Tag: கோவளம் விளையாட்டுக்கழகம்

காரைநகர் கோவளம் விளையாட்டுக்கழகத்தின் இவ் ஆண்டுக்கான 5வது சமூக சேவை வேலைத்திட்டம்!

காரைநகர் கோவளம் விளையாட்டுக்கழகத்தின் இவ் ஆண்டுக்கான 5வது சமூக சேவை வேலைத்திட்டம்!

நமது மண்ணின் மீதும் நமது மக்களின் மீதும் பற்றுக்கொண்டு எம்மால் மேற்கொள்ளபட்டுவரும் சமூக சேவை வேலைத்திட்டங்களின் அடிப்படையில் 5வது வேலைத்திட்டமாக ''நமது மண்ணை நாம் நேசிப்போம் நமது மண்ணை அழகாக்குவோம்'' எனும் தொனிப்பொருளில் நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் நமது ஆதார வைத்தியசாலையின் முற்புற மதில் நீண்டகாலமாக பாசிகள் பிடித்து காணப்பட்டது.

 அருகில் பாடசாலைகள் கோவில்கள் அழகாக இருந்தும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் வைத்தியசாலையினை அழகாக வைத்திருக்கும் பொருட்டு நமது கழக அங்கத்தவர் திரு.சுகந்தன் அவர்களின் பூரண நிதி அனுசரணையில் நமது கழக இளைஞர்கள் அனைவரும் இரவு பகல் பாராது பத்து நாட்களுக்கும் மேல் தொடர்ச்சிகாக சேவைபுரிந்து இவ்வாறு அழகுற வர்ணம்பூசபட்டுள்ளது. இன்னும் பல சமூகத்திற்கு பயன்மிக்க சேவைகள் எம்மால் மேற்கொள்ளபட உள்ளது அதற்கு அனைவரது ஒத்துழைப்புக்களை வேண்டி நிற்கின்றோம்.

''வாழப்போவது சிறிது காலம் அதற்குள் யாருக்காவது பிரஜோசனமாக இருப்போம்''

a1 a2 a3 a4 a5 a6 a7 a8 e1 e2 e3 e4 e5 e6 e7 e8 e9 e10 e11 e12 e13 e14 e15 e16 e17 e18 e19 e20 e21 e22 e23 e24 e25 e26 s1 s2 s3 sent sent2 sent3

காரைநகர் கோவளம் விளையாட்டுக்கழகத்தின் இவ் ஆண்டுக்கான மூன்றாவது சமூக சேவை வேலைத்திட்டம்!

காரைநகர் கோவளம் விளையாட்டுக்கழகத்தின் இவ் ஆண்டுக்கான மூன்றாவது சமூக சேவை வேலைத்திட்டம்!


காரைநகர் கோவளம் விளையாட்டுக்கழகத்தின் இவ் ஆண்டுக்கான மூன்றாவது சமூக சேவை வேலைத்திட்டமாக நமது காரைநகர் மண்ணிற்கு என்று தனித்துவமான இயற்கை விவசாய பாரம்பரியங்கள் உள்ளன அவை நவீன மயப்படுத்தலின் மூலம் அழிவடைந்து செல்வதை அனைவராலும் உணர முடிகிறது. அப் பாரம்பரியங்களை பாதுகாத்து நமது மண்ணின் தனித்துவத்தினை நிலை நிறுத்துவதற்காக  இயற்கை விவசாயத்தினை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் காரைநகர் கமநலசேவைகள் நிலையத்தில்  காரைநகர் விவசாய பெருங்குடி மக்களுக்கான விசேட கருத்தரங்கம்  24.06.2017 சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் இயற்கை விவசாயம் சார்பான உரைகளை முன்னாள் கிளிநொச்சி மாவட்ட கமநல ஆணையாளரும் தற்போதய காரைநகரில் பிரதேச செயலருமாக திரு.ஈ.தயாரூபன் அவர்களும் காரைநகர் பிரதேச விவசாய போதனாசிரியர் அவர்களும் வழங்கியிருந்தனர். இந் நிகழ்வில் காரைநகரின் விவசாய சம்மேளனங்கள் சார்பாக பலரும் கலந்துகொண்டு இயற்கை முறையிலான விவசாய முறைகளை கேட்டு அறிந்து  பயன்பெற்றனர். 

