Category: KWS UK செய்திகள்

காரைஇளையோர் அமைப்பு, பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கத்தின் அறிவித்தல்

UK LOGO

01/08/2015

வணக்கம் அன்புடையீர் 

எமது சகோதர மன்றங்களில் ஒன்றான சுவிஸ் காரை அபிவிருத்திசபை இம் மாதம் 29ம் திகதி சனிக்கிழமை(29/08/2015) எமது இளம் சந்ததியினரின் தமிழ் மொழி ஆர்வத்தினை வளர்க்கும் முயற்சியில் கடந்த பல வருடங்களாக கட்டுரைப் போட்டிகள் நடாத்தி வருகின்றது. இவ் வருடம் முதன் முறையாக சுவிஸ் , லண்டன் , பிரான்ஸ் ,கனடா, காரைநகர்(மூன்று சென்டர்கள் -கொழும்பு ,வவுனியா , காரைநகர்) என்று பரந்த அளவில் ஒரே நேரத்தில் முன்னெடுத்திருக்கின்றது. 

அந்தவகையில் எம் இளம் சமுதாயத்தினரையும் இதில் பங்கு பற்றும்படி அழைப்பு விடுத்துள்ளார்கள்.

எனவே இந்த கட்டுரை போட்டியில்(தமிழ்) பங்குபற்ற விரும்பும் பிருத்தானியா வாழ் காரை இளையோர்கள் (குறிப்பிடப்பட்டிருக்கும் வயது அடிப்படையில்) தயவுசெய்து தங்கள் பெயர் விபரங்களை கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கோ, அல்லது தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்பு கொள்ளவும்.

email;-  karaiyouthorganisation@gmail.com  or  parranthaman@gmail.com

Paranthaaman mobile :- 07595 876340,  AAthi – 07428 782671.

Please enrolled your names by the 15th (15/08/2015)

இடம் , நேரம் பின்னர் அறிவிக்கப்படும் .

நன்றி 

வணக்கம்.

காரைஇளையோர் அமைப்பு,

பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம்.   

 

பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கத்தின் ”காரைச் சங்கமம் 2015” இக்கு பிரதம விருத்தினராக லண்டன் வருகைதந்து , இற்றைக்கு 33 வருட காலத்திற்கு பின்னர் தனது பழைய மாணவர்கள் நண்பர்கள், மற்றும் பிருத்தானியா வாழ் காரை மக்களுடன் சங்கமித்து, மகிழ்வுடன் நேற்றைய முன்தினம் நாடு திரும்பினார் திரு.அ. சோமாஸ்கந்தன் (இளைப்பாறிய ஆசிரியர், காரை இந்து).

பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கத்தின் ''காரைச் சங்கமம் 2015'' இக்கு பிரதம விருத்தினராக லண்டன் வருகைதந்து , இற்றைக்கு 33 வருட காலத்திற்கு பின்னர் தனது பழைய மாணவர்கள் நண்பர்கள், மற்றும் பிருத்தானியா வாழ் காரை மக்களுடன் சங்கமித்து, மகிழ்வுடன் நேற்றைய முன்தினம்  நாடு திரும்பினார் திரு.அ. சோமாஸ்கந்தன் (இளைப்பாறிய ஆசிரியர், காரை இந்து).  


                        எமது 25வது ஆண்டு நிறைவு விழாவுக்கு(Oct 3, 2015) முன்கூட்டியே தனது ஆசிச் செய்தியையும் வழங்கி, அளவிலா ஆனந்தத்துடன் நல்லபடியா நாடு திரும்பினார்.
போகும் போது மாஸ்டர் சொன்ன '' டேய் எனக்கு இப்ப 33 வயது குறைந்ததுபோல் உள்ளதடா'' என்ற  வார்த்தைகள் எம்மையும் மனம் குளிரவைத்தது.

                  வாழும் போதே வாழ்த்துவோம்.
குறைகளை விட்டு நிறைகளை  நினையுங்கள்.

 

நன்றி 


பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கம்  

12

பிருத்தானியா தமிழ் தொலைக்காட்சியில் திரு.அ.சோமாஸ்கந்தன் ஆசிரியருடனான நேர்காணல் நிகழ்ச்சி

பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கத்தின் ”காரைச் சங்கமம் 2015” க்கு பிரதம அதிதியாக வருகை தந்திருந்த காரை இந்துக் கல்லூரியின் ஓய்வுபெற்ற விஞ்ஞானம் , பௌதீகவியல் மற்றும் விளையாட்டுத்துறை ஆசிரியர் திரு அ .சோமாஸ்கந்தன் அவர்களின் 75வது பிறந்த தினத்தை கடந்த 23/07/2015 வியாழன் அன்று மாலை இலண்டன் வாழ் பழைய மாணவர்கள், நண்பர்கள் , நலன்விரும்பிகள் சிறப்பாக கொண்டாடி அவரை கெளரவித்திருந்தனர்.

“உண்மையான விடிவெள்ளியாய் வீறுநடை போட்டவர் அருணசலம்” பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கம்

UK LOGO

"உண்மையான விடிவெள்ளியாய் வீறுநடை போட்டவர் அருணசலம்" பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கம்
 

சைவ சித்தாந்த மன்றம்,
கனடா.
நூல் வெளியீடு – மீள் பதிப்பு 
25.07.2015


யாழ்பாணத்தின் மூன்று தமிழ் சார்ந்த சமயக் கண்ணகள் அதில் ஒன்று எம் அருமை அருணாசல உபாத்தியாயர். (மற்றிருவர் ஆறுமுக நாவலர், இராசரத்தினம்) சரித்திர நாயகர்களின் சொத்துக்களை மீளசைவு செய்வதென்பது விலை மதிப்பற்ற ஒன்று. காரைநகர் குட்டிப்புலத்தில் தோன்றி, தன் கோட்டையாக தங்கோடையில் வாழ்ந்தவர் ஐயா அருணாசலம். எமது அல்லின் ஏபிரகாம் காலத்தில் வாழ்ந்த சமகால சரித்திர நாயகன் இவர். அல்லின் ஏபிரகாம் அவர்கள் எமது மண்ணின் கற்பகதருவினூடே வால்வெள்ளியை வயப்படுத்தினார், ஆனால் ஐயா அருணாசலம் அவர்கள் எமது ஊரின் கல்வியின் கண்களாக உண்மையான விடிவெள்ளியாய் நின்று வீறு நடை போட்டவர்.


உண்மையில் இதைத்தான் ஐய்யன் வள்ளுவன் தனது முதற் குறளில்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
என்று கூறியுள்ளானோ என்று எண்ணவைக்கின்றது……. காரணம்
அல்லின் – அருணா, உண்மையில் ஆழமாக நோக்குங்கள் ……………..
அல்லின் விண்ணை நோக்கினார், ஐயா அருணா மண்ணை நோக்கினார் 
இரண்டுமே இந்த பிரபஞ்சத்தின் சொத்துத்தான், இருந்தும் இது எம் மண்ணின் முதுசம் எனும் பொழுது எம்மையெல்லாம் முழிக்க வைக்கின்றது. ஆங்கிலேயர் ஆட்சியில் அருணாசலம் ஓர் காந்திய ஆயுதம் என்றால் மிகையாகாது. அடிமைக்காலத்தில் அவர்களை எதிர்த்து சைவைத்தையும் தமிழையும் தனித்துவமாய் தக்கவைப்பது என்பது தன்னிகரற்ற செயல். நாவலர் வழி நின்று திண்ணைப் பாடசாகளை துணிவுடன் அன்று அருணாசலம் ஐயா இட்ட வித்துத்தான் இன்று நம் வித்தியாலயங்களாக வியாபித்து விருட்சமாக வேரூன்றியுள்ளன.


2011ம் ஆண்டு பிருத்தானியா காரை நலன் புரிச் சங்க நிர்வாகத்தின் தொலைநோக்கு கண்களின் பட்டு, அதில் பரிணமித்ததுதான் "முதுசங்களைத் தேடி". இதன் நோக்கமே எமது மண் சார் முதாதையரின் முக்கியமான நூல்களை மூழ்க விடாது மீள் கொண்டு வருவதென்பது. இதன் முதற் குழந்தை FXC அவர்களின் "காரை மான்மியம்", இரண்டாவது செல்வம் மூன்று ஆண்டு தாண்டியும், முக்கியம் பெற முடியவில்லை அது "சைவமகாசபை பொன்விழா மலர்" (இன்னமும் பதிப்பில் உள்ளது), ஆனால் இன்று கனடா சைவ சித்தாந்த மன்றம் இந்த எமது சைவ மகா சபையால் 29.09.1971 அன்று வெளியிடப்பட்ட "சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த ஐயா அருணாசலம்" அவர்களின் நூலை மீள்பதிப்பு செய்வது என்பது எமக்கு பெரு மகிழ்ச்சியை தருவதுடன், எமது மண்ணுக்கு விலைமதிப்பற்ற மதிப்பையும் கொடுக்கின்றது. சைவ சித்தாந்த மன்றத்துடன் எமது கனடா காரை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கமும் கைகோத்துள்ளமையும் எமக்கு களிப்புத்தான்.


தங்கள் இந்த நூல் மீள் பதிப்பு கனடாவில் மட்டுமல்ல காரை மக்கள் வாழ் அனைத்து நாடுகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன், இதற்கான அனைத்து உதவிகளையும் எமது பிருத்தானியா காரை நலன் புரிச்சங்க "முதுசங்களைத் தேடி" நிர்வாக இணைப்பாளர்கள் இணைந்து செயற்பட காத்திருக்கின்றார்கள் என்று கூறி, மேலும் தங்கள் நிகழ்வும் இனிதாய் நிறைவுற இறைவனை வேண்டுகின்றோம்.


                              யாதானும் நாடாமால், ஊர்ஆமால், என்ஒருவன் 
                                சாந்துணையும் கல்லாத வாறு. – குறள் 397


                                                                             நன்றி.


வணக்கம்.
நிர்வாகம்,
பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கம்.

Letter KWS UK 01Letter to Book UK 02

காரைச் சங்கமம் 2015

காரைச் சங்கமம் 2015 காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

பஞ்சபாண்டவர் தலைமையில் சங்கமானது ”காரை சங்கமம் 2015”

1 (Copy)

பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கத்தின் விளையாட்டு போட்டியுடன் கூடிய ஒன்றுகூடல்.


