Category: Google Photos

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தின் திருவாதிரை உற்சவ 8ம்நாள் திருவிழாக் காட்சிகளைப் படங்களில் காணலாம்.(16.12.2013)

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தின் திருவாதிரை உற்சவ 7ம்நாள் திருவிழாக் காட்சிகளைப் படங்களில் காணலாம்.(15.12.2013)

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தின் திருவாதிரை உற்சவ 6ம்நாள் திருவிழாக் காட்சிகளைப் படங்களில் காணலாம்.(14.12.2013)

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தின் திருவாதிரை உற்சவ 5ம்நாள் திருவிழாக் காட்சிகளைப் படங்களில் காணலாம்.(13.12.2013)

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தின் திருவாதிரை உற்சவ 4ம்நாள் திருவிழாக் காட்சிகளைப் படங்களில் காணலாம்.(12.12.2013)

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் திருவாதிரை உற்சவம்

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் திருவாதிரை உற்சவம் நேற்றுத் திங்கட்கிழமை ஆரம்பமாகி உள்ளது. பெருமளவு பத்தர்கள் இந்த உற்சவத்தில் கலந்துகொண்டனர். உற்சவத்தை முன்னிட்டு யாழ்நகரிலிருந்து ஆலயம் வரை நேரடி பஸ்சேவைகள் இடம்பெற்று வருவதுடன் ஆலய சூழலில் உள்ள மகேஸ்வரன் அறப்பணிநிலையம்,மாணிக்கவாசகர் மடாலயம் ஆகியவற்றில் அன்னதானமும் இடம்பெற்று வருகின்றது. இவ்வுற்சவம் தொடர்ந்து பத்துத் தினங்கள் இடம்பெற உள்ளது. இந்த உற்சவத்தின் முதலாம்,இரண்டாம் நாள் திருவிழாக் காட்சிகளைப் படங்களில் கானலாம்.
 

 

 

வெற்றி விழாவாகிய நடந்தேறிய காரை வசந்தம்-2013

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் பதின்மூன்றாவது ஆண்டாக நடத்தப்பட்ட காரை வசந்தம்-2013 பல நூற்றுக் கணக்கான ரசிகர்களுடன் வெற்றி விழாவாக நேற்று சனிக்கிழமை, டிச.7.2013 அன்று Sir John Macdonald  கல்லூரிக் கலை அரங்கில் நடந்தேறியது.
விழாவிற்கு பிரதம விருந்தினராக கனடா சைவசித்தாந்த மன்றத் தலைவரும், அன்பு நெறி ஆசிரியரும், கனடா-காரை கலாச்சார மன்றத்தை ஈழத்துச் சிதம்பர திருத்தொண்டர் சங்கமாக நிறுவியர்களுள் ஒருவருமாகிய சிவநெறிச் செல்வர் தி.விசுவலிங்கம் அவர்களும் பாரியாரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
சிறப்பு விருந்தினராக காரைநகர் தந்த கனடாவில் பொன்விழாக் கண்ட பேராசிரியர் தி.சிவகுமாரன் Ph.D.. FCACB,DABCC  அவர்களும் கௌரவ விருந்தினராக பல் மருத்துவ நிபுணர் Dr.ஜெயபாலன் நமசிவாயம் அவர்களும் பாரியாரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
குழந்தைகள் மருத்துவ நிபுணர் Dr.வி.விஜயரத்தினம், கனடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அதிபர் திரு.இளையபாரதி, Double Seal Insulations Inc. அதிபர் திரு.பாலசுப்பிரமணியம் மகாதேவன், வீடு விற்பனை முகவர் திரு.ராஜ் நடராஜா ஆகியோரும் மன்றத்தின் முன்னாள் தலைவர்களாகிய திரு.சண்முகம் கந்தசாமி, திரு.வேலுப்பிள்ளை இராஜேந்திரம், திரு.கோபால் மயில்வாகனம், திரு.ரவி ரவீந்தரன், முன்னாள் போசகர் திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை, தற்போதய போசகர் திரு.கந்தப்பு அம்பலவாணர், முன்னாள் உப-தலைவர் திரு.தர்மலிங்கம் பரமசிவம், முன்னாள் செயலாளர்களாகிய திரு.கனக.சிவகுமாரன், திரு.சேகர் கந்தையா, முன்னாள் பொருளாளர் திரு.சிற்றம்பலம் சச்சிதானந்தன் ஆகியோரும் குறிப்பிடத்தக்க அதிதிகளாகக் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். 
இயல் இசை, நடனம் என முத்தமிழ் கலைகளையும் கொண்டதாக நிகழ்ச்சிகள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. மிருதங்க ஞானவாரிதி வாசுதேவன் இராஜலிங்கம் தயாரித்து ஆடலரசி திருமதி.ரஜனி சத்திரூபன் நடனம் அமைத்து வழங்கிய 'வாத்திய நடன இசை', கலைவேந்தன் கணபதி ரவீந்திரன் தயாரித்து வழங்கிய 'அவனுக் என்று ஒரு மனம்' நாடகம், ஸ்ரீஅபிராமி நடனக் கல்லூரி அதிபர் ஆடல் அரசி திருமதி செந்தில்செல்வி சுரேஸ்வரன் அவர்களின் மாணவர்கள் வழங்கிய 'ஆடும் சதங்கைகள்'. பால விமல நர்த்தனாலய அதிபர் பரதகலாவித்தகர் திருமதி. சித்திரா தர்மலிங்கத்தின் மாணவர்கள் வழங்கிய 'சரவணபவ', பரதாலயா நடனக் கல்லூரி அதிபர் கலைமணி செல்வி நிவேதா இராமலிங்கம் தனது மாணவிகளுடன் இணைந்து வழங்கிய 'கிருஷ்ண அர்ப்பணம்', 'நட்சத்திரா இசைக் குழுவின் 'மெல்லிசை கானங்கள்' திருமதி.கனகமலர் நற்குணம் வழங்கிய 'சாதலிங்கம்' நகைச் சுவை நாடகம், திரு. திரவியநாதன் பிரமேந்திரதீசன் வழங்கிய கவிதை என்பன நிகழ்ச்சிகளின் வரிசையில் இடம்பிடித்திருந்தன.

