செய்திகளின் மறுபக்கம் நூல் அறிமுக விழா சிறப்புற இடம்பெற்று இருந்தது.

 

செய்திகளின் மறுபக்கம் நூல் அறிமுக விழா

சிறப்புற இடம்பெற்று இருந்தது.

 

கடந்த 16.09.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காரைத்தென்றல் நிகழ்வின் போது  எமது சபையுடன் நெருங்கிய தொடர்பினை பேணிவருபவரும் எமது சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு இணைப்பாளரும்   ஆங்கில ஆசான் அமரர் நல்லதம்பி விஜயரத்தினம்  (நீலிப்பந்தனை காரைநகர்) அவர்களின் மகன்; அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் (Kennedy Vijiaratnam, Associate Professor of English, Madawalaba University, Ethiopia.) அவர்களின் நெருங்கிய நண்பரும்   ஆகிய  மூத்த ஊடகவியலாளர் திரு. இரா.துரைரட்ணம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்  நூல் அறிமுக விழா சிறப்புற இடம்பெற்று இருந்தது.

கடந்த 08.09.2018 சனிக்கிழமை அன்று காலை 10.00மணியளவில் செம்மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய மண்டபத்தில வெளியீட்டு வைக்கப்பட்ட செய்திகளின் மறுபக்கம்  நூலின் தொகுப்புரையை  முள்னாள்  சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை தலைவர் திரு. நல்லதம்பி சரவணப்பெருமாள் அவர்களும், வெளியீட்டு உரையினை நூலாசிரியரும் வழங்கினாரகள்;. சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் செயலாளர் திரு.முருகேசு பாலசுந்தரம் நூலாசிரியருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவமளித்திருந்தார். நூலின் முதல் பிரதிகளை பிரான்ஸ் நலன் புரிச்சங்க போஷகர் திரு. அருளானந்தம் செல்வச்சந்திரன் (நேரு மாஸ்ரர்), திரு சிதம்பரப்பிள்ளை யோகேந்திரன், திரு. சுப்பிரமணியம் விமலநாதன்  ஆகியோர்கள் பெற்றுக்கொண்டனர்.

பிரான்ஸ் நலன் புரிச்சங்க போஷகர் திரு. அருளானந்தம் செல்வச்சந்திரன் (நேரு மாஸ்ரர்)  அவர்கள் நூலாசிரியயருக்கும் தனக்கும் உள்ள தொடர்பினை தெளிவுபடுத்தினார்கள் அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் (Kennedy Vijiaratnam, Associate Professor of English, Madawalaba University, Ethiopia.) அவர்களின்  மறைவுக்கு பின்னரான  செய்திகளை சேகரிப்பதற்கு நூலாசிரியர் பெரிதும் உதவினார்கள் எனக் கூறினார்கள்.

நூலாசிரியரும்  ,மூத்த ஊடகவியலாளருமாகிய திரு. இரா.துரைரட்ணம் அவர்கள் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினருக்கு இவ் நூல் அறிமுகத்திற்கு உதவியமைக்கு நன்றியும் பாராட்டுதல்களும் தெரிவித்துக்கொண்டார்கள்.

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

 

இங்ஙனம்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

                              செயற்குழு உறுப்பினர்கள்

                       இளையோர் அமைப்பு

மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு

                              சுவிஸ் வாழ் காரை மக்கள்

25.09.2018