 (Copy) DSC_0396 (Copy) DSC_0395 (Copy) DSC_0394 (Copy) DSC_0393 (Copy) DSC_0386 (Copy) DSC_0385 (Copy) DSC_0384 (Copy) DSC_0383 (Copy) DSC_0365 (Copy) DSC_0364 (Copy) DSC_0363 (Copy) DSC_0362 (Copy) DSC_0361 (Copy) DSC_0360 (Copy) DSC_0341 (Copy) DSC_0340 (Copy) DSC_0339 (Copy) DSC_0338 (Copy) DSC_0337 (Copy) DSC_0335 (Copy) DSC_0247 (Copy) DSC_0246 (Copy) DSC_0245 (Copy) DSC_0244 (Copy) DSC_0243 (Copy) DSC_0242 (Copy) DSC_0241 (Copy) DSC_0240 (Copy) DSC_0236 (Copy) DSC_0235 (Copy) DSC_0234 (Copy) DSC_0233 (Copy) DSC_0232 (Copy) DSC_0231 (Copy) DSC_0230 (Copy) DSC_0229 (Copy) DSC_0226 (Copy) DSC_0225 (Copy) DSC_0223 (Copy) DSC_0222 (Copy) DSC_0220 (Copy) DSC_0219 (Copy) DSC_0218 (Copy) DSC_0217 (Copy) DSC_0216 (Copy) DSC_0215 (Copy) DSC_0214 (Copy) DSC_0213 (Copy) DSC_0212 (Copy) DSC_0211 (Copy) DSC_0209 (Copy) DSC_0208 (Copy) DSC_0206 (Copy) DSC_0205 (Copy) DSC_0204 (Copy) DSC_0202 (Copy) DSC_0193 (Copy) DSC_0201 (Copy) DSC_0199 (Copy) DSC_0198 (Copy) DSC_0197 (Copy) DSC_0195 (Copy) DSC_0194 (Copy) DSC_0192 (Copy) DSC_0191 (Copy) DSC_0190 (Copy) DSC_0189 (Copy) DSC_0188 (Copy) DSC_0187 (Copy) DSC_0186 (Copy) DSC_0185 (Copy) DSC_0184 (Copy) DSC_0183 (Copy) DSC_0182 (Copy) DSC_0181 (Copy) DSC_0180 (Copy) DSC_0179 (Copy) DSC_0178 (Copy) DSC_0177 (Copy) DSC_0176 (Copy) DSC_0175 (Copy) DSC_0174 (Copy) DSC_0173 (Copy) DSC_0172 (Copy) DSC_0171 (Copy) DSC_0170 (Copy) DSC_0169 (Copy) DSC_0168 (Copy) DSC_0167 (Copy) DSC_0166 (Copy) DSC_0165 (Copy) DSC_0164 (Copy) DSC_0163 (Copy) DSC_0162 (Copy) DSC_0161 (Copy) DSC_0160 (Copy) DSC_0159 (Copy) DSC_0158 (Copy) DSC_0157 (Copy) DSC_0156 (Copy) DSC_0155 (Copy) DSC_0154 (Copy) DSC_0153 (Copy) DSC_0152 (Copy) DSC_0151 (Copy) DSC_0150 (Copy) DSC_0149 (Copy) DSC_0148 (Copy) DSC_0147 (Copy) DSC_0146 (Copy) DSC_0145 (Copy) DSC_0144 (Copy) DSC_0143 (Copy) DSC_0142 (Copy) DSC_0141 (Copy) DSC_0133 (Copy) DSC_0132 (Copy) DSC_0131 (Copy) DSC_0140 (Copy)

DSC_0416 (Copy) DSC_0453 (Copy) DSC_0448 (Copy) DSC_0443 (Copy) DSC_0442 (Copy) DSC_0441 (Copy) DSC_0440 (Copy) DSC_0434 (Copy) DSC_0433 (Copy) DSC_0432 (Copy) DSC_0430 (Copy) DSC_0422 (Copy) DSC_0487 (Copy) DSC_0485 (Copy) DSC_0484 (Copy) DSC_0483 (Copy) DSC_0482 (Copy) DSC_0467 (Copy) DSC_0462 (Copy) DSC_0461 (Copy) DSC_0460 (Copy) DSC_0459 (Copy) DSC_0455 (Copy) DSC_0454 (Copy)

