Tag: சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாசாலை

காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி 13.02.2020 வியாழக்கிழமை நடைபெற்றது.

கனடா-காரை கலாசார மன்றத்தின் நிதிப் பங்களிப்புடன் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை (Smart Classroom)31.01.2020 வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

கனடா-காரை கலாசார மன்றத்தின் நிதிப் பங்களிப்புடன்

சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை

(Smart Classroom) 31.01.2020 வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு இறுதியில் கனடா-காரை கலாசார மன்றத்தின் தலைவர் திரு.சி.சிவராமலிங்கம் காரைநகருக்கான பயணத்தினை மேற்கொண்டிருந்தார். இதன்போது சில பாடசாலைகளின் முக்கியமான தேவைகளை இனம்கண்டுகொண்டதன் அடிப்படையில் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்திற்கு திறன் வகுப்பறை(Smart Classroom) ஒன்றினை அமைத்துக் கொடுப்பதென மன்றத்தினால் தீர்மானிக்கப்பட்டு இதற்கான உதவி காரை அபிவிருத்திச் சபையின் ஊடாக வழங்கப்பட்டிருந்தது.

தற்போது இத்திறன் வகுப்பறையின் அனைத்து நிர்மாணப் பணிகளும் காரை அபிவிருத்திச்சபையினால் முன்னெடுக்கப்பட்டு பூர்த்திசெய்யப்பட்டு பாவனைக்காக சென்ற 31.01.2020 வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது. வித்தியாலயத்தின் அதிபர் திரு.சாந்தகுமார் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா வைபவத்தில் காரை அபிவிருத்திச் சபையின் தலைவர் திரு.இராமநாதன் சிவசுப்பிரமணியம் பிரதம விருந்தினராகவும், தீவக வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) திரு.ஆ.யோகலிங்கம் சிறப்பு விருந்தினராகவும், காரை அபிவிருத்திச் சபையின் நிர்வாக உறுப்பினர்கள் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திரு.இ.சிவசுப்பிரமணியம் அவர்கள் நாடாவினை வெட்டி சம்பிரதாயபூர்வமாக திறன் வகுப்பறை திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து விழாத் தலைவரும்(அதிபர்) விருந்தினர்களும் உரையாற்றினர். பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருடன், பழைய மாணவர்கள், அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிரந்தனர். வித்தியாலயத்தின் முக்கியமான தேவைகளில் ஒன்றான திறன் வகுப்பறையின் அவசியத்தை உணர்ந்துகொண்டு அதனை அமைப்பதற்கான நிதியினை உதவிய கனடா-காரை கலாசார மன்றத்திற்கும், அமைப்புப் பணிகளை குறுகிய காலத்தில் நிறைவேற்றித் தந்த காரை அபிவிருத்திச் சபைக்கும் பாடசாலைச் சமூகத்தின் சார்பில் அதிபர் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். வித்தியாலயத்தின் பரிணாம வளர்ச்சியின் மற்றொரு படிக்கல்லாக இத்திறன் வகுப்பறையின் உருவாக்கம் அமைந்திருப்பதுடன் மாணவர்களதும் ஆசிரியர்களதும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை இலகுவாகவும் நேரமுகாமைத்துவத்தற்கு ஏற்பவும் சிறப்பான முறையில் முன்னெடுக்கமுடியும் எனவும் கருதப்படுகிறது. வைபவத்தின் இறுதியில் இத்திறன் வகுப்பறையின் மாதரிச் செயற்பாடும் ஆசிரியர்களினால் செய்து காண்பிக்கப்பட்டது.

 

கனடா – காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினரால் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்திற்கு திறந்து வைக்கப்படும் திறன் வகுப்பறை (SMART CLASS ROOM) திறப்பு விழா அழைப்பிதழ்! (31.01.2020 வெள்ளிக்கிழமை)

காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழா 09.10.2019 புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.

காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழா 09.10.2019 புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஆசிரியர் தினா விழாவுக்கு பிரதம விருந்தினராக திரு.ஆ.குமரேசமூர்த்தி (கோட்டக் கல்விப்பணிப்பாளர், காரைநகர்)அவர்களும்,கௌரவ விருந்தினர்களாக திரு .க,தில்லையம்பலம்(ஓய்வுநிலை அதிபர்),திருமதி.சேதுப்பிள்ளை சுப்பிரமணியம்,திருமதி.விக்கினேஸ்வரி திருநாவுக்கரசு,திருமதி.சத்தியபாமா ரங்கநாதன்,திருமதி.சேவராணி சோமசேகரம் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்திருந்தனர்.

அத்துடன் பழைய மாணவர்கள்,பெற்றோர்கள்,நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

பாடசாலை அதிபர்,ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு மற்றும் பாடசாலை ஓய்வு நிலைய அதிபர்,ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது. அத்துடன் 5 ம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த ரவிச்சந்திரன் யதுஷா (158), தம்பிராசா தரணிகா(156) மாணவர்களுக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றன. மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய போசன விருந்திலும், விருந்தினர்களுடன் கலந்து கொண்டு அகமகிழ்ந்திருந்தனர்.

 

யாழ்/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி 02/02/2019 சனிக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு பாடசாலை மைதானத்தில் இடம்பெற உள்ளது.

 

யாழ்/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி 02/02/2019 சனிக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு பாடசாலை மைதானத்தில் இடம்பெற உள்ளது.

