Category: கனடா காரை

காரை வசந்தம்-2000

காரை வசந்தம்-2000

காரைக் கொண்டாட்டம்-2011

காரைக் கொண்டாட்டம்-2011

Oct 27 2010 Projects

Oct 24, 2010 – இல் கனடா காரை கலாசார மன்றம் காரைநகர் இந்துக்கல்லூரி அதிபர் திரு. சிவானந்தராஜா அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க ஒரு Multi Media Projector ரூபா 144,000.00விற்கு காரை அபிவிருத்திச்சபை மூலம் கொள்வனவு செய்து வழங்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் மாணவர்களுக்கு நவீன கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை முன்னேற்றகரமாக நடாத்தக்கூடிய வகையில் இந்த உபகரணம் உதவுகின்றது.

Sept 28, 2010 – காரைநகரில் தரம் 5இல் புலமைப்பரிசில் பெற்ற 5மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு உதவியாக தலா 5000ரூபாய்களும், அத்துடன் சமுர்த்தி சிறுவர் கழகங்களின் மாவட்ட கலாசார போட்டிகளின் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ள ஆறு காரைநகர் மாணவிகளுக்கும் தலா 3000ரூபாய்களும் கனடா காரை கலாச்சார மன்றத்தினால் எதிர்வரும் வாரத்தில் காரை அபிவிருத்திசபையினூக வழங்கப்படவுள்ளது.

Aug 14, 2010 – காரைநகரில் கல்வியை ஊக்குவிக்குமுகமாகவும் பொதுமக்களின் பாவனைக்காகவும் ஒரு பொதநூலகம் அமைப்பது பற்றி பொதுக்கூட்டம் ஒன்று கடந்த ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி கனடா காரை கலாசார மன்றத்தினால் கூட்டப்பட்டது. இக் கூட்டத்தில் ஏற்கனவே பொதுநூலகத்துக்கென கொள்வனவு செய்யப்பட்ட காணியில் பொதுநூலகம் அமைப்பதற்கு கூட்டத்திற்கு வந்திருந்த அநேகரின் ஆதரவுடன் உதவிகளை மேற்கொள்ள, மற்றும் நிதிசேகரித்தல் சம்பந்தமாக இதற்கென மன்றத்தினால் 10 பேர் கொண்ட ஒரு உபகுழு அமைக்கப்பட்டது. இந்த உபகுழுவின் ஒருங்கிணைப்பாளராக திரு. ராஜேந்திரம் வேலுப்பிள்ளை அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் மாதங்களில் இதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

Aug 6, 2010 – யா/ஆ.தியாகராஜா மத்திய மகாவித்தியாலத்தின் ஸ்தாபகர் தினமும் பரிசளிப்பு விழாவும் கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம்திகதி நடைபெற்றது. இந்தவிழாவிற்கான உதவித்தொகையான ரூ50,000ஐ கனடா காரை கலாச்சார மன்றம் வழங்கியிருந்தது.

காரை வசந்தம்-2010

காரை வசந்தம்-2010

காரைக் கொண்டாட்டம் நேற்று இனிதே நடைபெற்றது.

காரைக் கொண்டாட்டம் நேற்று இனிதே நடைபெற்றது.

நேற்று காலை 8மணிக்கு ஆரம்பமாகி மாலை 8மணிவரை நடைபெற்ற காரைக்கொண்டாட்டத்தில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். சிறுவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள்,

விநோத உடைப்போட்டிகள், பெரியவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் அனைத்தும் மிகச்சிறப்பான முறையில் முன்னைய வருடங்களைப்போன்று நடைபெற்றன.

பலதரப்பட்ட எமது மண்ணின் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டன. வழமையைப்போல் காரை மக்கள் தமது உறவினர், நண்பர்களுடன் அளாவளாவியதைக் காணமுடிந்தது. சிலர் வேலை நிமித்தம் காரணமாக சமுகம் தரமுடியவில்லை என அறியத்தந்தார்கள்.