 

 

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் நிறுவுநர் தினமும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் அழைப்பிதழ்

Invit 1Invit 2

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் வலயமட்ட தமிழ்த் தினப்போட்டிகளில் 11 முதலிடங்கள் பெற்று சாதனை

வலய மட்டத்தில் நடத்தப்பட்ட தமிழ்த்தினப் போட்டியில் கலாநிதி ஆ. தியாகராசா மத்தியமகா வித்தியாலய மாணவர்கள் பதினொரு முதலிடங்களையும் ஒரு இரண்டாம் இடத்தையும் பெற்று மாகாண மட்ட தமிழ்த்தினப் போட்டிகளில் பங்குபற்றுவதற்குத் தெரிவாகிச் சாதனை படைத்துள்ளனர்.
வலயக் கல்விப் பணிப்பாளரால் கல்லூரி அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மாகாணப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டோர் விபரம் பின்வருமாறுHindu College News picture

KARAI HINDU

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி சிறப்பாக நடைபெற்றது.

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி சென்ற புதன்கிழமை (பெப்.5.2014) அன்று அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

 பிரதம விருந்தினராக காரைநகரில் விளையாட்டுத்துறையில் பல சாதனைகளைப் படைத்தவரும், வடமாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளருமாகிய திரு.க.சத்தியபாலன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.

 சிறப்பு விருந்தினர்களாக தீவக வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.இ.குணநாதன் அவர்களும், காரைநகர் இலங்கை வங்கி முகாமையாளர் திரு.ஏ.விஜயகுமார் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக யோகா ரான்ஸ்போட் உரிமையாளர் திரு.ந.யோகநாதன் அவர்களும், கிராம சேவையாளர் திரு.இ.திருப்புகழுர்சிங்கம் அவர்களும், அலையன்ஸ் நிறுவன முகாமையாளர் திரு.கோ.சிறிவரதன் அவர்களும் கலந்து கொண்டனர்.

அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தனது உரையில்; இன்றைய இவ்விளையாட்டு நிகழ்வானது பாடசாலையில் கற்கும் சகல மாணவர்களும் மைதானநிகழ்வுகளில பங்குபற்றுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலம் 100 வீதம் மாணவர்களும்; கலந்து கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும் என்று கூறினார்.

 எமது பாடசாலை மாணவர்கள் கடந்த ஆண்டு வலயமட்டத்தில் பல விளையாட்டு சாதனைகளை தடகள நிகழ்வுகள், பெருவிளையாட்டுக்கள், உள்ளக விளையாட்டுக்களில் பதிவாக்கி உள்ளனர், அவ்வகையில் பயிற்றுவித்த ஆசிரியர் திருமதி சாமினி சிவராஐ; அவர்களுக்கு சிறப்புப் பாராட்டைத் தெரிவித்தார்.

 அத்துடன் இவ்வாண்டும் 20 மாணவர்கள் கோட்டமட்ட சதுரங்கப் பொட்டியில் பங்குபற்றி அதில் 10 மாணவர்கள் வெற்றிக்கிண்ணங்களைத் தமதாக்கிக் கொண:டுள்ளனர் எனக் குறிப்பிட்டார்.

 இன்றைய விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற நிதியனுசரணை வழங்கிய பயிரிக்கூடலைச் சேர்ந்த திரு.ஸ்ரீஸ்கந்தராஜா பாஸ்கர்(பிரான்ஸ்), இடைப்பிட்டியைச் சேர்ந்த திரு.சண்முகம் சிவஞானம், கொம்பாவோடை, களபூமியைச் சேர்ந்த திரு.கந்தையா ஆறுமுகம் ஆகியோருக்கு தமது நன்றியைத் தெரிவித்தார்.

 மற்றும் இப்பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியை திருமதி. சாமினி சிவராஜ் இடமாற்றம் பெற்றுச் செல்ல இருப்பதால் பொருத்தமான உடற்கல்வி ஆசிரியரைப் பெற்றுத்தருமாறு பிரதிக் கல்விப்பணிப்பாளர், வடமாகாணம், தீவகவலயம் ஆகியோரிடம் வேண்டிக் கொண்டார்.

