புதிய நிர்வாக சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்(திருத்தத்துடன்)

புதிய நிர்வாக சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்(திருத்தத்துடன்)

 

புதிய நிர்வாக சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் கடந்தகால நிர்வாக சபையினரால் சமர்பிக்கப்பட்ட வரவு செலவு அறிக்கை பெப்ரவரி 24ல் நடைபெற்ற பொதுச்சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இவ் அறிக்கை சில தினங்களின் முன் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதன் இணைப்புக்கள்(நன்கொடையாளர்களின் பெயர்ப்பட்டியல்  முதலியன.) மிக விரைவில் பிரசுரிக்கப்படும். இவ் வரவு செலவு அறிக்கை தற்போது போசகர் சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. போசகர் சபை அது தொடர்பாக எடுக்கும் முடிவுகளை விரைவில் வெளியிடுவார்கள். இவ்வரவு செலவு அறிக்கை பற்றி கனடா காரை கலாச்சார மன்றத்தின் அங்கத்தவர்களுக்கு ஏதாவது கருத்துக்கள் இருப்பின் போசகர் சபைக்கு ckcapatron@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது கனடா காரை கலாச்சார மன்றம் P O BOX 32057 MILLIKEN CROSSIND PO MARKHAM, ON, M1V 0E1 என்ற முகவரிக்கு  ஏப்ரல் மாதம் 10ம்திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அதற்குப்பின்னர் அனுப்பப்படுவன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

புதிய நிர்வாக சபையின் அறிக்கைகள் காலாண்டுக்கு ஒரு முறை காலாண்டு முடிவடைந்து  30 தினங்களுக்குள் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும். இவ் வருடம்  கனடாவாழ் காரை மக்களாகிய நீங்கள் அனைவரும் எமது மன்றத்தில் அங்கத்தவராக இணைந்து எமக்கு ஆதரவு வழங்குங்கள். எமது நிர்வாக சபை உறுப்பினர்கள் உங்களை அணுகுவார்கள். அங்கத்தவராக இணைந்துகொள்பவர்களுக்கான பற்றுச்சீட்டுக்கள் பொருளாளரினால் வழங்கப்படுவதுடன் பெயர்ப் பட்டியலும் உடனுக்குடன் இணையக்தளத்தில் பிரசுரிக்கப்படும். அத்துடன் நீங்கள் அங்கத்தவர் பணத்தை வங்கியில் அல்லது PAY PAL மூலமாகவும் செலுத்தி மன்றத்தில் அங்கத்தவராகிக்கொள்ளலாம்.

உங்கள் ஆதரவுக்கு நன்றி.

நிர்வாக சபை, கனடா காரை கலாச்சார மன்றம். தொலைபேசி: 416 642 4912

2 comments

    • Velautham on April 10, 2013 at 7:00 pm

    The CKCA is calling up members to make representations, if any, about the accounts for 2011 / 2012 before 10th April, while it has not published its accounts in full, up to date. What is the cause of delay? Without knowing the full accounts details, how can the Executive Committee, laying stipulations and deadlines, expect the members to make representations?
    Velautham

    • Theesan on March 31, 2013 at 4:47 pm

    கனடா காரை கலாச்சார மன்றத்தின் இணையத்தளத்தில் ‘நிர்வாக சபையினால்’ எடுக்கப்பட்ட தீர்மானம் என்று ஒரு விடயம் வெளிவருகின்றது என்றால் இந்த மன்றத்தின் அனைத்து முரண்பாடுகளும் மிகவிரைவில் முடிவிற்கு வரும் என்பது தெரிகின்றது. கனடாவில் மட்டுமன்றி உலகம் முழுவதிலும் பரந்து வாழும் காரைநகர் மக்களிற்கும் மன்றங்களிற்கும் முன்மாதிரியாக கனடா காரை கலாச்சார மன்றம் திகழும் என்பதற்கு புதிய நிர்வாக சபையினர் அறிகுறிகளை காட்டியுள்ளது வரவேற்கத்தக்கது.
    Theesan

Comments have been disabled.