Tag: கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம்

கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வி க.பொ.த (சா-த) பரீட்சையில் முதன்மைப் பெறுபேறு 8A, S

 KARAI HINDU LOGO

கடந்த டிசம்பர் மாதம் 2014 இல் நடைபெற்ற க.பொ.த.(சாதாரணம்)பரீட்சைப் பெறுபேறுகள் அண்மையில் வெளிவந்துள்ளன. 

மேற்படி பரீட்சைப் பெறுபேறுகளில் மிகச்சிறந்த 8A, S என்ற பெறுபேற்றினை பெற்ற மாணவன் செல்வன்.தி. பார்த்தீபன் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் முதல்நிலை மாணவன் என்ற பெருமை கொண்டு விளங்குகிறார். 

சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியெய்திய முதல் ஆறு மாணவர்களின் பெயர் விபரமும் அவர்கள்; பெற்றுக்கொண்ட தர விபரமும் கீழ்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. 


   சிறப்புப் பெறுபேறு பெற்ற மாணவர் விபரம்

 

         மாணவர் பெயர்

      பெறுபேறு

 1

  தி.பார்த்தீபன் 

   8A,S

 2

  சி.விதுசா     

   6A,2B,S

 3

  க.அபிராமி

  5A,B,C,S

 4

  சி.விசாலினி

  4A,4B,S

 5

  இ. பவானந்தன்

  4A,2B,C,S

 6

  யோ.டர்மிதா

  4A,B,4C

அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவச் செல்வங்களும் அவர்களைக் கற்பித்த ஆசிரியமணிகளும் ஆதாராமாக இருந்து வழிநடத்திவரும் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

 

கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்கம் – கனடா 3வது ஆண்டுப் பொதுக் கூட்டம்

KARAI HINDU LOGO

இடம்: Scarborough Civic Centre, 150,Borough Dr. Committee Room # 2
காலமும் நேரமும்: 2015 ஏப்பிரல் 25ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணி
தலைமை: சங்கத்தின் தலைவர் திரு. முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்கள்

நிகழ்ச்சி நிரல்

1. கடவுள் வணக்கம், அக வணக்கம்
2. பாடசாலைப் பண் இசைத்தல்
3. தலைவர் முன்னுரை
4. சென்ற ஆண்டுப் பொதுக் கூட்ட அறிக்கை சமர்ப்பித்தல் – செயலாளர்
5. செயற்பாட்டு அறிக்கை சமர்ப்பித்தல் – செயலாளர்
6. வரவு – செலவு அறிக்கை சமர்ப்பித்தல் (ஜனவரி2014 – டிசம்பர்2014) – பொருளாளர்
7. புதிய நிர்வாகசபை தெரிவு: தலைவர், உப தலைவர், செயலாளர், உதவிச் செயலாளர், பொருளாளர், உதவிப் பொருளாளர் ஆகிய உத்தியோகத்தர்களும் ஜந்து நிர்வாக சபை உறுப்பினர்களும் விண்ணப்பித்தோர்
மத்தியிலிருந்தும் விண்ணப்பம் கிடைக்கப்பெறாத பதவிகளிற்கு சமூகமளித்துள்ள உறுப்பினர்கள் மத்தியிலிருந்தும் தெரிவு செய்யப்படுவர். நிர்வாக சபை தெரிவு முறை தொடர்பான விபரத்தினை karaihinducanada.com  இணையத்தளத்திற்கு சென்று பார்வையிடமுடியும்.

8. புதிய தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டு உரையாற்றுதல்
9. அங்கத்தவர் பிரேரணைகள்: 
அ. யாப்புக்கான திருத்தப் பிரேரணைகள்
ஆ. வேறு பிரேரணைகள்
15-04-2015ஆம் திகதிக்கு முன்பாக செயலாளருக்கு எழுத்து மூலமாக அனுப்பிவைக்கப்படும் பிரேரணைகள் மட்டுமே கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்
10. சங்கத்தின் நிதிவளத்தை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்தல்.
11. வேறு விடயங்கள்
12. அங்கத்தவர்கள் கருத்துரைகள்
13. .நன்றியுரையும் கூட்டத்தின் நிறைவும்.

தபால் முகவரி: 3875,Sheppard Avenue Apt # 411 Scarborough ON. M1T 3L6
மின்னஞ்சல் முகவரி: karaihinducanada@gmail.com
தொலைபேசி இல. 647-766-2522

அனைத்து அங்கத்தவர்களும் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டுகின்றோம்.