 பாடசாலையில் ஒரு உள்ளக விளையாட்டு அரங்கம் இல்லாமல் இருப்பதனால் அதனை அமைப்பதற்கு பழைய மாணவர்கள், புலம்பெயர் பழைய மாணவர்கள் உதவியை இப்பாடசாலை வேண்டிநிற்கின்றது என்றும் தெரிவித்தார்.

 மேலும் தனது உரையில் பாடசாலையின் வளர்ச்சிப் பணிகளில் கல்லூரியின் பழையமாணவர் சங்கங்கள் புலம்பெயர் காரை அமைப்புகள், நலன்விரும்பிகள், கல்வித்திணைக்களத்தின் இணைப்பாடவிதான செயற்பாட்டு உதவிகள் என்பன பெரும் உதவிகளாக அமைந்தன. மேலும் பாடசாலையின் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு மேலும் உதவிகள் தேவைப்படுவதனால் அதனை நிவர்த்தி செய்ய மேற்கூறிய அமைப்புகளின் உதவியைப் பாடசாலை வேண்டி நிற்கின்றது என்றும் கூறினார்.

 பிரதமவிருந்தினர் திரு.க.சத்தியபாலன் அவர்கள் தனது உரையில், இவ்விளையாட்டுப்போட்டி தாம் எதிர்பார்த்ததிற்கு மேலாக மிகவும் திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்றது என்றும் பாடசாலை மாணவர்கள் 100 வீதம் கலந்துகொண்டமை இவ்விளையாட்டுப் போட்டியின் சிறப்பம்சம் என்றும் கூறினார்.

 சிறப்புவிருந்தினர் திரு.இ.குணநாதன் தனது உரையில் இவ்விளையாட்டு நிகழ்வில் நேரமுகாமைத்துவம் சிறப்பாகப் பேணப்பட்டமையும் சுற்றாடல் முன்னோடிக்குழு, சுற்றாடல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மேற்கொண்டமை இவ்விளையாட்டுப் போட்டியின் சிறப்பியல்பாகும் எனக் குறிப்பிட்டார்.

 நான்கு இல்லங்களுக்கிடையே நடைபெற்ற மெய்வல்லுநர் திறனாய்வில் இவ்வாண்டு சயம்பு இல்லம்( 569 புள்ளிகள்) முதலிடத்தையும், தியாகராசா இல்லம்( 545 புள்ளிகள்) இரண்டாம் இடத்தையும் நடராசா இல்லம(441 புள்ளிகள்); மூன்றாம் இடத்தையும், பாரதி இல்லம்( 342 புள்ளிகள்) நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.

 நன்கு திட்டமிடப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட இந்த மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வில் நன்கு பயிற்சியளிக்கப்பட்ட அணிவகுப்பு அணிகளும் மற்றும் உடற்பயிற்சி அணியின் காட்சிப்படுத்தல் நகரப்பாடசாலையின் தரத்தையும் மிஞ்சியதாகக் காணப்பட்டதாகவும் விளையாட்டு ரசிகர்கள் தெரிவித்திருந்தனர்.

 நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களை இங்கே காணலாம்.

காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 2014

a b

காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியின் ஓர் அங்கமாக வீதியோட்டம் மற்றும் பெண்களுக்கான சைக்கிலோட்ட நிகழ்வு இன்று (ஜன 26)ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.

வீதியோட்டப் போட்டியை பாடசாலையின் பகுதித் தலைவர் தெ.லிங்கேஸ்வரன் ஆரம்பித்து வைத்தார்.

 வீதியோட்டப் போட்டியில் முதல் ஜந்து இடங்களைப் பெற்ற மாணவர்களின் விபரம் வருமாறு.