காரைச் சங்கமம் 2015.

நேற்றைய தினம் (12/07/2015) அன்று  Kinsbury High School மைதானம், Stag Lane , Kingsbury , London , NW9 9AA  எனும் இடத்தில் 1000இக்கும் மேற்பட்ட மக்களுடன், பஞ்சபாண்டவர் தலைமையில் இனிதே நிறைவுற்றது காரைச் சங்கமம் 2015.

    பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கத்தின் ஆரம்பகால தலைவரும் எமது மூத்த தலைவருமான திரு.ந .ராஜேந்திரா அண்ணா அவர்களும், அவரிடம் இருந்து பொறுப்பேற்ற தலைவர் திரு.இ .சுந்தரதாசன் , அடுத்து வந்த தலைவர் திரு.v .நாகேந்திரம், இவரிடம் இருந்து பொறுப்பேற்ற தலைவர் ப.தவராஜா மற்றும் தற்போதைய தலைவர் திரு.S . கோணேசலிங்கம் –KKV நாதன்-   ஆகிய தலைமைகளின் சங்கமத்தில் சங்கமித்தது ''காரைச் சங்கமம் 2015''

பிரதம விருந்தினராக  காரை இந்துக் கல்லூரியில் 18 வருட காலம்(1965-1983) விஞ்ஞானம் , பௌதீகவியல் மற்றும் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியராக அரும்பணியாற்றிய இளைப்பாறிய ஆசிரியர் திரு A .சோமாஸ்கந்தன் அவர்களும்,

 சிறப்பு விருந்தினராக நியூயார்க், அமெரிக்காவில் இருந்து வைத்திய கலாநிதி ராதா செல்வரத்தினம் கோபால் – ராதகோபால் – அவர்களும் ,

 கௌரவ விருந்தினர்களா பிரான்ஸ் நகரத்தில் இருந்து இணையற்ற சமூக சேவையாளர், இளைப்பாறிய ஆசிரியர் திரு. A . செல்வச்சந்திரன் -நேரு மாஸ்டர் – அவர்களும்,திரு முத்துலிங்கம் ஐயா அவர்களும், கனடாவில் இருந்து கனடா காரை கலாச்சார மன்றத்தின் கடந்தகால தலைவர் திரு.த .பரமானந்தராஜா அவர்களும், கனடா காரை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு . M . வேலாயுதபிள்ளை , திரு கார்த்திகேசு சிவசோதிநாதன் அவர்களும் மற்றும் ஜேர்மனியில் இருந்து திரு. K . ஆனந்தசற்குணநாதன் அவர்களும் , புங்குடுதீவு நலன் புரிச்சங்க தலைவர் திரு. கங்காகுமாரன் , திரு.கருணைலிங்கம் அண்ணா , மற்றும் வேலணை மத்திய கல்லூரி தலைவர் திரு நடா சிவா அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


ஒரு விளையாட்டு நிகழ்வில் குறிப்பாக அஞ்சல் ஓட்ட (Relay Running ) போட்டியில் ஒரு குழுவில் 5பேர் பங்குபற்றினால் முதலில் அஞ்சல் கோலை நிதானமாகவும் வேகமாகவும் தடம் மாறாமல் ஓடி இரண்டாவது ஓட்ட வீரன் கையில் அந்த கோலை சரியான முறையில் பக்குவமாக கைமாற்றல் செய்வது என்பது விளையாட்டு விதியாக இருந்தாலும், இயற்கை நியதியும் அதுதானே.  

கொடுக்கப்பட்ட பொறுப்பை எந்தவித கருவுமின்றி, கர்வமின்றி, களவின்றி  நிறைவேற்றி அஞ்சல் கோலை அடுத்தவர் கையில் கைமாற்றுவது தானே ஒரு விளையாட்டு வீரனின் தகுதி , அதையும் தாண்டிய  இன்பம். 

அந்த வகையில் இன்று பிருத்தானியா காரைவாழ் மக்கள் பெருமிதம் கொள்ளும் நிலைக்கு  கடந்தகால தலைமைத்துவங்கள் இந்த அஞ்சல் கோலை சரியான முறையில் கைமாற்றியுள்ளன என்பதற்கு நேற்றைய சங்கமம்  எடுத்துக்காட்டு  என்றால் மிகையாகாது. 


எங்கள் முதுமொழி ஒன்று உளது '' ஆறிலும் சாவு நூறிலும் சாவு ''

பஞ்சபாண்டவர் ஐந்துபேர் , கௌரவர்கள் 99 பேர் , இடைநடுவில் கர்ணன் எனும் கொடைவள்ளல் ….

கர்ணன் பஞ்சபாண்டவருடன் சேர்ந்தால் ஆறு (6), கெளரவர்களுடன் சேர்ந்தால் நூறு (100),  இதில் கொடைவள்ளல் கர்ணனுக்கு தான் ஒரு பகடைக்காய் என்பதும், எந்த பக்கம் சேர்ந்தாலும் தனக்கு சாவு குறிக்கப்பட்டுவிட்டது என்பதும் ஆரம்பத்தில் புரியவில்லை.  மாய லீலைக் கண்ணன் இந்த கொடை  வள்ளலை பல சூதுகள் செய்து ……….. இப்போ பாரதக் கதை புரிந்ததுதானே……மகா பாரதம்.!!!!!

மீண்டும் எமது காரைச் சங்கமம் நிகழ்வுக்குள் வருவோம்.

பிரதம அதிதி அவர்களின் அன்பான பேச்சு, சிறப்பு விருந்திரனரின் மெய்சிலிர்க்கும் கருத்து , கௌரவ விருந்தினர்களின் கபடமற்ற கண்ணியமான கருத்துப் பரிமாற்றங்கள் ………

மேலதிக புகைப்படங்களுடன் , செய்திகளையும் எதிர்பாருங்கள் .

1 (Copy)

IMM_8446 (Copy)IMM_8460 (Copy)IMM_8464 (Copy) IMM_8472 (Copy) IMM_8475 (Copy) IMM_8480 (Copy) IMM_8490 (Copy) IMM_8492 (Copy) IMM_8495 (Copy) IMM_8502 (Copy) IMM_8504 (Copy) P1020358 (Copy)

காரை சங்கமம் – 2015 நேரடி ஒளிபரப்பு இந்த இணையத்தளத்தில் எடுத்துவரப்படும்.

uk photo

பிருத்தானியா காரை நலன்புரிச்சங்கத்தின் வருடாந்த விளையாட்டுப்போட்டியும் ஒன்று கூடல் நிகழ்வும் இணையத்தளத்தினனூடாக நேரடி ஒளிபரப்புச் செய்யப்டுவதற்கான ஏற்பாடுகளை பிருத்தானியா காரை நலன்புரிச்சங்கம் செய்துள்ளது. 


இந்நிலையில் அவ்நேரடி ஒளிபரப்பினை எமது இணையத்தளமான http://WWW.KARAINAGAR.COM  இனூடகவும் எடுத்தவரப்படும் என்பதனை வாசகர்களுக்கு அறியத் தருகின்றோம். 


இவ்வொளிபரப்பு லண்டன் நேரம் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை இடம்பெறும். 


கனடா நேரம் அதிகாலை 5:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை காணலாம். 

 


 

காரை இந்துவின் முன்னாள் விளையாட்டுத்துறை ஆசிரியர் திரு.A.சோமாஸ்கந்தன் பிருத்தானியா சென்றடைந்தார்.

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் (காரைநகர் இந்துக் கல்லூரி) பௌதீகவியல், விஞ்ஞானம் ஆகிய பாட ஆசிரியராகவும், விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியராகவும் 18 ஆண்டுகள்(1965-1983) கடமையாற்றிய திரு.A.சோமாஸ்கந்தன் அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை(10.07.2015) பிற்பகல் 2:00 மணியளவில் லண்டன் Heathrow விமான நிலையத்தைச் சென்றடைந்தார். 


நேற்று வெள்ளிக்கிழமை மதியம் காரை இந்துவின் மற்றொரு விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்கள் ஆசிரியர் திரு.A.சோமாஸ்கந்தன் அவர்களை கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து வழியனுப்பி வைத்திருந்தார்.


கொழும்பு, கட்டுநாயக்கா விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.

13397

1429220052
பிருத்தானிய காரை நலன்புரிச் சங்கத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவரும் விளையாட்டுப்போட்டியுடன் கூடிய ஒன்றுகூடல் நிகழ்வான காரை சங்கமம்-2015 இல் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்வதற்காகவே திரு.A.சோமாஸ்கந்தன் லண்டன் சென்றடைந்துள்ளார். 


ஆசிரியர் திரு.A.சோமஸ்கந்தனை லண்டன் விமானநிலையத்தில் பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கத்தினர் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்து வரவேற்றனர். 


லண்டன் Heathrow விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.

UK-1UK-2UK-3

இதேவேளையில் விளையாட்டுத்துறையில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்து பல வரலாற்று சாதனை மாணவர்களை காரை இந்து விளையாட்டு மைதானத்தில் உருவாக்கிய ஆசிரியர் திரு.A.சோமாஸ்கந்தன் அவர்களை காரை சங்கமத்தில் பிருத்தானியா விளையாட்டு மைதானத்தில் மீண்டும் சந்திக்க கல்லூரியில் சாதனை படைத்த முன்னாள் விளையாட்டு வீரர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். 


மேற்படி முன்னாள் விளையாட்டு வீரர்களை பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கமும் விருந்தினர்களாக அழைத்து மதிப்பளிக்கும் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. 


அந்தவகையில் சிறப்பு விருந்தினராக நியூயோர்க் அமெரிக்காவில் இருந்து இதய மருததுவ நிபுணர் மருத்துவ கலாநிதி. ராதகோபாலன் செல்வரத்தினம் அவர்களும்,

கௌரவ விருந்தினர்களாக பிரான்சிலிருந்து கல்லூரியின் முன்னாள் விளையாட்டுத்துறை ஆசிரியர் திரு.அ.செல்வச்சந்திரனர்(நேரு மாஸ்ரர்) அவர்களும், ரொரன்ரோ, கனடாவிலிருந்து காரை இந்து பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்களும், மொன்றியல், கனடாவிலிருந்து காரை இந்துவின் முன்னாள் விளையாட்டு வீரர் திரு.கார்த்திகேசு சிவசோதிநாதன் அவர்களும், ஜேர்மனியிலிருந்து காரை இந்துவின் முன்னாள் விளையாட்டு வீரர் திரு.கந்தமூர்த்தி ஆனந்தசற்குணநாதன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.


