காரைநகர் பிரதேச சபையின் ஆறு வட்டாரங்களில் இலங்கைத் தழிழரசுக் கட்சியிலிருந்து மூவரும் மீன் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் மூவரும் தெரிவு

 

காரைநகர் பிரதேச சபையின் ஆறு வட்டாரங்களில் இலங்கைத் தழிழரசுக் கட்சியிலிருந்து மூவரும் மீன் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் மூவரும் தெரிவு

இன்று நடைபெற்ற உள்ளுர் அதிகார சபைகள் தேர்தலில் காரைநகர் பிரதேச சபைக்கு இலங்கைத் தழிழரசுக் கட்சியிலிருந்;து மூவரும் மீன் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் மூவரும் தெரிவாகி உள்ளனர்.

இன்று அதிகாலை 7.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை இடம் பெற்ற வாக்குப் பதிவுகளின் அடிப்படையில் பிரதேச சபைக்கான பத்து உறுப்பினர்கள் தெரிவாகினர்.

பத்து உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக எட்டுக் கட்சிகளைச் சேர்ந்த 104 பேர் காரைநகர் பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிட்டனர்.எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறாததால் ஆட்சி அமைப்பதில் நெருக்கடி நிலை தோன்றி உள்ளதாகக் கூறப்படுகின்றது.

இலங்கைத் தழிழரசுக் கட்சியில் 1ம் வட்டாரத்தில் (தங்கோடை,பத்தர்கேணி,மருதபுரம்,செம்பாடு உள்ளிட்ட கிராமங்கள்) 314 வாக்குகளைப் பெற்று கணேசபிள்ளை பாலச்சந்திரன் தெரிவாகி உள்ளார். 2ம் வட்டாரத்தில் (காரை மத்தி,வேதரடைப்பு,மல்லிகை உள்ளிட்ட கிராமங்கள்) 479 வாக்குகளைப் பெற்று ஆண்டிஜயா விஜயராசா தெரிவாகி உள்ளார் .3ம் வட்டாரத்தில் (பெரியமணல்,மருதடி,சடையாளி,புதுறோட்,மாப்பாணவூரி,சயம்புவீதி உள்ளிட்ட கிராமங்கள்) 328 வாக்குகளைப் பெற்று விஜயதர்மா கேதீஸ்வரதாஸ் தெரிவாகி உள்ளார்.

மீன் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக்குழு 4ம் வட்டாரத்தில் (களபூமி,பாலாவோடை,விளானை,பொன்னாவளை,சத்திரந்தை,இடைப்பிட்டி,மொந்திபுலம்,
வலந்தலை, காளிகோவிலடி,திக்கரை,ஊரி உள்ளிட்ட கிராமங்கள்) 356வாக்குகளைப் பெற்று நல்லையா ஜெயக்கிருஸ்ணனும் 5ம் வட்டாரத்தில் (கருங்காலி,வியாவில்,பலகாடு,கல்லந்தாழ்வு உள்ளிட்ட கிராமங்கள்) 263 வாக்ககளைப் பெற்று மயிலன் அப்புத்துரையும் 6ம் வட்டாரத்தில் (துறைமுகம் பிள்ளையார் கோவிலடி, பாலாவோடை, தோப்புக்காடு உள்ளிட்ட கிராமங்கள்) 275 வாக்குகளைப் பெற்று மாணிக்கம் யோகநாதனும் தெரிவாகி உள்ளதுடன்.

காரைநகர் பிரதேசம் முழுவதும் இலங்கைத் தழிழரசுக் கட்சி 1623 வாக்குகளையும் ஜக்கிய தேசியக் கட்சி 1263 வாக்குகளையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 1197 வாக்ககளையும் மீன் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக்குழு 1080 வாக்ககளையும் பெற்று விகிதாசாரப் பட்டியலில் உறுப்பினர்களைப் பெறும் நிலையில் உள்ளனர்.

அகில இலங்கைத் தழிழ் காங்கிரஸ் மொத்தம் 359 வாக்ககளையும் தழிழர் விடுதலைக் கூட்டணி 156 வாக்குகளைம்,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 136 வாக்ககளையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 15 வாக்குகளையும் காரைநகர் மக்களிடம் சுவீகரித்துக் கொண்ட போதும் உறுப்பினர்களைப் பெற்றுக்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தேர்தல்கள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டதும் ஏனைய நான்கு உறுப்பினர்களின் விபரமும் எடுத்து வரப்படும்.