கல்லூரி அதிபர் திரு.வி.சாந்தகுமார் தலைமையில் இடம்பெறும் இந் நிகழ்வில் திரு.ப.நந்தகுமார் (சுகாதார வைத்திய அதிகாரி காரைநகர்,ஊர்காவற்துறை) பிரதம விருந்தினராகவும், திரு.க.விஜயகுமார் (முகாமையாளர் மக்கள் வங்கி சாவகச்சேரி) சிறப்பு விருந்தினராகவும், திரு.முருகேசு குணரட்ணம் (S.V.M.Pvt Ltd  நிறுவன உரிமையாளர்) கௌரவ விருந்தினராகவும் கலந்துகொள்ள உள்ளனர்.

யா/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் 2014/2015 இல் O/L பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவித்தல் விழா 20.05.2016 இடம் பெற்றது.

யா/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் 2014/2015 இல் O/L பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவித்தல் விழா  20.05.2016  இடம் பெற்றது. அத்துடன் நினைவு பரிசில்களும்  மற்றும் அவர்களை பாராட்டி பண பரிசில்களும் வழங்கப்படன.

 

யா/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் 2014/2015 இல் O/L பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவித்தல்.20.05.2016 1:30Pm

IMG_6837 (Copy)

யா/சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலய பாடசாலைக்கு போட்டோ கொப்பி இயந்திரம் கிடைத்துள்ளது

Message to Intenet re Photocopier0001

யா/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய க.பொ.த.(சாதாரணம்) – 2015 பரீட்சைப் பெறுபேறுகள்

SM.VID_

நன்றி நவில்கின்றோம், சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய பழைய மாணவர் சங்கம்

S.M                                                                  Know                                               Thyself

                                 யா/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்

                                                  பழைய மாணவர் சங்கம்
                                                       களபூமி,காரைநகர்

   


                                                                                                                    03 March 2016 


                                                   நன்றி  நவில்கின்றோம்

சுவிஸ்வாழ் நம்மக்கள் நமது வித்தியாலயத்தின் அவசர தேவையயான போட்டோ கொப்பி மெசினைக் கொள்வனவு செய்யும் பொருட்டு ரூபா 206,650 வித்தியாலய பழைய மாணவர் சங்கத்திற்கு அனுப்பியுள்ளனர். நிதி வழங்கிய அன்பர்களின் பெயர்கள் பின்வருமாறு:

 

1. திரு T.தர்மரத்தினம்                             CHF 100
2. திரு K.சிவனேஸ்வரன்                         CHF 200
3. திரு N.சிவலோகநாதன்                       CHF 200
4. திரு V.யோகேந்திரன்                           CHF 151
5. திரு N.நந்தகுமார்                                  CHF 100
6. திரு M.ரகுபதிராஜா                               CHF 100
7. திரு E.அமிர்தலிங்கம்                           CHF 100
8. திரு சர்வேஸ்வரன்                                CHF 100
9. திரு N.சரவணப்பெருமாள்                  CHF 50
10. திரு A.சச்சிதானந்தசிவம்                 CHF 50
11. திருமதி S.மங்கையற்கரசி               CHF 100
12. திரு M.இராசலிங்கம்                           CHF 50
13. திரு M.சற்குணராசா                           CHF 50
14. திரு K.கேதீஸ்வரன்                             CHF 100
              மொத்தம்                                    CHF 1,451

மேற்குறிப்பிட்ட அனைத்து நல்லுங்களுக்கு வித்தியாலய சமூகம் சார்பாக பழையமாணவர் சங்கம் மனங்கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது.

விரைவில் நிர்வாக சபை கூடி போட்டோ கொப்பி மெசினைக் கொள்வனவு செய்யும் என்பதனை இதனால் தெரியத் தருகின்றோம்
நன்றியுடன்

சிவா தி மகேசன்
ஒருங்கிணைப்பாளர்

யா/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய பழைய மாணவர் சங்க புதிய நிர்வாகம் 2016

PHOTO
                       யா/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்
                                   பழைய மாணவர் சங்கம்
                                       களபூமி,காரைநகர்

                                                                                                                     27  February 2016 

                                                       புதிய நிர்வாகம்

மேற்படி சங்கத்தின் பொதுக்கூட்டம்  21 – 02 – 2016 (ஞாயிற்றுக்கிழமை) வித்தியாலயத்தின் ஆங்கில செயற்பாட்டு அறையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பின் வரும் நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்:

        தலைவர்:-        திரு அ. சாந்தகுமார் (வித்தியாலய அதிபர்)
        
        செயலாளர்:      திருமதி செல்வராணி சோமசேகரன்

        உப செயலாளர்:  திரு ச. ஐங்கரன்

        பொருளாளர்:     திரு வே.வீரசிங்கம்

        
        நிர்வாக உறுப்பினர்கள்:
        
        1. சிவஸ்ரீ கு. சண்முகராஜக் குருக்கள்
        
        2. திருமதி இராசமலர் நடராசா

        3. திருமதி மாலினி அருளேந்திரன்

        4. திருமதி யோகேஸ்வரி சங்கரப்பிள்ளை
        
        5. திரு சு.சோதிநாதன்

        6; செல்வி நி.யோகநாயகி

        7. செல்வி பவானி பரராசசிங்கம்

மேற்குறிப்பிட்டவர்களுடன் திரு சிவா தி மகேசன் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

குறிப்பு: வித்தியாலயத்தின் முன்னேற்றம் கருதி நிதி வளங்குவோர் தயவு செய்து வழங்கிய நிதிக்குத தலைவர் அல்லது பொருளாளரின் கையெழுத்துடன் பற்றுச்சீட்டு பெற்றுக் கொள்ளவும். தற்காலிகமாக  0044 208648 7648 இலக்கத்தினூடாகத்  தொடர்பு கொள்ளவும்.


                                                                                                  தகவல்: சிவா தி மகேசன்  

சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாசாலை பாடசாலை நிர்வாகம் கனடா காரை கலாசார மன்றத்திற்கு புகழாரம்!

mail