இந்த காரைக் கொண்டாட்டம் நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெறுவதற்கு உதவிகள் செய்த அனைத்து காரைநகர் மக்கள் அனைவருக்கும் எமது மன்றம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

காரைக் கொண்டாட்டம்-2010

காரைக் கொண்டாட்டம்-2010

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிறைவேற்றப்பட்ட பணிகள் – 2009 August 9 – June 26, 2010.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிறைவேற்றப்பட்ட பணிகள் –  2009 August 9 – June 26, 2010.

இந்தப் பணிகள் அனைத்தும் காரை அபிவிருத்திச்சபை மூலமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
• 2009ம் ஆண்டுக்கான வைத்தியக்கலாநிதி டாக்டர். விஜயரட்ணம் விசுவலிங்கம் அவர்களின் தாயார் அமரர் திருமதி. ஞானசுந்தரம் விசுவலிங்கம் ஞாபகார்த்தமாக தரம் 6முதல் க.பொ.த வரை கல்வி பயிலும் வசதி குறைந்த திறமையான மாணவர்களுக்கான புலமைப்பரிசில் காரைநகரில் உள்ள 4பாடசாலைகளில் உள்ள  40 மாணவர்களுக்கு மாதா மாதம் ரூ.500.00 வீதம்; 12மாதங்களுக்கு வழங்கப்பட்டது.

• கடந்த வருட வன்செயல்களினால் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து காரைநகரிற்கு வந்திருந்த பாடசாலை சிறார்கள் சுமார் 500பேர் வரையில் காரைநகரில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் சேர்க்கப்பட்டிருந்தார்கள். இதில் 264 மாணவர்களும், 236 மாணவிகளும் அடங்குவர். காரைநகர் இந்துக் கல்லூரி 175, யாழ்ற்ரன் கல்லூரி 89, சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாசாலை 51, பாலாவோடை அ.மி.த.க பாடசாலை 59, ஊரி 61, காரை மெய்கண்டான 13, வலந்தலை அ.மி.த.க பாடசாலை 40, வியாவில் அ.மி.த.க பாடசாலை 12. இந்த இடம்பெயர்ந்து காரைநகருக்கு வந்த பாடசாலை சிறார்களுக்கு 150,000.00ரூபாய்கள் பெறுமதியான சீருடைகள் 2009 October 30ம் திகதி காரை அபிவிருத்திசபையூடாக வழங்கப்பட்டது.
• காரைநகரில் வசிக்கும் வசதிகுறைந்த பல்கலைக்கழக மாணவர்கள், அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்யமுடியாமை காரணமாக காரை அபிவிருத்திசபையை நாடியுள்ளார்கள். இந்த மாணவர்களுக்கு உதவும் முகமாக எமது மன்ற இணையத்தளம்www. karainagar.com மூலமா கனடா வாழ் காரை அன்பர்களை கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்களால் வழங்கப்பட்ட நிதிகள். அத்தோடு காரைநகரில் வசதிகுறைந்த சிறார்களும் இதில் அடங்குவர். இந்த உதவிப்பணம் வருடா வருடம், வருடத்தில் இருதடவைகள் மற்றும் மாதாந்தம் என்ற ரீதியில் உதவி வழங்குபவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படும்.

• காரைநகரைச்சேர்ந்த கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் வைத்திலிங்கம் ஜெகதீஸ்வரனின் மேற்படிப்பு உதவிக்காக மாதாந்தம் 5000.00ரூபாய்கள் 4வருடங்களுக்கு(240,000.00ரூபாய்கள்) 2010 January இல் திரு. சிவகுமார் கனகசுந்தரம் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.