a3 a4 a6 a8 a9 a10 a11 a12 a13 a15 a16 a17 a18 a19 a20 a21 a22 a23 a24 a25 a26 a29 a30 a31 a33 a34 a35 a36 a37 a38 a39 a40 a42 s1 s2

கோவளம் விளையாட்டுக்கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு 28.02.2016 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

KOVALAM SPORTS CLUB LOGO

பிரித்தானியா காரை நலன்புரி சங்க முன்னாள் தலைவரும் இந்நாள் போசகருமான திரு.தவராசா(குமார்) அவர்களால் தனது சொந்த நிதிமூலம் வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு 28.02.2016 (ஞாயிற்றுக்கிழமை) கோவளம்  கிராம  அபிவிருத்திச்சபை  மண்டபத்தில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை தலைவர் திரு பூ.விவேகானந்தா அவர்களும் கலாநிதி .கெனடி அவர்களும்  கலந்து கொண்டதுடன் தங்கோடை கிராம அபிவிருத்திச்சங்கத்தினாலும் பூ.விவேகானந்தா அவர்களாளும் தலா ஐயாயிரம் ரூபா கோவளம் விளையாட்டுக்கழகத்திற்கு வழங்கப்பட்டது.

imageimage_1image_2image_3image_4image_5image_6image_7

image_8

 

கோவளம் விளையாட்டுக்கழக புதிய கட்டட திறப்பு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் 13.02.2016 சனிக்கிழமை இன்று நடைபெற்றது

KOVALAM SPORTS CLUB LOGO

இன்றைய திறப்பு விழாவிற்கு பிரதம விருந்தினராக தெய்வீக திருப்பணி அரசு தர்மசொரூபி திரு.சு.கதிர்காமநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினராக தமிழருவி.த.சிவகுமாரன் அவர்களும் கௌரவ விருந்தினராக திரு.க.பாலச்சந்திரன்,திரு.க.சிவபாலன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர் சிறப்பாக இடம்பெற்ற இந்நிகழ்வில் திரு.சு.கதிர்காமநாதன் அவர்கட்கு தர்மசொரூபி எனும் பட்டம் எமது கழகத்தால் வழங்கப்பட்டது.

01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16 17 18 19 20 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42

கோவளம் விளையாட்டுக்கழக புதிய கட்டட திறப்பு விழா

KSC0

KSC1KSC2 KSC3

கோவளம் விளையாட்டுக் கழக தீபாவளி தின பாிசளிப்பு விழா வெகு கோலாகலமாக நடந்தேறியது.

காரைநகா் கோவளம் விளையாட்டுக் கழகத்தால் நடாத்தப்பட்ட காரை விளையாட்டுக்கழகங்களுக்கு இடையிலான மென்பந்து கிாிக்கட் சுற்றுப்போட்டிகளிற்கான பாிசளிப்பு விழா இன்று 10.11.2015 நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக முன்னாள் பிரதேசசபை உறுப்பினரும்,காரைஅபிவிருத்திச்சபை பொருளாளரும், திரு.சுப்ரமணியம் கதிா்காமநாதனின் இணைப்பாளருமான திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரன் கலந்து சிறப்பித்தாா். சிறப்பு விருந்தினராக  தீவகவலய ஆசிாிய ஆலோசகா்  திரு.இளங்கோவன் கலந்துகொண்டாா். பாா்வையாளா்களுக்கான சினேகபூா்வ துடுப்பாட்டமும் கோவளம் விளையாட்டுக் கழகத்திற்கும் .காரை சலஞ்சஸ் அணிக்கும் இடையில்  நடைபெற்றது

இப்போட்டிக்கான கேடயத்தை காரை சலஞ்சஸ் தட்டிச்சென்றது. கோவளம் விளையாட்டுக் கழகத்திற்கு திரு.சுப்ரமணியம் கதிா்காமநாதனால் வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்களும் உடைகளும் இன்றைய நிகழ்வில் அவரது இணைப்பாளரால் கையளிக்கப்பட்டது.

