Category: CKCA செய்திகள்

கனடா காரை கலாச்சார மன்றம் விளையாட்டு போட்டியில் இடம்பெறவுள்ள விளையாட்டுக்கள் பற்றிய விபரம்.

 கனடா காரை கலாச்சார மன்றம்

விளையாட்டு போட்டியில் இடம்பெறவுள்ள விளையாட்டுக்கள் பற்றிய விபரம்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த ஒன்றுகூடல் 05.08.2023 சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் Morningside Park, Area 3,4 இல் நடைபெறவுள்ளது. இவ் ஒன்றுகூடல் நிகழ்வின் போது நடைபெறவுள்ள சிறுவர் மற்றும் முதியோர்களிற்கான விளையாட்டு நிகழ்வுகள் வருமாறு:

Under 5 – 2018ம் ஆண்டு மற்றும் அதற்கு பின்னர் பிறந்தவர்களிற்கான விளையாட்டுக்கள்:
1. 50M – ஆண்கள்
2. 50M – பெண்கள்

Under 7 – 2016, 2017ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
3. 100M – ஆண்கள்
4. 100M – பெண்கள்

Under 9 – 2014, 2015ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
5. 100M – ஆண்கள்
6. 100M – பெண்கள்

Under 11 – 2012, 2013ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
7. 100M – ஆண்கள்
8. 100M – பெண்கள்

Under 13 – 2010, 2011ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
 9. 200M – ஆண்கள்

10. 200M – பெண்கள்
11. தேசிக்காய் ஓட்டம் – பெண்கள்

18 & Under – 2005 முதல் 2009ம் ஆண்டு வரை பிறந்தவர்கள் மட்டும்

  1. 200M – ஆண்கள்
  2. 200M – பெண்கள்
  3. தேசிக்காய் ஓட்டம் – பெண்கள்

Over 19  – 2004 மற்றும் அதற்கு முன்னர் பிறந்தவர்கள் மட்டும்

  1. 200M – ஆண்கள்
  2. 200M – பெண்கள்
  3. சாக்கு ஓட்டம் – ஆண்கள்
  4. சாக்கு ஓட்டம் – பெண்கள்

Over 60
19. முதியோர் மெதுநடை – ஆண்கள்
20. முதியோர் மெதுநடை – பெண்கள்

வினோத உடை போட்டி

  1. சிறுவர் (Under 18)
  2. பெரியோர் (Over 18)

 

குறிப்பு:

வினோத உடைப்  போட்டியில்  சிறுவர் முதல் பெரியோர் வரை இருபாலாரும் கலந்து கொள்ளும் வகையில் இரண்டு பிரிவுகளாக  இடம்பெறவுள்ளதுபோட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து  சிறுவர்களும் , பெரியோர்களும் போட்டிக்கு தேவையான ஆடைஅணிகலன்களை தயார் செய்து கொண்டு வருமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

 குழு விளையாட்டுக்களான தாம்பிழுவைப் போர்தாய்ச்சி  போட்டிகளும் இல்லங்களுக்கிடையே நடைபெறும்.

 தாய்ச்சி போட்டியில் வெற்றி பெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு அமரர் சரவணமுத்து பத்மநாதன் ( பட்டு மாமா ) (முன்னைநாள்  செயலாளர் வாரிவளவு நல்லியக்கச் சபை) அவர்களின் ஞாபகார்த்தமாக  கேடயம் வழங்கப்படும்.

 இல்லங்களுக்கிடையேயான போட்டியில்  வெற்றி பெற்ற  இல்லத்திற்கு அமரர் நடராசா குலேந்திரன் (காரை விளையாட்டுக்கழக உதைபந்தாட்ட வீரர்) அவர்களின் ஞாபகார்த்தமாக  கேடயம் வழங்கப்படும்.

 மேற்படி விளையாட்டு போட்டிகளில் பங்கு பற்றும் சிறார்கள் மற்றும் இளையோர் காலை 9 மணிக்கு தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அத்துடன் மூன்று இல்லங்களாக கலந்து கொள்பவர்கள் பதியப்பட்டு இல்லங்களுக்கிடையேயான போட்டியாக நடைபெறும். மூன்று இல்லங்களும் அவற்றை பதிவு செய்யும் முறையும் வருமாறு:

 

RED – Mississauga, Brampton, Cambridge  – WEST  
                                

BLUE- Scarborough,  Etobicoke  – SOUTH

YELLOW– Markham, Ajax, Ottawa, Richmond Hill – NORTH 

போட்டிகள் அனைத்திலும் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

 

 

கனடா காரை கலாச்சார மன்றம் ஒன்றுகூடலில் பங்குபற்றும் சிரமதான தொண்டர்களிற்கான அறிவித்தல்!

 

கனடா காரை கலாச்சார மன்றம்

ஒன்றுகூடலில் பங்குபற்றும் சிரமதான தொண்டர்களிற்கான அறிவித்தல்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் 05.08.2023 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இவ் ஒன்றுகூடலில் பணியாற்ற விரும்பும் தொண்டர்கள் தங்கள் பெயர்களை 03.08.2023 வியாழக்கிழமைக்கு  முன்னர் பதிவு செய்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

03.08.2023 க்கு முன்னர் பதிவு செய்யும் தொண்டர்களிற்கு மட்டுமே தொண்டர் பணிக்குரிய சான்றிதழ் வழங்கப்படும்.

இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு karainagar@gmail.com தொடர்பு கொள்ளவும்.

நன்றி

                     நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

“WORKING TOGETHER IS SUCCESS”

 

CKCA GET TOGETHER 2023 VOLUNTEER REGISTRATION

 

Verification

காரை ஒன்றுகூடல் – 2023, அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றது கனடா காரை கலாச்சார மன்றம்!

 

காரை ஒன்றுகூடல் – 2023

அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றது

கனடா காரை கலாச்சார மன்றம்.

கனடா வாழ் காரை மக்களின் வருடாந்த கோடை கால ஒன்றுகூடல் ஆவணி (Aug) மாதம் 05, 2023 சனிக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் Morningside Park, Area 3,4 இல் வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது.

கனடா வாழ் காரைநகர் மக்கள் மற்றும் மன்றத்தின் அனுசரணையாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கின்றோம்.

வருடாவருடம் காரை உறவுகள் அனைவரும் கலந்து சிறப்பித்து, ஊர் நினைவுகளை கொண்டாடி மகிழ்கின்ற விழாவாக ஒன்றுகூடல் அமைந்து வருகின்றது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் கலந்து இன்புற்று காரை மண்ணின் பெருமை பேசி, உறவுகளோடு கொண்டாடி, சேர்ந்து மகிழ்ந்து, பகிர்ந்து வாழ்வோம் வாருங்கள்.

நன்றி

தொடர்புகளுக்கு: மின்னஞ்சல்: karainagar@gmail.com

                 நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

ஒருத்தி படம் திரையிடப்பட்டதன் ஊடாக திரட்டப்பட்ட நிதியின் மூலம் காரைநகர் வைத்தியசாலைக்கு அவசிய மருந்துப் பொருட்களை கனடா காரை கலாசார மன்றம் உதவியுள்ளது.