• குழந்தை நகுல்ராஜ் நக்கீரன், வயது 18மாதங்கள் இவர் கடந்த போரில் தனது பெற்றோரை இழந்துவிட்டார். தற்சமயம் இவர் தனது சித்தியின் பராமரிப்பில் உள்ளார். ஆனால் அந்த சித்தியின் கணவரும் கடந்த போரில் இறந்துவிட்டார். இப்படியான சூழ்நிலையில் சித்தியும் இந்த குழந்தையும் எந்தவித வருமானமும் இல்லாமல் உள்ளார்கள். எனவே இக்குழந்தையின் பராமரிப்புச் செலவிற்கு எமது கனடா-காரை கலாச்சார மன்றத்தை அணுகியுள்ளார்கள். கடந்த வன்செயலில்  தனது பெற்றோரை இழந்த 18மாதக் குழந்தை நக்கீரனுக்கு 18வயது வரைக்குமான  ஒர்  நீண்ட கால பராமரிப்பு  உதவியை கனடா வாழ் காரை அன்பர்  ஒருவர் மனமுவந்து வழங்க முன்வந்துள்ளார். இவருக்கு மாதம் ரூ.2000.00 வீதம் நீண்டகால உதவித்திட்டமாக அவருடைய 18வயது வரைக்கும் இந்தப்பணம் வழங்கப்படும். (18வயது வரைக்குமான மொத்த பராமரிப்புச் செலவு 4இலட்சத்து 32ஆயிரம் ரூபாய்கள்).
  அத்தோடு இதே குழந்தை நகுல்ராஜ் நக்கீரனுக்கு திரு. செல்வராஜா தம்பையா 10,000.00ரூபாய்களும், திரு. ஜெயச்சந்திரன் தம்பிராஜா 5,000.00ரூபாய்களும் வழங்கியுள்ளனர்.
• சிறுவன் நகுல்ராஜ் நக்கீரனுக்கு வழங்கிய அதே அன்பர்  அடுத்த வருடம் பல்கலைக்கழகம் செல்லவிருக்கும் மருத்துவ பீட மாணவன் பிறேம்குமார் பிரசாத்திற்காக மாதம் 5000.00ரூபா 4வருடங்களுக்கு(240,000.00ரூபாய்கள்) வழங்கும்  உதவித் திட்டத்திற்கும் தனது உதவியை வழங்க முன்வந்துள்ளார். இந்த மாபெரும் உதவியை அளித்த அந்த அன்பருக்கு கனடா-காரை கலாச்சார மன்றம் தனது மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
• காரைநகரைச் சேர்ந்த கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகாவித்தியாலத்தில் சென்ற வருடம் 5ம்வகுப்பில் புலமைப்பரிசில் பெற்ற மாணவன் ஜனகாந்தன் ஏகாம்பரம். இவர் தனது மேற்படிப்பை யாழ் இந்துக்கல்லூரியில் கற்று வருகின்றார். இவரது மேற்படிப்பு(A/L) முடியும் வரைக்கான உதவியாக மாதாந்தம் 3000.00ரூபாய்கள்(6வருடங்கள் ரூ.216,000.00) கனடா காரை அன்பர் ஒருவரினால் வழங்கப்பட்டுள்ளது.

• காரைநகரைச் சேர்ந்த செல்வி சிவதர்சினி இரத்தினம் என்பவர் யாழ்ப்பாண பல்கலைக்ழகத்தின் துணைப்பிரிவான இராமநாதன் நுண்கலைக்கழகத்தில் இசைத்துறையில் கல்வி பயின்று வருகின்றார். இவரது குடும்பநிலைமை காரணமாக இவருக்கு மாதாந்தம் 5000.00ரூபாய்கள் 4வருடங்களுக்கு(240,000.00ரூபாய்கள்)  ஜெயந்தி துரைசாமி என்பவரால் ஜுன் மாதம் தொடக்கம் வழங்கிவருகின்றது.

• 19-2-2010இல் ஊரி பாடசாலைக்கு மின்இணைப்பு வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஒரு இலட்சம் ரூபாய்கள் காரை அபிவிருத்திச்சபை மூலமாக வழங்கப்பட்டது.

• இதே பாடசாலையில் கல்வி பயிலும் தாய், தந்தையரை இழந்த மற்றும் வசதி குறைந்த மாணவர்களுக்கான உதவித்தொகை பாடசாலை அதிபரின் பெயர்ப் பட்டியல் எமது மன்றத்திற்கு கிடைத்த பிற்பாடு உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.