மு. வேலாயுதபிள்ளை              கனக. சிவகுமாரன்                        ந. பிரகலாதீஸ்வரன்
        தலைவர்                                     செயலாளர்                                        பொருளாளர்

 

கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்கம் – கனடா நிர்வாக சபைத் தேர்தல் – 2015

KARAI HINDU LOGO

போட்டியிட விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

மேற்குறித்த தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும்பொருட்டு தேர்தல் அலவலராக எமது சங்கத்தின் போசகர் சிவநெறிச் செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் நிர்வாகத்தினால் நியமனம் செய்யப்பட்டுள்ளதுடன் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்வது முதல் தேர்தலை நடாத்தி தெரிவுகளை பிரகடனப்படுத்துவது வரைக்குமான பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

25-04-2015ஆம் திகதி நடைபெறவுள்ள ஆண்டுப் பொதுக் கூட்டத்தின் 7வது நிகழ்வாக நிர்வாக சபை தேர்தல் இடம்பெறும்

தலைவர், உப தலைவர், செயலாளர், உதவி செயலாளர், பொருளாளர், உதவி பொருளாளர், மற்றும்; ஐந்து நிர்வாக உறுப்பினர்கள் ஆகிய பதவிகளிற்கு போட்டியிட விரும்பும் அங்கத்தவர்கள் மாதிரி விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து 15-04-2015ஆம் திகதிக்கு முன்னதாக தபாலில் அல்லது மின்னஞ்சல் மூலம் தேர்தல் அலுவலருக்கு அனுப்பிவைக்கலாம். நேரிலும் கையளிக்கமுடியும்.

ஒருவர் ஏதாவது இரு பதவிகளிற்கு விண்ணப்பிக்க முடியும் ஆயினும் இவ்விண்ணப்பங்கள் தனித்தனியாக அனுப்பப்படல்வேண்டும். விண்ணப்பங்கள் அனைத்தும் இரு அங்கத்தவர்களினால் முறையே பிரேரித்து வழிமொழியப்பட்டிருக்க

வேண்டும்  விண்ணப்பங்கள் கிடைத்தமை குறித்து தேர்தல் அலுவலரால் தொலைபேசி வாயிலாக விண்ணப்பதாரிகளிற்கு உறுதிப்படுத்தப்படும்.

விண்ணப்பதாரியும் பிரேரிப்பவரும் வழிமொழிபவரும் விண்ணப்பிப்பதற்கு முன்னதாக சங்க அங்கத்துவத்தை பெற்றவர்களாக இருக்கவேண்டும்.

விண்ணப்பங்கள் அனைத்தும் தேர்தல் அலுவலரும், நிர்வாக சபை உறுப்பினர்களும் கலந்துகொள்ளும் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்ட பின்னர் karaihinducanada.com  இணையத்தளம் ஊடாக அங்கத்தவர்களின் பார்வைக்கு வெளியிடப்படும்.

ஒரு பதவிக்கு ஒன்றிற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறின் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் nதிரிவு இடம்பெறும். விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறாத பதவிகளிற்கான வெற்றிடம் சமூகமளித்திருக்கும்

அங்கத்தவர்கள் மத்தியிலிருந்து நிரப்பப்படும். தேர்தல் ஆரம்பிப்பதற்கு முன்னதாக விண்ணப்பதாரர் விரும்பின் தமது விண்ணப்பத்தினை மீளப்பெற்றுக்கொள்ளமுடியும்.

தபால் முகவரி: Mr. T. Visuvalingam, 1008-50 Elm Drive, Mississauga, ON. L5A 3X2.

மின்னஞ்சல் முகவரி: tvisuvalingam@yahoo.com  தொலைபேசி இல.: 905-566-4822

விண்ணப்பப் படிவத்தை இங்கே அழுத்தித் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 

Application Form

கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய விளையாட்டு மைதான விரிவாக்கலுக்காக மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதி காணி சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.முன்னாள் போசகர் திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்களின் நீண்ட நாள் முயற்சி கைகூடியுள்ளது

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதான விரிவாக்கலுக்காக காரைநகர் பொது மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதியான 4.5 பேர்ச் அளவு காணியை அலுவலக முறையில் பெற்றுக் கொள்ளும் நிகழ்வு காரைநகர் பொது மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை (14.03.2015) அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.ரவீந்திரன,; வடமாகாண சுகாதார அமைச்சின் பிரதிப்பணிப்பாளர் திரு.ஏ.கேதீஸ்வரன், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் திரு.இ.தேவநேசன், காரைநகர் பொது மருத்துவமனை மருத்துவ அதிகாரி மருத்துவகலாநிதி.கே.இந்திரமோகன், கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன், ஒய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளரும், பழைய மாணவர்கள் சங்கத்தின் முன்னாள் போசகருமான திரு.எஸ்.கே.சதாசிவம், மருத்துவமனைப் பணியாளர்கள்,  நோயாளர் நலன் புரிச்சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள்; ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.ரவீந்திரன் அவர்கள் மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதியான 4.5 பேர்ச் அளவு காணியை பாடசாலையின் மைதான விரிவாக்கத்திற்காக பயன்படுத்த அலுவலக முறையில் அனுமதி அளித்தார்.

அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தனது உரையில் மாகாண சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள இக்காணியானது பாடசாலை வளர்ச்சியின் ஒரு பகுதியான விளையாட்டு மைதான விரிவாக்கலுக்கு பேருதவியாகும் எனத் தெரிவித்தார்.

மகளிர் விவகார பிரதி அமைச்சரும் எமது பாடசாலையின் பழைய மாணவியுமாகிய திருமதி.விஐயகலா மகேஸ்வரன் அவர்கள்  இக் காணியை கல்லூரிக்கு வழங்குமாறு வடமாகாண ஆளுநர் அலுவலகத்திடம் வேண்டுகோள் விடுத்தமைக்கு அமைவாக இன்று இக்காணி எமது பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் அதிபர் மேலும் தெரிவித்தார். 

அதிபர் தனது உரையில் பிரதி அமைச்சர் திருமதி.விஜயகலா மகேஸ்வரன் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தினர், வட மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகள் எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து இக் காணியை பெற்றுக் கொள்வதற்கு தன்னாலான பெருமுயற்சி எடுத்த பழைய மாணவர் சங்க முன்னாள் போசகர் திரு.எஸ்.கே.சதாசிவம்; அவர்களிற்கும் கல்லூரி சமுகம்  சார்பாக தமது நன்றியைத் தெரிவித்தார். 

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றைக் கீழே காணலாம். 

முழுமையான படத்தொகுப்பினைக் கீழே காணலாம். 

A ho7P A ho10P OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA

 

 

கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் தீவக வலயப் பெருவிளையாட்டு போட்டிகளில் ஏழு முதலிடங்களைப் பெற்று முன்னணியில்

KARAI HINDU LOGO

தீவக வலயப் பாடசாலைகளின் அணிகளுக்கிடையே நடத்தப்பட்ட பெருவிளையாட்டுப் பொட்டிகளில் கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் ஏழு முதலிடங்களைப் பெற்று முன்னணியில் திகழ்கின்றது. 

மேற்படி பாடசாலையின் 15 வயது, 17 வயது, 19 வயது ஆண்கள், பெண்களின் அணிகள் சதுரங்கம், கரம், பட்மின்ரன், கரப்பந்து, உதைபந்து ஆகிய போட்டிகளில் வலயப் பாடசாலைகளின் அணிகளுடன் விளையாடியிருந்தது. 

இப்போட்டிகளில் சதுரங்கப் போட்டிகளில் 3 முதலிடங்களையும், பட்மின்ரன் ஆட்டங்களில் 2 முதலிடங்களையும், கரம், கரப்பந்து ஆகியவற்றில் தலா 1 முதலிடத்தையும் கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய அணிகள் பெற்றுள்ளன. 

போட்டி முடிவுகளின் முழுமையான விபரத்தை இங்கே காணலாம். 

Zonal sports resultsஇப்போட்டிகளில் பங்குபற்றிய மற்றும் வெற்றிபெற்ற அணி வீரர்களும், வீராங்கனைகளும் பயிற்றுவித்த விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் திரு. திரு.அன்ரன் விமலதாஸ் அவர்களும்  அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களும் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்குரியவர்கள்.

 

நகரப்பாடசாலைகளுக்கு இணையான சாதனைகளை நிலைநாட்டி வரும் கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம்

KARAI HINDU LOGO

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் பாடவிதான செயற்பாடுகளிலும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் தீவக வலயத்தில் முதன்மைப் பாடசாலை என்கின்ற பெயரை தொடர்ந்து நிலைநாட்டி வருகின்றமை யாவரும் அறிந்ததே.

இந்நிலையில் கடந்த ஆண்டு (2014) மேற்படி பாடசாலையின் இணைப்பாடவிதான சாதனைகளை நோக்கும்போது, இப்பாடசாலையின் மாணவர்கள் மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்டப் போட்டிகளில் பங்கு பற்றி நகரப் பாடசாலைகளுக்கு இணையான வெற்றிகளை ஈட்டி தமது கல்லாரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். 

School_Table

2013 ஆம் ஆணடில் நடைபெற்ற தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் செல்வி சி.விதுசா பங்குபற்றியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

மேற்படி போட்டிகளில் பங்குபற்றிய மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களும், இம்மாணவர்களை Yarl Geek  போட்டிகளுக்காகப் பயிற்றுவித்த ஆசிரியைகளான திருமதி.சிவாஜினி லக்ஸ்மன், திருமதி. பத்மினி சசிதரன் ஆகியோரும் இசைப்போட்டிகளுக்காகப் பயிற்றுவித்த ஆசிரியர்களான திருமதி கலாசக்தி றொபேசன், திருமதி. பங்கயச்செல்வி முகுந்தன் ஆகியோரும் ஓவியப் போட்டிக்காகப் பயிற்றுவித்த ஆசிரியர் திரு.இ.ஜீவராஜ் அவர்களும் இவற்றுக்கு ஆதாரமாக இருந்து வழிநடத்தி வரும் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களும் பாராட்டுகளுக்குரியவர்கள்.