கனடா-காரை கலாச்சார மன்றத்தின் வங்கி கணக்கு தொடர்பாக அங்கத்தவர்கள் அறிந்து கொள்ளப்பட வேண்டியவை!

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் வங்கி கணக்கு தொடர்பாக அங்கத்தவர்கள் அறிந்து கொள்ளப்பட வேண்டியவை!
 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் கடந்த கால திரு.ரவி ரவீந்திரன் தலைமையிலான நிர்வாக சபை 28.05.2016 அன்று மன்றத்தின் நிர்வாகத்தினை கைவிட்டு சென்றனர். இந்நிலையில் இதுவரை கனடா காரை கலாச்சார மன்றத்தின் நடைமுறை வங்கி கணக்குகளை தற்போதைய நிர்வாக சபையினரிடம் கையளிக்க தவறி வந்துள்ளனர். மன்றத்தின் தற்போதைய நிர்வாக சபையின் ஊடாக 28.05.2016 முதல் இன்று வரை உத்தியோகபூர்வமாக வேண்டுகோள்கள் பல எழுத்து மூலம் முன்னாள் தலைவர் திரு.ரவி ரவீந்திரன் அவர்களிற்கு அனுப்பப்பட்டது. இருந்தபோதிலும் அவை எவற்றிற்கும் முறையே எழுத்து மூலமாக எவ்வித பதிலையும் தெரிவிக்காத நிலையிலும் மன்றத்தின் வங்கி கணக்கினை தற்போதைய நிர்வாக சபையினர் செயற்படுத்த முடியாத நிலையில் முடக்கிய நிலையில் மன்றத்தின் தற்போதைய நிர்வாக சபையினருடனான தொடர்புகளை துண்டித்துக்கொண்டுள்ளார். 

தற்போதைய நிர்வாக சபையினரின் காசோலை வரவுகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் வைப்பு செய்யப்பட்டு வருவதும் அங்கத்தவர்கள் அனைவருக்கும் அறியப்டுத்தப்பட வேண்டும் என்பதையும், கடந்த 11 மாத காலமாக உத்தியோக பூர்வமாக முன்னாள் தலைவர் திரு.ரவி ரவீந்திரன் அவர்களுடன் முறையே எழுத்து பூர்வமான தொடர்புகளை தற்போதைய நிர்வாகம் பேணிவந்துள்ள போதிலும் அவை அனைத்தினையும் அசட்டை செய்து வந்துள்ளதுடன் மன்றத்தின் வங்கி கணக்கினை கடந்த நிர்வாக சபையினர் முறையே கையளிக்க தவறியுள்ளார்கள் என்பதனையும் பகிரங்கமாக கனடா காரை கலாச்சார மன்றத்தின்  அங்கத்தவர்களிற்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் எனவும் 11.03.2017 அன்று நடைபெற்ற நிர்வாக சபை கூட்டத்தின் போது ஏகமனதாக  நிர்வாக சபை தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. 


அதன் அடிப்படையில் கடந்த 11 மாத காலமாக முன்னாள் மன்றத்தின் தலைவர் திரு.ரவி ரவீந்திரன் அவர்களிற்கு முறையே எழுத்து மூலமாக விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் மன்றத்தின் இணையத்தளம் ஊடாக அங்கத்தவர்களிற்கு அறியத்தரப்படுகின்றது. பின்வரும் இணைப்பை  அழுத்துவதன் மூலம் அவற்றினை பார்வையிடலாம்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2017/04/Ravi-Letter.pdf

                                                                நன்றி

 

                    நிர்வாகம்
 கனடா காரை கலாச்சார மன்றம் 

 

 

திரு. இராசதுரை ரவீந்திரன் PAGE-1 திரு. இராசதுரை ரவீந்திரன் PAGE-2