 

ஒருத்தி படம் திரையிடப்பட்டதன் ஊடாக திரட்டப்பட்ட நிதியின் மூலம்

காரைநகர் வைத்தியசாலைக்கு அவசிய மருந்துப் பொருட்களை

கனடா காரை கலாசார மன்றம் உதவியுள்ளது.

காரை மண் தந்த கலைஞர் P.S.சுதாகரனின் 2வது வரலாற்றுப் படைப்பான ஒருத்தி 2 என்ற திரைப்படம் சென்ற மாதம் திரையிடப்பட்டு அதன் ஊடாக ஒரு தொகைப் பணம் திரட்டப்பட்டிருந்தது. காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் சில முக்கியமான மருந்துகள் இல்லாது வறிய நோயாளர்கள் பல்வேறு கஸ்டங்களை எதிர்கொள்வதாக நோயாளர் நலன்புரிச் சங்கம் கனடா காரை கலாசார மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் அடிப்படையில் திரைப்படக் காட்சி மூலம் திரட்டப்பட்ட நிதியிலிருந்து ஒரு தொகுதி மருந்துப் பொருட்களை இம் மன்றம் உதவியுள்ளது.

குறிப்பிட்ட அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் 13.06.2023 செவ்வாய்க்கிழமை பிரதேச வைத்தியசாலைக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி Dr.செந்தூரன் அவர்களிடம் வைத்தியசாலையில் வைத்து கையளிக்கப்பட் டன.

கனடா-காரை கலாசார மன்றத்தின் உப தலைவர் இக்கையளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு
உரையாற்றுகையில் இவ் வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு கனடா-காரை கலாசார மன்றம் பல சந்தர்ப்பங்களிலும் உதவி செய்து வந்துள்ளதாகவும் சிறப்பாக 2006 ஆம் ஆண்டு ஆண், பெண் நோயாளர்கள் விடுதிகளிற்குத் தேவையான கட்டில்கள் ,மெத்தைகள் மற்றும் சக்கர நாற்காலிகளை உதவியதுடன் இரு ஆண்டுகளிற்கு முன்னர் P.S.சுதாகரனின் ஒருத்தி 1 திரையிடப்பட்டதன் மூலம் திரட்டப்பட்ட நிதியிலிருந்து மருத்துவ உபகரணங்கள் வாங்கி உதவப்பட்டதாகத் தெரிவித்தார். தற்போது வழங்கப்பட்டது முதலாவது தொகுதி மருந்துகள் எனவும் அடுத்த தொகுதி மருந்துகள் தேவைப்படும்போது வழங்கி வைக்கப்படும் எனவும் தெரிவித்ததுடன் சிறந்தமுறையில் சேவையாற்றி வருகின்ற வைத்திய அதிகாரி Dr.செந்தூரனதும் ஏனைய மருத்துவர்கள்,அனைத்து வைத்தியசாலை அலுவலர்களதும் சேவையினையும், நோயாளர் நலன்புரிச் சங்கத்தினது சிறப்பான பணிகளையும் கனடா-காரை கலாசார மன்றத்தின் சார்பில் பாராட்டி நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.

நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் திரு.நா.பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்து உரையாற்றியதுடன் கலைஞர் P.S.சுதாகரனும் உரையாற்றியிருந்தார்.

இந்நிகழ்வில் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் உறுப்பினர்கள், வைத்தியசாலை அலுவலர்கள் மற்றும் பிரித்தானிய காரை நலன்புரிச் சங்க நிர்வாகத்தைச் சேர்ந்த திரு,வி.நாகேந்திரம், திரு. K.K.நாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

 

 

 

 

காரைநகர் வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு உதவும் நோக்குடன் நிதிசேர் திரைப்படக் காட்சியாக காரைமண் தந்த கலைஞர் P.S.சுதாகரனின் ஒருத்தி-2

 

காரைநகர் வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு உதவும் நோக்குடன் நிதிசேர் திரைப்படக் காட்சியாக காரைமண் தந்த கலைஞர் P.S.சுதாகரனின் ஒருத்தி-2

கனடா-காரை கலாசார மன்றத்தின் நிதிசேர் திரைப்படக் காட்சியாக காரை மண் தந்த கலைஞ்ர் P.S.சுதாகரனின் ஒருத்தி-2 திரைப்படம் எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு Woodside Cinema (McCowan Rd & Finch Ave East) வில் திரையிடப்படவுள்ளது.

கனேடிய கலையுலகு அறிந்த கலைஞர் P.S.சுதாகரன் அவர்களினால் தயாரித்தும் இயக்கியும் வெளியிடப்பட்ட ஒருத்தி-1, ஒருத்தி – 2 ஆகிய இரு திரைப்படங்களுமே பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் ஆதரவினைப் பெற்று மகத்தான வெற்றியடைந்திருந்தன. இதன்மூலம் கனேடிய தமிழ்த் திரைப்படத்துறை வரலாற்றில் சாதனையை ஏற்படுத்திய பெருமையைப் பெற்ற கலைஞரான P.S.சுதாகரனின் ஒருத்தி-2 திரைப்படத்தை பார்க்கத் தவறிய காரை உறவுகளிற்கு பெரு வாய்ப்பாக இத்திரையிடல் நிகழ்வு அமைகின்றது.

நுழைவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொண்டு இத்திரைப்படத்தினை பார்வையிடுவதன் ஊடாக எமதூரின் உன்னதமான ஒரு கலைஞரை ஆதரித்து ஊக்குவிப்பதுடன் நலிவுற்ற வறிய மக்களிற்கு வைத்திய சேவையை வழங்கும் வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு உதவும் மனிதாபிமானப் பணியிலும் பங்குகொள்ள வருமாறு காரை வாழ் உறவுகளை கனடா-காரை கலாசார மன்றம் அன்போடு அழைக்கின்றது.

நுழைவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 416 418 5697

இத்திரைப்படக்காட்சி தொடர்பான விளம்பரப் பிரசுரத்தினை கீழே பார்வையிடலாம்.

க.பொ.த.சாதாரண பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களிற்கு பிரபல்யம் மிக்க வளவாளர்கள் பங்குகொண்ட கல்விக் கருத்தரங்கு கனடா-காரை கலாசார மன்றத்தின் பூரணமான அனுசரணையில் சிறப்பாக நடைபெற்றது.

 

க.பொ.த.சாதாரண பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களிற்கு பிரபல்யம் மிக்க வளவாளர்கள் பங்குகொண்ட கல்விக் கருத்தரங்கு கனடா-காரை கலாசார மன்றத்தின் பூரணமான அனுசரணையில் சிறப்பாக நடைபெற்றது.

