ரசிகர்களை கட்டிப் போட்ட  இசைக் கச்சேரி

 

ரசிகர்களை கட்டிப் போட்ட  இசைக் கச்சேரி

காரைத்தென்றல் -2018இல்  ரசிகர்களை கட்டிப் போட்ட இசைக் கச்சேரி சங்கீதாலயம் வாசல் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பாடகராக செல்வன் விபுரண் வரதராஜனும், வயலின் செல்வி வைஷ்ணவி வரதராஜனும்  மிருதங்க  துர்க்கா தாளலயாலய கல்லூரி மாணவனும்  எமது ஊரைச் சேர்ந்த செல்வன் சந்திரலிங்கம் ஜலக்சிகன் அவர்கள் “மிருதங்க கலாவித்தகர்”  வித்துவான் ருக்ஷன் ஸ்ரீரங்கராஜா அவர்களிடம் முறைப்படி மிருதங்கம் பயின்று 24.02.2018 சனிக்கிழமை அன்று அரங்கேற்றம் கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடம் செல்வன் சபரீசன் அருணகிரிநாதனும் இசைத்தனர். இசையால் வசமாக இதயமெது என எல்லோரும் தம்மை மறந்து அரைமணி நேரம் இசை வெள்ளத்தில் மிதந்தனர். அதனைத் தொடர்ந்து பாட்டிசையை செல்விகள் நிறுனிகா அருணகிரிநாதனும், பாரதி  லோகதாஸனும் இவர்களின் பின் இசையுடன் பாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன் நிகழ்வின் அறிவிப்பாளராக சுவிஸ் காரை அபிவிருத்திச் சபைத் தலைவர் திரு நல்லதம்பி சரவணப்பெருமாள் அவர்கள் கலைஞர்களை பாராட்டி வாழ்த்துரைக்க பங்குபற்றிய கலைஞர்களுக்கு தாயகத்தில் இருந்து வருகை தந்த முன்னாள் வடமாகாண கல்விப் பணிப்பாளரும், காரை அபிவிருத்திச் சபைத் தலைவர் திரு. பரமநாதன்  விக்கினேஸ்வரன்  அவர்கள் பதக்கங்களும்  சான்றிதழும் வழங்கி கௌரவித்தார்.

நிகழ்வின் நிழற்படங்களை கீழே காணலாம்

 

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

 

இங்ஙனம்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

                              செயற்குழு உறுப்பினர்கள்

                       இளையோர் அமைப்பு

மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு

                              சுவிஸ் வாழ் காரை மக்கள்

25.09.2018