பிருத்தானியா வானொலியில் எம் பிரியமுள்ள இளையதம்பி தயானந்தா ………. நல்வாழ்த்துக்கள் நவில்கின்றது பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம் ….

பிருத்தானியா வானொலியில் எம் பிரியமுள்ள இளையதம்பி தயானந்தா ……….

நல்வாழ்த்துக்கள் நவில்கின்றது பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம் ….

BBC இன் உலக சேவையில் இணையும் இளையதம்பி தயானந்தாவுக்கு வாழ்த்துக்கள்.

காலம் காலமாக எமது காரைநகர் மண்ணைப்  பெருமிதம் கொள்ள வைத்த மண்ணின் மைந்தர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களின் வரிசையில், இன்றைய தலைமுறையில் தமிழ் ஊடகப் பரப்பில் பெருமிதம் கொள்ள வைத்திருக்கும்இளையதம்பி தயானந்தாவிற்கு மனமார்ந்த பாராட்டுதல்களை பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கம் தெரிவித்து மகிழ்கிறது.. 

காரைநகர் வாரிவளவைச்    சேர்ந்த   இவர், காரைநகரில் தனது வைத்திய சேவையால் புகழ் பெற்று இன்றும் நினைவு கூரப்படும் வைத்தியரான  இளையதம்பி – இராஜேஸ்வரி தம்பதியின் முன்றாவது மகன். 

இவை எல்லாவற்றுக்கும்  அப்பால், இலங்கையிலும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழ் அறிந்த பல நேயர்களின் அபிமானத்திற்குரிய அறிவிப்பாளர். அற்புதமான தொலைக் காட்சித் தொகுப்பாளர். இலங்கை ரூபவாஹினியில் சமகால மொழிபெயர்ப்போடு ஒளிபரப்பான ‘கேள்விகளால் ஒரு வேள்வி’ நிகழ்ச்சி இதற்கு ஆதாரம்.  இலங்கை மண்ணில் வானொலி தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகத் துறையில் தன்னை  நிறுவிக் காட்டி எமது மண்ணுக்கு பெருமை சேர்த்த தயானந்தா, இன்று பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் தன்னை இணைந்திருப்பது   எமது காரை மண்ணிற்கும், உலகம்வாழ் காரை மக்களிற்கும் பெரு மதிப்பையும், மகிழ்ச்சியையும் தருகின்றது.   இது அவரின் அடுத்த ஊடகப் பரிமாணத்திற்கும் ஊடகத் துறையில் ஆர்வம் கொள்ளும் எமது அடுத்த தலைமுறைக்கும்  உதவும் என நம்புகிறோம். உலகின் மூத்ததும் தாய் ஒலிபரப்பு நிலையமெனக் கருதப்படுவதுமான BBC இல் இணைகின்ற முதலாவது  காரை மைந்தன் இளையதம்பி தயானந்தாவுக்கு   எமது  மனப் பூர்வமான வாழ்த்துக்கள்.

 ஒலிபரப்புத் துறையில் தன்னிகரற்ற பல ஊடகவியலாளர்களை காரைநகர் தந்திருக்கிறது. காலஞ்சென்றவர்களான திரு.விவியன் நமசிவாயம், திரு.வி.பி.தியாகராஜா, திரு.கே.எஸ்.ராஜா    மற்றும் மனோகரி சதாசிவம்  ஆகியோர் இலங்கை வானொலியின்  தமிழ் ஒலிபரப்பில் அழிக்க முடியாத வரலாற்றைத் தோற்றுவித்தவர்கள். (அவர்கள் குறித்தும் ஏனைய ஊடகவியலாளர்கள் குறித்தும் திரு.இளையதம்பி தயானந்தா எழுதலாமே!).

உலகின் முதலாவது 24 மணிநேர தமிழ் வானொலியை தோற்றுவித்த இளையபாரதி  என்ற கந்தையா சிவசோதி(தற்போதைய கனேடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபன ஸ்தாபகர், உரிமையாளர்),  இலங்கையின் முதலாவது தொலைக்காட்சிச் செய்தி வாசிப்பாளரான கமலா தம்பிராஜா, இலங்கை வானொலியில் தற்போது பணியாற்றும் முருகேசு இரவீந்திரன் உட்பட உலகெங்குமுள்ள  பல மின்மவியல் ஊடகங்களில் (Electronic Medias)  எம்மவர்கள் இன்றும் பணியாற்றுகிறார்கள். அவர்கள் அனைவர்க்கும் எம் வாழ்த்துக்கள்.

இளையதம்பி தயானந்தாவின் ஊடகப் பணிகள் சில..

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்  –1993 – 2004

இலங்கை ரூபவாஹினி மற்றும் சுயாதீனத் தொலைக்காட்சி – 1993 – 2004 (பகுதி நேரப் பணிகள்)

வெக்டோன் தொலைக்காட்சி  2004 – 2006  (ஐரோப்பிய மற்றும் மதிய கிழக்கு நாடுகளுக்கான ஒளிபரப்பு)

பிரதம ஆசிரியர் – வியூகம் சஞ்சிகை 2006 – 2007

பிரதம ஆசிரியர் – இருக்கிறம் சஞ்சிகை 2006 – 2008

உலகத் தமிழ் தொலைக்காட்சி(GTV) – 2008  (சிங்கப்பூர்) 

 உலகத் தமிழ் தொலைக்காட்சி(GTV)-2011 – 2012 (பிருத்தானியா )-   வாராந்த நேரலை – "பேசாப் பொருள்"

கனடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ‘தயானந்தனம்’ வாரந்த நிகழ்ச்சி –2013

இன்று BBC இல்!!   வாழ்த்துக்கள் இளையதம்பி தயானந்தா!!


உங்கள் பணி சிறக்க வாழ்த்தும்

பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கம்.

unnamed