விழாவில் 'காரை வசந்தம-2013;' சிறப்பு மலரும் வெளியிடப்பட்டிருந்தது. இம்மலரின் அழகிய வர்ண அட்டைப்படம் கனடாவில் காரை வசந்தத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது. மலரில் வாழ்த்துச் செய்திகளுடன் காரைநகர் செய்திகளும் காரைநகர் சார்ந்த கட்டுரைகளும் மன்றத்தின் செய்திகளும் விளம்பரங்களும் இடம்பெற்றிருந்தன.

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்பட்ட பண்ணிசை, தமிழ்த்திறன் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களும், பங்குபற்றியவர்களுக்கான ஆறுதல் பரிசுகளும், கலைஞர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இப்பரிசுகளுக்கான அனுசரணையை CTBC அதிபர் திரு.இளையபாரதி வழங்கியிருந்தார்.

பண்ணிசைப் போட்டியில் மேற்பிரிவில் முதலிடம் பெற்ற செல்வி.தாரணி தேவகுமாருக்கு ' அமரர்.மனோரஞ்சனா கனகசபாபதி ஞாபாகார்த்த பரிசாக' தங்கப்பதக்கம் கனகசபாபதி குடும்பத்தினரின் அனுசரணையில் வழங்கப்பட்டது.

தரமான கலைப் படைப்புகளைத் தாங்கியதாக நிகழ்ச்சிகள் நன்கு திட்டமிடப்பட்டு ஒழுங்கமைக்கப்ட்டிருந்தமை குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களை இங்கே காணலாம்.


 

ஈழத்துச் சிதம்பர சைவ அறப்பணி நிலையத்தில் பத்துத் தினங்களும் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

முன்னாள் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சர் அமரர் தியாகராசா மகேஸ்வரன் அவர்களினால் அமைக்கப்பட்ட ஈழத்துச் சிதம்பர சைவ அறப்பணி நிலையத்தில் மீண்டு திருவிழா பத்துத் தினங்களும் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

ஆலய ஆதீனகர்த்தாக்களினால் அமைச்சர் அமரர் தியாகராசா மகேஸ்வரன் அவர்களின் சகோதரர்களானா தியர்கராசா பரமேஸ்வரன்,தியாகராசா ஞானேஸ்வரன் ஆகியோரின் நிதி உதவியுடன் அறப்பணி நிலையம் புனரமைக்கப்பட்டு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை வர்ணம் பூசப்பட்டு புனரமைக்கப்பட்ட அறப்பணிநிலையத்தில் ஆலய பிரதம குரு சிவசிறி வி.ஈஸ்வரக்குருக்கள் பூசைவழிபாடுகளை மேற்கொண்டு அன்னதானம் வழங்குவதற்கான ஆயத்தப்பணிகளைத் தொடக்கிவைத்தார்.

