கனடா காரை கலாசார மன்றம் அங்கீகரிக்கப்பட்ட கணக்கறிக்கைகள்! (2013.02.28 – 2015.05.10), (2015.10.11 – 2016.05.28)

       CKCA logo  

   கனடா காரை கலாசார மன்றம் அங்கீகரிக்கப்பட்ட                         கணக்கறிக்கைகள்!

  (2013.02.28 – 2015.05.10), (2015.10.11 – 2016.05.28)

கனடா காரை கலாசார மன்றத்தின் 28.05.2016 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது கடந்த கால நிர்வாகங்களின் கணக்காய்வாளரினால் அங்கீகரிக்கப்பட்ட கணக்கு அறிக்கைகள் வெளியிடப்பட்டதுடன் அவை கலந்து கொண்ட அங்கத்தவர்களினாலும் அங்கீகரிக்கப்பட்டன.

அந்த வகையில் 2013.02.28 – 2015.05.10 வரையான திரு.தம்பிஐயா பரமானந்தராசா தலைமையிலான கணக்கறிக்கை கணக்காய்வாளர் திரு.கந்தையா கனகராசா அவர்களின் மீள்பரிசீலனையின் பின்னர் 17.12.2015 அன்று அங்கீகரிக்கப்பட்டிருந்த நிலையில் 07.05.2016 அன்று கனடா காரை கலாசார மன்றத்தின் உத்தியோக பூர்வமான இணையத்தளமான http://www.karainagar.com/ ஊடாக அங்கத்தவர்களிற்கு அறியத்தரப்பட்டது. அத்துடன் 28.05.2016 அன்று முழுமையான அங்கீகரிக்கப்பட்ட செயலாளர் செயற்பாட்டு அறிக்கையுடன் கூடிய பொருளாளர் அறிக்கை என்பனவும் வெளியிடப்பட்டு வைக்கப்பட்டது.

காரைநகர் 11 ஆரம்ப பாடசாலைகளிற்கு தலா 10 இலட்சம் வீதம் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற நிரந்தர வைப்பில் இட்டு வழங்கியது மற்றும் காரைநகர் பாடசாலைகள் பலவற்றிற்கும் பல இலட்சம் ரூபாய்கள் கற்றல் தேவைகளிற்காக 2014 மற்றும் 2015 மே வரையான காலப்பகுதியில் வழங்கப்பட்டிருந்த நிலையில் இக்காலத்திற்குரிய கணக்கறிக்கை தகுதியும் திறமையும் வாய்ந்த கணக்காய்வாளரின் மீள்பரிசீலனைக்காக பொதுச்சபையினரால் பரிந்துரைக்கப்பட்டது.

அதனையடுத்து கனடாவில் கணக்கியல் துறையில் போதிய அனுபவமும் திறமையும் கொண்டு அங்கீகாரம் பெற்ற கணக்காய்வாளராக தொழில் புரியும் திரு.கந்தையா கனகராசா அவர்களிடம் இக்காலத்திற்குரிய கணக்கு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

பாடசாலைகளிற்கு வழங்கப்பட்ட ஒரு கோடிக்கும் மேற்பட்ட நிதியுதவிகள் மற்றும் காரைமண் அபிவிருத்திக்காக இக்காலப்பகுதியில் கனடா காரை கலாசார மன்றத்தினால் வழங்கப்பட்ட அனைத்து நிதியுதவிகள் மற்றும் மன்றத்தின் முழுமையான கணக்குகளை அக்காலத்தில் நிர்வாக பதவியேற்றிருந்த தலைவர் திரு.தம்பிஐயா பரமானந்தராசா, செயலாளர் (பதில்) திரு.தீசன் திரவியநாதன் மற்றும் பொருளாளர் திரு.திருநாவுக்கரசு பேரின்பராசா ஆகியோரது முழுமையான ஒத்துழைப்புடன் மீள்பரிசீலனை செய்து அங்கத்தவர்களிற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

28.05.2016 அன்று நடைபெற்ற பொதுச்சபை கூட்டத்தின் போது இவ்வறிக்கையானது கலந்து கொண்ட அங்கத்தவர்களினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது. 
அதனை தொடர்ந்து கணக்காய்வாளர் திரு.கந்தையா கனகராசா அவர்களிடம் அங்கத்தவர்கள் வினவிய கேள்விகளிற்கு விடையளித்த்து பேசியபோது கணக்காய்வாளர் திரு.கந்தையா கனகராசா அவர்கள் கூறியதாவது ‘ 10.05.2016 அன்று முதல் தடவையாக வெளியிடப்பட்ட கணக்கறிக்கைக்கும் தற்போது என்னால் மீள்பரிசீலனை செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும் கணக்கறிக்கைக்கும் கணக்கியல் சம்பந்தமாக வித்தியாசங்கள் இல்லையெனவும் கணக்குகளை சமர்ப்பிக்கும் முறைகள் மட்டுமே மாற்றம் பெற்றுள்ளன என்றும் ஆனாலும் அங்கத்தவர்களது வேண்டுகோளிற்கு இணங்க மீள்பரிசீலனை செய்து உறுதி செய்யப்பட்டுள்ளதானது மன்றத்தின் நல்லெண்ணத்திற்கும் இக்காலத்தில் பணியாற்றிய நிர்வாக சபை உறுப்பினர்களின் நன்மதிப்பும் இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

மேற்கொண்டு 11.10.2015 முதல் 28.05.2016 வரையான திரு.ரவி ரவீந்திரன் தலைமையிலான கணக்கு அறிக்கையும் வெளியிடப்பட்டு கலந்து கொண்ட அங்கத்தவர்களினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்ட்டது.

இத்துடன் பொதுச்சபையினால் அங்கீகரிக்கப்பட்ட மேற்படி இரண்டு கணக்கறிக்கைகளும் எடுத்து வரப்பட்டுள்ளன.

திரு.தம்பிஐயா பரமானந்தராசா தலைமையிலான நிர்வாக சபையின் கணக்கறிக்கை (2013.02.28 – 2015.05.10) மற்றும் திரு.ரவி ரவீந்திரன் தலைமையிலான நிர்வாக சபையின் கணக்கறிக்கை (2015.10.11 – 2016.05.28) கீழே எடுத்து வரப்பட்டுள்ளன.

 

திரு.தம்பிஐயா பரமானந்தராசா தலைமையிலான நிர்வாக சபையின் கணக்கறிக்கை (2013.02.28 – 2015.05.10)

கணக்கறிக்கையை பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/06/2013-2015-FROM-28-FEB-2013-TO-10-MAY-2015.pdf

 

 

திரு.ரவி ரவீந்திரன் தலைமையிலான நிர்வாக சபையின் கணக்கறிக்கை (2015.10.11 – 2016.05.28)

கணக்கறிக்கையை பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/06/2015-2016FROM-11-OCT-2015-TO-28-MAY-2016.pdf