Muthu Ponnampalam

Author's posts

மரண அறிவித்தல்,திருமதி. ஞானசுந்தரி அருளையாபிள்ளை

ghjfhjfh

                                                                                            மரண அறிவித்தல்
மாப்பணவூரி, காரைநகரைப் பிறப்பிடமாகவும், மெல்போன், அவுஸ்ரேலியாவை வசித்து வந்தவருமாகிய திருமதி. ஞானசுந்தரி அருளையாபிள்ளை அவர்கள் செவ்வாய்க்கிழமை (19-11-2013) அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் முருகேசு-நேசரட்ணம் தம்பதிகளின் மூன்றாவது புதல்வியும், காலம் சென்ற Dr.சோமசுந்தரம் அருளையாபிள்ளையின் அன்பு மனைவியும் சச்சிதானந்தா Dandenoung,Melbourne, காலஞ்சென்ற முருகானந்தா Glenwaverley, Melbourne ,சங்கமித்ரா Waverly Park, Melbourne  ஆகியோரின் அன்புத் தாயாரும், வள்ளி, சிறிராணி, பூங்குன்றன் ஆகியோரின் அன்பு மாமியாரும் நிரோசன், ரம்மியா, யதுர்சன், சாரங்கா, விசாய் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இறுதி மரியாதைக்காக வெள்ளிக்கிழமை(22-11-2013) அன்று Springrale Wilson Chappel  இல் மாலை 4:00 மணி முதல் 5:15 வரை வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
சச்சி 469 6214 82
மித்திரா 469 149 417
சிறிராணி 402 079 256

 

 

கிழவன்காடு கலா மன்றம் நடாத்தும் கலைவிழாவும் பரிசளிப்பு விழாவும்

காரைநகர் கிழவன்காடு கலா மன்றம் நடாத்தும் கலைவிழாவும் பரிசளிப்பு விழாவும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (27.10.20123) பிற்பகல் 2.00மணிக்கு நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் நடைபெற உள்ளது.

பிரதம விருந்தினர்களாக யாழ் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி எஸ்.சிவலிங்கராசா,உடுவில் மகளிர் கல்லூரி ஆசிரியை திருமதி சரஸ்வதி சிவலிங்கராசா ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக மன்னார் நகரப் பிரதேச செயலர் எஸ்.தயானந்தா,காரைநகர் பிரதேச செயலர் திருமதி தேவந்தினி பாபு ஆகியோரும் கொரவ விருந்தினர்களாக யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட சிரேஸ்ட விரிவுரையாளர் எஸ் கண்ணதாசன்,விக்டோரியா கல்லூரி ஆசிரியை ஸ்ரீதேவி கண்ணதாசன்,கலா மன்ற கௌரவ உறுப்பினர் சிவஞானம் உமாதேவி தம்பதியினர் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.

கலாமன்றத் தலைவர் ந.சோதிநாதன் தலைமையில் நடைபெற உள்ள இந்நிகழ்வில் கலாமன்ற மாணவர்களின் கலைநிகழ்வுகளும் சிறப்புப் பட்டிமன்றமும்  இடம்பெற உள்ளது.

 

சிவகௌரி சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் வெள்ளிவிழாவும் மலர் வெளியீடும்

காரைநகர் சிவகௌரி சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் வெள்ளிவிழாவும் மலர் வெளியீடும் நாளை சனிக்கிழமை (26.10.2013) பிற்பகல் 2.30 மணிக்கு பெரியமணல் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் சிவகௌரி சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் சு.விசுவலிங்கம் தலைமையில் நடைபெற உள்ளது.

யாழ்மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.அருந்தவநாதன் பிரதம விருந்தினராகவும் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தி,யாழ்மாவட்ட சி.க.கூ.சங்கங்களின் சமாசத் தலைவர் செ.இலகுநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகவும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர்.

வெள்ளி விழா மலரின் மதிப்பீட்டுரையினை ஓய்வு நிலை  கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் ச.கனகசபாபதி நிகழ்த்தி நூலினை வெளியிட்டு வைக்க காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர் சிவா.தி.மகேசன் பெற்றுக்கொள்வார்.கலை நிகழ்வுகளும்,பட்டிமன்றமும் சிறப்பு நிகழ்வுகளாக தொடர்ந்த இடம்பெற உள்ளன.
 

