நூலக குழுவினரின் காரைநகர் மக்களுக்கான வேண்டுகோள்கள்

 

நூலக குழுவினரின் காரைநகர் மக்களுக்கான வேண்டுகோள்கள் 

எண்ணிம நூலகத்திலும் (noolaham.org) பல்லூடக ஆவணகத்திலும் (aavanaham.org) ஏற்கனவே காரைநகர் தொடர்பாக ஆவணமாக்கப்பட்ட அறிவு வளங்கள் (Karainagar Knowledge Resources), பின்வரும் இணைப்பில், பட்டியல் வடிவில், அகர வரிசையில், நான்கு sheets ஆக தொகுக்கப்பட்டுள்ளன.

 

காரைநகர் அறிவு வளங்களின் பட்டியல்

https://docs.google.com/spreadsheets/d/1E45_vHtTHBt33p9Mm8OJFjyXV9FWrHyzJM77iJ4wyJw/edit?usp=sharing

 

எண்ணிம நூலகம் – காரைநகர் பகுப்பு

noolaham.org/wiki/index.php/பகுப்பு:காரைநகர்

 

பல்லூடக ஆவணகம் – காரைநகர் சேகரம்

aavanaham.org/islandora/object/noolaham:karainagar

 

வளங்களின் சுருக்கம்:

எழுத்தாவணங்கள்

நூல்கள்: 8

கோயில் மலர்கள்: 9

பாடசாலை மலர்கள்: 11

 

இதழ்கள்: 3 வகை, 9 issues

சுவடிகள்: 6 கட்டுக்கள் (~1500 சுவடிப் பக்கங்கள்)

 

பிற: 2

நினைவு மலர்கள்: தொகுப்பில் உள்ளடக்கப்படவில்லை.

 

பல்லூடகங்கள்

வாய்மொழி வரலாறுகள்: 3

புகைப்படங்கள்: 71

அழைப்பிதழ்: 2

நிலப் படங்கள்: _

 

தரவுத் தொகுப்புகள்

வாழ்க்கை வரலாறுகள்: 113

அமைப்பு விபரங்கள்: 48

ஊர் தரவுகள்: _

 

இது தற்போது உள்ள வளங்களின் தொகுப்பு ஆகும்.  இவை காரைநகரை முழுமையாக பிரதிநித்துவம் செய்யவில்லை (represent) என்பது இங்கு சிறப்பாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.   மேலும் விழிம்புநிலை மக்களின் பதிவுகள் அரிதாக உள்ளன.  காரைநகர் தொடர்பான துல்லியமான தரவுச் சேகரிப்பு (data collection) மற்றும் பின்கள ஆய்வு (background research) ஆகியனவும் நடைபெறவில்லை.

 

மேலும், பட்டறை தொடர்பாக எமது தலைமை செயற்பாட்டு அலுவலகர் சோமராஜ் அவர்கள் பேரா. ரவி அவர்கள் ஏற்படுத்தித்தந்த தொடர்புகளுடன் இணைந்து திட்டமிட்டு வருகிறார்கள்.

 

பல்வேறு காரணங்களால் அழிவாபத்தில் உள்ள எமது ஊர்களின் மரபுரிமைகளை, அறிவு வளங்களை நாம் வேகமாகச் செயற்பட்டு ஆவணப்படுத்தல் முக்கியம் ஆகும்.  அதற்கு உதவும் வகையில் ஊர் ஆவணப்படுத்தல் நிகழ்ச்சித் திட்டத்தை (program) நூ.நி முன்னெடுத்து வருகிறது. ஊர் ஆவணப்படுத்தல் வார்ப்புரு ஒன்றை இங்கு காணலாம். ஒரு ஊர் தொடர்பான அறிவு வளங்களை (knowledge resources) ஐ உருவாக்கி, அந்த ஊரின் பண்பாட்டு, கல்வி மற்றும் வளர்ச்சி உதவுதலே ஊர் ஆவணப்படுத்தலின் நோக்கமாகும்.  அந்த அறிவு வளங்கள் ஊரின் சமூக அமைப்புகளோடு பகிர்ந்து கொள்ளப்பட்டு பாதுகாக்கப்படும்.

 

இந்த ஆவணங்களைப் பாதுகாக்கவும், நூலக நிறுவனத்தின் பணிகளை முன்னெடுக்கவும் காரைநகர் மக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது.

ஆகையால் உங்களிடமுள்ள அரிதான பொக்கிஷங்களான நூல்கள் , சுவடிகள், கிடைத்தற்கரிய  ஆவணங்களை

நூலக குழுவினருக்கு கொடுத்துதவி, போற்றி பாதுகாப்போமாக .

 

Noolaham karainagar