இதேவேளையில் கனடா காரை கலாச்சார மன்றத்தின் முன்னாள் தலைவரும் காரை இந்துவின் முன்னாள் விளையாட்டு வீரருமான திரு.தம்பிஐயா பரமானந்தராஜா அவர்களும் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. 


இடம்:- Kinsbury High School மைதானம், Stag Lane , Kingsbury , London , NW9 9AA ,
 

 
காலம்:- 12/07/2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி முதல் மாலை 06:00 மணிவரை

காரை சங்மம்-2015 நிகழ்வுகளை lankasritv.net, karainagar.com, karainagar.co    ஆகிய இணையத்தளங்களில் லண்டன் நேரம் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நேரடி ஒளிபரப்பாகக் காணலாம்.  

 

 

காரைச் சங்கமம் 2015.

uk photo

பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கத்தின் விளையாட்டு போட்டியுடன் கூடிய ஒன்றுகூடல்.

 

இடம்:- Kinsbury High School மைதானம், Stag Lane , Kingsbury , London , NW9 9AA ,

காலம்:- 12/07/2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி முதல் மாலை 06:00 மணிவரை.

பிரதம விருந்தினராக  காரை இந்துக் கல்லூரியில் 18 வருட காலம்(1965-1983) விஞ்ஞானம் , பௌதீகவியல் மற்றும் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியராக அரும்பணியாற்றிய இளைப்பாறிய ஆசிரியர் திரு A .சோமாஸ்கந்தன் அவர்களும்,


 சிறப்பு விருந்தினராக நியூயார்க், அமெரிக்காவில் இருந்து வைத்திய கலாநிதி ராதா செல்வரத்தினம் கோபால் – ராதகோபால் – அவர்களும் ,


 கௌரவ விருந்தினர்களா பிரான்ஸ் நகரத்தில் இருந்து இணையற்ற சமூக சேவையாளர், இளைப்பாறிய ஆசிரியர் திரு. A . செல்வச்சந்திரன் -நேரு மாஸ்டர் – அவர்களும் , கனடாவில் இருந்து கனடா காரை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு . M . வேலாயுதபிள்ளை , திரு கார்த்திகேசு சிவசோதிநாதன் அவர்களும் மற்றும் ஜேர்மனியில் இருந்து திரு. K . ஆனந்தசற்குணநாதன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கிறனர்.


இத்தருணம் பிருத்தானியா வாழ் காரை மக்கள் அனைவைரும் கலந்துகொண்டு , மைதானத்தில் பரிமாறப்படும் கூழ் முதலிய தாயக உணவு வகைகளையும் உண்டு, சிறியவர் பெரியவர்களுக்ககான விளையாட்டு போட்டிகளிலும் பங்குபற்றி மகிழுமாறு அன்புடன் அழைக்கின்றனர் பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கத்தினர்.


மேலதிக தொடர்புகளுக்கு:-

நாதன் -07944 232014    மனோ – 07859 900771 , குமார் – 07951 950843.

 

நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு –  lankasritv.net  , மற்றும் www .karainagar .co   எனும் இணையத்தள முகவரிக்கு 12/07/2015 காலை 10:00 மணி முதல் மாலை 06:00 மணிவரை தொடர்பு கொள்ளுங்கள். 

 

நன்றி 

வணக்கம்.


நிர்வாகம்.

பிருத்தானியா காரை நலன்புரிச்சங்கம்.

திரு.அருணாசலம் சோமாஸ்கந்தன் அவர்களின் பணி

        திரு.அருணாசலம் சோமாஸ்கந்தன் அவர்களின் பணி
                                     – எஸ்.கே.சதாசிவம் –

image001
    யா/காரைநகர் இந்துக் கல்லூரியில் (கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகாவித்தியாலயம்) பதினெட்டு ஆண்டுகள் பணியாற்றியதன் பயனாக காரைநகர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுக்கொண்டவர். பௌதீகவியல், விஞ்ஞானம் ஆகிய பாடங்களைக் கற்பித்தலில், கற்பித்தல் நுட்பங்களைக் கையாண்டதுடன் தேவைப்படும் உபகரணங்களையும் தன் முயற்சியினால் ஆக்கிக் கொள்ளும் வல்லமை படைத்தவர். 

    தன் கல்லூரிக் காலத்தில் மெய்வல்லுனர் நிகழ்வுகள், மற்றும் உதைபந்தந்தாட்டம் ஆகிய நிகழ்வுகளில் பங்குபற்றியமையினால் தொடர்ந்தும் விளையாட்டுத் துறையில் ஈடுபட்டு அக்கறையுடன் உழைத்தவர்.

    காரைநகரில் இருந்து 1983ல் இடமாற்றம் பெற்று சில காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின் யாழ்ப்பாணக் கல்வி வலயத்தின் விஞ்ஞானபாட சேவைக்கால ஆலோசகராகப் பணியாற்றினார். கற்பித்தலில் சிறப்பான அணுகுமுறை. பாடம் தொடர்பான தெளிவான அறிவு. நிறைவான சிந்தனை, சிரமம் பாராது கருமம் ஆற்றும் பண்பு ஆகியன கல்வி உலகில் திரு.சோமாஸ்கந்தனுக்கு கௌரவத்தைப் பெற்றுக்கொடுத்தன. க.பொ.த.சாதாரண தர விடைத்தாள்கள் திருத்தம் செய்கின்ற குழுவில் பிரதம புள்ளியிடும் பரீட்சகராக கடமையாற்றினார்.

    வட்டுக்கோட்டை வட்டாரப் பாடசாலைகளின் மெய்வல்லுனர் நிகழ்வுகளின் செயலாளராக நீண்ட காலமாகக் கடமையாற்றினார்.

    கொழும்பைத் தலைமையகமாகக் கொண்ட உதைபந்தாட்ட மத்தியஸ்தர் சங்கம் நடத்திய மத்தியஸ்தர் பரீட்சையில் சித்திபெற்று இரண்டாம் தர மத்தியஸ்தராகவும் (Class – II Referee) மெய்வல்லுனர் சங்கம் நடாத்திய ஆரம்பிப்பாளர், நேரங்கணிப்பாளர், மைதான சுவட்டு நிகழ்வுகளின் நடுவர் தேர்வுகளில் சித்திபெற்று விளையாட்டுத் துறை அலுவலராகவும் பணியாற்றினார்.

    1965ஆம் ஆண்டு ஜுலை மாதம் நியமனம் பெற்று காரைநகருக்கு வருகைதந்த சோமாஸ்கந்தன் அன்றைய காலத்தில் காரைநகரில் கடமையாற்றும் அரச அலுவலர்கள் தங்கும் அல்லின் வீதியில் அமைந்துள்ள விடுதியில் 1970 வரை வசித்தார். 

    திரு.சோமாஸ்கந்தன் கடமையேற்ற வேளை காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும், சிறந்த ஓட்ட வீரரும் உதைபந்தாட்ட வீரருமான திரு.ஆ.குமாரசாமி இந்தியாவில் Y.M.C.A. யில் விளையாட்டுத்துறைப் பயிற்சியை நிறைவு செய்து விளையாட்டுத்துறை ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டு இருந்தார். மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதில் இருவரும் சிறந்த நிபுணத்துவம் பெற்றிருந்தமையால் கல்லூரியின் விளையாட்டுத்துறை உன்னத நிலையை நோக்கி நகர்ந்தது.

    கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகள் அமெச்சூர் மெய்வல்லுனர் சங்க (Amateur Athletic Association) விதிகளுக்கமைவாக நடைபெறுவதை திரு.சோமாஸ்கந்தன் உறுதி செய்தார். (மைதான சுவட்டு நிகழ்வுகளுக்கு மைதானத்தை தயார்செய்தல், போட்டி நடைபெறும் ஒழுங்குமுறை) 

    விளையாட்டுப்போட்டி தினத்தன்று நடைபெறும் நிகழ்ச்சிகள், மைதான சுவட்டு நிகழ்வுகளில் மாணவர்கள் பெற்ற திறனை (புறப்படுகை, நிறைவு செய்தல், அஞ்சல் கோல் பரிமாற்றம், எறிதல், பாய்தல், விளையாட்டு விதிமுறைகளுக்கு அமைவாக போட்டியில் பங்குபற்றல்) ஏனைய மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் கண்டு கொள்வதற்கான வகையில் அமையும்.

    விளையாட்டுப் போட்டி அழைப்பிதழின் இறுதிப்பக்கத்தை சாதனையாளர் பட்டியல் அலங்கரிக்கும். ஒவ்வொரு ஆண்டும் புதிதாக சாதனைகள் ஏற்படுத்தப்படும்பொழுது போட்டி முடிவு கிடைத்தவுடன் சாதனையாளரின் சாதனை விபரம் அறிவிக்கப்படும். பரிசளிப்பு நிகழ்வின் போது விஷேட பரிசில்கள் வழங்கி சாதனையாளர் கௌரவிக்கப்படுவர். 

    விளையாட்டுப் போட்டிப் பணிகள் ஆரம்ப தினத்திருந்து சுவடுகள் அமைத்தல் விளையாட்டுப்போட்டி முடிவடைந்த பின் அனைத்து தளபாடங்களையும் பாடசாலை வளாகத்திற்குள் எடுத்துச் செல்வது வரை சுயமாகச் செயலாற்றும் மாணவர் அணி பணிக்காகக் காத்திருக்கும். 

    விளையாட்டுப்போட்டிகளுக்கு குறிக்கப்பட்ட பணிகளுக்கு உரிய தகுதி பெற்றவர்கள் அலுவலர்களாகப் பணியாற்ற அழைக்கப்படுவர். விளையாட்டுத்துறையில ஆர்வம் உள்ளவர்கள் அழைக்கப்பட்டு விளையாட்டுப் போட்டி நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்பாக விளையாட்டுப் போட்டியில் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய அம்சங்கள் தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். இதன் மூலம் தகுதி வாய்ந்த அலுவலர்குழாம் ஒன்றை திரு.சோமாஸ்கந்தன் உருவாக்கினார்.

