காரைநகர் அபிவிருத்திச் சபையினர் நடாத்தும் வாணிவிழாவும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வும் நாளை 02.10.2014 வியாழக்கிழமை மாலை 3.00 மணிக்கு காரைநகர் அபிவிருத்திச் சபை மாணவர் நூலகத்தில் சபையின் உப தலைவரும் யாழ்ற்ரன் கல்லூரி அதிபருமான வே.முருகமூர்த்தி தலைமையில் நடைபெற உள்ளது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் ஜோன்குயின்ரஸ் அவர்களும் சிறப்பு விருந்தினராக காரைநகர் கோட்டக் கல்விப்பணிப்பாளர் பு.ஸ்ரீவிக்னேஸ்வரன் அவர்களும் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை சர்பாக பூ.விவேகானந்தா ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளனர்

மாணவர் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைவை முன்னிட்டு சிறப்புச் சொற்பொழிவினை எதியோப்பியப் பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் கலாநிதி வி.கெனடி நிகழ்த்த உள்ளதுடன் கடந்த மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த காரைநகர் கோட்டப் பாடசாலை மாணவர்கள் எட்டுப்பேரும் கௌரவிக்கப்பட உள்ளனர்.தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளது.
கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரணையுடன் மாணவர்களுக்கான மாதாந்த பயிற்சிப் பரீட்சைகள் கருத்தரங்குகள் என்பன கடந்த நான்கு வருடங்களாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.