பாடசாலைச் சுகாதார மேம்பாட்டுச் செயற்திட்டம் யாழ்ற்ரன் கல்லூரியில்

வடமாகாணக் கல்வி,சுகாதார அமைச்சுக்களுடன் தீவக வலயக் கல்வி அலுவலகம் இணைந்து நடாத்தும் பாடசாலைச் சுகாதார மேம்பாட்டுச் செயற்திட்டம் 25.10.2013 வெள்ளிக்கிழமை கலை 8.30 மணிக்கு காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் தி.ஜோன்குயின்ரஸ் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண மேலதிக மாகாணக் கல்விப்பணிப்பாளர் ஆ.இராசேந்திரனும் சிறப்பு விருந்தினர்களாக காரைநகர் பிரதேச செயலர் திருமதி தேவந்தினி பாபு,ஊர்காவற்றுறை பிரதேச பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி ஜான்சி ஆனந்தராசா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
சுகாதார மேம்பாடு தொடர்பான விழிப்புணர்வு அறிமுகம்,மருத்துவ முகாம்,காரைநகர் கோட்டப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள்,மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கல் என்பன இச்செயற்றிட்டத்தில் இடம்பெற உள்ளது.  
                

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஊரி அ.மி.த.க பாடசாலை மாணவர் கௌரவிப்பு

  
காரைநகர் ஊரி அ.மி;.த.க பாடசாலையின் வரலாற்றில் ஒரே தடவையில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் நால்வர் சித்தியடைந்த வரலாற்று சாதனை நிகழ்வைக் கொண்டாடும் நிகழ்வு பாடசாலை சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

பாடசாலை அதிபர் திரு அ.சிறிதரன் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவிற்கு பிரதம அதிதியாக தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் திரு ரி;.ஜோன்குயின்ரஸ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அவருடன் காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் சிறிவிக்னேஸ்வரன், ஆசிரிய ஆலோசகர் மு.கேசவன்,தியாகராசா மத்திய மகா வித்தியாலய அதிபர் திருமதி வாசுகி தவபாலன்,காரைநகர் அபிவிருத்திச் சபைச் செயலரும் அப்பிரிவுக் கிராமசேவையாளருமான இ.திருப்புகழூர்சிங்கம் மற்றும் வலந்தலை தெற்கு,வடக்கு அ.மி.த.க பாடசாலைகளின் அதிபர்களான  திருக.நேர்த்திரானந்தன்,செல்வி விமலா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதுடன் அப்பகுதியைச் சேர்ந்த அதிகளவான பெற்றோர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

காரை மத்தி மேம்பாட்டுக் கழகம் நடாத்திய மாணவர் கௌரவிப்பு

 

காரை மத்தி மேம்பாட்டுக்கழகம் கடந்த வெள்ளிக்கிழமை (18.10.2013)  இவ்வாண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த  மாணவர்களுக்கான கௌரவிப்பு விழாவினை நடாத்தியது.

காரை மத்தி மேம்பாட்டுக் கழகத் தலைவர் ஆசிரியர் ந.கிஸ்ணபவன் தலைமையில் நடைபெற்ற கௌரவிப்பு விழாவில் பிரதம விருந்தினராக தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு ஜோன்குயின்ரஸ் அவர்களும் சிறப்பு விருந்தினராக  இலங்கை வங்கி முகாமையாளர்  வி. விஜயகுமார் அவர்களும் கொரவ விருந்தினராக சி.பரமநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்விற்கான பேராதரவை நீத்தார் பரமநாதன் குகநாதன் அவர்களின் 22ஆவது ஆண்டு ஞாபகார்த்தமாக திரு சி பரமநாதன் குடும்பத்தினர் வழங்கியிருந்தனர்.இந்நிகழ்வானது காரை மத்தி மேம்பாட்டுக் கழகத்தினால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அறிவக மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் காரைநகர் கோட்டப் பாடசாலைகளில் கல்வி பயின்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 19 மாணவர்களுக்கும் பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

காரைநகர் பிரதேச சர்வதேச சிறுவர் முதியோர் தின விழா

காரைநகர் பிரதேச செயலகம் நடாத்தும் சர்வதேச சிறுவர் முதியோர் மற்றும் மாற்றாற்றலுடையோர் தினவிழா நாளை (22.10.2013) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் திருமதி தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகமும் சிறப்பு விருந்தினர்களாக சமுக சேவைகள் திணைக்கள வடமாகாணப் பணிப்பாளர் திருமதி நளாயினி இன்பராஜ்,ஊர்காவற்றுறை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி ஜான்சி;, ஆனந்தராசா காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் பு.சிறிவிக்னேஸ்வரன், காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர் சிவா.தி.மகேசன் ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளனர்.

