Tag: காரைச் செய்திகள்

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி ஆலயத்தில் 01.07.2019 திங்கள்கிழமை இடம்பெற்ற தேர்த் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி ஆலயத்தில் 30.06.2019 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சப்பறத் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி ஆலயத்தில் 29.06.2019 சனிக்கிழமை இடம்பெற்ற 7ம் பகல் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி ஆலயத்தில் 27.06.2019 வியாழக்கிழமை 5ம் நாள் இரவு இடம்பெற்ற திருமஞ்சத் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி ஆலயத்தில் 28.06.2019 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 6ம் பகல் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி ஆலயத்தில் 27.06.2019 வியாழக்கிழமை இடம்பெற்ற 5ம் பகல் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி ஆலயத்தில் 26.06.2019 புதன்கிழமை இடம்பெற்ற 4ம் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி ஆலயத்தில் 25.06.2019 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 3ம் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி ஆலயத்தில் 25.06.2019 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 3ம் திருவிழா காணொளி! (பகுதி-1)

 

 

 

 

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி ஆலயத்தில் 25.06.2019 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 3ம் திருவிழா காணொளி! (பகுதி-2)

 

 

 

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி ஆலயத்தில் 25.06.2019 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 3ம் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி ஆலயத்தில் 24.06.2019 திங்கள்கிழமை இடம்பெற்ற 2ம் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி ஆலயத்தில் 23.06.2019 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கொடியேற்றத் திருவிழா காணொளி!

காரைநகர் சக்தி இலவசக் கல்வி மேம்பாட்டு நிலையத்தின் சக்தி மழலைகள் மாலை நேர மகிழ்வகம் ஓராண்டு நிறைவு விழா 22.06.2019 சனிக்கிழமை நடைபெற்றது.

காரைநகர் களபூமி திக்கரை அருள்மிகு முருகமூர்த்தி கோவில் விகாரி வருஷ பிரமோற்சவ விஞ்ஞாபனம்-2019

காரைநகர் களபூமி

திக்கரை அருள்மிகு முருகமூர்த்தி கோவில்

விகாரி வருஷ பிரமோற்சவ விஞ்ஞாபனம்-2019

குகநேய செல்வர்களே!

ஈழவள நாட்டின் வடமேற்பாகத்தில் காரைநகரில் கிழக்குத் திசையில் வேண்டுவோர் வேண்டுவதைத்தந்தருளும் பொருட்டு திக்கரைப் பதியிலே கோவில் கொண்டு வீற்றிருந்து அருள்பாளித்துக் கொண்டு மூர்த்தி,தளம்,தீர்த்தம் என்னும் சிறப்புக்களுடன் விளங்கும் கலியுகவரத்தானாம் வள்ளிதேவசேனா சமேத சுப்பிரமணிய முருகமூர்த்திப் பெருமானுக்கு வருடாந்த பிரமோற்சவம் நிகழும் மங்கலகரமான விகாரி வருஷம் ஆனித்திங்கள் 8 ஆம் நாள் (2019-06-23) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி பத்து(10) தினங்கள் நடைபெற்று பதினோராம் நாள் பூங்காவன உற்சவமும் நடைபெறுவதற்கு எம்பெருமானின் திருவருள் கைகூடியுள்ளது.அத்தருணம் முருகன் அடியார்கள் குறிப்பிடப்படும் நாட்களில் ஆசார சீலர்களாக ஆலயத்துக்கு வருகைதந்து சுவாமியை தரிசித்து பேரின்பப் பெறுவாழ்வைப் பெற்றுய்யும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.

