கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச்சபை யின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வழிகாட்டல் கருத்தரங்கு நேற்று தியாகராசா ம.ம.வித்தியாலய நடராசா மண்டபத்தில் இடம்பெற்றது.

DSC01608 (Copy)

காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் பு.ஸ்ரீவிக்னேஸ்வரன்அவர்களின் நெறிப்படுத்தலில் யாழ் பிரபல புலமைப்பரிசில் வகுப்பு ஆசிரியர் வே.அன்பழகன் தலைமையிலான ஆசிரியர் குழு கருத்தரங்கினை நடாத்தியது.

காரைநகர் கோட்டப் பாடசாலைகள் மற்றும் ஏனைய பாடசாலைகளில் கல்வியிலும் சுமார் 200 மாணவர்களும் பாடசாலை ஆசிரியர்கள் பெற்றோர்கள் பலரும் கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

கனடா  கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் மாணவர்களுக்கு மாதாந்தம் பயிற்சிப் பரீட்சைகளும் அது தொடர்பான விளக்க வகுப்புக்களும் நடாத்தப்பட்டு வருகின்றது.மாதாந்தப் பயிற்சிப் பரீட்சைகள் தீவகம் முழுவதற்கும் நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

கனடா கலாசார மன்றம் செய்யும் இந்த அளப்பெரிய சேவைக்கு கைமாறாக மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் காரைநகர் கோட்டக் கல்வி அலுவலகம் உள்ளிட்ட காரைநகரின் அனைத்துப் பாடசாலைகளுக்கும் பாகுபாடின்றி மன்றம் மிகச்சிற்பான சேவையாற்றி வருகின்றது.அவர்களுக்கு எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதுடன் அதற்குக் கைமாறாக எமது மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என அங்கு உரையாற்றிய கோட்டக்கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.