கனடா காரை கலாச்சார மன்றத்தின் 09.07.2017 – 31.03.2018 வரைக்குமான செயற்பாட்டு அறிக்கை மற்றும் 09.07.2017 – 31.12.2017 வரைக்குமான கணக்கு அறிக்கை மற்றும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த நிகழ்வுகள்

                                      

         கனடா காரை கலாச்சார மன்றத்தின் செயற்பாட்டு அறிக்கை

ஆடி 9, 2017 – பங்குனி  31, 2018

கனடா  காரை கலாச்சார  மன்றத்தின் பொதுக்கூட்டம் ஆடி  9, 2017 பெரிய சிவன் ஆலயத்தில்  திரு.சபாரத்தினம் பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.  பொதுக்கூட்டத்தில் ஐந்து திட்டமிடல் போசகர் சபை உறுப்பினர்களும் , உள்ளக கணக்காய்வாளர் மற்றும் பதினொரு  உறுப்பினர்களை கொண்ட  முழுமையான நிர்வாகசபை  2017-2018 காலப் பகுதிக்கு தெரிவாகியது .

  1. மன்றத்தை பொறுப்பேற்ற பொழுது, TD வங்கி கணக்கு முடக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதனால்  மன்ற கணக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில்,  RBC  வங்கியில் புதிதாக  கணக்கு ஆடி 25, 2017 திறக்கப்பட்டது.
  2. ஆடி 30, 2017 காரை ஒன்றுகூடல் Morningside Park , Area 1 and 5 இல் சிறப்பாக நடைபெற்றது. ஒன்றுகூட லில் நானுற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட காரை உறவுகளும்,  சிறுவர்களும் கலந்து கொண்டனர்  .  வழமைபோன்று போட்டிகளில் பங்குபற்றி முதல் மூன்று இட ங்களைப்  பெற்ற சிறார்களுக்கு கேடயங்க ள் வழங்கப்பட்டது. பத்தொன்பது வயதிற்கு  மேற்பட்டோர் பிரிவில் வெற்றி பெற்ற ஆண், பெண் அணியினருக்கு வெற்றிக்கேடயம்களும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது. வயது முதிர்ந்த பெரியவர்களுக்கான மென்நடைப் போட்டியும் நடாத்தப்பட்டது.
  3. காரை அபிவிருத்திச் சபை தலைவர் திரு.சிவா மகேசன் அவர்கள் தனிப்பட்டவிடயமாக புரட்டாதி மாதம்  கனடா வருகை தந்தபொழுது, மன்ற நிர்வாக உறுப்பினர்களைச் சந்தித்து சமகால விடயங்கள் சம்மந்தமாக கலந்துரையாடினர். அத்துடன் மன்றத்தின்  பொருளாளரும், தலைவரும் காரைநகருக்குச் சென்று நடப்பு நிலைமைகளைத் தெரிந்து கொண்டனர்.
  4. தமிழ்த்திறன் போட்டிகள், ஐப்பசி  08, 2017 காலை 8.30 மணி முதல் மதியம்  வரை  Scarborough Civic Center  மண்டபத்தில் சிறப்பாக  இடம்பெற்றது . சிறுவர்களுக்கான தகுதிகாண் போட்டிகள் பண்ணிசை ,  எழுத்து, வாசிப்பு மற்றும் பேச்சு போன்ற பிரிவுகளில் நடாத்தப்பட்டது. சுமார் நாற்பத்தியேழு சிறுவர்கள் பங்குபற்றி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