காரைநகர் யாழ்ப்பாணம் (784) AB21 வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்

 

காரைநகர் யாழ்ப்பாணம் (784) AB21 வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்
எஸ்.கே.சதாசிவம்

பெரு நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ் மூலோபாய நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் (Ministry of Mega Polis and Western Development Strategic Cities Development Project) உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் இவ்வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பமாகி உள்ளது. 1200 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட உள்ள 8.8 மீட்டர் அகலம் உடைய இரு வழியிலான அஸ்போல்ட்(காப்பெற்) பாதையாக அமையும். யாழ்ப்பாண மருத்துவமனை வீதி சந்தியில் இருந்து ஆரம்பித்து பொன்னாலை சந்தி வரையிலான 12.9 கிலோமீற்றர் வீதி அமைக்கப்படவுள்ளது.வீதி அபிவிருத்திக்கு தேவையான காணிகள் சுவிகரிக்கும் பணிகள் நிறைவடைந்து,வீதி நிர்மாணிக்கும் ஒப்பந்தம் sierra நிறுவனத்திடம் கைசாத்திடப்பட்டு வீதி அமைக்கும் நிறுவனத்திடம் வீதி அமைக்கும் பணிகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை சந்தியில் இருந்து பொன்னாலை நோக்கியும் தெற்கு அராலிக்கு செல்லும் சந்தியில் இருந்து பொன்னாலை நோக்கியும இரு குழுக்கள் வீதி அமைக்கும் பணிகளை ஆரம்பித்து உள்ளன 21 மாத கால எல்லையில் வீதி அபிவிருத்தி பணிகள் நிறைவடைதல் வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது.

 

விளானை சனசமூக நிலையத்தின் பொதுக்கூட்டமும் நிர்வாக தெரிவும்-2019

 

விளானை சனசமூக நிலையத்தின் பொதுக்கூட்டமும் நிர்வாக தெரிவும்-2019

15/06/2019 சனிக்கிழமை மாலை 3:00 மணிக்கு விளானை சனசமூக நிலைய கட்டிடத்தில் இடம்பெற்றது.இந்த நிகழ்வுக்கு காரை கிழக்கு J/43 கிராம சேவையாளர்,சனசமூக உத்தியோகத்தர் மற்றும் பொதுமக்கள் கலந்து  கொண்டனர்,

 புதிதாக தெரிவு செய்யப்பட்ட  உறுப்பினர்கள் விபரம்:

தலைவர்       : க.தில்லையம்பலம் (ஓய்வு நிலை அதிபர்)

செயலாளர்       : த.ரஞ்சி (உபதபால் அதிபர் விளானை)

பொருளாளர்   : சோ .பிரசாந்தன் (அரச உத்தியோகத்தர்)

உபதலைவர்  : சி.கபிலன் (சமுர்த்தி உத்தியோகத்தர் )

உபசெயலாளர் : த.சுதர்சன் (அரச உத்தியோகத்தர் )

கணக்காய்வாளர் : அ.பிரணவரூபன் (உயர்தர மாணவன்)

போசகர்கள்   :

Ø  : வே.நடராசா (சித்தாந்த வித்தகர்)

Ø  :  பெ.கிருபானந்தம்

உறுப்பினர்கள்

  1. வே.மகேந்திரம்
  2. க.பாலசிங்கம்
  3. சீனிவாசன்
  4. சா.டுகினா
  5. ரா.சுஜிபா
  6. வே.வீரசிங்கம்

 

முதியோர் தேசிய செயலகமும் காரைநகர் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் இலவச மருத்துவமுகாம், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைஉடன் இணை அனுசரணையாக களபூமி சனசமூக நிலையமும் இணைந்து நடாத்தும் இலவச பொது மருத்துவ முகாம் 14/06/2019 வெள்ளிக்கிழமை மதியம்1:30 மணிக்கு களபூமி J/42 கிராம சேவையாளர் அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது.

முதியோர் தேசிய செயலகமும் காரைநகர் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் இலவச மருத்துவமுகாம் காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைஉடன் இணை அனுசரணையாக களபூமி சனசமூக நிலையமும் இணைந்து நடாத்தும் இலவச பொது மருத்துவ முகாம் 14/06/2019 வெள்ளிக்கிழமை மதியம்1:30 மணிக்கு களபூமி J/42 கிராம சேவையாளர் அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது.