    1970களின் நடுப்பகுதிகளில் யாழ் மாவட்ட கல்வித்திணைக்களம் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கிடையே நடத்திய மெய்வல்லுனர்ப்போட்டியில் காரைநகர் இந்துக்கல்லூரி முதலாம் இடத்தைப் பெற்றது. தனி வீரர்களுக்கிடையிலான மெய் வல்லுனர் நிகழ்வுகளில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொள்ளும் பாடசாலை எதுவென தெளிவற்ற பரபரப்பான சூழ்நிலை மைதானத்தில் காணப்பட்டது. இடைவேளையைத் தொடர்ந்து நடைபெற்ற 4x100m, 4x400m  அஞ்சல் ஓட்டப் போட்டிகளில் காரைநகர் இந்துக்கல்லூரியின் அஞ்சல் ஓட்டக் குழுக்கள் முதலாம் இடத்தைப் பெற்றதன் மூலம் தெளிவற்ற பரபரப்பான சூழ்நிலை அகன்று யாஃகாரைநகர் இந்துக் கல்லூரியின் முதலாம் இடம் உறுதி செய்யப்பட்டது. 

    விளையாட்டுப் போட்டியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட பிரதம கல்வி அதிகாரி திரு.எஸ்.தங்கராசா அவர்கள் உரையாற்றும் பொழுது கிராமியப் பாடசாலை ஒன்று நகரப் பாடசாலைகளுடன் போட்டியிட்டு முதலாம் இடத்தைப் பெற்றமை அப்பாடசாலையும், சமூகமும் விளையாட்டுத்துறையில் காட்டுகின்ற அர்ப்பணிப்பும், அக்கறையும், முயற்சியும் பாராட்டப்பட வேண்டியது எனக் குறிப்பிட்டார். 

    1934ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கைப் பாடசாலை விளையாட்டுப்போட்டிகளில் (All Ceylon Inter School Alhletic Meet) திரு.அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை, கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் ஆகியோர் தேசிய ரீதியில் பரிசு பெற்ற கல்லூரியின் முதல் மாணவர்கள்.

    திரு.அ.சோமாஸ்கந்தன் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட பின்வரும் மாணவர்கள் யாழ்.மாவட்டத்தில் முதலாம் இடம் பெற்று தேசியப் போட்டிகளில் பங்குபற்றி பரிசுகள் பெற்றனர். 

இலங்கைப் பாடசாலைகள் சங்க மெய்வல்லுனர் போட்டிகள் 

திரு.செல்வரத்தினம் இராதகோபாலன் 1973ஆம் ஆண்டு போட்டியில் 100மீற்றர் உயரம் பாய்தல் நிகழ்வுகளில் முதலாம் இடத்தைப்பெற்று தங்கப் பதக்கத்தையும் நீளம் பாய்தலில் இரண்டாம் இடத்தைப்பெற்று வெள்ளிப் பதக்கமும் 1974ஆம் போட்டியில் 100மீற்றரில் முதலாம் இடத்தைப்பெற்று தங்கப் பதக்கத்தையும் நீளம் பாய்தலில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கமும் பெற்றரர்.

    திரு.கந்தமூர்த்தி ஆனந்த சற்குணநாதன் 1977 – 1981 வரை நடைபெற்ற போட்டிகளில் 200மீற்றர், 400மீற்றர், 400 மீற்றர் தடை தாண்டல், ஈட்டி எறிதல், தட்டெறிதல், முப்பாச்சல் நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி 400 மீற்றர் தடை தாண்டல் நிகழ்ச்சியில் பரிசு பெற்றார்.

    திரு.சபாரத்தினம் கோவிந்தராசா 1977 – 1981 வரை நடைபெற்ற போட்டிகளில் 100மீற்றர், 200மீற்றர், நீளம் பாய்தல் நிகழ்வுகளில் பங்குபற்றினார்.

    திரு.திருநாவுக்கரசு யோகராஜா 1977 – 1982 வரை நடைபெற்ற போட்டிகளில் 1500மீற்றர். 3000 மீற்றர் நிகழ்வுகளில் பங்குபற்றி பரிசில் பெற்றரர்.

    திரு.கந்தமூர்த்தி ஆனந்தசற்குணநாதன் யாழ் மாவட்டத்தில் உதைபந்தாட்டத்தில் முன்னணி வீரர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டு இலங்கைப் பாடசாலை உதைபந்தாட்ட அணித்தெரிவிற்கான போட்டிகளில் பங்குபற்றினார்.

    பாடசாலை மாணவர்களின் பயிற்சி நிறைவடையும் வரை பொறுமையுடன் மைதானத்திற்கு வெளியே காத்திருக்கும் பழைய மாணவர்கள். கழகங்களின் வீரர்களுடன் உதைபந்தாட்டத்தில் பங்குபற்றுவார். இவர்களுக்கு விளையாட்டுக்குத் தேவையான பயிற்சிகள், சட்டவிதிகள் பற்றி போதனை வழங்கப்படும். மாலை முடிவடைகின்றது. வீடு செல்ல வேண்டும் என்கின்ற அவசர நிலை என்றுமே திரு.சோமாஸ்கந்தன் முகத்தில் தெரிவதில்லை. திரு.சோமாஸ்கந்தன் பாடசாலைக்கு வெளியே வாழ்ந்த காரைநகர் இளைய சமூதாயத்தின் நன்மதிப்புக்கும் பாத்திரமானவர்.

    திரு.சோமாஸ்கந்தன் சிறந்த பயிற்றுனராக ஊக்குவிப்பாளராக திகழ்ந்தமையினால் அவர் காலத்தில் மாணவர்கள் மத்தியில் விளையாட்டுத்துறையில் ஆர்வம் காணப்பட்டது. இதன் பயனாக அவர்களின் பணிக்காலத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இளைய தலைமுறை விளையாட்டுத் துறையில் தகுதி பெற்றது. 

    பாடசாலைக்கு வந்தோம். படித்தோம், விளையாட்டு மைதானத்திற்கு சென்றோம், விளையாடினோம் என்ற நிலையை மாற்றி ஒரு அசைவு நிலையை ஏற்படுத்தியவர். 

    திரு.சோமாஸ்கந்தனிடம் விஞ்ஞானம் கற்றோம், விளையாட்டுப் பயின்றோம் என்று சொல்கின்ற மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து செயற்படும் விழிப்பு நிலையை அவதானிக்கலாம்.

 காரை நலன்புரிச்சங்கம் லண்டன் திரு. சோமாஸ்கந்தன் இடமாற்றம் பெற்றுச்சென்று  30 ஆண்டுகள் கடந்த பின்னர் தனது இருபத்தைந்தாவது ஆண்டு "காரை சங்கமம்" விளையாட்டு நிகழ்விற்கு திரு.சோமாஸ்கந்தன் அவர்களை பிரதம விருந்தினராக அழைத்து கௌரவிப்பதன் மூலம் திரு.சோமாஸ்கந்தன் அவர்கள் ஏற்படுத்திய அசைவின் உணர்வு இன்று வரை உணரப்படுகின்றதே என்பதே பொருளாகும்.

காரைச் சங்கமம் 2015.

KWS-UK LOGO

பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கத்தின் விளையாட்டு போட்டியுடன் கூடிய ஒன்றுகூடல்.

இடம்:- Kinsbury High School மைதானம், Stag Lane , Kingsbury , London , NW9 9AA ,

காலம்:- 12/07/2015 ஞாயிற்றுக்கிழமை காலை 09:30 மணி முதல் மாலை 06:00 மணிவரை.

பிரதம விருந்தினராக  காரை இந்துக் கல்லூரியில் 18 வருட காலம்(1965-1983) விஞ்ஞானம் மற்றும் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியராக அரும்பணியாற்றிய இளைப்பாறிய ஆசிரியர் திரு A .சோமாஸ்கந்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ்- கொழும்பு  Queency புத்தகசாலை உரிமையாளர் திரு S . கணநாதன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.

    கூழ் முதலிய தாயக உணவுவகைகளும், சிறியவர் பெரியவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் உண்டு.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் பிருத்தானியாகாரை நலன் புரிச்சங்கத்தினர்.

மேலதிக தொடர்புகளுக்கு:-
நாதன் –07944 232014    மனோ – 07859 900771 , குமார் – 07951 950843.

நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு –  lankasritv.net  எனும் இணையத்தள முகவரிக்கு 12/07/2015 காலை 10:00 மணி முதல் மாலை 06:00 மணிவரை தொடர்பு கொள்ளுங்கள். 

நன்றி 
வணக்கம்.

நிர்வாகம்.
பிருத்தானியா காரை நலன்புரிச்சங்கம்.

பிருத்தானியா காரை இளையோர் அமைப்பின் ஒன்றுகூடல்.

IMG_1253 (Copy)

பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கத்தின் மற்றுமோர் மைல் கல்லாக தடம் பதித்தது பிருத்தானியா வாழ் இளையோர் அமைப்பின் இன்றைய(27/06/2015) ஒன்றுகூடல்.

40இக்கும் மேற்பட்ட இளையோர் இணைந்து கொண்டனர்.

தத்தம் அறிமுகங்களுடன், சுவாரசியமான குழு நிகழ்வுடன், இராப்போசன விருந்துடன்  தொப்புள்கொடி உறவுகளின் தொடக்கம்.

வருடத்தில் குறைந்த பட்சம் மூன்று இளையோர் நிகழ்வுகள் நடாத்த முயற்சி..

பல்கலைக்கழகம் முடித்து வெளிவரும் மருத்துவம் , பொறியியல், சட்டத்துறை, கணணி பொறியியல், மற்றும் இயலிசை  சார்ந்த இளையோரை வருடாவருடம் சிறு சிறு குழுக்களாக எமது சொந்த மண்ணுக்கு அனுப்பி, அங்கு அந்தந்த துறை சார்ந்து பயிலும்  எமது இளையோருடன் இவர்களது அறிவியல் அனுபங்களை பகிர்தலுக்கான முயற்சிகளை பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கம், இளையோர் அமைப்புடன் கூடி எதிர்காலத்தில் முன்னெடுக்கும்.

முழுமையான செய்திகள் விரைவில்…..

