நூலக குழுவினருடனான கனடா காரை கலாச்சார மன்ற நிர்வாக சபையினரின் கலந்துரையாடல்

நூலக குழுவினருடனான கனடா காரை கலாச்சார மன்ற நிர்வாக சபையினரின் கலந்துரையாடல்

கனடா காரை கலாச்சார மன்றத் தலைவர் பாலச்சந்திரன் தலைமையிலான நிர்வாக சபையினருடன்,  நூலக குழுவினரின்  சந்திப்பு கலந்துரையாடல் சத்திய சாயிபாபா மண்டபத்தில்  Oct 28, 2018 நடைபெற்றது. இவர்களுக்கான  இணைப்பாளராக ஆராய்ச்சி துறையில் கடமையாற்றும்  கலாநிதி.த.ரவிச்சந்திரன் கலந்து கொண்டு  பொருத்தமான  கருத்துக்களை முன்வைத்து ஒழுங்கமைத்திருந்தார். இந்த கருத்துப் பகிர்வில் பின்வரும் விடயங்கள் கருத்திற் கொள்ளப்பட்டன.

1.அரிதாகி  போய்க்கொண்டிருக்கும்  பழைய சுவடிகள் , நூல்களை digitizing catalogue வடிவில் கொண்டு வருதல் .

2.பல்வேறு துறை சார் விற்பன்னர்களுடன் நேரடியாக உரையாடி வாய் மொழி வரலாற்று  பதிவுகளை மேற்கொள்ளல்.

3.ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றை  வெளிக்காட்டும்  நினைவு மலர் பதிவேட்டின் மூலமாக அவர்களுடைய குடும்ப உறவு முறையை அதாவது தலைமுறையினரை ஆவணப்படுத்துதல்.

4.அதேபோன்று  பாடசாலைகள், கோவில்கள்  மற்றும் ஆரம்பகால அரிதான சம்பவங்களின்  பதிவுகளை பேணுதல்

5.காரைநகர் பாடசாலைகளில் O /L  மற்றும் A /L படிக்கும் மாணவர்களில் ஆர்வமுள்ளோரை தேர்ந்தெடுத்து  அவர்களுக்கான workshop மூலமாக ஆவணப்படுத்தல் செயற்திட்டங்களில்  பங்குபெற வைப்பது

  1. மன்ற இணையதளத்திற்கு கைவசம் பெற்றுக்கொள்ளக்கூடியவர்களிடமிருந்து அரிதாகும் பழைய நூல்களை பெற்று அவற்றை இணையத்தில் கொண்டு வருதல்.
  2. நூலக குழுவினரின் செலவீனங்களுக்கு மற்றைய அமைப்புக்கள், ஊர் சங்கங்கள் ஓரளவு  உதவித்தொகை  அளிப்பது  தெரிவிக்கப்பட்டது.  CKCA சார்பாகவும் ஊக்குவிப்பு   உதவியாக $500 வழங்கி தொடர்ந்து செயற்படவைப்பது
  3. மாணவர்களின் model exam papers பார்வையிடுவதன் ஊடாக கல்விக்கு பங்காற்றுதல்
  4. கலைப் பயன்பாட்டு அரும் பொருட் சேகரிப்பும் , ஆவணப்படுத்துதலும் போன்ற   பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.