இவ் மருத்துவ முகாமில் கண், மகப்பேறு,பெண் நோயியல், குழந்தை மருத்துவம், உள மருத்துவம் துறைகளின் நிபுணர்களினால் குருதியில் சீனியின் அளவு / கொலஸ்ரோல் அளவு ,நாட்பட்ட சலரோகம், பிறசர், தொய்வு, இதய நோய்கள் உள்ள நோயாளிகள் பொது வைத்திய நிபுணரிடமும் குழந்தை பேறின்மை மற்றும் மாத விடாய் கோளாறுகள் உள்ள பெண்கள் சார்ந்த நோய்கள் உள்ளவர்கள், மகப்பேற்று வைத்திய நிபுணரிடமும் கண் தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்கள் கண் சிகிச்சை நிபுணரிடமும் ஆலோசனை வழங்கப்பட்டு மக்கள் பூரண பயனடைந்தனர். அத்துடன் இன்றைய தினம் களபூமியின் வீதி யோரமாக மரங்களை நாட்டும் நிகழ்வு முதல் கட்டமாக களபூமி J/42 கிராம சேவையாளர் கட்டிடத்தின் முன் பக்கம் உள்ள வீதியோரத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

காரைநகரில் துறை சார் மருத்துவ நிபுணர்கள் பங்குகொள்ளும் மருத்துவ முகாம்

 

துறை சார் மருத்துவ நிபுணர்கள் பங்குகொள்ளும் மருத்துவ முகாம்

இடம்: சைவ மகா சபை, காரைநகர்

காலம் 2019/06 / 09 ஞாயிறு 8 மணி

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் பிரதேச செயலகத்துடன் இணைந்து சைவ மகா சபையின் அனுசரணையுடன் பொது மருத்துவம் , கண், மகப்பேறு,பெண் நோயியல், குழந்தை மருத்துவம், உள மருத்துவம் துறைகளின் நிபுணர்கள் / மருத்துவர்கள் பங்கு கொள்ளும் இந்த மருத்துவ முகாமை பூரணமாக பயன்படுத்துமாறு பொது மக்களை வேண்டுகின்றோம்.

தங்களிற்கு தோற்றாநோய் இருப்பதனை அறிய விரும்புவோர் இரவு உணவின் பின் தேநீர் உட்பட எந்த ஆகாரமும் எடுக்காமல் வருவதன் மூலம் குருதியில் சீனியின் அளவு / கொலஸ்ரோல் அளவு அறிந்து கொள்ள முடியும்.

நாட்பட்ட சலரோகம், பிறசர், தொய்வு, இதய நோய்கள் உள்ள நோயாளிகள் பொது வைத்திய நிபுணரிடமும் குழந்தை பேறின்மை மற்றும் மாத விடாய் கோளாறுகள் உள்ள பெண்கள் சார்ந்த நோய்கள் உள்ளவர்கள், மகப்பேற்று வைத்திய நிபுணரிடமும் கண் தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்கள் கண் சிகிச்சை நிபுணரிடமும் ஆலோசனைகளை காலை 8 மணி முதல் 1 மணி வரை பெற்றுக் கொள்ள முடியும்.

கருப்பை ,மார்பக, வாய் புற்று நோய்களை கண்டறிவதற்கான ஆரம்ப கட்டப் பரிசோதனைகளும் நடைபெறும்.

செல்வி.விமலாதேவி விஸ்வநாதன் (ஓய்வுநிலை அதிபர் வலந்தலை வடக்கு அ.த.க பாடசாலை, பொருளாளர்- கலாநிதி ஆ.தியாகராஜா புலமைப்பரிசில் நிதியம்) அவர்களின் சேவை நயப்பு விழா அழைப்பிதழ்!

காரைநகர் கார்த்திகேயப் புலவரின் 200 ஆவது பிறந்த தின நினைவு

 

காரைநகர் கார்த்திகேயப் புலவரின்

200 ஆவது பிறந்த தின நினைவு

சிவத்திரு கார்த்திகேயப் புலவரின் 200 ஆவது பிறந்ததினம் காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 23.03.2019 அன்று நினைவு கூரப்பட்டது. விநாயகப் பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகளுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தேவஸ்தான பிரதமகுரு சிவத்திரு கு.சண்முகராஜக்குருக்கள் தலைமையுரை ஆற்றி நிகழ்வை வழிப்படுத்தினார்.