காரைநகர்ப் பாடசாலைகளிலிருந்து; க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்ற மாணவர்களை தயார்படுத்தி நம்பிக்கையோடு பரீட்சையை எதிர்கொண்டு அவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் உன்ற நோக்குடன் கனடா-காரை கலாசார மன்றத்தின் அனுசரணையுடன் காரை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் கடந்த சில ஆண்டகளாக நடைபெற்று வருகின்ற கல்விக் கருத்தரங்கானது மாணவர்களதும் ஆசிரியர்களதும் வரவேற்பனைப் பெற்ற செயற்பாடாக அமைந்து விளங்குவதாகும். ஆந்த வகையில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள குறிப்பிட பரீட்சைக்குத் தோற்றவுள்ள 120 வரையான மாணவர்களிற்கு விஞ்ஞானம் தமிழ் சமயம் வரலாறு ஆகிய பாடங்களிற்கான செயரமர்வு காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில்  வெள்ளி சனி ஞாயிறு (05.05.2023, 06.05.2023, 07.05.2023) ஆகிய தினங்களிலும் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது. பாடசாலைகளின் ஆசிரியர்களுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல்யம் மிக்க ஆசிரியர்களும் இணைந்து மாணவர்கள் திருப்தியடையும் வண்ணம். மிகுந்த பயனுள்ள இககல்விக் கருத்தரங்கினை நடாத்தியிருந்தனர்.

இக்கருத்தரங்கானது தமக்கிருந்த பல சந்தேகங்களையும் தீர்த்து வைத்து தெளிவூட்டலை ஏற்படுத்தியிருந்ததாகவும் எதிர்காலத்தில் இதனை தொடர்ந்து நடாத்துவது மட்டுமல்லாது ஏனைய தொகுதிப் பாடங்களையும் இதில் இணைத்துக் கொள்வது அவசியமானது எனவும் அக்கருத்தரங்கில் கலந்துகொண்ட மாணவர்கள் தமது கருத்தக்களை பதிவிட்டுள்ளனர். அத்துடன் இக்கருத்தரங்கிற்கான பூரண அனுசரணையினை வழங்கி உதவிய கனடா-காரை கலாசார மன்றத்திற்கும் தமத நன்றியையும் பாராட்டினையும் தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

கனடா-காரை கலாசார மன்றத்தின் அனுசரணையில் கணித பாடத்திலான முன்னோடிப் பரீட்சையும் பயிற்சிக் கருத்தரங்கும் ஏற்கனவே தனியாக நடைபெற்றிருந்தமை வாசகர்கள் அறிந்ததாகும்.

கருத்தரங்கில் பங்குகொண்ட அனைவருக்கும் தேநீர் சிற்றுண்டு வகைகள் என்பன மூன்று நாட்களிலும் பரிமாறப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

புகைப்படங்களை கீழே பார்வையிடலாம்:

 

கனடா-காரை கலாசார மன்றத்தின் அனுசரணையில் க.பொ.த. பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணித பாடத்திலான முன்னோடிப் பரீட்சை பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டுள்ளது.

 

கனடா-காரை கலாசார மன்றத்தின் அனுசரணையில் க.பொ.த. பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணித பாடத்திலான முன்னோடிப் பரீட்சை பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள க.பொத. சாதாரண தரப் பரீட்சைக்கு காரைநகர்ப் பாடசாலைகளிலிருந்து தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணித பாடத்திலான் முன்னோடிப் பரீட்சை சென்ற 16-04-2023 அன்று இந்துக் கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி ஆகியனவற்றில் நடைபெற்றிருந்தது. காரை வாழ் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கனடா-காரை கலாசார மன்றத்தின் பூரண அனுசரணையில் நடைபெற்ற இவற்றில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர். காரைநகர் இந்துக் கல்லூரி யாழ்ற்ரன் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த கணிதபாட ஆசிரியர்களின் முழுமையான உதவியுடனும் பங்களிப்புடனும்; நடாத்தப்பட்டிருந்த இம்முன்னோடிப் பரீட்சையில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களுடன் கலந்துரையாடப்பட்டு அவர்களின் சந்தேகங்கள் தெளிவுபடுத்தப்பட்டிருந்தன.

 

Karai Get-Together 2023

காரைநகர் வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு உதவும் நோக்குடன் நிதிசேர் திரைப்படக் காட்சியாக காரைமண் தந்த கலைஞர் P.S.சுதாகரனின் ஒருத்தி-2

 

காரைநகர் வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு உதவும் நோக்குடன் நிதிசேர் திரைப்படக் காட்சியாக காரைமண் தந்த கலைஞர் P.S.சுதாகரனின் ஒருத்தி-2

கனடா-காரை கலாசார மன்றத்தின் நிதிசேர் திரைப்படக் காட்சியாக காரை மண் தந்த கலைஞ்ர் P.S.சுதாகரனின் ஒருத்தி-2 திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு Woodside Cinema (McCowan Rd & Finch Ave East) வில் திரையிடப்படவுள்ளது.

கனேடிய கலையுலகு அறிந்த கலைஞர் P.S.சுதாகரன் அவர்களினால் தயாரித்தும் இயக்கியும் வெளியிடப்பட்ட ஒருத்தி-1, ஒருத்தி – 2 ஆகிய இரு திரைப்படங்களுமே பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் ஆதரவினைப் பெற்று மகத்தான வெற்றியடைந்திருந்தன. இதன்மூலம் கனேடிய தமிழ்த் திரைப்படத்துறை வரலாற்றில் சாதனையை ஏற்படுத்திய பெருமையைப் பெற்ற கலைஞரான P.S.சுதாகரனின் ஒருத்தி-2 திரைப்படத்தை பார்க்கத் தவறிய காரை உறவுகளிற்கு பெரு வாய்ப்பாக இத்திரையிடல் நிகழ்வு அமைகின்றது.

நுழைவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொண்டு இத்திரைப்படத்தினை பார்வையிடுவதன் ஊடாக எமதூரின் உன்னதமான ஒரு கலைஞரை ஆதரித்து ஊக்குவிப்பதுடன் நலிவுற்ற வறிய மக்களிற்கு வைத்திய சேவையை வழங்கும் வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு உதவும் மனிதாபிமானப் பணியிலும் பங்குகொள்ள வருமாறு காரை வாழ் உறவுகளை கனடா-காரை கலாசார மன்றம் அன்போடு அழைக்கின்றது.

நுழைவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 416 418 5697

இத்திரைப்படக்காட்சி தொடர்பான விளம்பரப் பிரசுரத்தினை கீழே பார்வையிடலாம்.

 

காரை ஒன்றுகூடல் – 2023

கனடா காரை கலாச்சார மன்றத்தின் இனிய சித்திரை வருடப்பிறப்பு நல்வாழ்த்துக்கள்!

காரை ஒன்றுகூடல் – 2023, அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றது கனடா காரை கலாச்சார மன்றம்!

காரை ஒன்றுகூடல் – 2023

அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றது

கனடா காரை கலாச்சார மன்றம்.

கனடா வாழ் காரை மக்களின் வருடாந்த கோடை கால ஒன்றுகூடல் ஆவணி (Aug) மாதம் 05, 2023 சனிக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் Morningside Park, Area 3,4 இல் வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது.

கனடா வாழ் காரைநகர் மக்கள் மற்றும் மன்றத்தின் அனுசரணையாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கின்றோம்.

வருடாவருடம் காரை உறவுகள் அனைவரும் கலந்து சிறப்பித்து, ஊர் நினைவுகளை கொண்டாடி மகிழ்கின்ற விழாவாக ஒன்றுகூடல் அமைந்து வருகின்றது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் கலந்து இன்புற்று காரை மண்ணின் பெருமை பேசி, உறவுகளோடு கொண்டாடி, சேர்ந்து மகிழ்ந்து, பகிர்ந்து வாழ்வோம் வாருங்கள்.