IMG_1057 (Copy) IMG_1062 (Copy) IMG_1064 (Copy) IMG_1065 (Copy) IMG_1067 (Copy) IMG_1068 (Copy) IMG_1069 (Copy) IMG_1070 (Copy) IMG_1071 (Copy) IMG_1073 (Copy) IMG_1075 (Copy) IMG_1096 (Copy) IMG_1119 (Copy) IMG_1120 (Copy) IMG_1121 (Copy) IMG_1122 (Copy) IMG_1123 (Copy) IMG_1125 (Copy) IMG_1127 (Copy) IMG_1129 (Copy) IMG_1134 (Copy) IMG_1143 (Copy) IMG_1155 (Copy) IMG_1158 (Copy) IMG_1165 (Copy) IMG_1166 (Copy) IMG_1175 (Copy) IMG_1176 (Copy) IMG_1177 (Copy) IMG_1178 (Copy) IMG_1179 (Copy) IMG_1183 (Copy) IMG_1189 (Copy) IMG_1192 (Copy) IMG_1217 (Copy) IMG_1220 (Copy) IMG_1221 (Copy) IMG_1228 (Copy) IMG_1229 (Copy) IMG_1231 (Copy) IMG_1236 (Copy) IMG_1237 (Copy) IMG_1244 (Copy) IMG_1251 (Copy) IMG_1253 (Copy)

 

பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கத்தின் இளையோர் அமைப்பின் முதல் ஒன்று கூடல் .(KARAI YOUTH ORGANISATION –UK (KYO-UK) – MEET & GREET EVENT)

பிரித்தானியா காரை இளையோர் அமைப்பின் ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை, 27ம் திகதி யூன் மாதம் 2015, மாலை 06:00 மணியில் இருந்து 10:00 மணி வரை ,Hatch End Suites, Harrow Arts Centre, 171 Uxbridge Road, Hatch End, HA5 4EA என்னும் இடத்தில் நடைபெறவுள்ளது. 


KYO-UK’s meet & greet event will be held on Saturday 27th June 2015 between 6:00PM – 10:00PM at ‘Hatch End Suites’ Harrow Arts Centre, 171 Uxbridge Road, Hatch End, HA5 4EA.
  

பிரித்தானியா வாழ் காரை இளையோரை ஒன்று திரட்டும் நோக்கில் அமையும் இவ்வமைப்பில் 16 – 29 வயதிற்கு இடைப்பட்ட இளையோர் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது  பிரித்தானியா காரை இளையோர் அமைப்பு. 

தங்கள் வருகையை தயவுசெய்து முன்கூட்டியே karaiyouthorganisation@gamil.com எனும் மின்னஞ்சல் முகவரியில்  பதிவு செய்யுங்கள். – 

இராப்போசன விருந்துடன் கூடிய இளையோரின் ஒன்றுகூடல்.

நாம் அறிந்த எம் உறவை , எங்கள் ஊர் உரிமைகளை நம் பிள்ளைகளுக்கு நாம் உணர்தாவிட்டல் வேறு யார் எடுத்துரைப்பார்.

ஒன்றிணைப்போம் எமது இளையோரை , ஒருங்கிணைவோம் எங்கள் இளையோருடன்.

அனுமதி இலவசம்.  

குறிப்பு:- காரை மண்ணின் இளையோர் மட்டும் ஒருங்கிணையும் இந்நிகழ்வில், பெற்றோர்கள் தயவுசெய்து நேரத்துக்கு அவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை செய்துதருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Note to Parents – Please arrange for your children to be drop off and picked up promptly. 

 


நன்றி 

வணக்கம்.

KWS-UK & KYO-UK.

Web_newsto_CKCA_

காரை சங்கமம் 2015 விளையாட்டு போட்டியுடன் கூடிய ஒன்றுகூடல்

காரை-சங்கமம்-2015-விளையாட்டு-போட்டியுடன்-கூடிய-ஒன்றுகூடல்1

 

காரை சங்கமம் 2015 விளையாட்டு போட்டியுடன் கூடிய ஒன்றுகூடல்

காரை-சங்கமம்-2015-விளையாட்டு-போட்டியுடன்-கூடிய-ஒன்றுகூடல்1

 

பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட வசிட்ட மாமுனி வைத்தீஸ்வர குருக்கள் அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைக் கூட்டம் இன்று மாலை (03/05/2015) நிறைவுற்றது.

வைத்தீஸ்வர குருக்கள் அவர்களின் ஆத்ம திருப்திக்கு  இணங்க தேவாரம், திருவாசகம், திருமதிரம் பண்ணிசை கச்சேரியுடன், பல அறிஞர்களின் உரையும் இடம்பெற்றது.

பண்ணிசை பாடிய செல்விகள் சாம்பவி உதயகுமார், மாதங்கி உதயகுமார் இருவருமே ஈழத்து சிதம்பர புராணத்தின் நூலாசிரியர் புலவர்மணி சோ .இளமுருகனார் , உரையாசிரியர் பண்டிதைமணி திருமதி ப.இளமுருகனார் ஆகியோரின் பூட்டிகள் என்பது பாடி முடித்த பின்பே திரிய வந்தது கூடியிருந்த மக்களை வியக்க வைத்தது. அது மட்டுமல்ல இந்த தொடர்பு எப்படி வந்தது , ஏன் வந்தது என்பவற்றை தாண்டி இதன் பின்னால் ஒரு சூக்கும சக்தி இதனை வழிநடத்தியத்தை உணரமுடிந்தது.

எட்மொண்டன்(Edmonton ) நாகபுஷணி அம்மன் ஆலய பிரதம குரு  சிவஷிறி கமலநாதக் குருக்கள், எமது மண்ணின் ஊடகவியலாளரும், பிருத்தானியா தமிழோசை வானொலி சேவையின் அறிவிப்பாளருமான திரு இளையதம்பி தயானந்தா, சுடரொளி ஆசிரியர் திரு .ஐ.தி . சம்பந்தன் அவர்கள், செந்தமிழ் வித்தகி , சித்தாந்த ரத்தினம் திருமதி அருளாம்பிகை குணராசா, காரை சுந்தரம்பிள்ளையின் புதல்வி திருமதி மாதவி சிவலீலன், சர்வதேச இந்து இளைஞர் மன்ற இஸ்தாபகர் திரு. சிவபாதம் கணேஷ்குமார், மற்றும் திரு க .ஒப்பிலாமணி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

 மணிவாசகர் சபையினால் வருடம் தோறும் நடாத்தப்படும் திருவாசகம் முற்றும் ஓதல் மனனப் போட்டியில் சித்திபெறும் முதல் மாணவ மாணவியர்களுக்கான தங்கப் பதக்கம் இனிவரும் காலங்களில்  ''கலாநிதி சிவஷிறி க.வைத்தீஸ்வரர் ஞாபகார்த்த  புலமைப் பதக்கம்'' எனும் பெயரால் அழைக்கப்பட வேண்டும் என்றும், இதற்கான நிதியுதவியினை வருடம் தோறும் பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கம்  வழங்க வேண்டும் என்றும் போஷகர் சபை சார்பாக ப.தவராஜா வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார்.

மேலும் விபரமான செய்திகள், பண்ணிசைக் காணொளிகள், அறிஞர்கள் உரைகள், மேலதிக புகைப்படங்கள்  என்பன ஓரிரு தினங்களில்  எடுத்துவரப்படும்.


நன்றி.

நிர்வாகம்.

பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கம் 

 

1 (Copy) 2 (Copy) 3 (Copy) 4 (Copy) 5 (Copy) 6 (Copy) 7 (Copy) 8 (Copy) 9 (Copy) 10 (Copy) 11 (Copy) 12 (Copy) 13 (Copy) 14 (Copy) 15 (Copy) 16 (Copy) 17 (Copy)

 

 

நினைவஞ்சலி கூட்டம்!

Vythees4

அன்பார்ந்த சைவத் தமிழ் உறவுகளே,

கடந்த சனிக்கிழமை 25/04/2015 அன்று எமது ஈழ மண்ணின்  வசிட்ட மாமுனி என்று வருணிக்கப்பட்ட சிவத்தமிழ்  வித்தகர், பண்டிதர், கலாநிதி சிவஸ்ரீ க. வைதீஸ்வர குருக்கள் அவர்களின் மறைவையொட்டி, வருகின்ற  ஞாயிற்றுக்கிழமை 03/05/2015 அன்று பிற்பகல் 05:00 மணியளவில் Hanuman Community Center (ஆஞ்சநேயர் ஆலயம்) , Marsh Drive , West Hendon ,NW9 7QE , எனும் மண்டபத்தில் அன்னாருக்கான ஆத்மா சாந்தி பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றை பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம் ஒழுங்கு செய்துள்ளது.

 பல அறிஞர்களின் நல்லுரையுடன், திருமுறை ஓதலும், பண்ணிசையும், ஆத்மா சாந்திப் பிரார்த்தனையும் இடம்பெறும். அனைவரையும் கலந்துகொண்டு ஐயா அவர்களின் ஆத்மா சிவனடிசேர பிரார்த்திக்குமாறு வேண்டிக்கொள்கின்றோம் 

 

மேலதிக தொடர்புகளுக்கு 

நாதன்:-  07944 232014

குமார்:- 07951 950843

 

நன்றி 

பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கம் 

சிதம்பரத்தின் சிகரம் சாய்ந்தது. காரை மண்ணின் வசிட்ட மாமுனி சிவபதம்.

Vythees4

சிவத்தமிழ் வித்தகர், பண்டிதமணி, கலாநிதி சிவஷிறி கணபதீஸ்வரர் வைத்தீஸ்வரர் அவர்களின் சொரூபசமாதி அடைந்த செய்தி உலகம் வாழ் அனைத்துசைவ  தமிழ் நல்உள்ளங்களை ஒரு கணம் தவிக்க விட்டுள்ளது. சனி அதிகாலை ஐயாஅவர்களின் சமாதி அடைந்த செய்தி கேட்டதும் பிருத்தானியா வாழ் காரை மக்கள் அனைவரின் ஆழ்மனம்  ஒரு கணம் ஈழத்து சிதம்பரத்தை வலமிட்டது.