இவ்விழாவில் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகளும் பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட கவிதை,கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு,தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 19 மாணவர்கள் கொரவிப்பு, கிராமசேவையாளர் பிரிவு ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதியோர்கள் கௌரவிப்பு, முதியோர் விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற முதியவர்களுக்கான பரிசளிப்பு என்பனவும் நடைபெற உள்ளது

தமிழ் திறன் போட்டி முடிவுகள் 2013

தமிழ் திறன் போட்டி  முடிவுகள் 2013

பாலர் பிரிவு 

பேச்சு  : 1st    Ninthuja  Mokanenthiran

            2nd    Thiyana  Tharmalingam

           3rd    Yanakei   Shagathevan

வாசிப்பு  : 1st  Ninthuja  Mokanenthiran

              2nd   Arusan  Suthakaran

             3rd   Malaravan Vijayakumar

            3rd   Athirai   Rajamohan

 எழுத்து   1 st   Suruthi   Uruthiraswaran

              2nd   Ninthuja  Mokanenthiran

             3rd  Kajahni    Piragalathiswaran

பண்ணிசை  1st  Arusan  Suthakaran

                  1st  Suruthi  Pirasana

                  1st  Ninthuja   Mokanenthiran

 

கிழ்பிரிவு 

 

பேச்சு  : 1st   Thulasi  Thavarajah

              2nd  Kirujani  Nadanasabesan

              3rd  Rakulan  Senthuran

  வாசிப்பு : 1st Janakan  Senthuran

                 2nd  Sayanthan  Kanesalingam

                3rd  Thulasi  Thavarajah

எழுத்து  1st  Kirujani  Nadanasabesan

            2nd  Meera  Senthilnathan

           3rd  Thulasi  Thavarajah

பண்ணிசை  1st  Anath  Satkunarajah

                 2nd Anjana  Satkunarajah

                3rd  Pavisa  Mokanenthiran

 

மத்தியபிரிவு 

 

பேச்சு :  1st  Thulasi  Yogeswaran

            2nd Thanuskanth  Yogeswaran

           3rd  Pavan  Puspanantham

  வாசிப்பு :  1st Arabi  Rasamohkan

                 2nd Thunusan  Mharajah

                3rd  Kirthanan  Jeevananthrajah

எழுத்து  :  1st Seliyan  Sothinathan

               2nd Thulasi  Yogeswaran

              3rd  Thanuskanth  yogeswaran

பண்ணிசை : 1st  Arabi  Rajamhokan

                   2nd  Niluksanan  Thayanantharajah

                  3rd  Karini  Thayanantharajah

 

மேற்பிரிவு 

 

பேச்சு  :  1st Mayuri  Shanmugam

              2nd Nishanthi  Kanesalingam

              3rd Krithiga  Pusbalingam

  வாசிப்பு : 1st  Nishanthi Kanesalingam

               2nd Mayuri   Shanmugam

              3rd  Janani  Shivarasakumar

எழுத்து :  1st  Nishanthi  Kanesalingam

              2nd  Majuri   Shanmugam

             3rd  Kumaran  Thanabalasingam

பண்ணிசை :  1st Tharani  Thevakumar

                    2nd Mathumai  yogarajah

                  3rd  Luxsika  Mokanenthiran

 

 

 அதி மேற்பிரிவு

பேச்சு  : 1st Kajan  Sivarasakumar

  வாசிப்பு : 1st Mathura  Sothinathan

               2nd Kajan   Sivarasakumar

              3rd Myurah  Sothinathan

         எழுத்து  : 1st Mathura  Sothinathan

                       2nd Myurah  Sothinathan

                      3rd Kajan  Sivarasakumar

 

         

தமிழ் திறன் போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் அறுதல் பரிசுகளும் வழங்கப்படும்

 

யா/யாழ்ற்ரன் கல்லூரி காரைநகர் பரிசளிப்பு விழா

photo-1

திரு.செல்வரெத்தினம் அருணாசலம்

 

திரு.செல்வரெத்தினம் அருணாசலம் 
(முன்னாள் எழுதுவினைஞர் Walkers Ltd.  யாழ்ப்பாணம்)

தாயின் மடியில் : 19-11-1931                                        ஆண்டவன் அடியில்  : 03-10-2013

 

காரைநகர் மாப்பணவூரியைப் பிறப்பிடமாகவும் கனடா ஸ்காபுரோவை வதிவிடமாகவும் கொண்ட திரு.அருணாசலம் செல்வரெத்தினம் அவர்கள் இன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் பூதவுடல்  04-10-2013 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணி முதல்  9.00 மணி வரை  4164 Sheppard Ave East (Midland&Sheppard)  என்ற முகவரியில் அமைந்துள்ள OGDEN FUNERAL HOME ல் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்படும்.