• 2010ம் ஆண்டுக்கான வைத்தியக்கலாநிதி டாக்டர். விஜயரட்ணம் விசுவலிங்கம் அவர்களின் தாயார் அமரர் திருமதி. ஞானசுந்தரம் விசுவலிங்கம் ஞாபகார்த்த புலமைப்பரிசில் காரைநகரில் உள்ள 4பாடசாலைகளில் உள்ள  திறமையான வசதிகுறைந்த 40 மாணவர்களுக்கு மாதா மாதம் ரூ.500.00வீதம்; 12மாதங்களுக்கு வழங்கப்பட்டது.

 

காரைமுற்றம் 2009

காரைமுற்றம் 2009

காரை வசந்தம்-2009

காரை வசந்தம்-2009

நிறைவேற்றப்பட்ட 2007 – 2008 செயல் திட்டங்கள்

நிறைவேற்றப்பட்ட 2007 – 2008 செயல் திட்டங்கள்

1. கனடியத் தமிழர் வர்த்தக சம்மேளனத்தினால் ஆண்டு தோறும் நடத்தப்படும் ரொரன்ரோ வைத்தியசாலைகளுக்கு உதவும் நிதியுதவி நடை பவனியில் முதற்தடவையாக எமது மன்றம் பங்குபற்றியதுடன் மன்றத் தொண்டர்களால் ஏறத்தாழ ஐநூறு டொலர்கள் ($500) நிதிசேகரிக்கப்பட்டு அன்பளிப்புச் செய்யப்பட்டது.

2. கிழக்கு மாகாண அகதிகளுக்கு உதவும் நிதிசேகாப்பு நிகழ்வுகளில் (Car Wash) கனடா- தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு இரண்டாயிரத்து எண்ணூற்று முப்பது டொலர்கள் ($2830) அன்பளிப்புச் செய்யப்பட்டது.

3. கனடியத் தமிழர் விளையாட்டுத் துறையினரால் நடத்தப்பட்ட கிளித்தட்டுப் போட்டிகளிலும், கனடியத் தமிழ் வானொலியினால் (CTR) நடத்தப்பட்ட "நட்சத்திரவிழா" கிளித்தட்டு போட்டிகளிலும், எமது மன்றத்தின்; ஆண்கள் அணி; பங்குபற்றி வெற்றி பெற்றது.

4. ஒன்பதாவது ஆண்டாக கோடைகால ஒன்று கூடல் நிகழ்வு பூங்காவில் வழமைபோல நடத்தப்பட்டது.

5 மன்ற இணையத்தளம்; (www.karainagar.com) புதுப் பொலிவுடன் மறுசீரமைக்கப் பட்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இத்தளம் அமைக்கப்பட்டது.

6. காரைநகருடன் தொடர்புடைய ஒருவர் உலகின் எப்பாகத்தில் மரணமடைந்திருந்தாலும் மன்ற அங்கத்தவர் ஒருவரினால் உறுதிப்படுத்தப்பட்டு மன்ற நிர்வாகத்திற்கு அறியத்தரப்பட்ட மரண அறிவித்தல்கள்; மன்ற இணையத் தளத்தில் பிரசுரிக்கும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டது.

6. எட்டாவது ஆண்டாக "காரை வசந்தம்" கலைவிழா சிறப்பாக நடத்தப்பட்டதுடன்     "காரை வசந்தம்" சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது.

• தமிழ்ச்சிறார்களிடையே பேச்சுப்போட்டி, பண்ணிசைப் போட்டி என்பன நடத்தப்பட்டு  இவ்விழாவில் பரிசில்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.

7.இடைநிறுத்தப்பட்டிருந்த,காரைநகரில். பாடசாலையைவிட்டு விலகிய மாணவர்களுக்கான கணனிக் கற்கைநெறி தொடர்ந்து நடைபெற மாதாந்தம் இலங்கை ரூபா ஏழாயிரம் (ரூபா 7 000) உதவுவதற்கு ஆவன செய்யப்பட்டது.