 முதலாமிடம் செல்வன் சி.கோகுலன் (தரம் 11 – தியாகராசா இல்லம்), இரண்டாம் இடம் செல்வன் அ.அஜந்தன் (தரம் 11- சயம்பு இல்லம்), மூன்றாம் இடம் செல்வன் பா.பிரசாந்தன் (தரம் 11 -தியாகராசா இல்லம்),நான்காம் இடம் செல்வன் கோ.அஜித்குமார் (தரம் 11 -நடராசா இல்லம் ) ஜந்தாம் இடம் செல்வன் பே.அலக்சன் (தரம் 10 -சயம்பு இல்லம்)

 பெண்களுக்கான சைக்கிலோட்டப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகளின் விபரம் வருமாறு

முதலாமிடம் செல்வி நா.விஜயகுமாரி (தரம் 11 பாரதி இல்லம்) இரண்டாம் இடம் செல்வி லோ.ஜோதிகா (தரம் 10 நடராசா இல்லம்) மூன்றாம் இடம் செல்வி செ.தேனுஜா (தரம் 11 பாரதி இல்லம்)

 வீதியோட்ட நிகழ்வையும்,வீதியோட்டப் போட்டியில் முதல் ஜந்து இடங்களைப் பெற்ற மாணவர்கள் மற்றும் பெண்களுக்கான சைக்கிலோட்டப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகள் பாடசாலை அதிபர் திருமதி வாசுகி தவபாலன்,விளையாட்டுப் பொறுப்பாசிரியை ஆகியோருடன் நிற்பதனையும் படங்களில் காணலாம்.

 

 

 

 

 

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள்-2013

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து ஆகஸ்ட் 2013 இல் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு:
கலைப் பிரிவு
1.    சிதம்பரப்பிள்ளை சோபிகா A, 2B
2.    ஆனந்தா காங்கேயன் A, B, C
3.    குமாரசாமி மிதுனா A, B, C
4.    செல்வராசா கேசினி A, C, S
5.    பாலச்சந்திரன் வதனி A, C, S
6.    யோகராசா விம்சியா A, C, S
7.    முடிராசா சஜீவா 2B, C
8.    சிதம்பரநாதன் சுஜீவா 2B, C
9.    கிருஷ்ணமூர்த்தி சிவநிரஞ்சனா B, 2C
10.    பரமானந்தம் லோகவர்மா B, 2C
11.    நாகேந்திரம் நாகசிந்துஜா B, 2C
12.    ரவீந்திரன் ரஜீவன் B, 2C
13.    தர்சினி நவரட்ணம் B, 2C
வர்த்தகப் பிரிவு
1.    மகாலிங்கம் டிலக்ஷன்  B, C, S
2.    உமாசுகி தர்மலிங்கம் C, 2S
கணிதப் பிரிவு
1.    செல்வராசா கேஜினி C, 2S
பல்கலைக்கழக அனுமதிக்குத் தகமை பெற்றவர்களில் 30 மாணவர்கள் கலைப்பிரிவுக்கும் 2 மாணவர்கள் வர்த்தகப் பிரிவுக்கும் 1 மாணவர் கணிதப் பிரிவுக்கும் தகமை பெற்றுள்ளனர். 
கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கு இவ்வாண்டு மொத்தமாக 51 மாணவர்கள் தோற்றியிருந்த நிலையில், மேலே குறிப்பிட்ட 16 மாணவர்கள் உட்பட மொத்தம் 33 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகமை பெற்றுள்ளனர்.
அதாவது 65% சதவீதமான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்ற மாணவர்களின் சதவீதம் கடந்த ஆண்டை விட 11 %சதவீதத்தினால் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.

 