இவ்வறிவித்தலை உறவினர்களும் நண்பர்களும் தயவுசெய்து ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :உதயன் (மகன் ) (416)908-6030

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் தமிழ்த் திறன் போட்டிகள் 2013

இடம் : Scarborough Civic Center

காலம் : Sunday, oct 20 th, 2013

நேரம் : காலை 8 மணி முதல் 1 மணி வரை 

 

இப் போட்டிகளுக்கு உங்களைத் தயார்படுத்துவதற்கான திருத்தப்பட்ட ஆவணங்களைக் கீழ் வரும் link இல் அழுத்தித் தரவிறக்கம் செய்யவும்

  

தமிழ் திறன் போட்டி விண்ணப்பம் 2013

  எழுத்து 

பாலர் பிரிவு

கீழ்ப் பிரிவு

மத்திய பிரிவு

மேற் பிரிவு

அதி மேற்பிரிவு

 

வாசிப்பு 

பாலர் பிரிவு

கீழ்ப் பிரிவு

மத்திய பிரிவு

மேற் பிரிவு

அதி மேற்பிரிவு

 

பேச்சு 

பாலர் பிரிவு

கீழ்ப் பிரிவு

மத்திய பிரிவு

மேற் பிரிவு

அதி மேற்பிரிவு

 

பண்ணிசை

பாலர் பிரிவு

கீழ்ப் பிரிவு

மத்திய பிரிவு

மேற் பிரிவு

அதி மேற்பிரிவு

 

தொடர்புகளுக்கு: 

திரு. தம்பையா ​ அம்பிகைபாகன் (BA Dip in Ed) – (647) 766 7133

முன்னாள் ஆசிரியர் யாழ் இந்துக் கல்லூரி

குழந்தைகளுக்கான இலவச PICNIC 2014 + Application Form

2014 இல்  முதல் முறையாக கனடா காரை கலாசார மன்றத்தால் நடைபெற உள்ள கோடை கால PICNICக்கு இலவசமாக அழைத்து செல்லப்படும் தகுதியை 2013 தமிழ் திறன் ​போட்டி யில் பங்கு பெறும் குழந்தைகள் பெறுகின்றனர். 

எனவே உங்கள் குழந்தைகளை இத்  தமிழ் திற்ன் போட்டிக்கு தயார் படுத்துங்கள்.

 

தமிழ் திறன் போட்டி 2013 விபரங்கள் மேலும் (oct 20 2013)    

Application  Form (2)

 

 

 

 

 

 

 

 

 

 

Karainagar Summer Get Together 2013 – Video Coverage

This is the video coverage of the Canada Karai Cultural Association's 2013 Summer Get Together. 

Enjoy!

காரைநகர் புதிய பிரதேச செயலகம்

60 மில்லியன் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்ட காரைநகர் பிரதேச செயலக புதிய கட்டடத்திறப்பு விழா 18.09.2013 புதன்கிழமை நடைபெற்றது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ண பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார். 


காரைநகர் பிரதேச செயலர் திருமதி பாபு தேவநந்தினி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.விஜயகலா மகேஸ்வரன் மற்றும் அமைச்சர்கள் அரச உயர் அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

 

காரைநகர் கிழவன்காடு கந்தசுவாமி கோவில் அலங்கார உற்சவ 14ம் திருவிழா நிகழ்வுகள்.