காரை வசந்தம் 2013

காரை வசந்தம் 2013

காரை வசந்தம் – 2013 அநுசரணையாளர்கள்

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி, Sir John A. Macdonald Collegiate Institute இல் மாலை 5.00 மணிக்கு நடத்தப்படவிருக்கும் 'காரை வசந்தம் – 2013' விழாவிற்கு

  • ஒலியமைப்பு
  • ஒளியமைப்பு சாதனங்கள்
  • காணொளிப் பதிவு சேவை
  • புகைப் படப்பிடிப்பு சேவை
  • மேடை அலங்காரம்
  • வெற்றிக் கிண்ணங்கள் 
  • நினைவுப் பரிசுகள் (Trophies) 
  • சிற்றுண்டிகள்,கோப்பி,பானங்கள்

என்பனவற்றிற்கு அநுசரணை வழங்கவோ அல்லது பொருட்களை அன்பளிப்பு செய்யவோ விரும்பும் வர்த்தகப் பெருமக்கள், நலன்விரும்பிகள் எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

அநுசரணையாளர்கள் மற்றும் பொருட்களை அன்பளிப்புச் செய்வோரின் பெயர் விபரங்கள் 'காரை வசந்தம்-2013' விழா அரங்கில் அறிவிக்கப்பட்டு கௌரவிக்கப்படும்.

தொடர்புகளுக்கு:
கனடா-காரை கலாச்சார மன்றம் (416)642-4912

  1. தமிழ் திறன் போட்டியின் பரிசுகள் : CTBC
  2. Ticket Printing : Archanas & Co
  3. Lotto Ticket Pritning : ஆதிகணபதி  சோமசுந்தரம் 
  4. நாடகம் :  துரைரத்தினம் சோமசுந்தரம்   
  5. நாகேந்திரம் நடராஜா (ராஜ்) (HOME LIFE)
  6. தீசன் திரவியநாதன் : குளிர்பானம்                                                                                            

ஸ்ரீ மனோன்மனி அம்பாள் மண்டபத் திறப்பு விழா

ஸ்ரீ மனோன்மனி அம்பாள் மண்டபத் திறப்பு விழா நேற்று முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக இடம்பெற்றது.

காரைநகர் ஈழத்துச் சிதம்பர மாணிக்க வாசகர் மடாலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ மனோன்மனி அம்பாள் மண்டபத் திறப்பு விழா நேற்று முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிமுதல் கொட்டும் மழையிலும் கோலாகலமாக இடம்பெற்றது. 

மாணிக்கவாசகர் மடாலயத் தலைவர் லயன் இ.ச.பே.நாகரத்தினம் தலைமையில் நடைபெற்ற  இந்தத் திறப்பு விழா நிகழ்வில் ஆசியுரைகள் சிறப்புப்பேருரைகள்,மாணவர்களின் கலைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.காரை கிட்ஸ் பார்க்,கிழவன்காடு கலாமன்றம்,யாழ்ற்ரன் கல்லூரி இந்துக்கல்லூரி யாழ் தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றன.

இந்நிகழ்வில் காரைநகர் மணிவாசகர் மடாலயத்திற்கு புதிய அன்னதான மன்டபத்தை அமைத்துதவிய பெருமதிப்பிற்குரிய கொடையாளர் திரு.சண்முகம் சிவஞானம் அவர்களின் பணிநயந்து 'அறக்கொடைச்செம்மல்' விருது வழங்கி மேற்படி சபையினரால் கௌரவிக்கப்பட்டார்.      

காரை வசந்தம் அனுமதிச் சீட்டுகள் விற்பனைக்கு அமோக வரவேற்பு

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் 'காரை வசந்தம்' பல்சுவைக் கலைவிழா எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி, Sir.John A. Macdonald Collegiate Institute  இல் நடைபெற இருக்கின்றது. 