8. கலாநிதி ஆ. தியாகராஜா ம.ம.வி வருடாந்த பரிசளிப்பு விழா நடைபெற ஐம்பதினாயிரம் இலங்கை ரூபா (ரூபா50,000) உதவப்பட்டது.

9. காரைநகரில் கல்வி, வளர்ச்சிக்காக மூவாயிரம் கனடிய பொலர்கள் ($3000) மூன்று லட்சத்து இருபத்தோராயிரம் இலங்கை (ரூபா 3 21,000) காரை அபிவிருத்திச் சபையினூடாக அன்பளிப்புச் செய்யப்பட்டது. இந்நிதி பின்வரும் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

1.  எமது மன்ற அனுசரணையுடன் காரை அபிவிருத்தி சபையினால் 'கல்வி அழகே அழகு' என்னும் தொனிப் பொருளில் நடத்தப்படும் 'கல்வி தினத்திற்கு' ஒரு லட்சம் இலங்கை ரூபா (ரூபா 1 00 000) ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தினத்தில் பின்வரும் பரிசுகள் வழங்கப்படும்.

• காரைநகரில் கல்வி பயிலும் தரம் ஐந்து முதல் க.பொ.த உ-த வரை அரச பொதுப்பரீட்சைகளில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கும், பல்கலைக் கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்கும் பணப்பரிசு வழங்கி ஊக்குவித்தல்

• காரைநகரில் கல்வி பயின்று ஆங்கிலத்தில் திறமைச்சித்தி பெற்ற மாணவர்களுக்கு பாரட்டுப் பரிசு வழங்குதல்

• கலாநிதி ஆ.தியாகராஜா ம.ம.வித்தியாலயத்தில் கல்விபயின்று பொறியியல் பீடத்திற்குத்தெரிவுசெய்யப்பட்ட செல்வன் பேரம்பலம் புஸ்பராசாவின் கல்விச்செலவுக்கு  ஐம்பதினாயிரம் இலங்கை ரூபா (ரூபா 50, 000) ஊக்குவிப்புப் பணப்பரிசு வழங்குதல்.

காரைநகரைச் சேர்ந்த, யாழ் மாவட்டப் பாடசாலையில் கல்வி கற்று பல்கலைக் கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு பரிசு வழங்குதல்.

• காரைநகரைச் சேர்ந்த மூத்த அதிபர்கள், கல்வியாளர்களைப் பாராட்டிக் கௌரவித்தல்

2. காரைநகரில் சிறப்பாக இயங்கிவரும் ஒரே ஒரு நுண்கலைக் கல்வி நிலையமான கிழவன்காடு கலா மன்ற ஆசிரியர்களுக்கு வேதனம் வழங்குவதற்கு ஐம்பதினாயிரம் இலங்கை ரூபா (ரூபா 50, 000) ஒதுக்கப்பட்டுள்ளது.

3. காரைநகரில் கல்வி பயிலும் க.பொ.த சா.த, மற்றும் க.பொ.த உ.த வகுப்பு மாணவர்களுக்கான மேலதிக ஆங்கிலக் வகுப்புகளை நடத்துவதற்கு ஒரு லட்சத்து இருபதினாயிரம் இலங்கை ரூபா (ரூபா 1 20, 000) ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்பு : அரச பொதுப்பரீட்சைக்கான வினா விடை நூல்களைப் பாடசாலைகளுக்கு வழங்குதல், ஆரம்பப் பாடசாலை ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல் ஆகிய கோரிக்கைகள் பின்வரும் காரணங்களுக்காக காரை அபிவிருத்தி சபையினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அ) கல்வித் திணைக்களத்தினால் பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 'தர உள்ளீடு' (Quality Input) என்னும் நிதியிலுருந்து தேவையான நூல்கள் கொள்வனவு செய்யபடுவதாக காரை அபிவிருத்தி சபை நிர்வாகத்தினால் தெரிவிக்கப்பட்டது.