               15ம்  நூற்றாண்டின் குளக்கோட்டு மன்னன் ஆட்சிக் காலப்பகுதியில் உத்தரகோசமங்கையில் இருந்து திண்ணைபுரத்தான் திருப்பாதம் வந்தவர்கள்தான் மேதகு ஐயா அவர்களின் முதற்பரம்பரையினர். இவரது தந்தையார் கணபதீஸ்வரகுருக்கள் 24வது பரம்பரை. 18ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும். 19ம் நூற்றாண்டின் முற்காலப் பகுதியில் வாழ்ந்தவர் தான் இவரது தந்தையார். ஆண்டி கேணி ஐயனார்
 எவ்வாறு அமர்ந்திருக்கின்ராரோ  அதேபோல் தான் இவரது தந்தையாரும் குந்தி இருப்பார், இவரது காலபகுதியில் எம் மண்ணில் வாழ்ந்த பெரியவர்களுக்கு ஞாபகம் இருக்கும்.

                             உத்தரகோசமங்கையில் இருந்து வந்த இவர்கள் வழித்தோன்றலின் 25வதும் இறுதியானதுமான பரம்பரைதான்(ஈழத்து சிவனுக்கான சிவத்தொண்டு ) கலாநிதி சிவஷிறி க.வைத்தீஸ்வரர் குருக்கள். இவருக்கு தியாகராஜா, இரட்ணசபாபதி எனும் இரு சகோதரர்கள், நீலாம்பாள்(ஈஸ்வர குருக்கள் அவர்களின் தாயார் -தற்போதைய பிரதம குரு, ஈழத்து சிதம்பரம்), சௌந்தராம்பாள் எனும் இரு சகோதரிகள்.
                                                      திண்ணைபுரத்தான் தினசரி திருத்தொண்டை இவரது தமையனார் தியாகராஜா குருக்கள் அவர்கள் கவனிதுக்கொண்டபோதும் அவருக்கு சிவத்தொண்டில் உறுதுணை நிற்பார். இது தவிந்த நேரங்களில் சைவத்தை எப்படி பேணலாம், தமிழை எப்படி வளர்க்கலாம் என்ற முற்போக்கு சிந்தனை கொண்டவர்.இறுதி முச்சு வரையும் என் கடன் பணிசெய்து கிடப்பதே என்ற சிந்தனை கொண்டவர். எமது
 திண்ணைபுரத்தானுக்கு ''ஈழத்து சிதம்பரம்'' எனும் பெயர் பெற்றுத் தந்தவர், மணிவாசகர் சபை ஆரம்ப காரணகர்த்தா, சைவமகா சபையின் பொன்விழாமலர் நூலாசிரியர் , FXC நடராஜாஅவர்களின் காரை மான்மியம் வெளிவர காரணமாய் இருந்தவர் இப்படி பல நூல்கள் தோன்ற காரண கர்த்தாவாக இருந்தவர்.  இன்றுவரை (2015) எமது மண்ணில் வெளிவந்த அதிகூடிய நூல்களில் இவரது எழுத்து வன்மை மிளிர்கின்றது.

                                    தியாகராஜா குருக்கள் என்றால் ஒற்றைதிருக்கல் கூடார மாட்டு வண்டில் கண்முன் நிற்கின்றது. வைத்தீஸ்வர குருக்கள் என்றால் கரியர் பூட்டிய Raleigh சைக்கிளிலில் தோளில்உள்ள சால்வைத் துண்டும் பூனூலும் பறக்க , அவரும் ஊசிபோல் ஊடுருவிச் செல்வது எம்  கண்திரையில் விம்பமாகிவிட்டது.

                                                             இறைவன் படைப்பில் எல்லா ஆத்மாக்களும் அதனதன் கறும வினைகளுக்கேற்ப பூலோக வாழ்வினை தொடங்குகின்றன, ஒருசில புண்ணிய ஆத்மாக்களை மட்டுமே இறைவன் தன்னுடனேயே வைத்திருக்கின்றான். மாணிக்கவாசகர் கூறியதுபோல் ''சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாழ் வணங்கி '' என்ற சிவபுராணத்திற்கு இணங்க , சிவன் அருள் எங்கள் சிவஷிறி வைத்தீஸ்வர
 குருக்கள் அவர்களுக்கு பூரணமாக இருந்தபடியால் ஐயா அவர்கள் வயதில் மட்டுமல்ல, தன்    வாழ்க்கையிலும் 100 இக்கு 100 பெற்று சிவனிடம் சொரூபமாகிவிட்டார்.

                         யாழ் வலம்புரி பத்திரிகையில் ஆசிரியர் தலையங்க பகுதியில் (கடந்த ஞாயிற்றுக்கிழமை- 26/04/2015) ஐயா அவர்களின் மறைவையொட்டி எழுதப்பட்டுள்ள கட்டுரையில் '' காரைநகரின் வசிட்ட மாமுனிவர்'' என்று வருணித்திருக்கின்றார்கள்.

           எங்கள் மண்ணின் வைத்தீஸ்வரர் எனும் வசிட்டரின் மறைவு எமக்கு மட்டுமல்ல சைவத்துக்கும் எமது மொழி தமிழுக்கும் ஈடுபெறா இழப்பாகும். இருந்தும் நல்ல ஆத்மாக்கள் என்றென்றும் எங்களை வழிநடத்தும்.

           அன்னாரது ஆத்மா சாந்தியடைய, பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம் ''ஆத்மா சாந்தி பிரார்த்தனை கூட்டம்'' ஒன்றை வருகின்ற ஞாயிற்றுக்கிழமை(03/05/2015) அன்று பிற்பகல் 05:00 மணியளவில் Hanuman Community Center , Marsh Drive , West Hendon , NW9 7QE , எனும் மண்டபத்தில் ஒழுங்கமைப்பு செய்துள்ளது. பிருத்தானியா வாழ் காரை மக்கள் அனைவைரையும் கலந்து கொண்டு , எமது வசிட்ட மாமுனியின் நல்லாத்மா சிவனடி சேர
 பிரார்த்திக்குமாறு வேண்டுகின்றோம்.

மேலதிக தொடர்புகளுக்கு:-

நாதன்- 07944 232014

குமார்:- 07951 950843

நன்றி
 வணக்கம்.

நிர்வாகம்,
பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கம் .

”காரைக் கதம்பம் 2015”

பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொங்கல் விழாவான ''கதம்பம் 2015'' நிகழ்வு 31/01/2015 சனிக்கிழமை மாலை பிற்பகல் 04:30 மணியளவில் CANNONS HIGH  SCHOOL, SHALDON WAY , HARROW எனும் இடத்தில அமைந்துள்ள மண்டபத்தில், மண்டபம் நிறைந்த  பிருத்தானியா வாழ் காரை மக்களுடன் நடைபெற்றது. நிகழ்விற்கு பிரதம அதிதியாக திரு தம்பிராஜா விக்னேஸ்வரன் (கணித ஆசிரியர் , Queens Elizabath Grammer School -London ) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இவருடன் திரு .செந்தில்நாதன் M.A.கந்தையா(சென் கந்தையா ) அவர்களும் , எமது பிருத்தானியா வானொலி தமிழ் சேவையின் ( BBC ) ஊடகவியலாளர் திரு இளையதம்பி தயானந்தா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

                                  முறையே மங்கள விளக்கேற்றல், காரை கீதம்,தேவாரம், மௌன அஞ்சலி, வரவேற்புரை எனும் கலாச்சார துவக்க நிகழ்வுகளுடன் விழா ஆரம்பம் ஆனது. தொடர்ந்து சிறார்களின் கலை நிகழ்வுகளுடன் விழா நகர்ந்தது.  சிறுவர்களின் நிகழ்வுகளான பரத நாட்டியம், இசைக் கச்சேரி ,வாய்ப்பாட்டு , நாடகம், காவடி நடனம் என பல சுவாரசியமான நிகழ்வுகள் கதம்ப மேடையை அலங்கரித்தது.
                                                                                                                                         

பிரதம அதிதி திரு.த.விக்னேஸ்வரன் தமது உரையில் பிருத்தானியா வாழ் காரை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கல்விசார்ந்த பல நல்ல அறிவுரைகளை அள்ளிவளங்கினார். பிள்ளைகள் எவ்வாறு கல்வித்தரத்தை உயர்த்துவது , இதற்கு பெற்றோர்கள் எவ்வாறு பக்க துணையாக இருக்க வேண்டும், வீட்டில் பெற்றோர்கள் பிள்ளைகளுடன் எவ்வாறு நடந்துகொள்ளல் வேண்டும் என்று பல அற்புதமான அறிவுரைகளை நேரத்தையும் கருத்தில் கொள்ளாது தன்னை மறந்து ஓர் உண்மை பேச்சொன்றை ஆற்றியிருந்த்தார். (காணொளி பின்னர் இணைக்கப்படும்).

                                 எமது மன்றத்தின் 25வது நூற்றாண்டு நிறைவின் ஓர் தடமாகவும், பிருத்தானியா வாழ் காரை இளையோரை ஒன்றிணைக்கும் ஓர் உறவுப் பாலமாகவும் காரை இளையோர் அமைப்பு (KYO ) அன்றைய தினம் உருப்பெற்றது இவ்விழாவின் ஓர் சிறப்பு அம்சமாக அமைந்தது.  இந்த இளையோர் அமைப்பை எமது நிர்வாகம் ஓர் நீண்டநாள் கனவாக கொண்டிருத்ததும், அன்றையதினம் அது நனவாதும் உண்மையில் மன்றதிற்கு ஓர் புத்துணர்ச்சியை கொடுத்தது. இவ் இளையோர் அமைப்பை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பதற்கு எமது மன்றத்தின் பிதாமகன் Dr.S .சபாரட்ணம் அவர்களின் துணைவியார் திருமதி மங்கை சபாரட்ணம் அவர்களும் , செல்வி வர்ஷினி தியாகலிங்கம் அவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். இருந்தும் திருமதி .M . சபாரட்ணம் அவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் விழாவிற்கு  வருகைதர முடியவில்லை. எனவே செல்வி வர்ஷினி தியாகலிங்கம் அவர்கள் இவ் இளையோர் அமைப்பை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். செல்வி வர்சினி தியாகலிங்கம் 2011ம் ஆண்டு லண்டன் தேம்ஸ் நதியில் மேற்கொண்ட தொண்டு நீச்சல்( Charity Swimming ) மூலம் எமது மன்றத்திற்கு £7500.00 ரொக்கத் தொகையை (1.5மில்லியன் ரூபாய்கள் ) நிதி திரட்டித் தந்தவர் என்பதை இத் தருணத்தில் எமது மன்றம் நினைவுகூறி நன்றி பாராட்டியது.  இச் செயலையும், இவரையும் இவ் இளையோர் அமைப்பு ஓர் முன் ஊதாரணமாக எடுத்துக்கொள்ளும் என்பதில் ஐயம் இல்லை.