இவ்விழாவிற்குரிய $100 அனுமதிச் சீட்டுகள் மன்ற நிர்வாக சபை உறுப்பினர்களால் முன்கூட்டியே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதுவரையில் நாம் எதிர்பார்த்ததைவிட அமோகமான எண்ணிக்கையில் அனுமதிச் சீட்டுகள் விற்பனையாகி உள்ளன.  

இதுவரை எம்மிடம் அனுமதிச் சீட்டுக்களை பெற்றுக்கொண்டு பெருமனதோடு தமது அன்பளிப்பை வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றி.

இவ்வாண்டு 'காரை வசந்தம்' விழாவிற்குரிய $100 அல்லது அதற்கு மேல் பெறுமதியான அனுமதிச் சீட்டுகளை நவ.30.2013 ஆம் திகதிக்கு முன்னர் கொள்வனவு செய்யும் அன்பர்களின் பெயர்ப் பட்டியல் 'காரை வசந்தம்' சிறப்பு மலரிலும் பிரசுரிக்கப்படும்.

அனுமதிச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் எம்மிடம் தொடர்பு கொள்ளலாம். 

தொடர்புகளுக்கு: கனடா-காரை கலாச்சார மன்றம் (416)642-4912

இதுவரை எம்மிடம் அனுமதிச் சீட்டுகளைக் கொள்வனவு செய்த குடும்பங்களின் பெயர்ப்பட்டியலை கீழே காணலாம்.

Click to access 100_Ticket_5.pdf

 

மரண அறிவித்தல்,திருமதி ஆறுமுகம் செல்லம்மா

1

 

                                                                                            மரண அறிவித்தல்                      
                                                                               திருமதி ஆறுமுகம் செல்லம்மா
                                                                  பிறப்பு : 25 ஓகஸ்ட் 1923 — இறப்பு : 29 நவம்பர் 2013

காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், காரைநகர் நாவலடிக்கேணியை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் செல்லம்மா அவர்கள் 29-11-2013 வெள்ளிக்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை(ஆங்கில ஆசிரியர்) வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லையா ஆறுமுகம் B.A.( லண்டன், உப அதிபர்-உரும்பிராய் இந்துக்கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான யோகாம்பிகை, யோகநாதன்(இளைப்பாறிய தபாலதிபர்), மற்றும் பாலசுப்பிரமணியம்(ஓய்வுபெற்ற நீர்ப்பாசனத் திணைக்கள உத்தியோகத்தர்), Dr. அம்பிகை(பல் வைத்தியர்- கொழும்பு), தவமணி(நீர்ப்பாசனத் திணைக்கள லிகிதர்- வவுனியா), Dr. நல்லநாதன்(பொறியியல் பேராசிரியர்-லண்டன் பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சண்முகநாதன்(உதவி அரசாங்க அதிபர்- மன்னார்), ரீற்றா(கனடா), ஞானாம்பிகை, Dr. வைகுந்தவாசன்(கொழும்பு), தவராஜசிங்கம், திருமகள் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாந்திராஜ்(பொறியியலாளர்- கனடா), சிராணி(லண்டன்), சத்தியராஜ்(லண்டன்), சாமினி(கனடா), சற்குணராஜ்(கனடா), சுந்தரேஸ்வரி(ஆசிரியர்), மங்களேஸ்வரி(ஆசிரியர்), சிவனேஸ்வரி, யோகமலர்(ஆசிரியர்), லோகேஸ்வரம்(கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம்- மன்னார்), குகநேசன், குகப்பிரியன்(பொறியியலாளர்- சிங்கப்பூர்), அபிராமி(பங்களாதேஷ்), பிரசன்னா(கொழும்பு), ஜனகன்(லண்டன்), ஆருரன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று No.11, Outer Circulax Road, Vavuniya என்னும் முகவரியில் அமைந்துள்ள நீர்ப்பாசன திணைக்கள விடுதியில் நடைபெற்று பின்னர் பி.ப 4.00 மணிக்கு வவுனியா தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஆறுமுகம் நல்லநாதன்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442084298211
செல்லிடப்பேசி: +447939194652
தவமணி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774716910
 
 

 

காரை நலன் புரிச்சங்கத்தின் காரைக் கதம்பம் 2014

Click to access -நலன்-புரிச்சங்கத்தின்-காரைக்-கதம்பம்-20142.pdf

[prettyfilelink src=”http://www.karainagar.com/pages/wp-content/uploads/2013/11/Application-Form1.pdf” type=”pdf” newwindow=”false”]Download Application Form[/prettyfilelink]

பாடசாலைச் சுகாதார மேம்பாட்டுச்செயற்றிட்டம்.

