ஜெர்மனி காரை ஒன்றியத்தின் அங்குரார்ப்பண கூட்டத்திற்காக கனடா காரை கலாச்சார மன்றம் வழங்கிய வாழ்த்துச் செய்தி.

பங்குனி 30,2019

இணைப்பாளர்கள்
காரை மக்கள் ஒன்றியம் ஜெர்மனி

அன்புடையீர்,

காரை மாதாவின் குழந்தைகள் பூமிப்பந்தில் பரந்துபட்டு வாழ்ந்தாலும் பிறந்த தேசத்தை பெருமைப் படுத்துகிறார்கள். அத்துடன் பிறந்த மண்ணின் கலை, கலாச்சார, ஆன்மீக விழுமியங்களை தளராதும் பேணிவருகின்றார்கள். இந்த பரந்து வாழும் காரை மக்களை இணைக்கும் பாலமாக மன்றங்கள் செயலாற்றுகின்றன என்றால் மிகையாகாது. அந்த வகையில் முதன்முதலாக உருவாகிய மலேசிய காரை ஒன்றியம் முதல் கனடா, பிரித்தானியா , சுவிஸ் , பிரான்ஸ் , அவுஸ்திரேலியா காரை மன்றங்களுடன் ஜெர்மனி ஒன்றியமும் இணைந்து கொள்வது காரை மாதாவை பெருமை கொள்ளவைக்கிறது.

ஜெர்மனியில் வாழும் இளம் சந்ததியினருக்கு புத்துணர்வு கொடுக்கவும், ஒருவருக்கொருவர் உறவாடி ஊர் நினைவுகளை மீட்கவும், காரை உறவுகளின் அடிப்படை வாழ்வாதார தேவைகளுக்கு உதவிடவும் அமையவுள்ள ஜெர்மனி ஒன்றியம் வழிசமைக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. எங்களுடைய மன்றத்தின் நல்லாதாரவும், ஒத்துழைப்பும் தங்கள் அமைப்புக்கு என்றும் இருக்குமென உறுதியளிக்கின்றோம்.

நாளை நடைபெறவுள்ள தங்கள் ஒன்றுகூடலுக்கு, எங்களுடைய மனப்பூர்வமான ஆசிகளையும் வாழ்த்துக்களையும் கனடா காரை கலாச்சார மன்றம் சார்பாக தெரிவித்துக்கொள்கின்றோம்.

நன்றி

      நிர்வாகம்
கனடா கலாச்சார மன்றம்