காரைநகர் கோவளம் விளையாட்டுக்கழகத்தின் இவ் ஆண்டுக்கான மூன்றாவது சமூக சேவை வேலைத்திட்டம்!

காரைநகர் கோவளம் விளையாட்டுக்கழகத்தின் இவ் ஆண்டுக்கான மூன்றாவது சமூக சேவை வேலைத்திட்டம்!


காரைநகர் கோவளம் விளையாட்டுக்கழகத்தின் இவ் ஆண்டுக்கான மூன்றாவது சமூக சேவை வேலைத்திட்டமாக நமது காரைநகர் மண்ணிற்கு என்று தனித்துவமான இயற்கை விவசாய பாரம்பரியங்கள் உள்ளன அவை நவீன மயப்படுத்தலின் மூலம் அழிவடைந்து செல்வதை அனைவராலும் உணர முடிகிறது. அப் பாரம்பரியங்களை பாதுகாத்து நமது மண்ணின் தனித்துவத்தினை நிலை நிறுத்துவதற்காக  இயற்கை விவசாயத்தினை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் காரைநகர் கமநலசேவைகள் நிலையத்தில்  காரைநகர் விவசாய பெருங்குடி மக்களுக்கான விசேட கருத்தரங்கம்  24.06.2017 சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் இயற்கை விவசாயம் சார்பான உரைகளை முன்னாள் கிளிநொச்சி மாவட்ட கமநல ஆணையாளரும் தற்போதய காரைநகரில் பிரதேச செயலருமாக திரு.ஈ.தயாரூபன் அவர்களும் காரைநகர் பிரதேச விவசாய போதனாசிரியர் அவர்களும் வழங்கியிருந்தனர். இந் நிகழ்வில் காரைநகரின் விவசாய சம்மேளனங்கள் சார்பாக பலரும் கலந்துகொண்டு இயற்கை முறையிலான விவசாய முறைகளை கேட்டு அறிந்து  பயன்பெற்றனர். 

a3 a4 a6 a8 a9 a10 a11 a12 a13 a15 a16 a17 a18 a19 a20 a21 a22 a23 a24 a25 a26 a29 a30 a31 a33 a34 a35 a36 a37 a38 a39 a40 a42 s1 s2