பாடசாலைச் சுகாதார மேம்பாட்டுச்செயற்றிட்டம்.
தீவக வலயத்திற்கான பாடசாலை சுகாதார மேம்பாட்டுச் செயற்றிட்டம் (2013)
2013/10/25 ம் திகதி காலை 8.30 மணிக்கு தீவக வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.தி.ஜோன் குயின்ரஸ் அவர்களின் தலைமையில் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் நடைபெற்றது.
பிரதமவிருந்தினராக வட மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் திரு.ஆ.இராசேந்திரம் அவர்களும் சிறப்பு  விருந்தினராக காரைநகர் பிரதேச செயலர் திருமதி.தேவநந்தினி பாபு அவர்களும் பிரதேச வைத்திய பொது அதிகாரி திருமதி ஜான்சி ஆனந்தராயா அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
1.      சிகிச்சை முகாம்கள்
2.      கண்காட்சிகள்
3.      பாடசாலை மாதிரி சிற்றுண்டிச்சாலை
4.      கலைநிகழ்ச்சிகள்
என்றவாறு மிகச்சிறப்பான முறையில் முகாம் நடைபெற்றது.தீவக வலயத்திற்கான இச்சுகாதார மேம்பாட்டு முகாமினை நல்ல முறையில் திட்டமிட்டு ஒழுங்குபடுத்திய தீவக வலயத்தின் கல்விப்பணிப்பாளர் மற்றும் யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் ஆகியோருக்கு பிராந்திய வைத்திய சுகாதார அதிகாரி வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அவர்கள் தனது பாராட்டுக்களைத்தெரிவித்திருந்தார்.

DSC06521 DSC06526 DSC06536 DSC06541

யாழ்ற்ரன் கல்லூரி சாரண மாணவர்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்.

யாழ்ற்ரன் கல்லூரி சாரண மாணவர்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்.

 

யாழ்ற்ரன் கல்லூரி சாரண இயக்கத்தைச் சேர்ந்த ஒன்பது மாணவர்கள் தங்களின் அடுத்த தரமான மாவட்ட ஆணையாளர் விருதினைப் ( District Commissioner code) பெற்றுள்ளனர். இவர்கள் இன்னும் சிறிது காலத்தில் ஜனாதிபதி விருதினைப்பெறத் தகைமை பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட ஆணையாளர் விருது பெற்ற சாரணர்களுக்கும்; நெறிப்படுத்திய சாரண ஆசிரியர் திரு.ஆ.யோகலிங்கம் அவர்களுக்கும் கல்லூரி அதிபர் தனது பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றார்.

 

நீண்ட கால இடைவெளியின் பின்னர் கடந்த ஆண்டு மீண்டும் புனரமைக்கப்பட்ட யாழ்ற்ரன் கல்லூரியின் சாரண இயக்கம் புதிய உத்வேகம் கொண்டு வருவது மட்டுமன்றி காரைநகரில் உள்ள பல ஆலயங்களில் நடைபெறும் திருவிழாக்களிலும் பொது நிறுவனங்களிலும் தமது சேவையைச் செய்து பாராட்டைப்பெற்றுள்ளனர். குறிப்பாக காரைநகர் ஈழத்துச்சிதம்பரத்தில் திருவெம்பாவை உற்சவத்தின் போது மாணிக்கவாசகர் மடாலயத்தில் நடைபெறும் அன்னதானப் பணிகளில் இவர்களின் சேவை அவ் அன்னதான சபையினரால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

மாவட்ட ஆணையாளர் விருது பெற்ற சாரணர்கள்

 

1.   செல்வன்.க.கஜந்தன்

2.   செல்வன்.வி.தர்ஷன்

3.   செல்வன்.சி.சசிதரன்

4.   செல்வன்.பொ.ஜெயக்குமார்

5.   செல்வன்.சி.நவநீதன்

6.   செல்வன்.சி.ராகுலன்

7.   செல்வன்.க.காண்டீபன்

8.   செல்வன்.செ.நிறோசன்

9.   செல்வன்.ச.திருக்குமரன்

விஞ்ஞான நாடகப்போட்டியில் மாகாண மட்டத்தில் யாழ்ற்ரன் கல்லூரி முதலிடம் பெற்றது.