அத்துடன் மின் இணைப்பு,மைதான புனரமைப்பு, மற்றும் பௌதீக வள வேலைகள் திரு.கதிா்காமநாதனின் நிதியுதவியுடன் இணைப்பாளா் திரு.பாலச்சந்திரன் ஊடாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

DSC_0520 DSC_0522 DSC_0524 DSC_0526 DSC_0532 DSC_0536 DSC_0545 DSC_0551 DSC_0553 DSC_0554 DSC_0560 DSC_0568 DSC_0571 DSC_0575 DSC_0580 DSC_0581 DSC_0600 DSC_0608 DSC_0612 DSC_0615 DSC_0616 DSC_0630 DSC_0636 DSC_0644 DSC_0655 DSC_0656 DSC_0672 DSC_0673 DSC_0674 DSC_0675 DSC_0679 DSC_0680 DSC_0682 DSC_0684 DSC_0686 DSC_0688 DSC_0692 DSC_0693 DSC_0714 DSC_0716 DSC_0719 DSC_0726

கோவளம் விளையாட்டுக் கழகத்தின் மெலிஞ்சோடை மைதானம் புனரமைப்பு, கோவளம் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு புதிதாக மின் இணைப்பு வேலைகள் !!!

பரோபகாாி,தா்மக்கொடை வள்ளல்,தெய்வீகத் திருப்பணி அரசு திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதன் (சுவிஸ் நாதன்) அவா்களின் வாக்குறுதிக்கமைய முதற்கட்டமாக கோவளம் விளையாட்டுக் கழகத்தின் மெலிஞ்சோடை மைதானம் புனரமைக்கப்படுவதனையும் , கோவளம் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு புதிதாக மின் இணைப்பு வேலைகள் இடம்பெறுவதனையும் அதனை அவரது இணைப்பாளா் கணேசபிள்ளை பாலச்சந்திரன் பாா்வையிடுவதனையும் அவருடன் கழக இளைஞா்கள் நிற்பதையும் படங்களில் காணலாம். 

SKT1SKT2 SKT3 SKT4 SKT5 SKT6 SKT7 SKT8 SKT9 SKT10

கோவளம் விளையாட்டுக்கழகம் பல இலட்சம் ரூபாய் செலவில் புனர்நிர்மானம்

கோவளம் விளையாட்டுக்கழகம் ஆனது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கோவளத்தை சேர்ந்த திரு.சு.கதிர்காமநாதன் (சுவிஸ் நாதன்) அவர்களின் பல இலட்சம் ரூபாய் செலவில் புனர்நிர்மானம் செய்யப்பட உள்ளது. அந்த வகையில் கட்டட புனர்நிர்மானம்,மின்சாரம, மைதானத்தை சுற்றி பார்வையாளர் இருக்கைகள்,உள்ளக வெளியக விளையாட்டு உபகரணங்கள், முதலானவை முதற்கட்டமாக அமைக்கப்பட உள்ளன மற்றும் அதன் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் மேலும் அடுத்த வருடம் இரண்டாம் கட்டமாக மைதானத்தின் கிழக்கு பக்கத்தில் காரைநகரின் முதலாவது பாரிய பார்வையாளர் அரங்கமும் அமைக்கப்பட உள்ளதாக கோவளம் விளையாட்டுக்கழகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

K0K3 K4K1 K2

கோவளம் விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த தீபாவளி மென்பந்து சுற்றுத்தொடர் 2015

B

கோவளம் விளையாட்டுக்கழகத்தால் ஒவ்வொரு வருடமும் தீபாவளியை முன்னிட்டு மென்பந்து சுற்றுத்தொடர் நடாத்தப்பட்டு வருகின்றது.இத்தொடரானது பல வருடங்களாக கழக உறுப்பினர்களின் முயற்சியால் தொடர்ந்தும் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது.

