கனடா – காரை கலாச்சார மன்றம் நடாத்தும் தமிழ்மொழித் திறன்,பண்ணிசைப் போட்டிகள்- 2019

 

கனடா – காரை கலாச்சார மன்றம்

நடாத்தும் தமிழ்மொழித் திறன்,பண்ணிசைப் போட்டிகள்- 2019

கனடா – காரை கலாச்சார மன்றம் வருடாந்தம் நடாத்தும்
தமிழ்மொழித் திறன், பண்ணிசைப் போட்டிகள் எதிர்வரும் September 21,2019 சனிக்கிழமை நடாத்தப்படவுள்ளன.

இடம்: Scarborough Civic Centre

காலம்: September 21,2019 சனிக்கிழமை

நேரம்: காலை 8.00மணி

தமிழ் திறன் போட்டிகள் 6 பிரிவுகளாக நடைபெறும்.
1. பாலர் பிரிவு (JK,SK)
2. கீழ் பிரிவு (தரம் 1, தரம் 2)
3. மத்திய பிரிவு (தரம் 3, தரம் 4)
4. மேற்பிரிவு (தரம் 5, தரம் 6)
5. அதிமேற்பிரிவு (தரம் 7, தரம் 8, தரம் 9)
6. உயர்பிரிவு (தரம் 10, தரம் 11, தரம் 12)

ஜூன் மாதம் கனடிய பாடசாலை ஒன்றில் எந்த வகுப்பில் கல்வி கற்றார்களோ அந்த வகுப்பு பிரிவில் பிள்ளைகள் பங்குபற்றவேண்டும்.

நடைபெறும் போட்டிகள்:
பண்ணிசை, பேச்சு, வாசிப்பு, எழுத்து(சொல்வதெழுதல்)

பண்ணிசை:
பாலர் பிரிவு – ஏதாவது ஒரு தேவாரம்
கீழ் பிரிவு – ஏதாவது ஒரு தேவாரம்
மத்திய பிரிவு – ஏதாவது ஒரு தேவாரத்துடன் ஏதாவது ஒரு புராணம் அல்லது திருப்புகழ்
மேல் பிரிவு – ஏதாவது ஒரு தேவாரத்துடன் ஏதாவது ஒரு புராணம் அல்லது திருப்புகழ்
அதிமேற்பிரிவு – ஏதாவது ஒரு தேவாரத்துடன் ஏதாவது ஒரு புராணம் அல்லது ஏதாவது ஒரு திருவாசகம்
உயர்பிரிவு – ஏதாவது ஒரு தேவாரத்துடன் ஏதாவது ஒரு புராணம் அல்லது ஏதாவது ஒரு திருவாசகம்

பேச்சு:
வயது எல்லைக்கு உட்பட்டளவில் ஆறு பிரிவுகளிற்கும் தரப்பட்டுள்ள பேச்சுக்குரிய விடயங்களை மனப்பாடம் செய்து பேசுதல் வேண்டும்.

வாசிப்பு:
வயது எல்லைக்கு உட்பட்டளவில் ஆறு பிரிவுகளுக்கும் தரப்பட்டுள்ள வாசிப்புக்கு தரப்பட்டுள்ள விடயங்களை பார்த்து வாசித்தல் வேண்டும்.

எழுத்து:
வயது எல்லைக்கு உட்பட்டளவில் ஆறு பிரிவுகளிற்கும் தரப்பட்டுள்ள எழுத்துக்குரிய விடயங்களை தயார் படுத்திக் கொண்டு வருதல் வேண்டும். போட்டியின் போது சொல்வதெழுதல் போன்று கேட்டு மட்டும் எழுதுதல் வேண்டும்.

 

காரைநகருடன் தொடர்புடைய பெற்றோர்களின் பிள்ளைகள் இப்போட்டிகளில் பங்குபற்றமுடியும்.

காலை 8 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மட்டுமே மண்டபம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதால் பங்குபற்றும் பிள்ளைகள் சரியாக 8 மணிக்கு தவறாது பிரசன்னமாயிருத்தல் வேண்டும்.

இப் போட்டிகளில் பங்குபற்றும் பிள்ளைகள் தங்கள் விபரங்களை அன்றைய தினம் காலையில் பதிந்து , சகல போட்டிகளிலும் பங்குபற்றலாம். பதிவுகள் காலை 8.00 – 8.45 மணி வரை பெற்றுக் கொள்ளப்படும். போட்டிகள் 9.00 மணிக்கு ஆரம்பமாகி 12.00 மணி வரை இடம்பெறும்.

போட்டி முடிவுகள் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

பேச்சு போட்டியில் முதலாவது இடத்தை பெற்றுக்கொள்ளும் பிள்ளைகள் “காரை வசந்தம் – 2019” இல் அரங்கத்தில் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.

போட்டிகளில் பங்குபற்றும் பிள்ளைகள் மேலதிக விபரங்களுக்கு karainagar@gmail.com என்ற இமெயில் ஊடாக தொடர்பு கொள்ளலாம்.

நன்றி

நிர்வாகசபை
கனடா காரை கலாச்சார மன்றம்

 

 

உங்கள் போட்டிக்கான பிரதிகளைப் பெறுவதற்கு தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

 

பிரிவுகள்

 

பாலர் பிரிவு: Junior/Senior Kindergarden students

பேச்சு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2019/07/Speech-JK-SK-2019F.pdf

 

வாசிப்பு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2019/07/Reading-Grade-JK-SK-2019-F.pdf

 

எழுத்து:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2019/07/Writing-Jk-SK-2019-F.pdf

 

 

கீழ்ப்பிரிவு: Gr 1 / Gr 2 students

பேச்சு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2019/07/Speech-Grade-1-2-2019-F-1.pdf

 

வாசிப்பு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2019/07/Reading-Grade-1-2-2019-F.pdf

 

எழுத்து:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2019/07/Writing-Grade-1-2-2019-F.pdf

 

 

மத்தியபிரிவு: Gr 3 / Gr 4 students

 

பேச்சு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2019/07/Speech-Grade-3-4-2019F.pdf

 

வாசிப்பு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2019/07/Reading-Grade-3-4-F.pdf

 

எழுத்து:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2019/07/Writing-Grade-3-4-2019-F.pdf

 

 

மேல்பிரிவு: Gr 5 / Gr 6 students

 

பேச்சு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2019/07/Speech-Grade-5-6-2019-F.pdf

 

வாசிப்பு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2019/07/Reading-Grade-5-6-F.pdf

 

எழுத்து:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2019/07/Writing-Grade-5-6-2019-F.pdf

 

 

அதிமேற்பிரிவு: Gr 7 / Gr 8 / Gr 9 students

 

பேச்சு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2019/07/Speech-Grade-7-8-9.-2019-F.pdf

 

வாசிப்பு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2019/07/Reading-Grade-7-8-9-F.pdf

 

எழுத்து:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2019/07/Writing-Grade-7-8-9-2019-F.pdf

 

 

உயர்பிரிவு: Gr 10 / Gr 11 / Gr 12 students

 

பேச்சு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2019/07/Speech-Grade-10-11-12.F.pdf

 

வாசிப்பு:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2019/07/Reading-Grade-10-11-12-F.pdf

 

எழுத்து:

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2019/07/Writing-Grade-10-11-12-2019-F.pdf