விஞ்ஞான நாடகப்போட்டியில் மாகாண மட்டத்தில் யாழ்ற்ரன் கல்லூரி முதலிடம் பெற்றது.
உலக விஞ்ஞான தினம் 2013 இனை முன்னிட்டு இலங்கைத்தேசிய விஞ்ஞான மன்றத்தினால் நடாத்தப்பட்ட விஞ்ஞான நாடகப்போட்டியில் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி மாணவிகள் வடமாகாணத்திலே முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டனர்.

வாழ்வும் சுகாதாரமும் என்ற இத்தலைப்பிலான இந்நாடகம் தேசிய மட்டத்திற்குத் தெரிவாகி கடந்த வாரம் கொழும்பு மருதானை மகாபோதி மண்டபத்தில் நடைபெற்ற தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றினர். இந்நாடகத்தில் கலந்து கொண்ட மாணவிகளையும் நாடகத்தை நெறிப்படுத்திய ஆசிரியர்கள் திரு.பா.பாலமுரளி திரு.கு.பிரதீபன் செல்வி.யோ.விம்சிகா ஆகியோரைக் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் பாராட்டுகின்றார்.

இவ் ஆண்டு யாழ்ற்ரன் கல்லூரி மாணவிகள் தேசிய மட்ட நிகழ்வுகளில் கொழும்பில் இரண்டாவது தடவையும் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கொழும்பு சுயாதீன நிறுவனத்தினரால் நடாத்தப்பட்ட புத்தாக்கப் போட்டிகளில் கலந்து கொண்டமையையும் இவ் இணையத்தளத்தில் தெரிவித்திருந்தோம்.

கடந்த 2012ம் ஆண்டு யாழ்ற்ரன் கல்லூரி மாணவர்கள் தேசிய மட்டத்தில் மூன்று நிகழ்வுகளில்; கலந்து கொண்டமையை இவ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

 

நாடகத்தில் பங்கு பற்றிய மாணவிகள்

 

1.   செல்வி. த. திருமகள்

2.   செல்வி.ம.நவநிலா

3.   செல்வி.மோ.கிர்ஷிகா

4.   செல்வி.ச.ரோகிணி

5.   செல்வி.செ.கமலேஸ்வரி

6.   செல்வி.பா.கவிதா

7.   செல்வி.வி.வேதாரணி

8.   செல்வி.கு.கோபிதா

காரைநகர் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய பாலஸ்தாபனம் 10.02.2014 திங்கட்கிழமை நடைபெற இருக்கின்றது.

 காரைநகர் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய பாலஸ்தாபனம் 10.02.2014 திங்கட்கிழமை நடைபெற இருக்கின்றது. இராஜகோபுரம், மணிமண்டபம், மணிக்கோபுரம், யாகசாலை, மடப்பள்ளி ஆகியவற்றின் திருப்பணி வேலைகளின் தற்போதய நிலவரத்தை படங்களில் காணலாம். அம்பாளின் உட்பிரகார வேலைகளுக்கு இருபத்தெட்டு (28) தூண்கள் அமைத்து கூரைவேலை செய்வதற்கு சுமார் எழுபத்தேழு இலட்சம் ரூபா தேவைப்படுகின்றது. ஒரு தூணை உபயமாக செய்ய விரும்புவோர்கள் இரண்டு லட்சத்து எழுபத்தாறாயிரம் ரூபாவை செலுத்தி தங்களது பெயரில் பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல் வெளிப்பிரகார வேலைகளுக்கு தெற்கு வீதிக்கு அறுபத்தெட்டு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாவும் மேற்கு வீதிக்கு ஐம்பது இலட்சத்து தொண்ணூற்றெட்டாயிரம் ரூபாவும் வடக்கு வீதிக்கு எழுபத்தாறு இலட்சத்து நாற்பத்து மூவாயிரம் ரூபாவும் தேவைப்படுகின்றது. மேற்படி வேலைகள் யாவற்றையும் செய்து முடிப்பதற்காக உலகெங்கும் பரந்து வாழும் அம்பாளின் அடியவர்கள் வாரிவழங்கி அம்பாளின் திருப்பணி வெகுவிரைவில் நிறைவேற ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். நிதியுதவி செய்ய விரும்பும் அன்பர்கள் நேரடியாகவோ அல்லது Thiruppani Sabai,  Bank of Ceylon,  Account  No 7641518 , Karainagar (SWIFT CODE BCEYLKLX) எனும் கணக்கிற்கோ செலுத்தலாம் என ஆலய திருப்பணிச்சபையினர் கேட்டுக்கொள்கின்றார்கள்.DSC_0386 DSC_0387 DSC_0388 DSC_0389DSC_0386