நன்றி

தொடர்புகளுக்கு: மின்னஞ்சல்: karainagar@gmail.com

                 நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா கனடா செல்வமலைப் பிள்ளையார் கோயிலில் (Richmond Hill Hindu Temple) 06.01.2023 வெள்ளிக்கிழமை அதிகாலை 4.:30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா கனடா செல்வமலைப் பிள்ளையார் கோயிலில் (Richmond Hill Hindu Temple) 06.01.2023 வெள்ளிக்கிழமை அதிகாலை 4.:30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

நடராஜப்பெருமானுக்கு நடைபெற்ற ஆதிரை அபிசேகம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அதனைத் தொடர்ந்து காரைநகரைச் சேர்ந்த சிறார்களின் இன்னிசைக் கச்சேரி இடம்பெற்றது. தொடர்ந்து மணிவாசகப் பெருமான் அருளிய திருவெம்பாவைப் பாடல்களை இசைக்க தில்லைப்பெருமானுக்கு ஆலய அந்தணப்பெருமக்கள் பூசை வழிபாடுகளை ஆகம முறைப்படி நடத்தினர்.

தொடர்ந்து தவில் நாதஸ்வர வாத்தியங்கள் முழங்க தில்லை நடராஜப் பெருமான் ஆனந்தத் தாண்டவமாடியவண்ணம் வீதியுலா வந்த அருள் காட்சியைக் கண்டு சிவனடியார்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தவாறு பேரானந்தம் அடைந்தனர்.

படங்களை பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://photos.app.goo.gl/3fKbBWjrU6hNeAT17

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா 06.01.2023 அன்று நடைபெற்றது!

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா! (06.01.2023 – வெள்ளிக்கிழமை)

 

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும்

திருவாதிரைத் திருவிழா

(06.01.2023 – வெள்ளிக்கிழமை)

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா கனடா செல்வமலைப் பிள்ளையார் கோயிலில் (Richmond Hill Hindu Temple)எதிர்வரும் 6ஆம் திகதி(06.01.2023) வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து ஆருத்ரா தரிசனம் இடம்பெற்று, நடராசப்பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் வீதியுலா வரும் அருள்காட்சியும் இடம்பெறும். அவ்வமயம் மெய்யடியார்கள் வருகைதந்து ஆடவல்லானின் திருவருளால் இகர நலன் பெற்று இன்புற அன்புடன் அழைக்கின்றோம்.

அபிசேகத் திரவியங்களை கொடுத்துதவ விரும்பும் அடியார்கள் அதிகாலை 4.30 மணிக்கு முன்பதாக கோயிலில் கையளிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

நிதியுதவி செய்ய விரும்புகின்ற அடியார்கள் மன்ற மின்னஞ்சல் karainagar@gmail.com (e- transfer) ஊடாக அனுப்புமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

மின்னஞ்சல்: karainagar@gmail.com

                 நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

காரை வசந்தத்தின் சுகத்தினை அனுபவித்து மகிழ தமிழிசைக் கலா மன்ற அரங்கை நிரப்பிய காரை.மண்ணின் மைந்தர்கள்.

காரை வசந்தத்தின் சுகத்தினை அனுபவித்து மகிழ தமிழிசைக் கலா மன்ற அரங்கை நிரப்பிய காரை.மண்ணின் மைந்தர்கள்.

கனடா-காரை கலாசார மன்றம் வழங்கி வருகின்ற காரை வசந்தம் கலை விழாவானது சென்ற 10ஆம் திகதி (10.12.2022) சனிக்கிழமை மாலை தமிழிசைக் கலா மன்ற அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. கலை உணர்வும் காரை மண்ணின் உணர்வும் பீறிட்டுப் பாய்ந்தது எனக் கூறும் அளவிற்கு அரங்கம் காரைநகர் மக்களால் நிரம்பி வழிந்தது. காரை வசந்தம் கலைவிழாவில் தரமான கலை நிகழ்வுகளைக் கண்டுகழிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் சங்கமித்த காரை மக்களின் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை எனக் கூறக்கூடியவாறு காரை மண்ணின் சிறார்களும் இளையோரும் மூத்த கலைஞர்களும் வழங்கிய கலைநிகழ்ச்சிகள் அமைந்திருந்தன. முன்னதாக அறிவிக்கப்பட்டவாறே சரியாக மாலை 5.00 மணிக்கே நிகழ்வுகள் தொடங்கப்பட்டிருந்தமையும் இரவு 11.00 மணிக்கு நிகழ்வு முடிவுற்றிருந்தமையும் மட்டுமல்லாது எவ்வித தொய்வும் இன்றி ரசிகர்களிற்கு சலிப்பு ஏற்படாவண்ணம் நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமையும் அனைவரதும் ஏகோபித்த பாராட்டினைப் பெற்றிருந்தது.

காரை.மண் தந்த பல்துறைக் கலைஞரும் “ஒருத்தி” திரைப்படத்தை இயக்கி ஈழத்து திரைப்படத்துறை வரலாற்றில் சாதனை படைத்தவருமாகிய “கலாரத்னா” P.S.சுதாகரன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்திருந்ததுடன் காரை.மண்ணையும் பெருமைப்படுத்தியிருந்தார். காரை.அபிவிருத்திச் சபையின் தலைவரான திரு.இ.சிவசுப்பிரமணியம் அவர்கள் சிறப்பு விருந்தினராக இவ்விழாவில் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

காரை.மண்ணின் புகழ்பூத்த நாதஸ்வரக் கலைஞரான காரையம்பதி N.K.கணேசன் அவர்களின் புதல்வன் “நாதகானசொரூபி” N.K.K.பவப்பிரியன் குழுவினரின் மங்கள இசையுடன் ஆரம்பித்த இவ்விழாவின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களைக் கவர்ந்திருந்தன என்பதற்குச் சான்றாக ஒவ்வொரு நிகழ்ச்சிகளின் நிறைவிலும் எழுந்த பலத்த கரகோசம் சான்று பகர்வதாகவுள்ளது. கலைக்கோயில் நுண்கலைக் கல்லூரியின் அதிபர் “நாட்டியகலாகுலநிதி” வனிதா குகேந்திரனின் மாணவர்கள் வழங்கிய அழகிய வரவேற்பு நடனம், சதங்கை நர்த்தனாலயம் அதிபர் பரதக்கலை வித்தகர் வாசு சின்னராசாவின் மாணவர்கள் வழங்கிய அசத்தலான நடனம், லயபிருந்தம் நுண்கலைக்கூட அதிபர் “சங்கீதகலாவித்தகர்” ரதிரூபன் பரஞ்சோதி அவர்கள் தயாரித்து வழங்கிய “வாத்தியபிருந்தம்” இசை நிகழ்வு, கலை அருவி நுண்கலை பயிலக அதிபர் ரேணுகா விக்னேஸ்வரனின் மாணவி மீரா செந்தில்நாதன் வழங்கிய கிராமிய நடனம், சங்கீதகலாவித்தகர் T.N.பாலமுரளி அவர்களின் மாணவன் வழங்கிய புல்லாங்குழல் இசை, நிந்துஜா மோகனேந்திரன், பவிசா மோகனேந்திரன் ஆகியோர் இணைந்து வழங்கிய Fusion நடனம், The Bassment Sound குழுவினர் வழங்கிய கலக்கல் கானங்கள் இசை நிகழ்வு என அனைத்துமே சபையோரைக் கவர்ந்து கட்டிப்போட்ட நிகழ்வுகளாகவே இருந்தன. இவற்றுள் காரையின் இளையோர் பங்குகொண்டு வழங்கிய “வாத்தியபிருந்தம்” இசை நிகழ்வு சபையோரை அதிகம் கவர்ந்து இவ்விழாவிற்கு சிறப்புச் சேர்த்த நிகழ்வாக அமைந்திருந்தது எனக் கூறினால் அது மிகையாகாது.