யாழ். பல்கலைக்கழக ஆங்கிலத்துறை சிரேட்ட விரிவுரையாளர் வீரமங்கை யோகரத்தினம், புகழ்பூத்த ஓய்வுநிலை அதிபர்களான பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை, திரு. வே. முருகமூர்த்தி, திரு. க. தில்லையம்பலம் ஆகியோரது நினைவுப் பேருரைகளுடன் காரைநகர் பிரதேசசபைத் தவிசாளர் கேதீஸ்வரதாஸ் முதலான அறிஞர்களின் சிறப்புரைகளும் இடம்பெற்றன. அனைவரது உரையும் கார்த்திகேயப் புலவரின் வாழ்வை, நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்த தமிழ்க் கல்வியின் உயர் நிலையை, பண்பாட்டை, வாழ்வியலை அவையிலிருந்தோரின் மனங்களில் பசுமையான நினைவாக விட்டுச் சென்றன.

சிவத்திரு கார்த்திகேய ஐயர் (23.03.1819 – 22.09.1898) அவர்கள் ஈழத் தமிழ் இலக்கிய மரபின் ஒரு கலங்கரை விளக்கு. நற்றமிழ் அன்னைக்கு நறுந்தமிழ்ப் பாவால் நாளெல்லாம் அணிசெய்த ஈழநாட்டுப் புலவர் வரிசையில் தனியிடம் பெறுபவர். ஆங்கிலேயர் ஆட்சியில் சைவத்தையும் தமிழையும் பாதுகாத்தவர். நல்லை நகர் நாவலர் பெருமானது சமகாலத்தவர். நாவலரது குருவாக விளங்கிய இருபாலை சேனாதிராய முதலியாரைத் தமது குருவாகவும் அமையப் பெற்றவர்.

பன்னிரண்டாவது வயதில் தந்தையாரிடம் கந்தபுராணத்தில் தாரகன் வதைப்படலத்திலே வரும் பாடலை இசையோடு பாடுவதில் இடர்ப்படவே தந்தையார் தண்டித்தமையால் ஒருவருடம் புலவரின் கல்வி தடைப்பட்டது. புலவரின் பாட்டியாராகிய இலட்சுமி அம்பாளின் அன்பாலும் குலதெய்வமாகிய திக்கரை முருகப்பெருமானது திருவருளாலும் பெருங் கல்விமானாகிய சண்முகம் உபாத்தியாயரிடம் கல்வியைத் தொடரும் பேறுற்றார்.

புலவர் தமது 15 ஆவது வயதில் ஏட்டில் அழகுற எழுதும் கலை வல்லவரானார். இவரால் ஏட்டில் எழுதப்பட்ட திருக்குறள், நாலடியார் என்பன ஊர்காவற்றுறை நீதிபதி கு.கதிரைவேற்பிள்ளை அவர்களின் ஏற்பாட்டில் 1886 இல் இலண்டனில் நடைபெற்ற பொருட்காட்சிக்கு அனுப்பப்பட்டது; பலரது பாராட்டையும் பெற்றது.

கார்த்திகேய ஐயரின் தந்தையாராகிய முருகேசு ஐயரும் பூட்டனராகிய சுப்பையரும் சிறந்த தமிழ்ப் புலவர்களாக விளங்கினர். புலவரின் தந்தையார் முருகேசு ஐயர் இயற்றிய தன்னை யமக அந்தாதி 70 பாடல்களுடன் முற்றுப் பெறாதிருந்த போது மிகுதி 30 செய்யுள்களையம் புலவர் தமது இளவயதிலேயே பாடி நிறைவு செய்தார்; வரகவி என்று தமிழ்ச் சான்றோரால் பராட்டப்பட்டார்.

தந்தையார் ஏட்டில் எழுதிவைத்த குருசேத்திர நாடகத்தை திருத்தியும் புதுப்பித்தும் 1844 இல் அரங்கேற்றினார். சூரபன்மன் நாடகம், சந்திர வண்ணன் நாடகம் ஆகியவற்றைத் தாமே எழுதி அரங்கேற்றினார். விதானைமாலை என்னும் சோதிட நூலைத் திருத்தி உரையில்லாத பாடல்களுக்கு உரையெழுதி 1881 புரட்டாதியில் வெளியிட்டார்.