  5. காரை வசந்தம் கலைவிழா கார்த்திகை 4, 2017 அன்று Woburn Collegiate மண்டபத்தில், நானூறுக்கும் அதிகமான காரை மக்கள் கலந்து சிறப்பித்த மகத்தான முத்தமிழ் விழாவாக அமைந்தது.  இவ்விழாவில் முதன்முறையாக கனடிய அரச பிரமுகர்களான    திருவாளர்கள்  நீதன்  ஷான் மற்றும் பார்த்தி கந்தவேல் ஆகியோர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர் . விழாவில்  கலந்து கொண்ட  அனைவரையும் ஊருக்கே  அழைத்துச் சென்ற   “ஊரிலிருந்து” என்கின்ற ஆவணப் படத்தொகுப்பும்,  காரை  சிறுவர்கள் பங்குபற்றிய ஊர்ச்சங்கங்கள்  பற்றிய தெருக்கூத்தும், முதன்முதலாக  மேடையேற்றப்பட்டது . அத்துடன் தமிழ்த்திறன்  பேச்சுப் போட்டிகளில் முதல் இடம் பெற்ற சகல பிரிவு மாணவர்களுக்கும்,  முத்தமிழ் கலை விழாவில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.  போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும்  பங்குபற்றிய அனைத்து மாணவ செல்வங்களுக்கும்  பரிசில்களும்,  சான்றிதழ்களும்   வழங்கி    கௌரவிக்கப்பட்டனர்.
  6. முடங்கிய நிலையில் இருந்த TD Canada  Trust கணக்கு மீண்டும் செயல் நிலைக்கு கார்த்திகை  7, 2017   கொண்டுவரப்பட்டது. இதனால் மன்றத்தின் கணக்கில் இருந்த 25,535.49 டொலர்கள் மீண்டும் பயன்படுத்தக்கூடிய நிலைமைக்கு வந்தது .
  7. ஈழத்துச் சிதம்பரத்தின் நித்திய பூசைக்காக வைப்பில் இடப்பட்ட ஐந்து இலட்சம் தொகைக்கான வட்டிப்பணம் கார்த்திகை  28, 2017 காரை அபிவிருத்திச் சபை கணக்கில் இடப்பட்டது. தற்போதைக்கு நித்திய  பூசைக்கு தேவையான பணம் உள்ளதால், அந்த தொகை  ஆடி மாத அம்மன் உற்சவத்தின் திருவிழாவொன்றுக்கு மன்றத்தின் பெயரால் உபயமாக  பயன்படுத்தப்படவு ள்ளது.
  8. காரைநகரில் நடைபெறுகின்ற கோயில் திருவிழாக்கள் , கலை மற்றும் இலக்கிய நிகழ்வுகளை வீடியோ , படப்பிடிப்பு வாயிலாக இணையத்தளத்தில் காண்பிப்பதற்காக சிந்துஜா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட்து .
  9. ஈழத்துச் சிதம்பரத்தின் திருவெம்பாவை உற்சவ காட்சிகள் அனைத்தையும் பார்த்து பக்தி பரவசம் அடையும் வகையில், முதன்முதலாக வீடியோ வடிவில் உடனுக்குடன் இணையத்தளத்தில் எடுத்து வரப்பட்ட து. அதனைத்   தொடர்ந்து  ஏனைய கோயில் திருவிழாக்களும் வீடியோ வாயிலாக எடுத்து வரப்படுகின்றது.
  10. திருவெம்பாவை காலத்தில் காரைநகர் மணிவாசகர் சபையினர் நடாத்திய மாணவர்களுக்கான சமய பாட பரீட்சை மற்றும் கல்விச்  செயற்பாடுகளுக்கான உ தவித் தொகையாக ரூபா 25,000 வழங்கப்பட்டது.
  11. பன்னிரெண்டு ஆரம்பப் பாடசாலைகளுக்குப் பெற்றுக் கொள்ளப்பட்ட நாலாம் கட்ட வட்டிப் பணத்திற்குரிய ( ரூபா 52, 406.25) செலவு விபரங்கள் மற்றும் மீதமுள்ள தொகை தொடர்பான  அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்விபரங்களை மார்கழி 31, 2017 மன்ற  இணையத்தளத்தில் பார்வையிடலாம். கார்த்திகை மாத ஐந்தாம் கட்ட வட்டிப் பணத்திற்குரிய செலவு விபரங்கள் அறிக்கைகள் கிடைக்கப்பெற்றதும் விரைவில்  பிரசுரிக்கப்படும் .