கனடா-காரை கலாசார மன்றத்தினால் தமிழ்மொழித் திறன் போட்டியின் ஓர் அங்கமாக நடாத்தப்பட்டிருந்த பேச்சுப்போட்டியில் பங்குபற்றி முதலாவது இடத்தினைப் பெற்ற சிறியோர் மற்றும் இளையோரின் பேச்சுக்கள் நிகழ்ச்சிகளின் இடையே இடம்பெற்றிருந்தனஇ அதேவேளையில் தமிழ்மொழித் திறன், பண்ணிசை ஆகிய போட்டிகளில் ஆறுபிரிவுகளிலும் முதலாம் இடத்தினைப்பெற்ற 22 வெற்றியாளர்களிற்கு தங்கப் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டதுடன் இரண்டாம் மூன்றாம் இடத்தினைப் பெற்ற வெற்றியாளர்களிற்கும் பங்குபற்றிய போட்டியாளர்களிற்கும் இவ்வரங்கில் பரிசில்கள் வழங்கப்பட்டிருந்தன.

பல்வேறு தடைகளையும் சவால்களையும் தாண்டி திரு.சிவசம்பு சிவநாதன் அவர்களின் தலைமையில் அண்மையில் அமையப்பெற்றுள்ள கனடா-காரை கலாசார மன்றத்தின் புதிய நிர்வாகத்தினால் சிறந்த முறையில் திட்டமிட்டு ஓழுங்கமைக்கப்பட்டிருந்த இவ்விழாவின் வெற்றியானது இந்நிர்வாகம் தனது எதிர்காலப் பணிகளை முன்னெடுப்பதற்கு பெரும் ஊக்கத்தினையும் உந்துதலையும் கொடுத்துள்ளதாகவே கூறலாம்.

விழாவில் கலந்துகொண்டவர்கள் அனைவருக்கும் சிற்றுண்டி, தேனீர் என்பன மன்றத்தின் தொண்டர்களினால் பரிமாறப்பட்டிருந்ததுடன் விழாவின் நிறைவில் இரவு உணவு எடுத்துச் செல்வதற்கும் வழங்கப்பட்டிருந்தது.

சிறந்த நிகழ்ச்சிகளைக் கண்டு கழித்த நிறைவான மனதுடன் அரங்கிலிருந்து மக்கள் வெளியேறியதை அவதானிக்கமுடிந்தது.

 

படங்களை பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://photos.app.goo.gl/MSkTTFBCKT9JecYU6

 

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா! (06.01.2023- வெள்ளிக்கிழமை)

கனடா காரை கலாசார மன்றத்தின் காரை வசந்தம் நிகழ்வில் கலந்து கொண்ட காரைநகர் அபிவிருத்திச் சபை தலைவர் திரு. இ.சிவசுப்பிரமணியம் அவர்களுடனான சந்திப்பு!

 

கனடா காரை கலாசார மன்றத்தின்

காரை வசந்தம் நிகழ்வில் கலந்து கொண்ட காரைநகர் அபிவிருத்திச் சபை

தலைவர் திரு. இ.சிவசுப்பிரமணியம் அவர்களுடனான சந்திப்பு.

கனடா காரை கலாசார மன்றத்தின் காரை வசந்தம் நிகழ்வில் கலந்து கொண்ட காரைநகர் அபிவிருத்திச் சபை தலைவர் திரு. இ.சிவசுப்பிரமணியம் அவர்களை மன்றத்தின் சார்பில் இன்று 14.12.2022 புதன்கிழமை இரவு சந்தித்து கனடா காரை கலாசார மன்றத்தின் ஊரிற்கான செயற்பாடுகள் காரைநகர் அபிவிருத்திச் சபை ஊடாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் நிர்வாக செயற்பாடுகள் குறித்தும் அளவளாவப்பட்டதுடன் இரவு போசன விருந்தும் வழங்கப்பட்டது.
கனடா காரை கலாசார மன்ற தலைவர், உபசெயலாளர், நிர்வாக சபை உறுப்பினர் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொண்டனர்.

கனடா காரை கலாசார மன்றம் வழங்கும் காரை வசந்தம் கலை விழா தொடர்பாக மன்றத்தின் தலைவர் திரு.சிவசம்பு சிவநாதன் அவர்கள் goodeveningcanada.com என்ற டிஜிட்டல் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் பதிவு!

இன்று (10.12.2022) காரை வசந்தம் கலை விழாவில் கலந்து கொள்ளும் மூன்று அதிஷ்டசாலிகளுக்கு பெறுமதிமிக்க பரிசில்கள்!

 

இன்று (10.12.2022) காரை வசந்தம் கலை விழாவில் கலந்து கொள்ளும்

மூன்று அதிஷ்டசாலிகளுக்கு பெறுமதிமிக்க பரிசில்கள்.

நடைபெறவுள்ள கலை விழாவில் கலந்துகொள்வோர் மண்டப நுழைவாயிலில் அமைந்துள்ள கருமபீடத்தில் வழங்கப்படும் சீட்டொன்றில் பெயர், தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி என்பவற்றை மட்டும் எழுதி இதற்கென ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள பெட்டி ஒன்றினுள் சேர்த்து விட்டால் விழாவின் இறுதியில் அவை அதிஸ்டம் பார்க்கப்பட்டு வெற்றியாளர் மூவருக்கு பரிசில்கள் வழங்கிவைக்கப்படும்.

1ம் பரிசில் Lenova Tab M10 Plus

2ம் பரிசில் $150 பெறுமதியான Gift Card

3ம் பரிசில் $100 பெறுமதியான Gift Card

இப் பரிசில்களுக்கான அனுசரணையை வீடுவிற்பனை முகவர் விக்கி வேலாயுதன் அவர்கள் வழங்கியுள்ளார்.

கனடா-காரை கலாசார மன்றம்

காரை.மண்ணின் மக்கள் ஊரின் உணர்வோடு சங்கமித்து மகிழும் காரை வசந்தம்-2022 கலை விழா வெகு சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி என அறிவிப்பு.

காரை.மண்ணின் மக்கள் ஊரின் உணர்வோடு சங்கமித்து மகிழும்

காரை வசந்தம்-2022 கலை விழா வெகு சிறப்பாக நடைபெறுவதற்கான

ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி என அறிவிப்பு.