 

 

மரண அறிவித்தல்,திரு.சோமசுந்தரம் தவராசசிங்கம்

Click to access Notice2.pdf

மரண அறிவித்தல்,திருமதி. ஞானசுந்தரி அருளையாபிள்ளை

ghjfhjfh

                                                                                            மரண அறிவித்தல்
மாப்பணவூரி, காரைநகரைப் பிறப்பிடமாகவும், மெல்போன், அவுஸ்ரேலியாவை வசித்து வந்தவருமாகிய திருமதி. ஞானசுந்தரி அருளையாபிள்ளை அவர்கள் செவ்வாய்க்கிழமை (19-11-2013) அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் முருகேசு-நேசரட்ணம் தம்பதிகளின் மூன்றாவது புதல்வியும், காலம் சென்ற Dr.சோமசுந்தரம் அருளையாபிள்ளையின் அன்பு மனைவியும் சச்சிதானந்தா Dandenoung,Melbourne, காலஞ்சென்ற முருகானந்தா Glenwaverley, Melbourne ,சங்கமித்ரா Waverly Park, Melbourne  ஆகியோரின் அன்புத் தாயாரும், வள்ளி, சிறிராணி, பூங்குன்றன் ஆகியோரின் அன்பு மாமியாரும் நிரோசன், ரம்மியா, யதுர்சன், சாரங்கா, விசாய் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இறுதி மரியாதைக்காக வெள்ளிக்கிழமை(22-11-2013) அன்று Springrale Wilson Chappel  இல் மாலை 4:00 மணி முதல் 5:15 வரை வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
சச்சி 469 6214 82
மித்திரா 469 149 417
சிறிராணி 402 079 256

 

 

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திமட்டம் எய்திய 98 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  கடந்த திங்கட்கிழமை காரைநகர் தியாகராசா மத்திய மகா வித்தியாலய நடராசா மண்டபத்தில் நடைபெற்றது.காரைநகர் கோட்டக் கல்விப்பணிப்பாளர் பு.ஸ்ரீவிக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் தி. ஜோன்குயின்ரஸ் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

பரீட்சையில் மொத்தமாக 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுச் சித்தி பெற்றமைக்காக இச்சான்றிதழ் வழங்கப்பட்டது.காரைநகரில் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 179 மாணவர்களில் 98 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுச் சித்தியடைந்து சாண்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.

வியாவிலில் கோமாதா பூஜை

காரைநகர் வியாவில் ஜயனார் ஆலயத்தில் திருக்கார்த்திகை திருநாளான இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கோமாதா பூஜை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றது.ஆலய பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ சோமாஸ்கந்தக்குருக்கள் தலைமையில் அந்தணச் சிவாச்சாரியர்கள் புடைசூழ  இடம்பெற்றது. காரைநகரில் முதற் தடவையாக சிறப்பாக நடைபெற்ற இந்தப்  பூசை வழிபாட்டில் மக்கள் ஆர்வத்துடன்  கலந்துகொண்டனர்.