முக்கிய அறிவித்தல் ஒன்று – தமிழ் திறன் போட்டி தற்காலியமாக பின்போடபட்டுள்ளது

September 22nd, 2013  அன்‌று நடக்கவிருந்த தமிழ் திறன் போட்டி தவிர்க்க முடியாத காரணத்தால்  அக்டோபர் மாதம் 20 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை பின்போடபட்டுள்ளது. எனவே இதுவரை தமிழ் திறன் போட்டிக்கு பதிவுசெய்யாதவர்கள் இனியும் பதிவு செய்யலாம். அத்துடன் இந்த இணய தளத்தில் உங்கள் பிள்ளைகளுக்கான பேச்சு, வாசிப்பு, எழுத்து மாற்றும் பண் இசை என்பவற்றை பதிவுவிறக்கம் செய்து பிள்ளைகளை தயார் படுத்த முடியும். அத்துடன் இந்த தமிழ் திறன் போட்டியில் பங்கு பெரும் அனைத்து சிறுவர் சிறுமிகள்ளுக்கும் பரிசுகள், கேடயங்கள் வழங்கப்படும்.    

 

இந்த தற்காலிகமான  பின்போடல் செய்தியை உங்கள்  நண்பர்கள் மற்றும்  எல்லோருக்கும் தெரிவிக்கவும்.  

இன் நிகழ்வுக்கான புதிய திகதி : Sunday, October 20th,2013 (8am to 1pm) 

முதலாம் ஆண்டு நினைவலைகள் – கனகலிங்கம் சுதர்சன்

 

 

 

முதலாம் ஆண்டு நினைவலைகள் – கனகலிங்கம் சுதர்சன் 

மண்ணில் (24/03/1986)  விண்ணில் (17/09/2013)

அமரர் கனகலிங்கம் சுதர்சன் 
(கிளிநொச்சி  வலையாகக்கல்விப் பணிமனை முகாமைத்துவ உதவியாளர்)

திதி: பூர்வபட்ச பிரதமை 

பாதைகள் பல தேடினாய் இளையவயதினிலே 
பாதியிலே பயணத்தை முடிக்கத்தானோ 
சாதனைகள் பலவும் செய்ய விரும்பினாய் 
சாவின் அழைப்பை தெரிந்ததாலோ 
வேதனைகள் யாவும் ஏற்றுப்த் துடித்தாய் 
வேளையோடு போகதானோ 


உன் இந்நிலையை எண்ணி 
உம் தம்பி எங்கிருந்து ஏங்குகின்றானோ


குடும்பத்தினர் 
337, உதையநகர் கிழக்கு 
கிளிநொச்சி,
தொடர்வுகளுக்கு : 077- 5544126 

 


 
 

இன்று நடந்த பழைய மாணவர் சங்க கனடா கிளை நடாதிய – 125 வது ஆண்டு விழா

கலாநிதி ஆ தியாகராசா மத்திய மகா விதியாளையதின் 
(காரைநகர் இந்து கல்லூரி)

 

125 வது  ஆண்டு விழா இன்று கனடா கந்தசாமி கோவில் காலை அரங்கில் பெரும் திரளான மக்கள் முனிலையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் மலர்வெளியிடு, ஆசிரியர் கௌரவம், பரிசளிபுகள், பட்டிமன்றம், இசை மற்றும் வாசு மாஸ்டரின் மாணவன் மாணவிகள் வளங்கிய நடன விருந்தும் நடைபெற்றது. இன்றைய கனடிய நிகழ்வு காரைநகர் ஆ  தியாகராஜா மதிய மகா வித்யாலயாதிக்கு ஒரு மயிற்கல் நிகழ்வாக இருந்த்து குறிப்பிடத்தக்கது. 

DSC_0014 DSC_0015 DSC_0016 DSC_0017 DSC_0019 DSC_0020

பழைய மாணவர் சங்க கனடா கிளை நடாத்தும் – 125 வது ஆண்டு விழா

Invitation Letter f

Hindu ADDS 2
OSA Flyer

மரண அறிவித்தல் திருமதி. இராஜரட்ணம் கமலாதேவி

 

மரண அறிவித்தல்
திருமதி. இராஜரட்ணம் கமலாதேவி

காரைநகர்  புதுரோட்ஐ  (சந்தம்புளியடியை) பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்டவரும் திருமதி. இராஜரட்ணம் கமலாதேவி அவர்கள் 01/09/2013 அ​ன்று ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம்சென்றவர்களான சங்கரப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும் காலம்சென்ற ஆறுமுகம் மற்றும் அபிராமி பிள்ளையின் அன்பு மருமகளும்,இராஜரட்ணத்தின் அன்பு மனைவியும், மாலினி (Austrailia), சிவானந்தன் (London), கிருபாநந்தன் (Canada), சாந்தினி ​ (Austrailia) ஆகியோரின் அன்புத் தாயாரும், செந்தூர்ச் செல்வன் , தர்ஷினி, ஜெயதர்சினி, ஜெயந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும் கோகுலன், அஜிதா, அபிணையா,  அபிஷா, அபிரா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.  சுந்திரலிங்கம், நந்தகுமார், யோகேஸ்வரி (யோகு), சிவகுமார் காலம்சென்ற வசந்தி (பபி) யின் அன்புச் சகோதரியுமாவார்.