எதிர்வரும் 10-12-2022 சனிக்கிழமை மாலை 5.00மணிக்கு ஸ்காபுரோ தமிழிசைக் கலா மன்ற அரங்கில் கனடா-காரை கலாசார மன்றம் 21வது ஆண்டாக வழங்கும் காரை வசந்தம் 2022 கலை விழா பல்சுவைக் கலை நிகழ்வுகளைத் தாங்கி வெகு சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் விழா அமைப்புக் குழுவினால் செய்யப்பட்டுள்ளது. மண்மீது பற்றுதி கொண்ட காரைநகர் மக்கள் உணர்வோடு சங்கமித்து மகிழுகின்ற பெரு விழாவான காரை வசந்தம் விழாவில் என்றும் போல சிறப்பு மலர் ஒன்றும் வெளியிட்டுவைக்கப்படவுள்ளது. திரளான காரை.மண்ணின் மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை அவர்களின் வசதி கருதி சிற்றுண்டிகள் பரிமாறப்படுவதுடன் எடுத்துச் செல்வதற்கான இரவு உணவும் வழங்கப்படவுள்ளது.

வீடுவிற்பனை முகவர் விக்கி வேலாயுதன் அவர்களின் அனுசரணையில் அதிஸ்டசாலி ஒருவருக்கு Lenova Tab M10 Plus பரிசாகக் கிடைக்கவுள்ளது.

சனிக்கிழமை நடைபெறவுள்ள கலை விழாவில் கலந்துகொள்வோர் மண்டப நுழைவாயிலில் அமைந்துள்ள கருமபீடத்தில் வழங்கப்படும் சீட்டொன்றில் பெயர், தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி என்பவற்றை மட்டும் எழுதி இதற்கென ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள பெட்டி ஒன்றினுள் சேர்த்து விட்டால் விழாவின் இறுதியில் அவை அதிஸ்டம் பார்க்கப்பட்டு வெற்றியாளர் ஒருவருக்கு Lenova Tab M10 Plus பரிசாக வழங்கிவைக்கப்படும்.

கனடா-காரை கலாசார மன்றம்

 

கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரணையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் காரைநகர் கோட்டப் பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான 2ம் கட்ட வழிகாட்டல் செயலமர்வு 26.11.2022 சனிக்கிழமை இடம்பெற்றது.

 

கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரணையுடன்

காரைநகர் அபிவிருத்திச் சபையினால்

காரைநகர் கோட்டப் பாடசாலைகளில்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான

2ம் கட்ட வழிகாட்டல் செயலமர்வு 26.11.2022 சனிக்கிழமை இடம்பெற்றது.

காரைநகர் சுப்பிரமணிய வித்தியாலயத்தில் காரைநகர் வலந்தலை தெற்கு அமி.த.க. பாடசாலை அதிபர் க.நேத்திரானந்தன் தலைமையில் ஆரம்பமான இந்தச் செயலமர்வில் யாழ் பிரபல பாடசாலை ஆசிரியர்களினால் கற்பித்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் வழிகாட்டல் குறிப்புக்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இவ்வாண்டு டிசெம்பர் மாதம் 18ம் திகதி இடம்பெற உள்ள இந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்ற உள்ள காரைநகர் கோட்ட பாடசாலை மாணவர்கள் 145 பேரில் 135 மாணவர்கள் இந்த வழிகாட்டல் செயலமர்வில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இந்தச் செயலமர்வில் கலந்துகொண்ட அனைத்துப் பிள்ளைகளுக்கும் இரு தடவைகள் சிற்றுண்டி வழங்கப்பட்டதுடன் காலை 8.30 மணிதொடக்கம் பிற்பகல் 2.30 மணிவரை இந்தச் செயலமர்வு இடம்பெற்றது. முதலாம் கட்ட செயலமர்வு 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

கனடா காரை கலாச்சார மன்றம் பெருமையுடன் வழங்கும் “காரை வசந்தம் 2022″

காரை கலாசார கனடா மன்றத்தின் அனுசரணையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் காரைநகர் கோட்டப் பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான 1ம் கட்ட வழிகாட்டல் செயலமர்வு 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

 

 

காரை கலாசார கனடா மன்றத்தின் அனுசரணையுடன்

காரைநகர் அபிவிருத்திச் சபையினால்

காரைநகர் கோட்டப் பாடசாலைகளில்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான

1ம் கட்ட வழிகாட்டல் செயலமர்வு 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

காரைநகர் சுப்பிரமணிய வித்தியாலயத்தில் காரைநகர் வலந்தலை தெற்கு அமி.த.க. பாடசாலை அதிபர் க.நேத்திரானந்தன் தலைமையில் ஆரம்பமான இந்தச் செயலமர்வில் யாழ் பிரபல பாடசாலை ஆசிரியர்களினால் கற்பித்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் வழிகாட்டல் குறிப்புக்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இவ்வாண்டு டிசெம்பர் மாதம் 18ம் திகதி இடம்பெற உள்ள இந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்ற உள்ள காரைநகர் கோட்ட பாடசாலை மாணவர்கள் 145 பேரில் 117 மாணவர்கள் இந்த வழிகாட்டல் செயலமர்வில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இந்த செயலமர்வில் ஆயிலி சிவஞாணோதயா வித்தியாலய அதிபர் இ.வசீகரன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் காரைநகர் அபிவிருத்திச் சபை செயலாளர். பொருளாளர் உள்ளிட்ட சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

2ம் கட்டச் செயலமர்வு எதிர்வரும் சனிக்கிழமை (26.11.2022) காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் இடம்பெற உள்ளது. இந்தச் செயலமர்வில் கலந்துகொண்ட அனைத்துப் பிள்ளைகளுக்கும் இரு தடவைகள் சிற்றுண்டி வழங்கப்பட்டதுடன் காலை 8.30 மணிதொடக்கம் பிற்பகல் 2.30 மணிவரை இந்தச் செயலமர்வு இடம்பெற்றது.

அதிக போட்டியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்ற தமிழ்த்திறன், பண்ணிசைப் போட்டிகளின் முடிவுகள்.

 

அதிக போட்டியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்ற தமிழ்த்திறன், பண்ணிசைப்

போட்டிகளின் முடிவுகள்.

கனடா-காரை கலாசார மன்றத்தினால் 2000ஆம் ஆண்டு தொடக்கம் காரைச் சிறார்கள் மற்றும் இளையோர் மத்தியில் நடாத்தப்பட்டு வருகின்ற தமிழ்மொழித் திறன் போட்டியும் பண்ணிசைப் போட்டியும் இம்முறை வெகு சிறப்பாக நடாத்தப்பட்டிருந்தது. சென்ற ஞாயிற்றுக்கிழமை (13.11.2022) ஸ்காபுரோ நகரசபையின் அறைகளில் நடாத்தப்பட்டிருந்த இப்போட்டிகளில் 39 போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர். கனடா-காரை கலாசார மன்றத்தின் தலைவர் திரு.சிவசம்பு சிவநாதன் அவர்கள் போட்டியாளர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மத்தியில் உரையாற்றி இப்போட்டிகளை சம்பிரதாயபூர்வமாக தொடக்கி வைத்திருந்தார்.

