க.பொ.த (உயர் தரம்) 2016 பரீட்சையில் தீவகக் கல்வி வலயத்தில் யாழ்ற்ரன் கல்லூரி முதல்நிலைப் பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்டது

க.பொ.த (உயர் தரம்) 2016 பரீட்சையில் தீவகக் கல்வி வலயத்தில் யாழ்ற்ரன் கல்லூரி முதல்நிலைப்  பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்டது

 

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் யாழ்ற்ரன் கல்லூரி மாணவி செல்வி மனோகரி சுப்பிமணியம் 3 பாடங்களிலும் A சித்திகளைப் பெற்றும், மாவட்ட மட்டத்தில் 39வது நிலையைப்பெற்றும் யாழ்ற்ரன் கல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக க. பொ. த உயர்தரப் பரீட்சையில் 3A பெற்ற மாணவியாகவும், தீவகக் கல்வி வலயத்தில் இவ்வாண்டு முதல்நிலை பெற்ற மாணவியாகவும் திகழ்கிறார்.

unnamed

மேலும் செல்வி. கருணிதா யோகராசா வர்த்தகப்பிரிவில் 2 A 1B சித்திகளையும் பெற்று மாவட்ட மட்டத்தில் 81வது இடத்தையும் பெற்றுள்ளார். இவ்விரு மாணவிகளும் இலங்கைப் பல்கலைக்கழக முகாமைத்துவப் பீடத்துக்கு தெரிவாவர்.

 

வர்த்தகப்பிரிவில் ஏனைய மாணவர் பெறுபேறுகள்

1. செல்வி. சிவகௌரி மயில்வாகனம் – 2B 1C 

2. செல்வன். திருஞானசம்பந்தன் ரஜீவன் – 3S

 

வர்த்தகப்பிரிவில் இம்முறை 4 மாணவர்கள் தோற்றி 4 மாணவர்களும்(100%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெற்றுள்ளனர்.

 

விஞ்ஞானப்பிரிவுப் பேறுகள்

 

1. செல்வி. காயத்திரி ஆனந்தராசா – 2C 1S 

2. செல்வன். சிவகுமாரன் சர்வணன் – 2C 1S 

3. செல்வி. ஆரணி தர்மலிங்கம் – 2C 1S 

 

விஞ்ஞானப்பிரிவிலும் 3 மாணவர்கள் தோற்றி மூவரும்(100%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெற்றுள்ளனர். எனினும் சென்ற ஆண்டுக்கான வெட்டுப்புள்ளிகளின் பிரகாரம் விஞ்ஞானப் பிரிவில் முதல் 2 மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

கலைப்பிரிவுப் பெறுபேறுகள்

 

1. செல்வி. சசிகலா அம்பலவாணர் – 2B 1S

2. செல்வி. யுகன்யா கோணேஸ்வரன் – 1B 2C 

3. செல்வி. லக்ஷிகா நவரட்ணம் – 1B 2S

4. செல்வி. சர்மினி சண்முகசுந்தரம் – 1C 2S

5. செல்வி. தர்ஜிகா விக்னேஸ்வரன் – 1C 2S 

6. செல்வி. தனவதி சண்முகவடிவேல் – 2C

7. செல்வி. வனிதா ரவிக்குமார் – 1S 

 கலைப்பிரிவிலும் செல்வி சசிகலா அம்பலவாணர் சென்ற ஆண்டு வெட்டுப்புள்ளியின் பிரகாரம் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கலைப்பிரிவில் 7 மாணவர்களில் 5 பேர்(71.4%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெற்றுள்ளனர். யாழ்ற்ரன் கல்லூரியில் 2016 ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சையில் மொத்தம் 14 மாணவர்கள் தோற்றி 12 பேர்(85.7%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெற்றுள்ளனர். இம்முறை மொத்தம் 5 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெறுவார்கள் (வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டதன் பின்னர் உறுதிப்படுத்தப்படும்).  பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெறும் மாணவர்களையும், அவர்களுக்குக்கற்பித்த ஆசிரியர்களையும் கல்லூரி அதிபர் திரு. வே. முருகமூர்த்தி அவர்கள் பாராட்டுகிறார். 

 

சென்ற ஆண்டு 4 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானர். 

கலைப்பீடம் – 1 மாணவி

நுண்கலைப்பீடம் – 2 மாணவர்கள் 

கைத்தொழில் தொடர்பாடல் தொழில்நுட்ப பீடம் – 1 மாணவி (ஊவா வெல்லச பல்கலைக்கழகம், பதுளை)