                          பிருத்தானியா வாழ் காரை இளையோர் அமைப்பின் பிரதான நோக்கங்களையும்  , விதிமுறைகளையும் இங்கே இணைக்கப்பட்டிருக்கும் காணொளி மூலம் தெரிந்து கொள்ளுங்கள்(  http://youtu.be/8IKfwpjyKSA)

                                மேலும் புதிய நிர்வாகசபைத் தலைவர் திரு.S.கோணேசலிங்கம் அவர்கள் தனது உரையில், மன்றத்தின் ஒற்றுமை கருதிய நல்ல பல கருத்துக்களை கூறினார். தொடர்ந்து அவர் தனது உரையில் இந்த மன்றத்தை ஆரம்பித்து வைத்து தனது இறுதி மூச்சுள்ளவரை, அதன் ஒற்றுமைக்காக பாடுபட்ட  மன்றத்தின் பிதாமகன் அமரர் Dr. S. சபாரட்ணம் அவர்களின் அயராத உழைப்பும், அவரது விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவமும், ஊர் நன்மைக்காக எதையும் நாம் இழக்கலாம் என்ற பெருமனதும் ( அவர் அடிக்கடி கூறும் வசனம் – ''எங்களுக்கு சிலுசிலுப்பு  தேவையில்லை பலகாரம் தான் தேவை'') இன்னமும் மன்றத்தில் மணம் வீசுவதால், இன்று இம் மன்றம் கடந்த 25ஆண்டுகளில் பல சேவைகளை ஆற்றியுள்ளது எனவும், கடந்த கால தலைவர்கள், நிர்வாகத்தினர்கள் பல இடர்களுக்கு மத்தியிலும் மன்றத்தின் வளர்ச்சியின் பங்களிப்பில் தங்களை முழு மனதோடு ஈடுபடுத்தி வந்தமையே இன்றைய இந்த வெற்றிக்கு காரணம் எனவும் கூறினார். இன்றைய இந்த மன்றத்தின் நிர்வாகம் கடந்தகால தலைவர்களான திரு.வி நாகேந்திரம் , திரு.இ.சுந்தரதாசன் மற்றும் திரு.ப.தவராஜா ஆகியோருடன் நானும் இணைந்து,இந்த நிர்வாகத்தை ஓர் கூட்டுத் தலைமையின் கீழ் நடாத்தி வருகின்றோம் என்றும், இது எம்மவர் மத்தியில் ஓர் எட்டுத்துக் காட்டாக அமையும் எனவும் கூறினார்.  

மன்றத்தின் கடந்தகால, எதிர்கால திட்டங்கள் பற்றியும், வருடாந்த விளையாட்டு போட்டியான ''காரை சங்கமம் 2015'' வருகின்ற ஜூலை மாதம் 12ம் திகதியும் , மன்றத்தின் 25வது ஆண்டு நிறைவு விழா செப்டம்பர் மாதம் 26ம் திகதி எனவும் தலைவர் அறிவித்தார். 

                          கதம்பத்தின் மற்றுமோர் கருநிகழ்வாக , எமது பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கத்தால், லண்டன் சைவ முனேற்ற சங்கத்தின் (38 வருடகால சமூக சேவை ) ஓர் அங்கமான  ''அறிவொளி  வளையம் ''(Enlightenment Circle ) யோகா  தொண்டு நிறுவனத்திற்கு ரொக்கத்தொகை £2500.00கள் (0.5மில்லியன் ரூபாய்கள் ) காசோலையை மன்றத்தின் செயலாளர் திரு.S .சிவம் அவர்கள் அறிவொளி  நிறுவன நிர்வாகத்திடம் (Dr . நவனீதராஜா மற்றும் திரு . அசோகன் )கையளித்தார். இந்நிதியுதவி வன்னிப் பகுதியில் ஆதரவற்ற 100 முதியோர்களுக்கு கண்படர் அகற்றல் (Catract Surgery ) சிகிச்சை மேற்கொள்வதற்கென வழங்கப்பட்டது. இச் சிகிச்சை முகாம் வருகின்ற July  மாத இறுதிப்  பகுதிக்குள் நடாத்தி முடிப்பதற்கான வேலைத்திட்டங்கள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எமது மன்றத்தால் கடந்த 3வருடங்களில் வன்னிப் பகுதிக்கு வழங்கப்பட்ட மூன்றாவது உதவி என்பது குறிப்பிடத்தக்கது. வழங்கப்பட்ட இத் தொகை பிருத்தானியாவில் உள்ள வியாபார நிறுவனங்களில் வைக்கப்பட்டிருக்கும் சிறு உண்டியல்கள் மூலம் சேர்க்கப்பட்ட நிதி என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. 

ஆர்த்தி தயானந்தாவின் நன்றியுரையுடனும், இராப்போசன விருந்துடனும் ''கதம்பம் 2015'' இனிதே நிறைவுற்றது.

நன்றி.
வணக்கம்.

நிர்வாகம் 
பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம்.
        

IMG_3375 (Copy) IMG_3387 (Copy) IMG_3391 (Copy) IMG_3401 (Copy) IMG_3414 (Copy) IMG_3418 (Copy) IMG_3429 (Copy) IMG_3482 (Copy) IMG_3503 (Copy) IMG_3507 (Copy) IMG_3589 (Copy) IMG_3594 (Copy) IMG_3594-1 (Copy) IMG_3649 (Copy) IMG_3652 (Copy) IMG_3902 (Copy) IMG_3937 (Copy) IMG_3985 (Copy) IMG_4015 (Copy) IMG_4069 (Copy) IMG_4088 (Copy) IMG_4133 (Copy) IMG_4171 (Copy) IMG_4206 (Copy) IMG_4235 (Copy) IMG_8767 (Copy) IMG_8791 (Copy) unnamed (Copy) unnamedKP9ZEN1B (Copy)

பி௫த்தானியா காரை நலன் புரிச்சங்கத்தின் வ௫டாந்த பொங்கல் விழாவன ” காரைக் கதம்பம் 2015″

கால் நூற்றாண்டின் தடம்….
ஒ௫ நூற்றாண்டின் பாய்சல்…..

பி௫த்தானியா காரை நலன் புரிச்சங்கத்தின்  வ௫டாந்த பொங்கல் விழாவன " காரைக் கதம்பம் 2015" நிகழ்வு பல நூற்றுக் கணக்கான மக்களுடன் Cannons High Scholl's, Harrow, HA8 6AN எனும் இடத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் நேற்று மாலை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

கால் நூற்றாண்டை தாண்டும், மன்றத்தின் தடமாக ஒ௫ங்கிணைப்பு செய்யப்பட்டி௫ந்த பி௫த்தானியா வாழ் காரை இளையோர் அமைப்பு 60க்கும் மேற்பட்ட இளையோரை ஒன்றிணைத்து மன்றத்தின் ஒ௫ நூற்றாண்டின் பாய்ச்சலை தாண்டியது.

IMG_3375 (Copy) IMG_3387 (Copy) IMG_3391 (Copy) IMG_3401 (Copy) IMG_3414 (Copy) IMG_3418 (Copy) IMG_3429 (Copy) IMG_3482 (Copy) IMG_3503 (Copy) IMG_3507 (Copy) IMG_3589 (Copy) IMG_3594 (Copy) IMG_3594-1 (Copy) IMG_3649 (Copy) IMG_3652 (Copy) IMG_3902 (Copy) IMG_3937 (Copy) IMG_3985 (Copy) IMG_4015 (Copy) IMG_4069 (Copy) IMG_4088 (Copy) IMG_4133 (Copy) IMG_4171 (Copy) IMG_4206 (Copy) IMG_4235 (Copy) IMG_8767 (Copy) IMG_8791 (Copy) unnamed (Copy) unnamedKP9ZEN1B (Copy)

பிருத்தானியா வானொலியில் எம் பிரியமுள்ள இளையதம்பி தயானந்தா ………. நல்வாழ்த்துக்கள் நவில்கின்றது பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம் ….

பிருத்தானியா வானொலியில் எம் பிரியமுள்ள இளையதம்பி தயானந்தா ……….

நல்வாழ்த்துக்கள் நவில்கின்றது பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம் ….

BBC இன் உலக சேவையில் இணையும் இளையதம்பி தயானந்தாவுக்கு வாழ்த்துக்கள்.

காலம் காலமாக எமது காரைநகர் மண்ணைப்  பெருமிதம் கொள்ள வைத்த மண்ணின் மைந்தர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களின் வரிசையில், இன்றைய தலைமுறையில் தமிழ் ஊடகப் பரப்பில் பெருமிதம் கொள்ள வைத்திருக்கும்இளையதம்பி தயானந்தாவிற்கு மனமார்ந்த பாராட்டுதல்களை பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கம் தெரிவித்து மகிழ்கிறது.. 

காரைநகர் வாரிவளவைச்    சேர்ந்த   இவர், காரைநகரில் தனது வைத்திய சேவையால் புகழ் பெற்று இன்றும் நினைவு கூரப்படும் வைத்தியரான  இளையதம்பி – இராஜேஸ்வரி தம்பதியின் முன்றாவது மகன். 

இவை எல்லாவற்றுக்கும்  அப்பால், இலங்கையிலும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழ் அறிந்த பல நேயர்களின் அபிமானத்திற்குரிய அறிவிப்பாளர். அற்புதமான தொலைக் காட்சித் தொகுப்பாளர். இலங்கை ரூபவாஹினியில் சமகால மொழிபெயர்ப்போடு ஒளிபரப்பான ‘கேள்விகளால் ஒரு வேள்வி’ நிகழ்ச்சி இதற்கு ஆதாரம்.  இலங்கை மண்ணில் வானொலி தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகத் துறையில் தன்னை  நிறுவிக் காட்டி எமது மண்ணுக்கு பெருமை சேர்த்த தயானந்தா, இன்று பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் தன்னை இணைந்திருப்பது   எமது காரை மண்ணிற்கும், உலகம்வாழ் காரை மக்களிற்கும் பெரு மதிப்பையும், மகிழ்ச்சியையும் தருகின்றது.   இது அவரின் அடுத்த ஊடகப் பரிமாணத்திற்கும் ஊடகத் துறையில் ஆர்வம் கொள்ளும் எமது அடுத்த தலைமுறைக்கும்  உதவும் என நம்புகிறோம். உலகின் மூத்ததும் தாய் ஒலிபரப்பு நிலையமெனக் கருதப்படுவதுமான BBC இல் இணைகின்ற முதலாவது  காரை மைந்தன் இளையதம்பி தயானந்தாவுக்கு   எமது  மனப் பூர்வமான வாழ்த்துக்கள்.

