கனடா-காரை கலாச்சார மன்றம் தொடர்பாக திட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகள் தொடர்பாக மன்றத்தின் அங்கத்தவர்களிற்கும் கனடா காரை மக்களிற்குமான விசேட அறிவித்தல்! 19.04.2017

CKCA logo

கனடா-காரை கலாச்சார மன்றம் தொடர்பாக திட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகள் தொடர்பாக மன்றத்தின் அங்கத்தவர்களிற்கும் கனடா காரை மக்களிற்குமான விசேட அறிவித்தல்! 19.04.2017 


 23.04.2017 அன்று நடைபெறவுள்ள மன்றத்தின் பொதுக்கூட்டத்தின் போது 2016 மற்றும் 2017ம் ஆண்டு அனைத்து அங்கத்தவர்களும் கலந்து கொள்ளமுடியும் என்பதனையும் இப்பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள மேற்படி இரண்டு ஆண்டுகளில் அங்கத்தவராக இணைந்து கொண்டிருந்த எவருக்கும் அனுமதி மறுக்கப்படவோ அன்றி கலந்து கொள்ள முடியாது எனவோ எந்தவிதமான தடைகளும் தற்போதைய நிர்வாக சபையினரால் விதிக்கப்படவில்லையென்பதனை மன்றத்தின் நிர்வாகம் சார்பாக அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றது கனடா காரை கலாச்சார மன்றம்.


கனடா காரை கலாச்சார  மன்றத்தின் வங்கி கணக்குகளை கையளிக்க மறுத்துவரும் கடந்த நிர்வாக சபையினை சேர்ந்த தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோருடன் மன்றத்தின் நிர்வாக செயற்பாடுகளிற்கு பெரும் தடையாக செயற்பட்டு மன்றத்தின் பெயரால் உண்மைக்கு புறம்பான தகவல்களுடன் நிர்வாக சபை உறுப்பினர் மற்றும் கணக்காய்வாளர்  ஆகியோரின் உத்தியோகத்திற்கு பங்கம் விளைவிக்கும் நோக்கில் கனடிய அங்கீகரிக்கப்பட்ட கணக்கியல் டிப்புளோமா பத்திரத்தை பறிக்கும் நோக்கில் Chartered Professional Accountant (CPA) அமைப்பிற்கு போலி கையொப்பங்களுடன் காரைநகர் பாடசாலைகளிற்கு வழங்கிய நிதி ஒரு கோடி 20 இலட்சம் திருடப்பட்டுள்ளதாக முறையீடு செய்தவர்கள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் மன்றத்தின் கடந்தகால செயற்பாடுகளை முற்றிலும் தடைசெய்யும் நோக்கில் நகர சபை அலுவலகங்களிற்கு பிட்டிசங்களை எழுதியவர்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தவர்கள் அனைவரையும் 23.04.2017 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மன்றத்தின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு விளக்கமளிக்கவும் மேற்கொண்டு பொதுச்சபை அங்கத்தவர்களே இவை தொடர்பான அனைத்து விடயங்களிற்கும், சம்பந்தப்பட்டவர்களின் எதிர்கால மன்ற நடவடிக்கைகள் தொடர்பாகவும் தீர்க்கமான முடிவினை எட்டுவதோடு தொடர்ந்து புதிய நிர்வாக சபையினை தெரிவு செய்வார்கள் என்பதனையும், எவரையும் தற்போதைய நிர்வாக சபை பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள தடை விதிக்கவில்லை என்பதனை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கின்றது.


மேலும் தொடர்புகளிற்கு தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோருடன் நேரடியாக தொடர்பு கொண்டு விளக்கங்களை பெற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.


                     நிர்வாகம்
 கனடா காரை கலாச்சார மன்றம்
                    19.04.2017