கனடா காரை கலாச்சார மன்ற நிர்வாக சபையின் விசேட செய்தி

கனடா காரை கலாச்சார மன்ற நிர்வாக சபையின் விசேட செய்தி

ஜூலை 9, 2017 நடைபெற்ற விசேட பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டது.   மிகவும் குறுகிய காலப்பகுதியில் ஆகஸ்ட் 31 கோடைகால ஒன்றுகூடலும்,   ஒக்டோபர் 8 தமிழ்த்திறன்போட்டிகளும்,  நவம்பர் 4 காரை வசந்தம் கலை விழாவும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

கடந்த சில வருடங்களாக மன்றத்துக்கு ஏற்பட்டுள்ள அபகீர்த்திக்களுக்கு மத்தியிலும்,  இந்நிகழ்வுகள் சிறப்பாக நடந்தமை வெற்றிப்படிகளுக்கு முதற்படியாகும்.  தலைவர்  காரை வசந்தம் கலை விழாவில் கூறியது போல TD Canada Trust கணக்கு ஒரு வருடத்திற்கும் மேலாக பயன்படுத்த முடியாதளவில் வைக்கப்பட்டிருந்தது.  தலைவரின்  அதீத செயற்பாட்டால்  வங்கி அதிகாரிகள் வைப்பில் உள்ள தொகையை பயன்படுத்த கூடிய நிலைக்கு கொண்டுவர சம்மதித்து   கையொப்பமிடுமாறு பணித்தார்கள்.  வங்கி அறிக்கையின்படி நவம்பர் 6, 2017 கணக்கை அணுகவும், அதற்கு அடுத்த நாள் நவம்பர் 7, 2017  நிதியை பெறக்கூடியதாகவும் இருந்தது.

அந்த கணக்கில் இருந்து காரைவசந்தம் 2017 நிகழ்ச்சிகளுக்கான சில செலவுகளுக்குரிய  நிதி எடுக்கப்பட்ட துடன் , சுமார் $4500 தொகைப்பணம்    கடந்தகால நிர்வாகத்தினருக்கு மன்றத்தால் செலுத்த வேண்டிய கொடுப்பனவுகள் கையளிக்கபட்டுள்ளன.  மீதமுள்ள பணம் RBC வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடா வாழ் காரை மக்களின் தொடர்ச்சியான ஆதரவும்,  ஊக்கமும்  எமது  மண்ணின் பெருமையையும்,  புகழையும்  இப்புலம்பெயர் நாட்டில் இன்னும் பல தலை முறைகளுக்கு இட்டுச் செல்ல உதவும் என்பதில் ஐயமில்லை.  இந்த உணர்வை தலை மேற்கொண்டு எல்லோரும் ஒற்றுமையாகவும், பலமோடும் மன்றத்தை  வழிநடாத்துவோமாக.

மன்றத்தால் வருடம்தோறும்   நடாத்தப்படுகின்ற ஆருத்திரா  அபிஷேகம் இம்முறையும் வழமை போல  ஜனவரி 1, 2018 வெகு சிறப்பாக றிச்மன்ட் ஹில் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.  அனைத்து அடியவர்களும் அன்றைய தினம்  கலந்து கொண்டு ஆட வல்லானின்  அருட்கடாட்சங்களை பெற்று உய்யும் வண்ணம் தாழ்மையுடன்  வேண்டிக்  கொள்கின்றோம்.

நன்றி

தங்கள் பணியில்

கனடா காரை கலாச்சார மன்ற நிர்வாகசபை