காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் வருடாந்த பரிசில் தின விழா கல்லூரியின் புதிய முதல்வர் திரு.தில்லையம்பலம் மதிவதனன் அவர்களின் தலைமையில் 2018.06.11 திங்கட்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

 

பரிசில் தினம் 2018

எமது கல்லூரியின் வருடாந்த பரிசில் தின விழா கல்லூரியின் புதிய முதல்வர் திரு.தில்லையம்பலம் மதிவதனன் அவர்களின் தலைமையில் 2018.06.11 திங்கட்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுனரின் செயலாளர் திரு.இலட்சுமணன் இளங்கோவன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வட மாகாண ஓய்வு நிலை கல்விப்;பணிப்பாளரும், வடமாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளருமான திரு.பரமநாதன் விக்கினேஸ்வரன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக இ.போ.ச பொறியியல் பகுதி ஓய்வுநிலை முகாரி திரு.திருநாவுக்கரசு ஏகாம்பரநாதன் அவர்களும், காரை சக்தி மேம்பாட்டுக் கழக இயக்குனர் திரு.நாகலிங்கம் இந்திரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

கல்லூரியின் வரலாற்றில் மீளத் திறக்கப்பட்ட பின் முதன்முறையாக திறந்த வெளி அரங்கில் நடைபெற்றது. இவ் விழாவில் ஓய்வு நிலை அதிபர்கள், கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியர்கள், பல்வேறு ஓய்வு நிலை உத்தியோகத்தர்கள், கல்லூரியின் மூத்த பழைய மாணவர்கள், அயற்பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள், பல்வேறு திணைக்கள உத்தியோகத்தர்கள் ,பெற்றோர்கள், பழையமாணவர்கள், நலன் விரும்பிகள், கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பல நூற்றுக்கணக்கானோர் விசேடமாக அமைக்கப்பட்ட பந்தலில் நிறைந்திருந்தனர்.

மாணவர்களின் கண்ணுக்கும் செவிக்கும் விருந்தாகும் கீழைத்தேய ,மேலைத்தேய வாத்திய அணிகளின் அணிவகுப்பும், மும்மொழியிலான இயல் இசை நிகழ்வுகளும் அனைவரினதும் பாராட்டையும் பெற்றன.

விசேடமாக ‘கண்டனன் சீதையை’ எனும் நாட்டிய நாடகம் பலராலும் வெகுவாகப் பாராட்டுப் பெற்றதுடன் விருந்தினர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியதும் சிறப்பாகும்.

திறந்த வெளி அரங்கில் நிகழ்வுகள் இடம் பெற்றமையை அனைவரும் பாராட்டியதுடன் அதனை ஊக்கப்படுத்தியும் சென்றனர்.

இப்பரிசில் தின நிகழ்வுகள் மிக சிறப்புற அமைய அரும்பாடுபட்ட அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள்,நலன் விரும்பிகள் மற்றும் வருடம் தோறும் அமரர் வை காசிப்பிள்ளை ஞாபகார்த்தமாக நிகழ்வின் அனுசரணையாளராக விளங்கும் வைத்திய கலாநிதி ஸ்ரீதாரணி விமலன் குடும்பத்தினருக்கும்
கல்லூரிச் சமூகத்தினர் அனைவருக்கும் அதிபர் தனது பாராட்டையும், மனம் மகிழ்ந்த நன்றிகளையும் தெரிவிக்கின்றார்.