சுவிஸ் காரைஅபிவிருத்திச் சபையினரின் தியாகத் திறன் வேள்வி- 2017 திருக்குறள் மனனப் போட்டி சிறப்புற நிகழ்ந்தது

சுவிஸ் காரைஅபிவிருத்திச் சபையினரின்
தியாகத் திறன் வேள்வி- 2017
திருக்குறள் மனனப் போட்டி சிறப்புற நிகழ்ந்தது

தியாகத் திறன்வேள்வி 2017 இன் முதல் நான்குபோட்டிகள் நிறைவு பெற்ற நிலையில் கடந்த ஞாயிறு 10-09-2017 அன்று காலை 9 மணிக்குத் திருக்குறள் மனனப் போட்டி இடம் பெற்றது. ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கிடையே இரு பிரிவுகளாக இப்போட்டி நடாத்தப்பட்டது.

170க்கும் அதிகமான மாணவ மாணவியரின் பங்கேற்புடன் மிகச் சிறப்பாக இப்போட்டிகள் காரைநகர் இந்துக் கல்லூரி வடக்கு வளாகத்தில் இடம் பெற்றன. ஒன்பது நடுவர்களுடன் மூன்று அவைகளில் இடம் பெற்ற இப்போட்டியில் மாணவ மாணவியர் பெருந்தொகையில் பங்குபற்றியமை பாராட்டுதற்குரியதாகும்.

திருக்குறள் மனனப் போட்டிக்கு பின்வருவோர் நடுவர்களாகக் கடமையாற்றினார்கள்:

1. திரு.க.ந.கடம்பேசுவரன் விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழகம்,
2. திரு. நவரத்தினம் யா. அராலிமுருகமூர்த்திவித்தியாசாலை,
3. திருமதி. யோ. பங்கயச்செல்வி யா. சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி,
4. திரு. யோ சுதந்திரன் ஆசிரியர் இணுவில்,
5. திருமதி மயூரதி சந்திரகுமார் ஆசிரியர் மன். மூன்றாம்பிட்டி அ.த.க. பாடசாலை,
6. திரு.ல. அமலானந்குமார் அதிபர் மன். மாரீசன்கூடல் றோ.க.த.க. பாடசாலை,
7. திரு.ந.கிருபானந்தம் ஆசிரியர் யா. மானிப்பாய் மெமோரியல் ஆங்கில பாடசாலை,
8. செல்வி து. சுபாஷினி சுழிபுரம் மேற்கு,
9. செல்வன் து.சுதர்சன் சுழிபுரம் மேற்கு,
10. ஆகியோர்கள் நடுவர்களாகவும் உதவியாளர்களாகவும் கடமையாற்றியிருந்தார்கள்.

இந்துக் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மொழி,கல்வி,கலைமேம்பாட்டுக் குழுவின் இணைப்பாளர் கலாநிதி கென்னடி விஜயரத்தினம் ஆகியோரின் உதவியுடன் திருக்குறள் மனனப் போட்டிக்கான பொறுப்பாளர் கலாபூஷணம் பண்டிதர் மு. சு. வேலாயுதபிள்ளை அவர்களின் வழிகாட்டலில் மிகச் சிறப்பாக இப்போட்டி இடம் பெற்றது.

மாணாக்கர் பெற்றார்கள் நடுவர்கள் போட்டிப் பொறுப்பாளர் ஆகியோரின் படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

ஆளுயர்வே ஊருயர்வு!
நன்றே செய்வோம்! அதை இன்றே செய்வோம்!

இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
செயற்குழு உறுப்பினர்கள்
மொழி,கல்வி,கலை மேம்பாட்டுக் குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்
21. 09. 2017