 ஒலிபரப்புத் துறையில் தன்னிகரற்ற பல ஊடகவியலாளர்களை காரைநகர் தந்திருக்கிறது. காலஞ்சென்றவர்களான திரு.விவியன் நமசிவாயம், திரு.வி.பி.தியாகராஜா, திரு.கே.எஸ்.ராஜா    மற்றும் மனோகரி சதாசிவம்  ஆகியோர் இலங்கை வானொலியின்  தமிழ் ஒலிபரப்பில் அழிக்க முடியாத வரலாற்றைத் தோற்றுவித்தவர்கள். (அவர்கள் குறித்தும் ஏனைய ஊடகவியலாளர்கள் குறித்தும் திரு.இளையதம்பி தயானந்தா எழுதலாமே!).

உலகின் முதலாவது 24 மணிநேர தமிழ் வானொலியை தோற்றுவித்த இளையபாரதி  என்ற கந்தையா சிவசோதி(தற்போதைய கனேடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபன ஸ்தாபகர், உரிமையாளர்),  இலங்கையின் முதலாவது தொலைக்காட்சிச் செய்தி வாசிப்பாளரான கமலா தம்பிராஜா, இலங்கை வானொலியில் தற்போது பணியாற்றும் முருகேசு இரவீந்திரன் உட்பட உலகெங்குமுள்ள  பல மின்மவியல் ஊடகங்களில் (Electronic Medias)  எம்மவர்கள் இன்றும் பணியாற்றுகிறார்கள். அவர்கள் அனைவர்க்கும் எம் வாழ்த்துக்கள்.

இளையதம்பி தயானந்தாவின் ஊடகப் பணிகள் சில..

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்  –1993 – 2004

இலங்கை ரூபவாஹினி மற்றும் சுயாதீனத் தொலைக்காட்சி – 1993 – 2004 (பகுதி நேரப் பணிகள்)

வெக்டோன் தொலைக்காட்சி  2004 – 2006  (ஐரோப்பிய மற்றும் மதிய கிழக்கு நாடுகளுக்கான ஒளிபரப்பு)

பிரதம ஆசிரியர் – வியூகம் சஞ்சிகை 2006 – 2007

பிரதம ஆசிரியர் – இருக்கிறம் சஞ்சிகை 2006 – 2008

உலகத் தமிழ் தொலைக்காட்சி(GTV) – 2008  (சிங்கப்பூர்) 

 உலகத் தமிழ் தொலைக்காட்சி(GTV)-2011 – 2012 (பிருத்தானியா )-   வாராந்த நேரலை – "பேசாப் பொருள்"

கனடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ‘தயானந்தனம்’ வாரந்த நிகழ்ச்சி –2013

இன்று BBC இல்!!   வாழ்த்துக்கள் இளையதம்பி தயானந்தா!!


உங்கள் பணி சிறக்க வாழ்த்தும்

பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கம்.

unnamed

கால் நூற்றாண்டின் தடம்…. ஒ௫ நூற்றாண்டின் பாய்சல்…..

KWS-UK LOGO

பி௫த்தானியா காரை நலன் புரிச்சங்கத்தின்  வ௫டாந்த பொங்கல் விழாவன " காரைக் கதம்பம் 2015" நிகழ்வு பல நூற்றுக் கணக்கான மக்களுடன் Cannons High Scholl's, Harrow, HA8 6AN எனும் இடத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் 31.01.2015 மாலை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

கால் நூற்றாண்டை தாண்டும், மன்றத்தின் தடமாக ஒ௫ங்கிணைப்பு செய்யப்பட்டி௫ந்த பி௫த்தானியா வாழ் காரை இளையோர் அமைப்பு 60க்கும் மேற்பட்ட இளையோரை ஒன்றிணைத்து மன்றத்தின் ஒ௫ நூற்றாண்டின் பாய்ச்சலை தாண்டியது.

பிரித்தானியா மட்டுமன்றி உலகெங்கும் பரந்து வாழும் காரை இளையோர்களை ஒன்றிணைக்கும் இந்த முயற்சி பற்றிய மேலதிக விபரங்களுக்காக  காத்தி௫ங்கள்………

மிக விரைவில் …….

Karai_Youth_Organisation_-UK0001

கால் நூற்றாண்டின் தடம்…. ஒ௫ நூற்றாண்டின் பாய்சல்…..

KWS-UK LOGO

பி௫த்தானியா காரை நலன் புரிச்சங்கத்தின்  வ௫டாந்த பொங்கல் விழாவன " காரைக் கதம்பம் 2015" நிகழ்வு பல நூற்றுக் கணக்கான மக்களுடன் Cannons High Scholl's, Harrow, HA8 6AN எனும் இடத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் நேற்று மாலை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

கால் நூற்றாண்டை தாண்டும், மன்றத்தின் தடமாக ஒ௫ங்கிணைப்பு செய்யப்பட்டி௫ந்த பி௫த்தானியா வாழ் காரை இளையோர் அமைப்பு 60க்கும் மேற்பட்ட இளையோரை ஒன்றிணைத்து மன்றத்தின் ஒ௫ நூற்றாண்டின் பாய்ச்சலை தாண்டியது.

பிரித்தானியா மட்டுமன்றி உலகெங்கும் பரந்து வாழும் காரை இளையோர்களை ஒன்றிணைக்கும் இந்த முயற்சி பற்றிய மேலதிக விபரங்களுக்காக  காத்தி௫ங்கள்………

மிக விரைவில் …….

காரைக் கதம்பம் 2015

karaikathambam_2015_-_flyer

காரைக் கதம்பம் 2015

karaikathambam_2015_-_flyer

இரண்டாவது தடவையாக பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கமும் ஓம் கிரியா பாபாஜி யோகா ஆரண்ணியமும் இணைத்து முன்னெடுக்கும் ”கிரியா பாபாஜி குண்டலனி உபதேசம் 2015”.

Yoga_Upathesam_2014

பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் புதிய நிர்வாகத்தின் கீழான முதல் நிர்வாக சபைக்கூட்டம் 21.12.2014 நடைபெற்றது.

KWS-UK LOGO     

கடந்த ஞாயிறு (21/12/2014) நடைபெற்ற புதிய நிர்வாகத்தின் கீழான முதல் நிர்வாக சபைக்கூட்டத்தில் 15பேர் வரை கலந்து கொண்டனர். தலைவர் திரு.S. கோணேசலிங்கம் தமது உரையில்,அடுத்த வருடம்  வெள்ளிவிழா காணவிருக்கும்  எமது பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கம் ஒரு புதிய முறையில்  '' அனைத்து தலைவர்கள் கூட்டமைப்பு'' என்ற ஒருமையின் கீழ் அந்த பெருவிழாவை முன்னெடுத்து செல்லும் என்று கூறினார். அதற்கு அங்கே சமூகம் அளித்திருந்த போஷகர் சபை உறுப்பினர்களான முன்னாள் தலைவர்கள் மூவரும் (திரு.R. சுந்தரதாசன் , திரு V.  நாகேந்திரம் , திரு P. தவராஜா எதுவித மறுப்பும் இன்றி செவிசாய்த்தனர். 

இதன் பிரகாரம் கீழ்காணும் பொறுப்புக்கள் மேல்காணும் மூவரிடம் ஒப்படைக்கப்பட்டது …அத்துடன் இவர்கள் ஒவ்வொருவருடனும் மூன்று நிர்வாகசபை உறுப்பினர்கள் உதவியாளர்களாக  தெரிவு  செய்யப்பட்டனர் .

***  திரு S. சுந்தரதாசன் அவர்கள் மன்றத்தின் புதிய  அங்கத்தவர்களை இணைத்தல் மற்றும் விழாக்களுக்கான ஒத்துழைப்பு . 

****  திரு V. நாகேந்திரம் அவர்கள் காரைநகர் சம்பந்தமான அபிவிருத்தி திட்டங்கள், செயற்பாடுகள்.
              

*****  திரு P.தவராஜா அவர்கள் மன்றத்தின் விழாக்கள் ஒருங்கமைப்பு , இணையதள செய்தித் தொடர்பாடல்கள், மற்றும் வெளிநாட்டு சகோதர  மன்றங்களுடனான  செயற்திட்ட தொடர்பு என்பன . 


மேலும் வருகின்ற வருடம் ஜனவரி மாதம் 31ம் திகதி எமது பொங்கல்  விழவான ''காரைக் கதம்பம் 2015'' நடைபெறவுள்ளது. இவ்விழாவின்போது எமது மன்றத்திற்கான இளையோர் அமைப்பு ஒன்றை உருவாக்கவும்   
நிர்வாக சபை திட்டமிட்டுள்ளது 

எமது மன்றத்தின் பிதாமகன் சபா அண்ணாவின் கூற்றுப்படி'' எமக்கு சிலுசிலுப்பு தேவையில்லை பலகாரம் தான் தேவை''. எனவே மன்றத்தின் வெற்றி அதன் நிர்வாகத்தின் ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது. இந்த ஒற்றுமைக்காக, மன்ற நலனுக்காக எதுவும் செய்பவனே உண்மையான நலன் விரும்பி.


'' தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் 
   என்குற்றம் மாகும் இறைக்கு ''

குறள் – 436


நன்றி 

வணக்கம் 

நிர்வாகம் – பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கம் .

பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் புதிய நிர்வாகசபைத் தெரிவு

 

KWS-UK LOGO

 

     

 

 மேலதிக விபரம் அறிந்து கொள்ள இங்கே அழுத்துக….!

 

 

1 (Copy) 2 (Copy) 3 (Copy) 4 (Copy) 5 (Copy) 6 (Copy) 7 (Copy) 8 (Copy)