ரொரன்ரோ விமானநிலையம் வந்தடைந்த உலகப் புகழ் பெற்ற பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் அவர்களை கனடா-காரை கலாச்சார மன்ற நிர்வாக சபை உறுப்பினர்கள் வரவேற்றனர்

ரொரன்ரோ விமானநிலையம் வந்தடைந்த உலகப் புகழ் பெற்ற பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் அவர்களை கனடா-காரை கலாச்சார மன்ற நிர்வாக சபை உறுப்பினர்கள் வரவேற்றனர்

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கலைவிழாவான "காரை வசந்தம்-2016" இன் பிரதம விருந்தினர்களில் ஒருவராகக் கலந்து கொள்ளும் உலக அளவில் காரை மண்ணுக்கு பெருமை சேர்த்துவரும் கல்வியாளர் பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் அவர்கள் நேற்று மாலை 4:00 மணிக்கு ரொரன்ரோ சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தபோது கனடா-காரை கலாச்சார மன்ற நிர்வாக சபை உறுப்பினர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.  

பிருத்தானியா, லண்டன் பல்கலைகழக கணனிப் பொறியியல்துறை பேராசிரியரான ஆறுமுகம் நல்லநாதன் அவர்கள் கீர்த்திமிகு விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களின் பட்டியலில் இடம்பெற்று உலக அளவில் புகழ்பெற்று காரை மண்ணுக்குப் பெருமை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவ்வாண்டு நூறு ஆண்டுகளைப் பூர்த்தி செய்யும் காரை மண்ணுக்குப் பெருமை சேர்த்த கல்வியாளர்களையும், காரைநகரின் அடையாளச் சின்னங்களையும் போற்றி எடுக்கப்படும் "காரை வசந்தம் -2016" இன்று  சனிக்கிழமை மாலை  5:00 மணிக்கு ரொரன்ரோ தமிழ் இசைக் கலா மன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ள நிலையில்,  இன்றைய எம் காரை மண் பெற்ற மாணவ தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக சேவையாற்றும் பேராசிரியர் நல்லநாதன் அவர்கள் பிரதம விருந்தினர்களில் ஒருவராகக் கலந்து கொள்வது சாலப் பொருத்தாமனது. 

விமான நிலையத்தில் பேராசிரியர் ஆ.நல்லநாதன் அவர்களை கனடா-காரை நிர்வாக சபை உறுப்பினர்கள் வரவேற்றபோது எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 

img_1683 img_1684 img_1685 img_1686 img_1687 img_1688 img_1689 img_1690 img_1691 img_1692 img_1693 img_1694