கார்த்திகேயப் புலவர், பல்வேறு ஏட்டுப் பிரதிகளைப் பரிசோதித்து ஒப்புநோக்கிச் செம்மைப்படுத்திய தட்சிண கைலாய புராணத்தை அவரது புத்திரர் சிவசிதம்பர ஐயர் 1887 இல் நூலாக்கினார்.

புலவர் தமது இறுதிக்காலத்தில் திருப்போசை வெண்பா, நகுலேசரியமக அந்தாதி, வண்ணைத் திரிபந்தாதி, திண்ணபுரத் திரிபந்தாதி முதலிய பிரபந்தங்களைப் பாடியுள்ளார்.

புலவர் தமது எண்பதாவது வயதில் 22.09.1898 அன்று நெற்றியில் நீறணிந்து சிவபெருமானை எண்ணியவாறு “எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ“ என்னும் பதிகத்தை யோதும்படி சொல்லி நடராசப் பெருமான் திருவடி நிழலை அடைந்தார்.

இன்றைய சூழலில் ஈழத்தின் தமிழ்ப் புலவர் ஒருவரை அவரது 200 பிறந்த தின நாளில் அவரது கிராமத்தில் நினைவு கூருவது என்பது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. இதற்குக் காரணமாக அமைந்த களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் கோவளம் குமாரதேவன் ஆகியோர் பராட்டுக்குரியவர்கள்.

கார்த்திகேயப் புலவர் அவர்கள் பண்டிதர் கலாநிதி சிவத்திரு க.வைத்தீசுவரக்குருக்கள் (22.09.1916 – 25.04.2015) அவர்களது தாய்வழிப் பூட்டன் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திகேயப் புலவர் இறையடி சேர்ந்த நாள் 22.09.1898. வைத்தீசுவரக்குருக்கள் பிறந்த நாள் 22.09.1916.

கார்த்திகேயப் புலவரைத் தந்த களபூமியும் தன்னையும் வேறு கிராமங்களும் சிவத்திரு க.வைத்தீசுவரக்குருக்கள் ஐயா அவர்கள் காட்டிய வழியில் மென்மேலுஞ் செல்ல வேண்டும்.

பா.துவாரகன்

 

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 20.05.2019 திங்கட்கிழமை இடம்பெற்ற பூங்காவனத் திருவிழா காட்சிகள்!

காரைநகர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினால் புதிதாக அமைக்கப்பட்ட சேதனப்பசளை உற்பத்தி நிலைய திறப்புவிழா 24.05.2019 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 19.05.2019 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தீர்த்தத் திருவிழா காட்சிகள்!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 18.05.2019 சனிக்கிழமை இடம்பெற்ற தேர்த் திருவிழா காட்சிகள்!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 17.05.2019 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சப்பறத் திருவிழா காட்சிகள்!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 16.05.2019 வியாழக்கிழமை இடம்பெற்ற 7ம் திருவிழா இரவு காட்சிகள்!

காரைநகர் களபூமி பாலாவோடை ஸ்ரீ குறிஞ்சாக்குளி முத்துமாரியம்மன் ஆலய 7ம் நாள் மாலை இடம்பெற்ற வேட்டைத் திருவிழா காட்சிகள்!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 16.05.2019 வியாழக்கிழமை இடம்பெற்ற 7ம் திருவிழா பகல் காட்சிகள்!

காரைநகர் முல்லைப்பிலவு நாச்சிமார் ஆலயத்தில் 20.05.2019 திங்கட்கிழமை இடம்பெற்ற வருடாந்தப் பொங்கல் திருவிழா காணொளி!

காரைநகர் முல்லைப்பிலவு நாச்சிமார் ஆலயத்தில் 20.05.2019 திங்கட்கிழமை இடம்பெற்ற வருடாந்தப் பொங்கல் உற்சவ காட்சிகள்!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 18.05.2019 சனிக்கிழமை இடம்பெற்ற தேர்த் திருவிழா காணொளி!

காரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 15.05.2019 புதன்கிழமை இடம்பெற்ற 6ம் திருவிழா இரவு காட்சிகள்!