இராசையா, மனோரஞ்சிதம், மஞ்சுளா, சு​கிதா, இரத்னசபாபதி, இரட்ணசிங்கம், இராசம்மா ஆகியோரின் அன்பு மைத்துணியுமாவார். இவ் அறிவித்தலை ஊற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.       

இறுதி கிரிகைகள் வெள்ளி கிழமை கொழும்பில் நடைபெற உள்ளது.  

தொடர்புகளுக்கு :
இராஜரட்ணம்: (01194112362577)
கிருபா – மகன்: (905) 874 6989
சிவா: (416) 208 9343
சுந்தரலிங்கம்: (416) 335 8862

 

திரு அண்ணாமலை கந்தையாபிள்ளை செல்வரத்தினம் (செல்வம்ஸ் உரிமையாளர்-நெடுங்கேணி) தோற்றம் : 16 யூன் 1940 — மறைவு : 27 ஓகஸ்ட் 2013

காரைநகர் சந்தம்புளியடியைப் பிறப்பிடமாகவும், சிதம்பராமூர்த்தி கேணியடியை (S.M.கேணியடி) வசிப்பிடமாகவும் கொண்ட அண்ணாமலை கந்தையாபிள்ளை செல்வரத்தினம் அவர்கள் 27-08-2013 செவ்வாய்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையாபிள்ளை பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், நாகலிங்கம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

வரதராசா(லண்டன்), சற்குணராசா(லண்டன்), ஜெகராசா(லண்டன்), ஜெயமாலினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

காலஞ்சென்றவர்களான தில்லைநாதன், விஸ்வலிங்கம், துரைராசசிங்கம், மற்றும் உமாதேவி(கனடா), செல்வராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவலலிதா(லண்டன்), பவாணி(லண்டன்), தர்சினி(லண்டன்), தவராசா(ஆசிரியர்- கிளிநொச்சி கனிஸ்ட மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், சந்திரசேகரம்(மலேசியா), தர்மையா, சர்மா, பாக்கியம், இந்திராணி, நாகரத்தினம் கிருபால் மற்றும் இரத்தினபூபதி, செல்வராணி, கங்காதேவி, கந்தசாமி, நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நாகம்மா, காலஞ்சென்ற திருமதி. சந்திரசேகரம் மற்றும் நாகேஸ்வரி, காலஞ்சென்ற குமாரசாமி மற்றும் வீரசிங்கம், காலஞ்சென்ற கந்தையா மற்றும் செல்வராணி ஆகியோரின் சகலனும்,

பவித்திரா, ராகவி, யதுஷன், நர்மிகா, சர்மிகா, லக்‌ஷா(லண்டன்), பாலகிர்த்தனா, கஜன்(இலங்கை) ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-08-2013 வெள்ளிக்கிழமை அன்று காலை 09:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
தொலைபேசி: +94213202159
தவராசா(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772395858
சற்குரு(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447447627150
ஜெகன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447438000667
வரதராசா(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771041750

மரண அறிவித்தல் – திருமதி கந்தையா சின்னம்மா

திருமதி கந்தையா சின்னம்மா

யாழ் வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், காரைநகர் பொன்னம்பலம் வீதி மற்றும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சின்னம்மா அவர்கள் 09.09.2013 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு, திருமதி வியாக்கிரபாதர் அவர்களின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, கனகரத்தினம், இராசையா, ஆறுமுகம், பாக்கியம், சரஸ்வதி, மற்றும் அன்னம்மா ஆகியோரின் சகோதரியும்,

