பரத நாட்டியம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

 

பரத நாட்டியம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

காரைத்தென்றல் -2018 முத்தமிழ் விழாவில்  சிறப்பு நிகழ்வாக இராகம், தாளம், பாவம், மூன்றின் சேர்கையாய் உருவான பரதக் கலையின் மூலம் தனது நடன ஆற்றகையை மிகச்சிறப்பாக தங்களது திறன்களால் வெளிப்படுத்தியிருந்தாhகள்; இலண்டனில் இருந்து வருகை தந்த காரை மண்ணின் புதல்வி செல்வி மதுரா அருள்பிரகாசம் பிரித்தானியாவில் யாழ். வண்ணை நடனப்பள்ளியில் முறைப்படி பரதநாட்டியம் பயின்று 08.09.2018 அன்று அரங்கேற்றம் கண்ட செல்வி மதுரா அருள்பிரகாசம், அவர்களின் பரத நாட்டியம்  மிகச் சிறப்பாக  நடைபெற்றது.

நடன தாரகையின் பெற்றோரையும் பாராட்டி திரு. பூபாலபிள்ளை விவேகானந்தா அவர்கள் வாழ்த்துரைக்க,  திருமதி  சிவனேயன் அவர்களால் பொன்னாடை போர்த்தியும் வாழ்த்துப்பா வழங்கியும் கௌரவம் அளிக்கப்பட்டது.

நிகழ்வின் நிழற்படங்களை கீழே காணலாம்

 

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

 

இங்ஙனம்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

                              செயற்குழு உறுப்பினர்கள்

                       இளையோர் அமைப்பு

மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு

                              சுவிஸ் வாழ் காரை மக்கள்

25.09.2018