குறுகிய கால அவகாசத்துடன் பாடசாலை நடைபெற்று வருகின்ற காலத்தில் இப்போட்டிகள் நடாத்தப்பட்டிருந்தபோதும் அதிக அளவிலான போட்டியாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இப்போட்டிகளில் கலந்துகொண்டிருந்தமையும் இப்போட்டிகளை சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடாத்தி முடிக்க போட்டியாளர்களின் பெற்றோர்கள் வழங்கியிருந்த ஆதரவும் ஒத்துழைப்பும் கனடா-காரை கலாசார மன்றத்திற்கு பெரும் ஊக்குவிப்பாக அமைந்திருந்தது. போட்டிகளில் முதலாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட போட்டியாளர்களிற்கு தங்கப் பதக்கமும் 2ம் 3ம் இடத்தினைப் பெற்ற போட்டியாளர்களிற்கு பெறுமதி மிக்க பரிசில்களும் பங்குபற்றிய அனைத்துப் போட்டியாளர்களிற்கும் ஊக்குவிப்புப் பரிசல்களும் எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி நடைபெறவுள்ள காரை வசந்தம் கலை விழா அரங்கில் வைத்து வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பேச்சு, வாசிப்பு, சொல்வதெழுதுதல், பண்ணிசை ஆகிய போட்டிகளின் முடிவுகள் கீழே தரப்பட்டுள்ளன.

 

பேச்சுப்  போட்டி

 

பாலர் பிரிவு

 

முதலாம் இடம்

அபிநயா கேசவராசா

 

இரண்டாம் இடம்

மாறன் விமுத்தன்

 

மூன்றாம் இடம்

கயல் நந்தகுமார்

 

கீழ்ப் பிரிவு

 

முதலாம் இடம்

சர்வினி சிவசங்கர்

 

இரண்டாம் இடம்

அமுதீசன் சிவானந்தன்

 

மூன்றாம் இடம்

விபுசா விமலரூபன்

மத்திய பிரிவு

 

முதலாம் இடம்

இளநிலா விஜயகுமார்

 

இரண்டாம் இடம்

ராகவி சிவானந்தன்

 

மூன்றாம் இடம்

தீபிகா சிவசங்கர்

 

மேற்பிரிவு

 

முதலாம் இடம்

அபிஸ்னன்  சிவானந்தன்

 

இரண்டாம் இடம்

இலக்கியா விஜயகுமார்

 

மூன்றாம் இடம்

தயானி நடனசபேசன்

 

அதிமேற்பிரிவு

 

முதலாம் இடம்

கிரண்யா பரந்தாமன்

 

இரண்டாம் இடம்

கர்ணி பரந்தாமன்

 

வாசிப்புப் போட்டி

 

பாலர் பிரிவு

முதலாம் இடம்

மாறன் விமுத்தன்

 

இரண்டாம் இடம்

அக்க்ஷயா கேசவராசா

 

மூன்றாம் இடம்

அபிநயா கேசவராசா

 

கீழ்ப் பிரிவு

 

முதலாம் இடம்

மாதவ் பார்த்திபன்

 

இரண்டாம் இடம்

அமுதீசன் சிவானந்தன்

 

மூன்றாம் இடம்

சர்வினி சிவசங்கர்

 

மத்திய பிரிவு

 

முதலாம் இடம்

ராகவி சிவானந்தன்

 

இரண்டாம் இடம்

இளநிலா விஜயகுமார்

 

மூன்றாம் இடம்

தீபிகா சிவசங்கர்

 

மேற்பிரிவு

 

முதலாம் இடம்

அபிஸ்னன்  சிவானந்தன்

 

இரண்டாம் இடம்

இலக்கியா விஜயகுமார்

 

மூன்றாம் இடம்

அஜீஸ் சண்முகரட்ணம்

 

அதிமேற்பிரிவு

 

முதலாம் இடம்

பிரவிந்தன் சுதாகரன்

 

இரண்டாம் இடம்

கிரண்யா பரந்தாமன்

 

மூன்றாம் இடம்

அஷ்வினி சண்முகரட்ணம்

 

உயர் பிரிவு

 

முதலாம் இடம்

தீபிகா பிரமேந்திரதீசன்

 

 

எழுத்துப் போட்டி (சொல்வதெழுதுதல்)

 

பாலர் பிரிவு

 

முதலாம் இடம்

மாறன் விமுத்தன்

 

இரண்டாம் இடம்

கதிர் நந்தகுமார்

 

மூன்றாம் இடம்

கயல் நந்தகுமார்

 

கீழ்ப் பிரிவு

 

முதலாம் இடம்

சர்வினி சிவசங்கர்

 

இரண்டாம் இடம்

விபுசா விமலரூபன்

மாதவ் பார்த்திபன்

(இருவர் பெற்றுக் கொள்கின்றனர்)

 

மூன்றாம் இடம்

அமுதீசன் சிவானந்தன்

மத்திய பிரிவு

 

முதலாம் இடம்

ராகவி சிவானந்தன்

 

இரண்டாம் இடம்

இளநிலா விஜயகுமார்

 

மூன்றாம் இடம்

தீபிகா சிவசங்கர்

மேற்பிரிவு

 

முதலாம் இடம்

அபிஸ்னன்  சிவானந்தன்

 

இரண்டாம் இடம்

இலக்கியா விஜயகுமார்

 

மூன்றாம் இடம்

விநாயக் பார்த்திபன்

 

அதிமேற்பிரிவு

 

முதலாம் இடம்

கிரண்யா பரந்தாமன்

 

இரண்டாம் இடம்

அஷ்வினி சண்முகரட்ணம்

 

மூன்றாம் இடம்

கர்ணி பரந்தாமன்

 

உயர் பிரிவு

 

முதலாம் இடம்

தீபிகா பிரமேந்திரதீசன்

 

பண்ணிசைப் போட்டி

 

பாலர் பிரிவு

 

முதலாம் இடம்

மாறன் விமுத்தன்

 

இரண்டாம் இடம்

வேந்தன் விமுத்தன்

 

மூன்றாம் இடம்

கயல் நந்தகுமார்

கீழ்ப் பிரிவு

 

முதலாம் இடம்

அமுதீசன் சிவானந்தன்

 

இரண்டாம் இடம்

விபுசா விமலரூபன்

 

மூன்றாம் இடம்

சர்வினி சிவசங்கர்

மத்திய பிரிவு

 

முதலாம் இடம்

இஷானி முரளி

 

இரண்டாம் இடம்

ராகவி சிவானந்தன்

 

மூன்றாம் இடம்

இளநிலா விஜயகுமார்

மேற்பிரிவு

 

முதலாம் இடம்

ராகவி முரளி

 

இரண்டாம் இடம்

அபிஸ்னன்  சிவானந்தன்

 

மூன்றாம் இடம்

இலக்கியா விஜயகுமார்

அதிமேற்பிரிவு

 

முதலாம் இடம்

சுபிகா வசந்தகுமார்

 

இரண்டாம் இடம்

மாதவி மனோகாந்தன்

 

மூன்றாம் இடம்

ஷ்ருதி பிரஷாணா

 

உயர் பிரிவு

 

முதலாம் இடம்

நமிகா வசந்தகுமார்

 

இரண்டாம் இடம்

மாதுரி மனோகாந்தன்

 

 

 

 

 

 

கனடா-காரை கலாசார மன்றத்தின் நிகழ்வுகளிற்கு தொண்டர்களாகப் பணியாற்ற விரும்புவோர் பதிவுசெய்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.

