கனடா வாழ் காரை மக்களிற்கும் அங்கத்தவர்களிற்கும் கனடா காரை கலாச்சார மன்றம் விடுக்கும் அறிவித்தல்!

CKCA logo

கனடா வாழ் காரை மக்களிற்கும் அங்கத்தவர்களிற்கும் கனடா காரை கலாச்சார  மன்றம் விடுக்கும் அறிவித்தல்!


கனடா காரை கலாச்சார  மன்றத்தின் ஊடாக கடந்த வருடம் 05.05.2015 அன்று காரைநகரில் உள்ள 10 ஆரம்ப பாடசாலைகளுக்கும் பின்னர் அதனை தொடர்ந்து மேலும் ஒரு ஆரம்ப பாடசாலைக்கும் தலா 10 இலட்சம் ரூபாய்கள் வீதம் நிரந்தர வைப்பில் இட்டு வழங்கப்பட்டது. மேலும் இதுவரை மற்றுமொரு பாடசாலையான வியாவில் சைவ வித்தியாலயத்திற்கு இந்நிதியானது வழங்கப்படவில்லை. எனவே எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29ம் திகதி நடைபெறவுள்ள ‘காரை வசந்தம்’ நிகழ்வின் மூலம் திரட்டப்படும் நிதியானது மேற்படி பாடசாலைக்குரிய நிரந்தர வைப்பு நிதியத்திற்கு வழங்கப்பட்டு முறையே மற்றைய 11 ஆரம்ப பாடசாலைகளிற்கு வழங்கப்பட்டது போன்று காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக நிரந்தர வைப்பில் இட்டு வழங்குவதற்கு நிர்வாக சபையில் 10.09.2016 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


காரை வசந்தம் – 2016 நிகழ்வின் போது விளம்பர அனுசரணை மற்றும் விழா அனுசரணையின் மூலம் கிடைக்கப்பெறும் நிதியுதவிகள் மூலம் மேற்படி பாடசாலைக்குரிய நிரந்தர வைப்புக்குரிய நிதி வழங்கப்படும் என்பதுடன் எதிர்வரும் காரை வசந்தம் நிகழ்வின் போது கனடா வாழ் காரை சிறார்களிற்கு பெறுமதி மிக்க சிறப்பு பரிசில்கள் தமிழ் மொழித்திறன் போட்டிகளில் கலந்து கொள்ளும் சிறுவர்களிற்கு வழங்கப்படவுள்ளதுடன் காரை வசந்தம் நிகழ்வு சிறப்புடன் அதிக நிதி செலவு இன்றி நடாத்துவதற்கும் நிர்வாக சபை தீர்மானித்துள்ளது.


காரை வசந்தம் நிகழ்விற்கு அனுமதி ரிக்கெட்டுக்களை மட்டும் பெற்றுக்கொண்டு கனடா வாழ் காரை மக்கள் அலை அலையாக உரிமையுடனும் நம்பிக்கையுடனும் கலந்து கொண்டால் மட்டும் போதுமானது. மன்றமும் மண்ணும் வளம் பெறும் என்பதுடன் கனடாவில் காரை மக்களின் ஒற்றுமையும் வலுப்பெறும்.


           நிர்வாகம்
 கனடா காரை கலாச்சார மன்றம்

                               
                                       "WORKING TOGETHER IS SUCCESS"