இதற்கான பண உதவியினை காரைநகர் வர்த்தகர்கள் சிலரிடமும் முன்னால் கழக உறுப்பினர்கள் மூலமும் சேகரித்து பெற்றுக்கொள்கின்றனர் அந்த வகையில் தீபாவளியை முன்னிட்டு 2010 ம் ஆண்டு மரதன் ஓட்டம்,சைக்கிளோட்டம்,கரப்பந்தாட்டம் போன்ற நிகழ்வுகளை கழகம் நடாத்திய போதிலும் பின்னர் போதிய வசதி இன்மையால் அவை கைவிடப்பட்டு துடுப்பாட்ட போட்டியைமட்டும் தொடர்ந்து நடத்திவருகின்றது கோவளம் விளையாட்டுக்கழகம்.

கடந்த கால வெற்றியாளர்களான  2008ம் ஆண்டு சிவகௌரி விளையாட்டுக்கழகமும், 2009,2010,2013 ஒளிச்சுடர் விளையாட்டுக்கழகமும் ,2011 கோவளம் விளையாட்டுகழகமும், 2014ம் ஆண்டு நல்லநண்பர்கள் விளையாட்டுக்கழகமும், 2015ம் ஆண்டு இளஞ்சோலை விளையாட்டுக்கழகமும் திகழ்கின்றன. 2012ம் ஆண்டு சில காரணங்களிற்காக போட்டிகள் இடம்பெற வில்லை 2008 இற்கு முன்னைய பதிவுகள் சரியாக இல்லை.

  2015ம் ஆண்டிற்கான போட்டிகள் யாவும் 24-09-2015, 26-09-2015, 27-09-2015 ஆகிய தினங்களில் அணிக்கு 11 பேர் கொண்ட 10 பந்துப்பரிமாற்றங்களைக்கொண்டதாகவும் 3 பந்து பரிமாற்றங்கள் power-play  ஆனதாகவும் இடம்பெற்றது. 2015ம்  ஆண்டிற்கான சுற்றுப்போட்டியில் கோவளம் A, கோவளம் B, கலாநிதி, ஒளிச்சுடர், இளஞ்சோலை, காரைசலரஞ்சஸ், நல்லநண்பர்கள், பிறட்மன் பலே ஆகிய 8அணிகள் பங்குபற்றின இவை இரண்டு குழுக்களாக பிரித்து குழு A யில் கோவளம் A,கலாநிதி,காரைசலர்ஞ்சஸ்,பிறட்மன்பலே ஆகிய அணிகளும் குழு B யில் கோவளம் B,ஒளிச்சுடர்,நல்லநண்பர்கள், இளஞ்சோலை ஆகிய அணிகளும் இடம்பெற்றது. இவற்றில் புள்ளிகள் அடிப்படையில்  கோவளம் A,கலாநிதி,ஒளிச்சுடர்,இளஞ்சோலை ஆகிய அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன. இவற்றில் கலாநிதி,இளஞ்சோலை ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தெரிவாகி இளஞ்சோலை அணி வெற்றியை பெற்றுக்கொண்டதுடன் கோவளம் அணி மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டது.

இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக இளஞ்சோலை விளையாட்டுக்கழகத்தின் பிரசாந்தனும் போட்டி தொடரின் ஆட்டநாயகனாக இளஞ்சோலை விளையாட்டுக்கழகத்தின் நிமலதாஸ் உம் போட்டித்தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக கலாநிதி அணியின் சங்கரும் போட்டித்தொடரின் சிறந்த பந்து வீச்சாளராக இளஞ்சோலை அணியின் நிமலதாஸ் உம் தெரிவானார்கள்.

ABAB

 

 

முதலாவது இடத்தை பெற்றுக்கொண்ட இளஞ்சோலை விளையாட்டுக்கழகம்

imageimage_1image_2

 

 

2ம் இடத்தை பெற்றுக்கொண்ட கலாநிதி விளையாட்டுக்கழகம்

imageimage_1

 

 

3ம் இடத்தை பெற்றுக்கொண்ட கோவளம் அணி,இறுதிப்போட்டிக்கு விருந்தினராக்கலந்து கொண்ட தீவக வலயகல்வி ஆலோசகர் இளங்கோவன் ஆசிரியருடன்.

imageimage_1image_2image_3

 

 

 

12 3 4 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50

123