யாழ்ற்ரன் கல்லூரியின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா

யாழ்ற்ரன் கல்லூரியின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா 

 

யாழ்ற்ரன் கல்லூரியில் 2016 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்குமான கௌரவிக்கும் நிகழ்வு 29-03-2017 புதன்கிழமை முற்பகல் 8 மணிக்கு கல்லூரி அதிபர் திரு. வே. முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக ஓய்வுநிலை அதிபர் Yarltonian திரு.க.அம்பலவாணர் அவர்களும், சிறப்பு விருந்தினராக கொழும்பு QUENCY  DISTRIBUTERS உரிமையாளர் Yarltonian திரு.S.கணநாதன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக கல்லூரியின் முன்னை நாள் ஆரம்பப்பிரிவு ஆசிரியர் திருமதி. த. அகிலன் அவர்களும், மற்றும் Yarltonian திரு. க. யோகேந்திரன்(கனடா) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். சித்தியடைந்த மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்களும், புத்தகப்பரிசில்களும்  சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு புத்தகப்பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி பாராட்டப்பெற்றனர். மேலும் இந்நிகழ்வில் கல்லூரிக்காக 2 பரப்புக் காணியை கொள்வனவு செய்து நன்கொடையாக வழங்கிய Yarltonian திரு. கணேசபிள்ளை விமலச்சந்திரன் அவர்கள் காணி உறுதியை அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

 

அதிபர் தமது உரையில் கல்லூரிக்காக காணியை கொள்வனவு செய்து நன்கொடையாக வழங்கிய Yarltonian திரு. கணேசபிள்ளை விமலச்சந்திரன்(கனடா) அவர்களுக்கு தனது உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்தார். மேலும் இக்கௌரவிப்பு விழாவிற்கு நிதி அனுசரணையாளர்களாக வருடா வருடம் தங்கள் தந்தையார் அமரர் கந்தையா கணேசன் (தேர்க்காரர், வாரிவளவு) ஞாபகார்த்தமாக செய்துவரும் அவரது பிள்ளைகளுக்கு (கனடா) அதிபர் தனது இதயபூர்வமான நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

 

இம்மாணவர்களுக்கு புத்தகப்பரிசில்களை வழங்கிய கல்லூரியின் ஸ்தாபகர்களின் வழித்தோன்றலும் கொழும்பு QUENCY DISTRIBUTERS உரிமையாளருமான Yarltonian திரு.S. கணநாதன் அவர்களுக்கும் தனது நன்றி பாராட்டினைத் தெரிவித்தார்.

20170329_080500 20170329_080600 20170329_081054 20170329_081150 20170329_081153 20170329_081157 20170329_081201 20170329_081204 20170329_081207 20170329_081237 20170329_081246 20170329_081304 20170329_081319 20170329_081330 20170329_081342 20170329_081357 20170329_081410 20170329_081425 20170329_081438 20170329_081458 20170329_081543 20170329_081607 20170329_081641 20170329_081846 20170329_081943 20170329_082207 20170329_084253 20170329_084750 20170329_085616 20170329_090342 20170329_090938 20170329_091055 20170329_091624 20170329_091701 20170329_091720 20170329_091828 20170329_091848 20170329_092003 20170329_092015 20170329_092214 20170329_092217 20170329_092324 20170329_092418 20170329_092440 20170329_092503 20170329_092619 20170329_092700 20170329_092711 20170329_092759 20170329_092807 20170329_092817 20170329_093104 20170329_093200 20170329_093230 20170329_093604 20170329_094257 20170329_094501 20170329_094513