  12. தை 1,  2018 கனடா வாழ் காரை உறவுகளின் உபயத்தில்,  ஆருத்திராஅபிஷேக  வழிபாடுகள்   மிகவும் சிறப்பாக  றிச்மன்ட் பிள்ளையார்  ஆலயத்தில் நடைபெற்றது. புனிதமும், புதுமையும்  நிறைந்த  நன்னாளில் அதிகளவான காரை மற்றும் கனடா வாழ் அடியவர்கள் ஆடவல்லானை தரிசித்து இன்புற்றனர்.  அன்றைய தினம் இன்னிசை கச்சேரியும் , ஆடவல்லானின் தாண்டவ நடன வீதியுலாவும் இடம்பெற்றது .முதன் முறையாக காசினால்  அர்ச்சனை அபிஷேக நிகழ்வும் அத்துடன் அதிகாலை  வருகை தர முடியாத உறவுகளுக்காக நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டது.
  13. மன்றத்தின் Hatton National வங்கி நிரந்தர வைப்புக் கணக்கில் ரூபா மூன்று மில்லியன் இடப்பட்டுள்ளது.
  14. காரை வசந்தம் சஞ்சிகைக்கு ஆக்கங்களும், ஆலோசனைகளும் வழங்கியவரும்,  சிறந்த சமூக  சேவையாளரும்,  கல்விமானாக  திகழ்ந்தவருமான கலாநிதி கென்னடி விஜயரத்தினம் அவர்களின் இறுதி நிகழ்வுகள் முதன்முதலாக  வீடியோ வாயிலாக இணையத்தளத்தில் எடுத்து வரப்பட்டது. அத்துடன் கனடாவில் வாழ்ந்து  எம்மை விட்டுப்பிரிந்த உறவுகளுக்கு   அவர்களின் படத்துடன் கண்ணீர் அஞ்சலி  செலுத்தப்பட்டு வருகின்றது.
  15. உலகெங்கும் வாழும் ஊரவர்களின் மரண அறிவித்தல்கள், காரைநகர்ச்  செய்திகள்,  ஊர்க் கோயில்  திருவிழாக்கள், விசேட நிகழ்வுகள், காரை மன்றங்களின் செய்திகள், கலை இலக்கிய நிகழ்வுகள், நூல் வெளியீடுகள் என்பன இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படுகின்றன .
  16. பெற்றோரை இழந்த மண்ணின் மைந்தன் செல்வன் நக்கீரனுக்கான உதவித்தொகை மாதாந்தம் ரூபா 3,000 காரை அபிவிருத்தி சபையினூடாக வழங்கப்பட்டு வருகின்றது. January 2018 ஆம் ஆண்டுக்கான  மாதாந்த கொடுப்பனவு ரூபா 4,000ஆக வழங்கப்பட்டு வருகின்றது .இதற்குரிய  அனுசரணையாளர்  திரு.லக்கிராஜா என்பது குறிப்பிடத்தக்கது .
  17. ஈழத்துச் சிதம்பரப் பங்குனி இரதோற்சவத்தின் போது அடியவர்களுக்கு தாகசாந்தி அளிப்பதற்காக  அன்பளிப்புச் செய்யப்பட்டது.

 

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் 09.07.2017 – 31.12.2017 வரைக்குமான கணக்கு அறிக்கை

 

CKCA ACCOUNTS SUMMARY 2017

 

 

CKCA  நிகழ்வுகள்

 

 1.  காரை ஒன்றுகூடல் July 29, 2018 ஞாயிற்றுக்கிழமை

       Morningside Park Area 1, 2 & 5 காலை 8.30 மணி முதல்

 

 2.  காரை சிறார்களின் மொழித்திறன் போட்டிகள்  Sept 2,  2018  ஞாயிற்றுக்கிழமை                            Scarborough Civic Center  காலை 8.00 மணிமுதல்   – 12.30 மணி வரை

 

 3.   காரை வசந்தம் முத்தமிழ் விழா Sept 22, 2018

       தமிழிசை கலாமன்றம்  சனிக்கிழமை  மாலை 5 மணி முதல் – 11 மணி வரை

 

  4.  ஆருத்திரா அபிஷேகம் December 23, 2018

        Richmond பிள்ளையார் கோவில்  ஞாயிற்றுக்கிழமை  அதிகாலை 5 மணி முதல்