சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் “தியாகத் திறன் வேள்வி 2016” மூன்று மாணவர் போட்டிகள் சிறப்புற நடைபெற்றன

                           சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின்

                              "தியாகத் திறன் வேள்வி 2016" 

        மூன்று மாணவர் போட்டிகள் சிறப்புற நடைபெற்றன  


சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரின் ஒழுங்கமைப்புடன் மாணவர்களுக்காக ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வருகிற போட்டிகளின் முதற்கட்டமாக மூன்று போட்டிகள் கடந்த 24, 25, 26 ம் திகதிகளில் நடைபெற்றன.

மொத்தமாக ஐந்து போட்டிகளில் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, பொது அறிவு – வினாடி வினாப் போட்டி, என மூன்று வகையான போட்டிகள் மூன்று பிரிவுகளில் நடாத்தப்பட்டன.

1.     அ. ஆ. ஆகிய பிரிவுகளுக்கான பேச்சுப் போட்டி 24 – 09 – சனிக்கிழமை காலை 9 மணி காரைநகர் இந்துக் கல்லூரி வடக்கு வளாகத்தில் இடம் பெற்றன.

2.     மூன்று பிரிவுகளுக்குமான கட்டுரைப் போட்டிகளும் இ. பிரிவுக்கான பேச்சுப் போட்டியும் அதே தினம் முறையே பிற்பகல் 3 மணி மற்றும் மாலை 5 க்கு இந்துக் கல்லூரியின் தெற்கு வளாகத்தில் உள்ள சயம்பு மண்டபத்தில் இடம்பெற்றன. 

சைவப்பிரகாசா வித்தியாலய முன்னாள் அதிபர் திருமதி. ரதிதேவி சோதிலிங்கம்,   ஒய்வு நிலை அதிபர் பண்டிதர் மு. சு. வேலாயுதபிள்ளை, ஆசிரிய ஆலோசகரும் பட்டப் பின் படிப்பு நிலைய வருகைதரு விரிவுரையாளருமான செல்வி பண்டிதை யோகலட்சுமி சோமசுந்தரம், யாழ் பல்கலைக் கழக ஆங்கில சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. வீரமங்கை யோகரத்தினம், கலாநிதி. கென்னடி விஜயரத்தினம் இணைப் பேராசிரியர் ஆங்கிலத்துறை எதியோப்பிய பல்கலைக்கழகம் வவுனியா, கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயப் பிரதி அதிபர் திரு. அருணாசலம் வரதராஜன், வவுனியா, கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலய ஆசிரியை திருமதி பராசக்தி வரதராஜன், மானிப்பாய் மகளிர் கல்லூரி ஆங்கில ஆசிரியர் திரு. விஜயரத்தினம் பிரேமதாஸ் குமாரஸ்ரீ, யாழ்ற்றன் கல்லூரி ஆசிரியர் திரு கிருஸ்ணபவன், ஆசிரிய ஆலோசகர் திரு.பஞ்சாட்சரம் இராமகிருஸ்ணன், கொழும்பு களனி பல்கலைக்கழக மாணவி செல்வி. யமுனா சுந்தரலிங்கம்  ஆகியோர் அடங்கிய குழுவினர் இப்போட்டிகளை நடாத்தினர். கட்டுரைப் போட்டி தவிர்ந்த இரு போட்டிகளுக்குமான முடிவுகள் மாணவர்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தப்பட்டன.  விரைவில் முடிவுகள் இணையத்தில் வெளிவரும்.

மூன்று பிரிவுகளுக்குமான திருக்குறள் மனனப் போட்டி, இசைப் போட்டி ஆகியன முறையே எதிர்வரும் 01 – 10 – 2016 சனிக்கிழமை காலை  9 மணி மற்றும் 02 – 10 – 2016 ஞாயிறு காலை 9 மணிக்கு காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெறும். 


தொடர்புகளுக்கு:

•    பண்டிதர் மு. சு. வேலாயுதபிள்ளை


தொடர்புகளுக்கு

•    செல்வி பரமேஸ்வரி கணேசன் சிரேஷ்ட விரிவுரையாளர் இசைத்துறை யாழ் பல்கலைக்கழகம் –  0094 77 230 63 40


    போட்டிகளின் நிழற்படங்களை கீழேகாணலாம்.

                                                                                  சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                         செயற்குழு உறுப்பினர்கள் 
                                                                              மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு 
                                                                                        சுவிஸ் வாழ் காரைக் குடும்பம்.
                                                                                                                28.09.2016

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF

IF