ஆ) அண்மையில் கல்வித்திணைக்களத்தினால் புதிய ஆசிரிய நியமனங்கள் போதியளவு வழங்கப் பட்டுள்ளதாகவும், அத்துடன் தொண்டர் ஆசிரிய நியமனங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் காரை அபிவிருத்தி சபையினால் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக மேலதிக நிதி மேற்கூறப்பட்ட இறுதி இரு புதிய திட்டங்களுக்குப் பயன் படுத்தப்படுகிறது.

10. 18 வது ஆண்டாக றிச்மன்ட் ஹில் இந்து ஆலயத்தில் "திருவாதிரைத் திருவிழா"      சிறப்பாக நடத்தப்பட்டது.

2008
1. கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இந்து கலாசார அமைச்சருமான அமரர். தியாகராஜா மகேஸ்வரன் அவர்களுக்கான இரங்கற் கூட்டத்தினை எமது மன்றமும், ஆதி அருள் நெறி மன்றமும் இணைந்து நடத்தியிருந்தது.

2. காரைநகரில் கல்விசார் செயற்பாடுகளுக்கான தொடர்ச்சியான உதவிகளை வழங்குவதற்காக "காரை-கல்வி நம்பிக்கை நிதியம"; என்ற நிதியம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் முதற்பகுதியாக, காரைநகரில் தரம் 6 முதல் க.பொ.த சா-த வரை கல்வி பயிலும் வசதி குறைந்த, திறமையான  40 மாணவர்களுக்கு உதவுவதற்க குழந்தைகள் வைத்திய நிபுணர் டாக்டர்.வி.விஜயரத்தினம் அவர்களின் தாயார் நினைவாக "அமரர்.திருமதி.ஞானசுந்தரம் விசுவலிங்கம் ஞாபகார்த்த புலமைப்பரிசில்" என்ற புலமைப்பரிசில் வழங்குவதற்கு இரண்டு லட்சத்து நாற்பத்தையாயிரம் இலங்கை ரூபா (ரூபா 2 45 000) காரை அபிவிருத்தி சபையினூடாக அன்பளிப்புச் செய்யப்பட்டது.

3. அமரர்.தி.மகேஸ்வரனின் 45 ம் நாள் நினைவு தினத்தையொட்டி மாபெரும் நினைவு வணக்க நிகழ்வினை எமது மன்றமும் கனடியத்தமிழர் பேரவையும் இணைந்து நடத்தியிருந்தது.

4. காரைநகர் அபிவிருத்திச் சபை செயலாளர். சேவையின் சிகரம். அமரர் ஜெயசிங்கம் தில்லையம்பலவாணர் அவர்களுக்கான இரங்கற் கூட்டம் எமது மன்றத்தினால் நடத்தப்பட்டது. இந்நிகழ்வின் போது அன்னாரின் இறுதிக்கிரிகைகளுக்கான செலவுகளுக்காகச் ஆயிரம் டொலர்கள் ($1000)  இலங்கை ரூபா 1 09 500 சேகரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

5. கனடியத் தமிழர் வர்த்தக சம்மேளனத்தினால் ஆண்டு தோறும் நடத்தப்படும் ரொரன்ரோ வைத்தியசாலைகளுக்கு உதவும் நிதியுதவி நடை பவனியில் வழமை போல எமது மன்றம் பங்குபற்றியதுடன் மன்றத் தொண்டர்களால் சேகரிக்கப்பட்ட ஐநூற்றி இருபத்திஐந்து டொலர்கள் ($525) அன்பளிப்புச் செய்யப்பட்டது.

ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்

 

காரை வசந்தம்-2008

காரை வசந்தம்-2008

காரை வசந்தம்-2007

காரை வசந்தம்-2007

காரை வசந்தம்-2006

காரை வசந்தம்-2006

காரை வசந்தம்-2005

காரை வசந்தம்-2005

காரை வசந்தம்-2004

காரை வசந்தம்-2004

காரை வசந்தம்-2003