இராசரத்தினம்(வட்டுக்கோட்டை), நாகேஸ்வரி(ஆச்சிபொன்- சுழிபுரம்), ராணி(கொழும்பு), கிருஷ்ணபிள்ளை(கனடா), கௌரிதேவி(தேவி- வட்டுக்கோட்டை), மகாதேவன்(தேவன்- வவுனியா), குகனேஸ்வரி(கொழும்பு), ராஜேஸ்வரி, விக்னேஸ்வரி, அம்பிகைபாகன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(சுழிபுரம்), சேனாதிராஜா(வட்டுக்கோட்டை), அமரசிங்கம்(காரைநகர்), மற்றும் பவளநாயகி(வட்டுக்கோட்டை), உலகேஸ்வரி(கனடா), சிவகலை(வவுனியா), அமிர்தலிங்கம்(கொழும்பு), சிவசுப்ரமணியம், டோகேஸ்வரன், ஜமுனா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மகாவிஷ்ணி(மகா), சதானந்தன்(வட்டுக்கோட்டை), வாசுதேவன்(வாசு), மதிவதனி(லண்டன்), கைலைநாயகி(மலா), பரந்தாமன்(வட்டுக்கோட்டை), பலராமன்(பிரான்ஸ்), மனோகரன் கமலேஸ்வரி(ஹம்சா- சுழிபுரம்), கமலேஸ்வரன்(சேகர்), கீதாஞ்சலி(லண்டன்), மதனகோபால் கோணேஸ்வரி(ஜமுனா- பிரான்ஸ்), ஜெயராஜ்(தம்பி), குகவதனி(வதனா- கொழும்பு), ராமநாதன்(குமார்), சுகந்தினி(சுதா- கொழும்பு), வாசுகன், இனியசுதன், விஜயசுதன்(கனடா), ஜோகபாலன் விஜஜராஜி(விஜி), அம்பிகைபாலன்(வசந்தன்), சித்திரா(வட்டுக்கோட்டை), சஞ்ஜீவன், சுஜீவன், இந்துஜன்(வவுனியா), சிவகுமார்(கோபி- லண்டன்), விஜயகுமார் தேவவித்தியா(வித்தியா- யாழ்ப்பாணம்), யாமளா, துவாரகன்(துவா), நவகிருஷ்ண(நவா- லண்டன்), ஹரிஷங்கர்(ஷங்கர்), தனுஸ், தினேஷ்(லண்டன்), ஹர்ஷா(லண்டன்), ஹரிந்த்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

குலராஜ்(சது), பிரியராஜ்(பிரியன்), விருத்திக, நிவாசுகன், யதுசான், கஜன், அனுசன், பிரசன்னா, சுபகீதன்(கீதன்), ஷாலினி, ராகேஷ்(சந்தோஷ்), துவராஜ், காயத்திரி, அரவிந்த், அஜந், வைஷ்ணவன், தனுசன், பானுஜன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-09-2013 வியாழக்கிழமை அன்று 9:00 மணியளவில் வட்டுமேற்கு வட்டுக்கோட்டை என்னும் இடத்தில் நடைபெற்று பின்னர் காரைநகர் சாம்பல் ஓடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராசரத்தினம் — இலங்கை
தொலைபேசி: +94217900307
செல்லிடப்பேசி: +94778894056
தேவன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779341469
கிருஷ்ணபிள்ளை — கனடா
தொலைபேசி: +14168296943
டோகேஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447944820099
மணியம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447944728725
ஜெயராஜ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776285343
மதனகோபால் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652948303
சேகர் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447554993135
நதி — பிரித்தானியா
தொலைபேசி: +441933625525

மிருதங்கம் – பரதநாட்டியம் அரங்கேற்றம் – அர்ஜுன் லோகேஸ்வரன் மற்றும் அபிராமி லோகேஸ்வரன்

அரங்கேற்றக் கலையரங்கம் 

Hindu Temple Community Centre Auditorium 

143-09, Holly Ave. Flushing NY 11355

இங்ஙனம் தங்களின் நல்லாசிகளை நாடும் 
திரு. திருமதி – லோகேஸ்வரன்
(718) 628 0988 

 

 

மிருதங்கம் – பரதநாட்டியம் அரங்கேற்றம் – அர்ஜுன் லோகேஸ்வரன் மற்றும் அபிராமி லோகேஸ்வரன்

001

சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சை

காரைநகர் மணற்பிட்டியைச் சேர்ந்தவரும் தற்போது திருகோணமலையில் வசித்து வருபவருமான சிவநேசன் பாலகெளரி என்பவர் தனது இரு சிறுநீரகங்கிளினதும் தொழிற்பாட்டை இழந்துள்ளார். இவருக்கு கணவர் மற்றும் பாடசாலைக்கு செல்லும் நான்கு பிள்ளைகளும் உள்ளனர். இவரது கணவரும் சில வருடங்களிற்கு முன்னர் சிறுநீரக மற்றுச் சத்திரசிகிச்சை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சைக்கு பெருமளவு நிதி உடனடியாகத் தெவைப்படுவதால், கருணை உள்ளம் கொண்டவர்கள் உதவமுன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். PAYPAL மூலம் கனடா காரை கலாசார மன்றத்தின்  ஊடாக உங்கள் அன்பளிப்புக்களை வழங்கவும்​. 