கனடா-காரை கலாசார மன்றத்தின் நிகழ்வுகளிற்கு

தொண்டர்களாகப் பணியாற்ற விரும்புவோர்

பதிவுசெய்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.

எதிர்வரும் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தமிழ்மொழித் திறன், பண்ணிசை ஆகிய போட்டிகளிலும் டிசம்பர் 10ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள காரை வசந்தம் கலை விழாவிலும் தொண்டர்களாகப் பணியாற்ற விரும்பும் காரைநகருடன் தொடர்புடைய இளையோர் karainagar@gmail.com என்ற மன்றத்தின் மின்னஞ்சல் ஊடாகவோ அன்றி 416 418 5697, 647 973 4507 ஆகிய இலக்கங்களுள் ஒன்றினை அழைத்தோ பின்வரும் விபரங்களை பதிவுசெய்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம். நிகழ்வுகளின் நிறைவில் இவர்களிற்கு தொண்டர் சேவைச் சான்றிதழ் வழங்கப்படும்.

First Name (முதற்பெயர்) :

Last Name (கடைசிப் பெயர்):

தொலைபேசி இலக்கம்:

 

              நிர்வாகம்
கனடா-காரை கலாசார மன்றம்

 

தமிழ்மொழித் திறன், பண்ணிசை ஆகிய போட்டிகளில் பங்குபற்ற விரும்புவோர்களிற்கான முக்கிய அறிவித்தல்.

தமிழ்மொழித் திறன், பண்ணிசை ஆகிய போட்டிகளில்

பங்குபற்ற விரும்புவோர்களிற்கான முக்கிய அறிவித்தல்.

எதிர்வரும் நொவம்பர் 13ஆம் திகதி நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ள தமிழ்மொழித் திறன், பண்ணிசை ஆகிய போட்டிகளிற்காக Scarbourough Civic Centreஇல் இரண்டு அறைகளை மட்டுமே பயன்படுத்துவதற்கான அனுமதி கிடைத்துள்ளது. இவ்விரு அறைகளிலும் அனுமதிக்கப்பட்ட நேர எல்லைக்குள் போட்டிகளை நடாத்தி முடிப்பதற்கு போட்டிகளில் பங்குபற்றுவோரதும் பெற்றோர்களதும் ஒத்துழைப்பினை தயவாக வேண்டிநிற்கின்றோம். நேரத்தை மீதப்படுத்தும் நோக்குடனும் தங்களிற்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்த்து போட்டிகளை சிறப்பாக நடாத்தி முடிப்பதற்கு ஏதுவாக போட்டி தினம் வரை காத்திராது போட்டிகளில் பங்கு பற்ற விரும்புவோர் karainagar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாக பதிவுசெய்துகொள்ளுமாறு கேட்கப்பட்டிருந்தது. பலரும் கேட்கப்பட்ட விபரங்களைப் பதிந்து ஒத்துழைத்து வருகின்றனர். இவர்களிற்கு மனமார்ந்த நன்றிகள். இதுவரை பதிவுசெய்துகொள்ளாதவர்கள் இனியும் தாமதியாது பின்வரும் விபரங்களை karainagar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலம் பதிவுசெய்துகொள்ளுமாறு மீண்டும் அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம். 416 418 5697, 647 973 4507, 416 833 3900 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஒன்றுடன் தொடர்புகொண்டும் குறித்த விபரங்களைப் பதிவுசெய்துகொள்ளமுடியும். பெயர்களை மட்டும் ஆங்கிலத்தில் பதிவுசெய்வது விரும்பத்தக்கது.

First Name:

Last Name:

தொலைபேசி இலக்கம்:

சென்ற யூன் மாதம் கற்ற வகுப்பு:

பங்குபற்றும் பிரிவு:

பங்குபற்ற விரும்பும் போட்டி:

 

                   நிர்வாகம்
கனடா-காரை கலாசார மன்றம்.

 

காரை.மண்ணின் மைந்தன் P.S.சுதாகரனின் ஒருத்தி-2 திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று விளங்க கனடா-காரை கலாசார மன்றம் வாழ்த்துகிறது.

 

காரை.மண்ணின் மைந்தன் P.S.சுதாகரனின் ஒருத்தி-2 திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று விளங்க கனடா-காரை கலாசார மன்றம் வாழ்த்துகிறது.

இசைத்துறை, நடனத்துறை, ஒலிபரப்புத்துறை என பல கலைத்துறை சார்ந்து புகழ்பூத்த கலைஞர்களை உருவாக்கி கலை உலகிற்குத் தந்து பெருமை பெற்ற மண் காரைநகர் மண். 25ஆண்டுகளிற்கு முன்னதாக வானொலி, தொலைக்காட்சி என ஊடகத்துறையில் கால் பதித்து பரிணாம வளர்ச்சி பெற்று கனடாவாழ் தமிழ் மக்களின் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய உன்னதமான கலைஞனாக விளங்கும் காரைநகரின் மைந்தன் P.S.சுதாகரன் திரைப்படத் துறையிலும் காலூன்றி கனேடிய தமிழ்த் திரைப்படத்துறை வரலாற்றில் சாதனை படைத்துள்ளார் என்பதை எண்ணும்போது கலைத்துறை சார்ந்தவர்கள் மட்டுமல்லாது காரைநகர் மக்கள் ஒவ்வொருவரும் மிகுந்த பூரிப்பும் பெருமிதமும் கொள்கின்றனர். 2019ஆம் ஆண்டு சுதாகரன் அவர்கள் தயாரித்தும் இயக்கியும் வெளிவந்த ஒருத்தி-1 என்கின்ற திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் பெரு வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அவரால் தயாரித்து இயக்கப்பட்ட ஒருத்தி-2 திரைப்படம் எதிர்வரும் 4ஆம் திகதி திரைக்கு வருகிறது என்பது அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாகும். ஒருத்தி-1 திரைப்படத்ததைப் பார்த்தவர்களும் பார்க்கத் தவறியவர்களும் மத்தியில் ஒருத்தி-2 படத்தை பார்த்து விடவேண்டும் என்ற ஆவலும் எதிர்பார்ப்பும் இருந்து வருவதை சமூக ஊடகங்கள் வாயிலாக பலரும் தெரிவித்து வருகின்ற ஆதரவுக் கருத்துக்கள் புலப்படுத்துவதாகவுள்ளன. இத்திரைப்படத்தினை இங்குள்ள காரைநகர் மக்கள் அனைவரும் சென்று பார்வையிட்டு ஆதரவளிக்குமாறு கனடா-காரை கலாசார மன்றம் அன்புடன் வேண்டிக்கொள்கின்றது.

சுதாகரனின் ஒருத்தி-2 திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று விளங்கவும் சுதாகரன் தனது கலைப் பயணயத்திலே பல சாதனைகளைப் புரிந்து கலை உலகு போற்றும் புகழ்பூத்த ஒப்பற்ற ஒரு கலைஞனாக விளங்கி காரை மண்ணிற்கு மேலும் புகழ் சேர்க்க வேண்டியும் கனடா-காரை கலாசார மன்றம் வாழ்த்துகின்ற அதேவேளை சுதாகரனின் 25ஆண்டுகால கலைப் பணியினைப் பாராட்டி மகிழ்கின்றது.

                  நிர்வாகம்
கனடா-காரை கலாசார மன்றம்