பஞ்சபாண்டவர் தலைமையில் சங்கமானது ”காரை சங்கமம் 2015”

1 (Copy)

பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கத்தின் விளையாட்டு போட்டியுடன் கூடிய ஒன்றுகூடல்.


காரைச் சங்கமம் 2015.

நேற்றைய தினம் (12/07/2015) அன்று  Kinsbury High School மைதானம், Stag Lane , Kingsbury , London , NW9 9AA  எனும் இடத்தில் 1000இக்கும் மேற்பட்ட மக்களுடன், பஞ்சபாண்டவர் தலைமையில் இனிதே நிறைவுற்றது காரைச் சங்கமம் 2015.

    பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கத்தின் ஆரம்பகால தலைவரும் எமது மூத்த தலைவருமான திரு.ந .ராஜேந்திரா அண்ணா அவர்களும், அவரிடம் இருந்து பொறுப்பேற்ற தலைவர் திரு.இ .சுந்தரதாசன் , அடுத்து வந்த தலைவர் திரு.v .நாகேந்திரம், இவரிடம் இருந்து பொறுப்பேற்ற தலைவர் ப.தவராஜா மற்றும் தற்போதைய தலைவர் திரு.S . கோணேசலிங்கம் –KKV நாதன்-   ஆகிய தலைமைகளின் சங்கமத்தில் சங்கமித்தது ''காரைச் சங்கமம் 2015''

பிரதம விருந்தினராக  காரை இந்துக் கல்லூரியில் 18 வருட காலம்(1965-1983) விஞ்ஞானம் , பௌதீகவியல் மற்றும் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியராக அரும்பணியாற்றிய இளைப்பாறிய ஆசிரியர் திரு A .சோமாஸ்கந்தன் அவர்களும்,

 சிறப்பு விருந்தினராக நியூயார்க், அமெரிக்காவில் இருந்து வைத்திய கலாநிதி ராதா செல்வரத்தினம் கோபால் – ராதகோபால் – அவர்களும் ,

 கௌரவ விருந்தினர்களா பிரான்ஸ் நகரத்தில் இருந்து இணையற்ற சமூக சேவையாளர், இளைப்பாறிய ஆசிரியர் திரு. A . செல்வச்சந்திரன் -நேரு மாஸ்டர் – அவர்களும்,திரு முத்துலிங்கம் ஐயா அவர்களும், கனடாவில் இருந்து கனடா காரை கலாச்சார மன்றத்தின் கடந்தகால தலைவர் திரு.த .பரமானந்தராஜா அவர்களும், கனடா காரை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு . M . வேலாயுதபிள்ளை , திரு கார்த்திகேசு சிவசோதிநாதன் அவர்களும் மற்றும் ஜேர்மனியில் இருந்து திரு. K . ஆனந்தசற்குணநாதன் அவர்களும் , புங்குடுதீவு நலன் புரிச்சங்க தலைவர் திரு. கங்காகுமாரன் , திரு.கருணைலிங்கம் அண்ணா , மற்றும் வேலணை மத்திய கல்லூரி தலைவர் திரு நடா சிவா அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


ஒரு விளையாட்டு நிகழ்வில் குறிப்பாக அஞ்சல் ஓட்ட (Relay Running ) போட்டியில் ஒரு குழுவில் 5பேர் பங்குபற்றினால் முதலில் அஞ்சல் கோலை நிதானமாகவும் வேகமாகவும் தடம் மாறாமல் ஓடி இரண்டாவது ஓட்ட வீரன் கையில் அந்த கோலை சரியான முறையில் பக்குவமாக கைமாற்றல் செய்வது என்பது விளையாட்டு விதியாக இருந்தாலும், இயற்கை நியதியும் அதுதானே.  

கொடுக்கப்பட்ட பொறுப்பை எந்தவித கருவுமின்றி, கர்வமின்றி, களவின்றி  நிறைவேற்றி அஞ்சல் கோலை அடுத்தவர் கையில் கைமாற்றுவது தானே ஒரு விளையாட்டு வீரனின் தகுதி , அதையும் தாண்டிய  இன்பம். 

அந்த வகையில் இன்று பிருத்தானியா காரைவாழ் மக்கள் பெருமிதம் கொள்ளும் நிலைக்கு  கடந்தகால தலைமைத்துவங்கள் இந்த அஞ்சல் கோலை சரியான முறையில் கைமாற்றியுள்ளன என்பதற்கு நேற்றைய சங்கமம்  எடுத்துக்காட்டு  என்றால் மிகையாகாது. 


எங்கள் முதுமொழி ஒன்று உளது '' ஆறிலும் சாவு நூறிலும் சாவு ''

பஞ்சபாண்டவர் ஐந்துபேர் , கௌரவர்கள் 99 பேர் , இடைநடுவில் கர்ணன் எனும் கொடைவள்ளல் ….

கர்ணன் பஞ்சபாண்டவருடன் சேர்ந்தால் ஆறு (6), கெளரவர்களுடன் சேர்ந்தால் நூறு (100),  இதில் கொடைவள்ளல் கர்ணனுக்கு தான் ஒரு பகடைக்காய் என்பதும், எந்த பக்கம் சேர்ந்தாலும் தனக்கு சாவு குறிக்கப்பட்டுவிட்டது என்பதும் ஆரம்பத்தில் புரியவில்லை.  மாய லீலைக் கண்ணன் இந்த கொடை  வள்ளலை பல சூதுகள் செய்து ……….. இப்போ பாரதக் கதை புரிந்ததுதானே……மகா பாரதம்.!!!!!

மீண்டும் எமது காரைச் சங்கமம் நிகழ்வுக்குள் வருவோம்.

பிரதம அதிதி அவர்களின் அன்பான பேச்சு, சிறப்பு விருந்திரனரின் மெய்சிலிர்க்கும் கருத்து , கௌரவ விருந்தினர்களின் கபடமற்ற கண்ணியமான கருத்துப் பரிமாற்றங்கள் ………

மேலதிக புகைப்படங்களுடன் , செய்திகளையும் எதிர்பாருங்கள் .

1 (Copy)

IMM_8446 (Copy)IMM_8460 (Copy)IMM_8464 (Copy) IMM_8472 (Copy) IMM_8475 (Copy) IMM_8480 (Copy) IMM_8490 (Copy) IMM_8492 (Copy) IMM_8495 (Copy) IMM_8502 (Copy) IMM_8504 (Copy) P1020358 (Copy)