Sivanesan Balagowri - English Letter
 

காரைநகர் கண்பார்வையற்ற இளைஞனின் குடும்பத்திற்கு உதவுங்கள்!

scan0001காரைநகர், களபூமி, பாலாவோடையைச் சேர்ந்த தற்போது வவுனியாவில் வசித்துவரும் கந்தசாமி ஐங்கரன் என்பவர் இரு கண்களையும் இழந்த நிலையில் தன் குடும்பத்தை வறிய நிலையில் ஓட்டி வருகின்றார். அவர் இரு கண்களையும் கடந்த யுத்தத்தின்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் இழந்துள்ளார். இவருக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். ஆனாலும் தனது முயற்சியினால் ஈக்குப்பிடி அடித்தல், மற்றும் தும்புத்தடி உற்பத்தி செய்தல் போன்ற சுயதொழிலை மேற்கொண்டு தனது வருமானத்தை வவுனியாவில் வைத்து ஓட்டி வருகின்றார். 
ஆகவே இந்த இளைஞன் குடும்பத்திற்கு உதவ அனைத்துக் காரைநகர் உள்ளங்களும் முன்வரல் வேண்டும். அத்துடன் இளைஞனுக்கு கடந்த மாதமாக ஒரு கண்ணில் காய் வளர்ந்து அதை உடனடியாக சத்திரசிகிச்சை செய்யவேண்டிய தேவையும் உள்ளது. அதற்கு பெரும்தொகைப் பணமும் தேவைப்படுகின்றது.
ஆகவே கருணை உள்ளம் கொண்ட எமது இதயங்களின் வள்ளல்களே உடனடியாக இந்த இளைஞனுக்கு உதவ முன்வாருங்கள். இந்த இளைஞனுக்கு உதவும் வகையில்லண்டனில் கந்தையா பரமேஸ்வரன்(ராசன்) என்பவருடன் தொடர்பு கொள்ளமுடியும். கனடாவில் தம்பிராஜா ஜெயச்சந்திரன்(ஜெயா) அவர்களிடமும் தொடர்பு கொண்டு அதற்குரிய நிதியை வாரிவழங்கி இந்த இளைஞனின் வாழ்வில் ஒளியேற்ற முன்வாருங்கள்.

கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக உங்கள் பங்களிப்பை செய்யவும். 

 

 



DSC08233

Click to access AYNKARAN.pdf

scan0002scan0003scan0006scan0004scan0005

Walk-A-Thon Organized by Jaffna Hindu College Association Canada In Support for the TSHF

Walk a thon LEaflet design

ரோறன்ரோவில் பெரும் அதிர்வலையினை ஏற்படுத்திய விபத்தில் மரணமான மனோரஞ்சனா கனகசபாபதியின் பூதவுடலுக்கு பெருந்திரளான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

100_4818-1002

003

காரை வசந்தம் 2013

எதிர்வரும் October மாதம் கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்தும் காரை வசந்தம் வெகு சிறப்பாக நடைபெற இருப்பதால் இத் நிகழ்விற்கு நிகழ்ச்சிகளைத் தர விரும்புவோர் August 31 க்கு முன்னர் நிகழ்ச்சி பற்றிய விபரங்களுடன் நிகழ்ச்சி தொகுப்பாளார் உடன் தொடர்புகொள்ளவும்:

தொடர்புகளுக்கு 

   (416) 305 1111

   (647) 289 2256

 

 

 

மரண அறிவித்தல் – கதிரவேலு சிவநேசன்

மரண அறிவித்தல் – கதிரவேலு சிவநேசன் 
காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும் வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு சிவநேசன் 21-08-2013 இறைவனடி சேர்ந்தார். விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். 

 

தகவல்: மனைவி – (011-94-2362231)
           சிவகுமார் (குமார்) (416) 320 – 8293
           பரமேஸ் (மச்சான்) (647) 271 – 9013