காரைநகர் அபிவிருத்திச் சபையின் நிர்காக சபைக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காரைநகர் அபிவிருத்திச் சபையின் நூலகக் கட்டடத்தில் நடைபெற்றது

சூரன் போர் உற்சவம்

கந்த சஸ்டி விரத இறுதிநாளான நேற்று வெள்ளிக்கிழமை காரைநகரில் உள்ள ஆறு ஆலயங்களில் சூரன் போர் உற்சவம் இடம்பெற்றது.அவற்றுள் காரைநகர் கிழவன்காடு கந்தசுவாமி கோவில்,பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்,கருங்காலி முருகமூர்த்தி கோவில் ஆகியவற்றில் இடம்பெற்ற சூரன்போர் காட்சிகளைப் படங்களில் காணலாம்

கிழவன்காடு முருகன் கோவில்

 

பயிரிக்கூடல் சுப்பிரமணியர் சுவாமி கோவில்

 

 

கருங்காலி முருகன் கோவில் படங்கள்

தீபாவளி வாழ்த்துக்கள்

theepavali

காரைநகர் கிழவன் காடு கலாமன்ற கலைவிழா யாழ் நல்லூரில்

காரைநகர் கிழவன்காடு கலா மன்றம் நடாத்திய கலைவிழாவும் பரிசளிப்பு விழாவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (27.10.20123);  நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் நடைபெற்றது.

பிரதம விருந்தினர்களாக யாழ் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி எஸ்.சிவலிங்கராசா,உடுவில் மகளிர் கல்லூரி ஆசிரியை திருமதி சரஸ்வதி சிவலிங்கராசா ஆகியோரும் சிறப்பு விருந்தினராக மன்னார் நகரப் பிரதேச செயலர் எஸ்.தயானந்தாவும் கொரவ விருந்தினர்களாக யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட சிரேஸ்ட விரிவுரையாளர் எஸ் கண்ணதாசன்,விக்டோரியா கல்லூரி ஆசிரியை ஸ்ரீதேவி கண்ணதாசன்,கலா மன்ற கௌரவ உறுப்பினர் சிவஞானம் உமாதேவி தம்பதியினர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கலாமன்றத் தலைவர் ந.சோதிநாதன் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் கலாமன்ற மாணவர்களின் கலைநிகழ்வுகளும் சிறப்புப் பட்டிமண்டபமும் மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றது.

தோப்புக்காடு அபிவிருத்திச் சங்க கௌரவிப்பு விழா காரைநகரில்

தோப்புக்காடு மறைஞான சம்பந்த வித்தியாலயத்தில் கற்று 2013ம் ஆண்டு தரம்5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மாணவர்களையும் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 11ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

தோப்புக்காடு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் இ.ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாணக் கல்வியமைச்சின் பிரதிச் செயலாளர் ப.விக்னேஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் தி.ஜோன்குயின்ரஸ்,ஓய்வுநிலை வலயக் க்கல்விப்பணிப்பாளர் வி.இராதாகிருஸ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.இதில் ஆசிரியர்,மாணவர் கௌரவிப்பு,மாணவர்களின் கலைநிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றன.

சிவகாமி அம்மனின் தேர் திருவிழா

காரை வசந்தம் 2013

karai_vasantham_2013_v2

காரைநகர் பிரதேச சர்வதேச சிறுவர் முதியோர் மற்றும் மாற்றாற்றலுடையோர் தின விழா 22-10-2013 செவ்வாய்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது

காரைநகர் பிரதேச செயலகம் நடாத்தும் சர்வதேச சிறுவர் முதியோர் மற்றும் மாற்றாற்றலுடையோர் தினவிழா  (22.10.2013) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் திருமதி தேவந்தினி பாபு தலைமையில் ஆரம்பமானது.

இந்நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அழைக்கப்பட்டிருந்த போதிலும் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார் சிறப்பு விருந்தினர்களாக சமுக சேவைகள் திணைக்கள வடமாகாணப் பணிப்பாளர் திருமதி நளாயினி இன்பராஜ்,ஊர்காவற்றுறை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி ஜான்சி;, ஆனந்தராசா காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் பு.சிறிவிக்னேஸ்வரன், காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர் சிவா.தி.மகேசன் ஆகியோரும் கலந்துகொன்டு சிறப்பித்தனர்.

இவ்விழாவில் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகளும் பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட கவிதை,கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு,தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 19 மாணவர்கள் கொரவிப்பு, கிராமசேவையாளர் பிரிவு ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதியோர்கள் கௌரவிப்பு, முதியோர் விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற முதியவர்களுக்கான பரிசளிப்பு என்பனவும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.