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும்

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும்
கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் டிச.21.2013 அன்று சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றிருந்தது.
இப்பொதுக் கூட்டத்திற்கு கல்வியாளர்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள் உட்பட்ட சுமார் ஐம்பது வரையான பழைய மாணவர்கள் சமூகமளித்திருந்தனர்.
நிர்வாக உறுப்பினர் திரு.க.நாகராசா அவர்களின் கடவுள் வணக்கத்தைத் தொடர்ந்து, கல்லூரியுடன் மிக நெருக்கமான தொடர்பைப் பேணி கல்லூரி வளர்ச்சிப் பணிகளில் உறுதுணையாக இருந்து இந்த ஆண்டு எம்மை விட்டுப்பிரிந்த அமரர். கலாநிதி.ச.சபாரட்ணம், அமரர்.சி.தம்பிராஜா (மாஸ்டர்) ஆகியோருக்கும் ஏனையோருக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டு கூட்டம் தொடங்கப்பட்டது.
பொதுச் சபையில் சமூகமளித்த அனைவருக்கும் அதிபர் அறிக்கை, செயற்பாட்டு அறிக்கை, பொருளாளர் அறிக்கை என்பவை அடங்கிய பிரதி நூல் வடிவில் வழங்கப்பட்டது.
கூட்டத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்திய கல்லூரி அதிபரும் சங்கத் தலைவருமான திருமதி.வாசுகி தவபாலன் அவர்கள் தலைவர் அறிக்கையினை வாசித்தளித்திருந்தார்.
செயலாளர் திரு.இ.திருப்புகழுர்சிங்கம் அவர்ளினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட செயற்பாட்டு அறிக்கை,  பொருளாளர் திரு.பா.இராமகிருஷ்ணன் அவர்களினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பொருளாளர் அறிக்கையும் சபையினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அடுத்து 2014 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபைத் தெரிவு இடம்பெற்றது. கல்வித் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய பதவி வழியாக கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைவராக இருப்பார்.
தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாக சபையின் விபரம் வருமாறு:
தலைவர்: திருமதி.வாசுகி தவபாலன் (அதிபர்)
உப-தலைவர்: பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை(ஓய்வு நிலை அதிபர்)
செயலாளர்: திரு.கணபதிப்பிள்ளை நிமலதாசன் (தபாலதிபர்)
உப-செயலாளர்: திரு.சண்முகம் சுகந்தன்
பொருளாளர்: திரு.சுந்தரலிங்கம் அகிலன்
உப-பொருளாளர்: திரு.செல்வரத்தினம் அருட்செல்வம்(ஆசிரியர்)

நிர்வாக சபை உறுப்பினர்கள்:
1. திரு.நல்லதம்பி யோகநாதன் (யோகா ரான்ஸ்போட் உரிமையாளர்)
2. திரு.கயிலாபிள்ளை நாகராசா (ஊர்காவற்றுறை நீதிமன்ற அலுவலர்)
3. திரு.வேலாயுதம் ஆனைமுகன் (காரைநகர் பிரதேச சபைத் தலைவர்)
4. செல்வி விமலாதேவி விஸ்வநாதன் (அதிபர் வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலை)
5. திரு.குகனேசசர்மா சரவணபவானந்தசர்மா (ஆசிரியர்)
6. திரு.சிவராசா பகீரதன்

