மண்ணின் மக்களை மட்டுமல்ல , மக்களின் கண்ணையும் நேசிக்கும் காரை நலன் புரிச்சங்கம்-பிருத்தானியா.

UK LOGO

மண்ணின் மக்களை  மட்டுமல்ல , மக்களின் கண்ணையும் நேசிக்கும் காரை நலன் புரிச்சங்கம்-பிருத்தானியா.

பெனி பெனியாய் சேர்த்தது வன்னியில் போய் மணி மணியாய் தெரிந்தது ……….


வன்னிப் பகுதியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் 100 வயோதிபர்களுக்கு  கண்படர் அகற்றல் சிகிச்சை வழங்கியது பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கம். இந்த சிகிச்சைக்கான செலவு ரூபாய் ஐந்து இலட்சங்கள் (500,000.00) எமது மன்றத்தின் உண்டியல் நிதியினூடு வழங்கப்பட்டது.

31/07/2015 அன்று  இந்த நீண்ட நாள் முகாம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையில் நிறைவு பெற்றது..  வைத்திய பெருந்தகைகளின் இலவச சேவையின் மூலம் இவ்வளவு தொகையான மக்களுக்கு இந்த தொகைக்குள் இது சாத்தியமானது.  இந்த வைத்திய பெருந்தகைகளுக்கும், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய சேவையாளர்களுக்கும், இதனை குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் பல சிரமங்களின் மத்தியில் ஒருங்கமைப்பு செய்துதவிய அறிவொளி வளைய நிர்வாகத்தினருக்கும், பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கம் சிரம் தாழ்த்திய நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.

 

               கடந்த 25/05/2015 அன்று ஐந்தாம் கட்டமாக மூளாய் வைத்திய சாலையில் எமது ஊர் மக்கள் 16 பேருக்கு இந்த கண்படர் அகற்றல் சிகிச்சை எமது மன்றத்தினரால் நிதி வழங்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது

பிருத்தானியா சைவ முனேற்ற சங்கத்தின் ஒரு கிளையான அறிவொளி வளையம் எனும் தொண்டு நிறுவனத்தினரின் ஒப்பற்ற முயற்சியினால்  இந்த கண்படர் அகற்றல் முகாம் நிறைவுற்றது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் இதற்கான பணிவேலைகள் ஆரம்பிக்கப்பட்டு, இந்த வருட எமது  ''காரைக் கதம்பம் 2015''  நிகழ்வின்போது  உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டு, இந்த கதம்ப மேடையிலேயே இதற்கான காசோலையை (£2500.00– இரண்டாயிரத்து ஐந்நூறு பவுண்டுகள் ) எமது மன்றத்தின் செயலாளர் திரு.S . சிவம் அவர்களால் அறிவொளி வளைய நிர்வாகத்தினர் திரு.அசோகன் , Dr . நவனீதராஜா ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

            பணம் கொடுப்பது இலகு , பணி முடிப்பது முயற்சி, அந்தவகையில் இப்பணியை உடன்படிக்கையின்படி  குறிப்பிட்ட கால எல்லைக்குள் செவ்வனே செய்து முடித்த அறிவொளி வளையத்திற்கு மீண்டும் எமது நன்றிகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும். வாழ்க உம்  பணி. 

 

   கடந்த நிர்வாகசபைத் தலைவர் திரு ப.தவராஜா அவர்களின் முயற்சியினால் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, தொடர்ச்சியாக தற்போதைய நிர்வாகத்தின் தலைமையின் கீழ் நிறைவு கண்டுள்ளமை மன்றத்தின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் எடுத்தியம்புகின்றது.

 

Not what we give, but what we share,

For the gift without the giver is bare.

 

மறைபெறல் ஊரார்க்கு அரிதுஎன்றால் எம்போல் 

அறைபறை கண்ணார் அகத்து.

குறள் – 1180


நன்றி.

வணக்கம் .


நிர்வாகம்,

பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கம்.

02/08/2015

 

SP-Mission_for_Vission_1507300001SP-Mission_for_Vission_1507300002SP-Mission_for_Vission_1507300003