உள்ளகக் கணக்காய்வாளர்: திரு.அரியரத்தினம் ஜெகதீஸ்வரன்

2011 பொதுக் கூட்டத்தில் பதிதாக உருவாக்கப்பட்ட பதவியணியாகிய போசகர் பதவிக்கு மீண்டும் கல்லூரியின் முன்னாள் விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியரும் ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமாகிய திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்கள் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
புதிய நிர்வாக சபைத் தெரிவினைத் தொடர்ந்து தலைவர் திருமதி.வாசுகி தவபாலன் தமது உரையில் புதிய நிர்வாகத்தை வரவேற்பதுடன் பழைய நிர்வாகத்திற்கு தமது நன்றியையும் தெரிவித்து பழைய மாணவர்கள் ஒரு பாடசாலையில் மதிப்பிடமுடியாத சொத்துகள் எனவும் நாம் தற்போதய கல்விச் செயற்பாட்டில் பாரிய சமூகச் சவால்களைக் குறுகிய காலத்தில் எதிர்நோக்க வேண்டி இருந்ததாகவும், பழைய மாணவர்கள் பாடசாலை நிர்வாகத்திற்க ஒத்துழைப்பு வழங்குவதுடன் மாணவர் சமூகத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய பெரும் பொறுப்பும் பழைய மாணவர்களுக்கு உரியது எனவும் அங்கத்தவர்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் கூட்டுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கூறி தனது உரையினை நிறைவு செய்து சபையோர் கருத்துத் தெரிவிக்குமாறு கூறினார்.
பொதுச் சபை உறுப்பினர்கள் திரு.தம்பிப்பிள்ளை சற்குணராசா, காரைநகர் இ.போ.ச.சாலை முன்னாள் முகாமையாளர் திரு.மு.ஊ. கந்தசாமி, ஓய்வுநிலை அதிபர் திரு.க.தில்லையம்பலம், கலாநிதி.திருமதி.வீரமங்கை யோகரட்ணம், லண்டன் காரை நலன்புரிச் சங்கத் தலைவர் திரு.ப.தவராசா, பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை, காரைநகர் பிரதேச சபைத் தலைவர் திரு.வே.ஆனைமுகன் ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர்.
பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத் தலைவர் திரு.ப.தவராசா உரையாற்றும்போது தமது சங்கத்தின் ஆதரவு தொடர்ந்து கல்லூரியின் வளர்ச்சிப்பாதைக்கு உறுதுணையாக அமையும் என்று உறுதியளித்தார்.
பாடசாலையின் பெயர் மாற்நம் தொடர்பாக திரு.தம்பிப்பிள்ளை சற்குணராசா காரைநகர் இந்துக்கல்லூரி எனப் பெயர் மாற்றம் செய்யப்படவேண்டும் என்ற பிரேரணையை முன்மொழிய திரு.சபாநடேசன் சிவரூபன் வழிமொழிந்தார். திரு.மு.ஊ.கந்தசாமி பாடசாலையின் கல்வி முன்னேற்றம்தான் தேவை என்றும் பெயர்மாற்றப் பிரேரணையைத் தான் எதிர்ப்பதாகவும் தெரிவித்தார். பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை தியாகராசா இந்துக் கல்லூரி எனப் பெயர் மாற்றம் செய்யலாம் எனக் கருத்துத் தெரிவித்தார். தொடர்ந்து திரு.வேலாயுதம் ஆனைமுகன் கருத்துத் தெரிவிக்கையில் பொது மக்களின் கருத்துகளையும் கேட்டு பெயர்மாற்றம் செய்யப்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.
அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் சபையினரின் கருத்துகளுக்கு பதிலளித்து உரையாற்றும்போது பெயர்மாற்றம் தொடர்பாக பொதுமக்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் முடிவிற்கு தாம் ஒத்துழைப்பு வழங்கலாம் என்று கூறினார். இது தொடர்பாக இன்னொரு பொதுக் கூட்டத்தைக் கூடி ஆராயலாம் என சபையோர் கேட்டுக் கொண்டமைக்கு, அதிபர் இணக்கம்; தெரிவித்தமையைத் தொடர்ந்து புதிய செயலாளர் திரு.கணபதிப்பிள்ளை நிமலதாசனின் நன்றியுரையுடன் இந்தப் பொதுக் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

 

 

 

காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய பழையமாணவர் சங்க வருடாந்தப் பொதுக்கூட்டம்

காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய பழையமாணவர் சங்க வருடாந்தப் பொதுக்கூட்டம் 21-DEC-2013 சனிக்கிழமை பிற்பகல் 2.00மணிக்கு நடைபெற உள்ளது.

பாடசாலை அதிபர் திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் புதிய நிர்வாகசபைத் தெரிவும் இடம்பெற உள்ளது.பழைய மாணவர்களை இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு செயலாளர் இ.திருப்புகழுர்சிங்கம் கேட்டுள்ளார்.

பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டம் – 2013 யா/கலாநிதி.ஆ.தியாகராசா.மத்திய.ம.ம.வித்தியாலயம்

பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டம் – 2013
யா/கலாநிதி.ஆ.தியாகராசா.மத்திய.ம.ம.வித்தியாலயம்
(காரைநகர் இந்துக் கல்லூரி)

தலைவர் :-திருமதி.வா.தவபாலன் (அதிபர்)
காலம்   :- 21.12.2013 பி.ப 2.00மணி
இடம்    :- கல்லூரி மண்டபம்

யா/கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் (காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக் கூட்டம் மேலே குறிப்பிட்டவாறு  நடைபெறவுள்ளது. கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரையும் தவறாது பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

                                                                                நன்றி

திருமதி.வா.தவபாலன்                                                                                     திரு.இ.திருப்புகலூர்சிங்கம்
     தலைவர்                                                                                                                                   செயலாளர்